சிறுத்தை கடித்து வெள்ளாடு பலி

வெள்ளாட்டை சிறுத்தை கடித்து கொன்று விட்டது.வனத்துறையினர் கால் தடயங்களை வைத்து ஆய்வு செய்து வருகின்றனர்.
சிறுத்தை கடித்து வெள்ளாடு பலி
Published on

அந்தியூர்:

அந்தியூர் அருகே உள்ள வெள்ளித்திருப்பூர் மஜாரா குரும்பனூர் காடு பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவர் வீட்டின் அருகே 2 வெள்ளாடுகளை கட்டு வைத்திருந்தார்.

இந்த நிலையில் அதிகாலை சுமார் 4 மணி அளவில் வீட்டின் அருகில் கட்டி வைக்கப்பட்டிருந்த வெள்ளாட்டை சிறுத்தை கடித்து கொன்றுவிட்டது.

இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் வெள்ளாட்டை சிறுத்தை கடித்ததா? இல்லை வேறு ஏதேனும் மர்ம விலங்கு கடித்ததா? என கால் தடயங்களை வைத்து ஆய்வு செய்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com