என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருப்பணி வேலைகள் தொடக்கம்"

    • அந்தியூர் பஸ் நிலையம் அருகே செல்லீஸ்வரர் கோவில் உள்ளது.
    • கோபுரத்திற்கு வர்ணங்கள் பூசப்பட்டு புதுப்பித்து பூஜைகள் செய்யப்பட உள்ளது.

    அந்தியூர்:

    அந்தியூர் பஸ் நிலையம் அருகே செல்லீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மூலவராக செல்லீஸ்வரரும், தட்சிணா மூர்த்தி, விநாயகர், வள்ளி தெய்வானையோடு முருகர், காலபைரவர் பிரம்மா, சண்டிகேஸ்வரர் துர்க்கை அம்மன் உள்ளிட்ட தெய்வ ங்கள் உள்ளன. மேலும் முன் பிரகாரத்தில் நந்தி சிலையும் மிகப்பெரியதாக உள்ளது.

    பிரதோஷ நாட்களில் அந்தியூர் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து பிரதோஷ வழிபாடு செய்து சாமி தரிசனம் செய்து செல்வார்கள்.

    இந்த நிலையில் நந்தி முன் உள்ள பிரகாரம் கட்டிடம் கட்டப்பட்டு நீண்ட வருடங்கள் ஆகியுள்ளதாலும், கோவிலில் சுற்றுச்சுவர் ஆங்காங்கே விரிசலோடி கீழே சாய்ந்து, தரைத்தளம் சேதம் அடைந்துள்ளது.

    அதனை புணரமைக்கும் வகையில் பாலாலயம் என்னும் மூலவர் இருக்கின்ற சக்தியை வெளி கொண்டு வந்து செல்லீஸ்வரர் வெளியில் பிரதிஷ்டை செய்யும் நிகழ்வு இன்று காலை நடைபெற்றது.

    இதன் பின்பு பக்தர்களுக்கு செல்லீஸ்வரர் கோவிலின் வெளிப்பிர காரத்தில் அருள்பாலித்து வருவார். இந்த பணியில் கோபுரத்திற்கு (விமானம்) வர்ணங்கள் பூசப்பட்டு புதுப்பித்து பூஜைகள் செய்யப்பட உள்ளது.

    இந்த நிகழ்ச்சியில் அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ., கோவில் செயல் அலுவலர் சீனிவாசன், அறநிலை துறை ஆய்வாளர் மாணிக்கம், கோவில் பணியாளர்கள் செந்தில்குமார், தணிகாசலம், பிருந்தா, சரவணன், ராஜமாணிக்கம், ரங்கநாதன், லோகு, குருக்கள் செந்தில், ராஜா, வாசு மற்றும் சிவ பக்தர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ×