பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 77 அடியாக குறைந்தது

பவானிசாகர் அணை நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.1,505 கன அடி நீர் தொடர்ந்து திறக்கப்பட்டு வருகிறது.
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 77 அடியாக குறைந்தது
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் நீர்வரத்தை காட்டிலும் தொடர்ந்து பாசனத்திற்காக அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்படுவதால் பவானிசாகர் அணை நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.

இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 77.88 அடியாக சரிந்து உள்ளது. அணைக்கு வினாடிக்கு 469 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. காளிங்கராயன் பாசனத்திற்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

இதேபோல் தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்காக 800 கனஅடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனஅடி, கீழ்பவானி பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி என மொத்தம் 1,505 கன அடி நீர் தொடர்ந்து திறக்கப்பட்டு வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com