என் மலர்
ஈரோடு
- விஜய பிரியா வந்த மொபட்டை தடுத்து நிறுத்தி வழி மறித்தார்.
- கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தாலி சங்கிலியை பறித்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார்.
சென்னிமலை:
சென்னிமலை யூனியன் அத்தப்பம்பாளையம் ஐத்ரேயா நகரை சேர்ந்தவர் குமரேசன். இவருடைய மனைவி விஜய பிரியா (வயது 45). இவர் ஈரோடு-பெருந்துறை ரோட்டில் உள்ள திண்டல் பகுதியில் மருந்து கடை வைத்து நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் விஜய பிரியா சம்பவத்தன்று இரவு வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு மொபட்டில் அத்தப்பம்பாளையத்தில் உள்ள தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். திண்டல் ரிங் ரோடு அருகே சென்றபோது அங்கு மர்மநபர் ஒருவர் வந்தார்.
அவர் திடீரென விஜய பிரியா வந்த மொபட்டை தடுத்து நிறுத்தி வழி மறித்தார். பின்னர் அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரது கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தாலி சங்கிலியை பறித்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார்.
இதுகுறித்து விஜய பிரியா வெள்ளோடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தாலிசங்கிலியை பறித்து விட்டு தப்பிய மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர்.
- பணம் வைத்து சூதாடி கொண்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- போலீசார் விசாரணை நடத்தி சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள ராஜீவ் நகர் கோட்டை முனியப்பன் கோவில் அருகே சிவா என்பவரின் தோட்டத்தில் உள்ள அறையில் பணம் வைத்து சூதாடி கொண்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சோதனை செய்தபோது ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடி கொண்டு இருப்பது தெரிய வந்தது.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி சூதாட்டத்தில் ஈடுபட்ட சிவா, மோகன், சுரேஷ், தங்கராஜ், பாஸ்கர், சமரேஷ், விஜயகுமார் ஆகிய 7 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
மேலும் ரொக்க பணம் ரூ.31 ஆயிரத்து 600, 3 மோட்டார் சைக்கிள்கள், ஒரு கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
- பவானிசாகர் அணை நீர்த்தேக்க பகுதியில் மீன் குஞ்சுகள் விடும் நிகழ்ச்சி நடந்தது.
- ரூ.3.45 லட்சம் மதிப்பில் குஞ்சுகள் விடப்பட்டன.
சத்தியமங்கலம்:
சத்தியமங்கலம் அடுத்த பவானி சாகர் அணை நீர்த்தேக்க பகுதியில் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகம் சார்பில் மீன் குஞ்சு வளர்க்கப்பட்டு வருகிறது.
குறித்த காலத்துக்கு ஒருமுறை மீன் குஞ்சு விடப்படுவது வழக்கம். அதன்படி பவானிசாகர் அணை நீர்த்தேக்கப் பகுதியில் மீன் குஞ்சுகள் விடும் நிகழ்ச்சி நடந்தது.
ரோகு இனம் ரூ.2.44 லட்சம், மிர்கால் ரூ.1 லட்சம் என ரூ.3.45 லட்சம் மதிப்பில் குஞ்சுகள் விடப்பட்டன.
இந்த சீசனில் 3.28 லட்சம் மீன் குஞ்சுகள் விட இலக்கு நிர்ணயி க்கப்பட்டு அதைவிட கூடுதலாக மீன் குஞ்சுகள் விடப்பட்டு ள்ளதாக மீன் வளர்ச்சி கழக அதிகாரிகள் தெரிவித்து ள்ளனர்.
இதில் மீன்பிடி ஒப்பந்ததாரர், பவானிசாகர் அணை நீர்த்தேக்க பகுதி மீனவர்கள் கலந்து கொண்டனர்.
- மளிகை கடையின் கதவை ஒற்றை யானை உடைத்து தக்காளியை தின்று ருசித்து உள்ளது.
- யானை தக்காளியை மட்டுமே ருசித்து மீண்டும் வனப்பகுதிக்குள் சென்று விட்டது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. குறி ப்பாக யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன.
சமீபகாலமாக யானைகள் உணவு, தண்ணீ ரை தேடி ஊருக்குள் புகுவது தொடர் கதையாகி வருகிறது. ஊருக்குள் புகும் யானைகள் விளைநிலங்களை சேத ப்படுத்தி வருகிறது.
இந்நிலையில் சத்திய மங்கலம் அடுத்த ஆசனூர் வனப்பகுதியில் ஒங்கல் வாடி, அரேபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ஒற்றை யானை ஒன்று வனப்பகுதியை விட்டு வெளியேறி ஊருக்குள் புகுந்து மக்களை பீதி அடைய செய்து வருகிறது.
ஊருக்குள் புகுந்து கட்டிடங்களை சேதப்படுத்தி யும், விளை நிலங்களில் பயிர்களை சேதப்படுத்தியும் வந்தது. இதனால் அப்பகுதி மக்கள் ஒரு வித அச்சத்து டனேயே இருந்து வந்தனர்.
இந்நிலையில் ஆசனூர் போலீஸ் நிலையம் அருகே உள்ள தணிகாசலம் என்பவரின் மளிகை கடையின் கதவை ஒற்றை யானை உடைத்து உள்ளே வைத்திருந்த விலை மதிப்பில்லாத தக்காளியை தின்று ருசித்து உள்ளது.
கடையில் பல பொருட்கள் இருந்தும் யானை தக்காளியை மட்டுமே ருசித்து மீண்டும் வனப்பகுதிக்குள் சென்று விட்டது. தற்போது தக்காளியின் விலை விண்ணை தொடும் அளவில் உயர்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
வனத்துறையினர் மீண்டும் ஒற்றை யானை ஊருக்குள் வராதவாறு தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- சேலையால் தூக்கிட்டு இறந்த நிலையில் தொங்கி கொண்டு இருந்தார்.
- வயிற்று வலி அதிகமாக இருந்ததால் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
ஈரோடு:
ஈரோடு கருங்கல்பா ளையம் கிருஷ்ணம்பா ளையம் காலனியை சேர்ந்த வர் சரண் (20). இவர் சோப் கம்பெனியில் பணியாற்றி வந்தார்.
சரணின் அக்காவிற்கு திருமண வரன் பார்ப்ப தற்காக குடும்பத்தினர் அனைவரும் திருப்பூர் மாவட்டத்திற்கு சென்றனர். வீட்டில் சரண் மட்டும் தனியாக இருந்தார்.
இந்நிலையில் சம்பவ த்தன்று இரவு சரணின் குடும்பத்தினர் வீட்டிற்கு வந்து நீண்ட நேரம் கதவை தட்டியபோது திறக்க வில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த குடும்ப த்தினர் ஜன்னல் வழியே பா ர்த்த போது சரண் வீட்டின் மேற்கூரை ஆங்கிள் கம்பியில் சேலையால் தூக்கிட்டு இறந்த நிலையில் தொங்கி கொண்டு இருந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த கருங்கல்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சரணி னின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்த னா்.
இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சரணினின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
இதேப்போல் ஈரோடு மாவட்டம் பவானிசாகர் பகுத்தம்பாளையம் அரிஜன காலனியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (28). இவர் தோட்டத்திற்கு மருந்து அடிக்கும் தொழில் செய்து வந்தார்.
ராஜேந்திரன் மதுப்ப ழக்கத்திற்கு அடிமையாகி இருந்ததால் அடிக்கடி வயிற்கு வலியால் அவதி ப்பட்டு வந்தார். கடந்த 6 மாதமாக தனியார் மருத்துவ மனையில் வயிற்று வலிக்கு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் சம்பவத்த ன்று இரவு ராஜேந்திரன் வயிற்று வலி அதிகமாக இருந்ததால் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதைப்பார்த்த அவரது குடும்பத்தினர் ராஜேந்திரனை மீட்டு சிகிச்சைக்காக சத்தி அரசு மருத்துவ மனையில் அனுமதித்தனர்.
அங்கு டாக்டர்கள் பரிசோ தித்து விட்டு ராஜேந்திரன் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து பவானி சாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராஜே ந்தி ரனுக்கு லோகேஸ்வரி என்ற மனைவியும், 2½ வயதில் மகன் உள்ளனர்.
- ஆடி மாதம் பிறப்பு மற்றும் அமாவசையையொட்டி சென்னிமலை முருகன் கோவிலில் கூட்டம் அதிகமாக இருந்தது.
- கோ-பூஜையினை காண பக்தர்கள் அதிக அளவில் வந்திருந்தனர்.
சென்னிமலை:
ஆடி மாதத்தில் பக்திக்கு முக்தி தரும் மாதமாக கருதப்படுகிறது. ஆடி முதல் மார்கழி வரை தட்சிணாயன புண்ணிய காலம் ஆகும், இது தேவர்களுக்கு இரவு தொடங்கும் நேரமாக ஆடி மாதம் கருதப்படுகிறது.
ஆடி மாதத்தில் வரும் அமாவாசையும் சிறப்பாக போற்றப்படுகிறது. ஆடி அமாவாசையில் பக்தர்கள் முருகப்பெருமானுக்கு அபிேஷகம் செய்து வேண்டு தல் வைப்பர். இந்த நாளில் வேண்டுதல் வைத்தால் நினைத்த காரியம் நிறைவே றும் என்பது ஐதீகம்.
இந்த நிலையில் ஆடி மாதம் பிறப்பு மற்றும் அமாவசையையொட்டி சென்னிமலை முருகன் கோவிலில் அதிகாலை முதலே கூட்டம் அதிகமாக இருந்தது. அதிகாலை நடந்த கோ-பூஜையினை காண பக்தர்கள் அதிக அளவில் வந்திருந்தனர்.
தொடர்ந்து நடந்த அபிேஷ கத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மாலை வரை தொடர்ந்து பல்வேறு ஊர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வேன் மூலம் வந்திருந்தனர்.
அவர்கள் பால், தயிர் உட்பட பல்வேறு பொருட்களால் அபிேஷகம் செய்து முருகப்பெருமானை வழிபட்டனர்.
கூட்டம் அதிகமாக இருந்ததால் கோவில் பஸ் இரண்டும் இயக்கப்பட்டது. பொது தரிசனத்தில் பக்தர்கள் ஒரு மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
கூட்டம் அதிக மாக இருந்து வாகன நெரிசல் ஏற்பட்டதால் தனியார் பாதுகாப்பு பணியாளர்கள் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.
- திரும்பி படுக்கும்போது வாய்க்காலுக்குள் தவறி விழுந்து விட்டார்.
- தவறி விழுந்ததில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அடுத்த பெரிய புலியூர், காசிலிங்க புரம் பகுதியை சேர்ந்தவர் செம்மனன் (45). விவசாயக் கூலி தொழிலாளி. இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் சம்பவ த்தன்று செம்மனன் சேவாக்க வுண்டனூ ர்-வைரமங்கலம் ரோடு காசிலிங்கபுரத்தில் வாய்க்கா ல் மோரி மீது குடிபோதையில் படுத்து இருந்தார்.
அவர் திரும்பி படுக்கும்போது வாய்க்காலுக்குள் தவறி விழுந்து விட்டார். பின்னர் அருகில் இருந்தவர்கள் செம்மனை மீட்டனர். வாய்க்காலுக்குள் தவறி விழுந்ததில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
பின்னர் சிகிச்சைக்காக 108 ஆம்பு லன்ஸ் மூலம் கவுந்தப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.
பின்னர் மேல் சிகிச்சை க்கா க பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சையில் இருந்த செம்மனன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நீர்ப்பிடிப்பு பகுதியில் மழைப்பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்து விட்டது.
- அணையின் நீர்மட்டம் 79.13 அடியாக உள்ளது.
ஈரோடு:
ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வா தாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை.
இந்த அணையின் மூலம் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீலகிரி பகுதியில் பரவலாக மழை பெய்து வந்ததால் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது.
இதனால் பவானிசாகர் அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வந்தது. ஆனால் கடந்த 3 நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதியில் மழைப்பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்து விட்டது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 79.13 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 439 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
காலிங்கராயன் பாசனத்திற்கு 200 கன அடி, தடப்பள்ளி- அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 800 கனஅடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனடி, கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி என மொத்தம் 1,205 கன அடி நீர் தொடர்ந்து திறக்கப்பட்டு வருகிறது.
- தீ தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.
- தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டு தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சியை நடத்தினார்கள்.
சென்னிமலை:
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஈரோடு மாவட்ட தீயணைப்பு நிலைய அலுவலர் உத்தரவின்படி சென்னிமலையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் சென்னிமலை பேரூராட்சி அலுவலகத்தில் தீ தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.
சென்னிமலை தீயணைப்பு நிலைய அலுவலர் முத்துசாமி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டு தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சியை நடத்தினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் ஸ்ரீதேவி அசோக், துணைத்தலைவர் கவுந்தர்ராஜன், செயல் அலுவலர் ஜெயராமன் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- எந்த தவறும் இல்லாமல் டாஸ்மாக் துறையை நடத்த வேண்டும் என்பது முதல்வரின் விருப்பமாக உள்ளது.
- விரைவில் டாஸ்மாக் தொழிலாளர் சங்கங்களை அழைத்து பேசி அவர்கள் பிரச்சினைகளை தீர்க்க எண்ணி உள்ளோம்.
ஈரோடு:
ஈரோட்டில் இன்று மது விலக்கு ஆய தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
டாஸ்மாக்கில் அதிக விலைக்கு மது விற்பனை செய்தல், தொழிலாளர்கள் பிரச்சனைகள், டாஸ்மாக் கடைகளில் இட வசதியின்மை போன்ற பல்வேறு பிரச்சினைகளை ஒழுங்கு படுத்த முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
டாஸ்மாக்கில் பல்வேறு பிரச்சனைகள் உள்ளன. அதன்படி தான் பல்வேறு ஆய்வுகள் நடக்கின்றன. பத்திரிகையாளர்களிடமும் இது குறித்து கருத்து கேட்கிறோம். ஆனால் விமர்சனங்கள் தான் வந்து கொண்டிருக்கின்றன. எங்களது உணர்வுகளை புரிந்து கொண்டு நல்ல கருத்துக்களை தெரியப்படுத்த வேண்டும்.
விரைவில் டாஸ்மாக் தொழிலாளர் சங்கங்களை அழைத்து பேசி அவர்கள் பிரச்சினைகளை தீர்க்க எண்ணி உள்ளோம். டாஸ்மாக் பார் குறித்த நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு பார்களுக்கான டெண்டர் விடப்படும். அதிக விலைக்கு மது விற்பது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து புகார் வந்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
ஈரோடு சித்தோடு ஐ.ஆர்.டி.டி. பொறியியல் கல்லூரியில் 3 ஏக்கர் நிலம் எல்காட் நிறுவனத்திற்கு வழங்கியுள்ளோம். மேலும் 8 ஏக்கர் நிலம் வழங்க ஆய்வு நடக்கிறது.
எந்த தவறும் இல்லாமல் டாஸ்மாக் துறையை நடத்த வேண்டும் என்பது முதல்வரின் விருப்பமாக உள்ளது. கடையை தொடர்ந்து நடத்த வேண்டும் என்ற ஆசை யாருக்கும் இல்லை.
உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு உதவித்தொகை, இலவச பேருந்து, குடும்ப தலைவிக்கு உரிமைத்தொகை போன்று மகளிருக்கான திட்டங்கள் கொண்டு வருவது என்பது ஆண்களை மகளிர் பார்த்து க்கொள்வார்கள் என்பதால் மகளிருக்கு செய்கிறோம்.
டாஸ்மாக் கடையில் பணியாற்றுபவர்களின் கொடுமையான சூழ்நிலை நேரில் பார்த்தால் தான் புரியும்.இதனையெல்லாம் சரிசெய்ய அவர்கள் கொடுத்த கோரிக்கைகளை ஒருங்கிணைத்து ஒரு வார த்திற்குள் முடிவெடுக்க உள்ளோம். அமலாக்கத்துறையினர் அமைச்சர் பொன்முடியிடம் விசாரணை நடத்திய நிலையில் மீண்டும் அவரை விசாரணைக்கு அழைத்து இருப்பது என்பது ஒரு அரசியல் ரீதியான நடவடிக்கை. இது அவரை பாதிக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.
- பிரதமர் மோடிக்கு வருகிற பாராளுமன்ற தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்.
- பிரதமர் மோடி, அமித்ஷா, பா.ஜ.க தலைவர்கள் வரக்கூடிய தேர்தலில் மண்ணை கவ்வுவார்கள்.
ஈரோடு:
ஈரோட்டில் இன்று முன்னாள் மத்திய அமைச்சரும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
நாட்டில் பிரதமராக இருக்கக்கூடிய மோடி, பிரதமராக எந்த வேலையும் செய்வது கிடையாது. பாராளுமன்றத்தில் உறுப்பினர்கள் கேட்கின்ற கேள்விகளுக்கு பதில் சொல்வது கிடையாது. உள்நாட்டில் இருக்கின்ற பத்திரிகையாளர்களை சந்திப்பது கிடையாது. மணிப்பூர் பற்றி எரிந்து கொண்டு இருக்கிறது. அங்கே பிரதமர் செல்லவில்லை. ஆனால், பிரதமருக்கு அரசியலில் தனக்கு யார் யாரையெல்லாம் பிடிக்காதோ? அவர்கள் மீது எல்லாம் வருமான வரித்துறையையும், அமலாக்கத்துறையையும் ஏவி விட்டு நடவடிக்கை எடுக்கும் பணியை மட்டுமே செய்து வருகிறார்.
அதன் ஒரு அங்கமாக தான் அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறையினர் ரெய்டில் ஈடுபட்டு, அவரை அழைத்து பொய் விசாரணை நடத்தி வருகின்றனர். பயமுறுத்துவதன் மூலம் எதிர்க்கட்சிகளை ஒடுக்கி விடலாம், தோற்கடித்து விடலாம் என நினைக்கும் பிரதமர் மோடிக்கு வருகிற பாராளுமன்ற தேர்தலில் மக்கள் அவருக்கு பாடம் புகட்டுவார்கள். ராணுவம் அல்லது வருமான வரித்துறை மூலம் மிரட்டி பணிய வைக்கலாம் என பிரதமர் மோடி நினைக்கிறார். கண்டிப்பாக இது நடக்காது. பிரதமர் மோடி, அமித்ஷா, பா.ஜ.க தலைவர்கள் வரக்கூடிய தேர்தலில் மண்ணை கவ்வுவார்கள்.
தற்போது அமைச்சர்கள் பொன்முடி, செந்தில் பாலாஜி ஆகியோரை அமலாக்கத்துறை அநாவசியமாக பிடித்து விசாரித்து கொண்டு இருக்கிறதோ அதேபோல் மத்தியில் ஆட்சி மாறிய உடன் கண்டிப்பாக மோடி, அமித்ஷா, அவர்களுக்கு வேண்டியவர்களும் கம்பிகளுக்கு பின்னால் போவார்கள் என்பது உறுதி. புலியை பார்த்து பூனை கோடு போட்டு கொண்டது என சொல்வார்கள்.
அதைப்போல காங்கிரஸ் கட்சியும், தோழமை கட்சிகளும் பெங்களூரில் கூட்டம் நடத்தி வருகின்றனர். அதைப்பார்த்து பா.ஜ.க.வினரும் அவர்களது தோழமை கட்சிகளுடன் கூட்டம் போட்டுள்ளனர். அங்கு இருக்கிற நபர்கள் யாரேன்று பார்த்தால், தொண்டானாகவும், தலைவராகவும் இருக்கிற ஜி.கே.வாசனை போன்றவர்கள் தான். ஜி.கே.வாசன் காங்கிரஸ் மற்றும் மற்ற கட்சிகள் நடத்துகிற அளவுக்கு கூட்டம் நடத்த முடியாது. வருகிற பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி தலைமையில் இருக்கிற கூட்டணி மிகப்பெரிய தோல்வி அடையும். தமிழக அரசின் தலைமை செயலகத்தி ல் அமலாக்கத்துறை சோதனை நடத்த போலீசாரும், அரசும் அனுமதிக்க கூடாது. அரசு தலைமை அலுவலகத்தில் சோதனை செய்வது சட்டத்திற்கு புறம்பானது.
இந்த தேர்தலில் காங்கிரஸ் தலைமை மற்றும் வழிகாட்டுதலின்பேரில் நாட்டில் இருக்கின்ற அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றாக சேர்ந்து மதவாத மற்றும் சர்வாதிகாரியான மோடியை கண்டிப்பாக தோற்கடிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தரம் குறைந்த மஞ்சள் உற்பத்தியாவதால் வியாபாரிகளுக்கும் நிறுவனங்களுக்கும் தரமான மஞ்சள் அங்கு கிடைக்கவில்லை.
- மஞ்சள் ஓராண்டு பயிர் என்பதால் அடுத்த ஆண்டு உற்பத்தியை கணக்கிட்டு மஞ்சள் விலை நிர்ணயிக்கப்படுகிறது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மற்றும் பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடம், ஈரோடு மற்றும் கோபி சொசைட்டி என 4 இடங்களில், திங்கள் முதல் வெள்ளி வரை மஞ்சள் ஏலத்தின் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. சராசரியாக நாள்தோறும் 5 ஆயிரம் மூட்டை வரை மஞ்சள் இங்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.
கடந்த மாதங்களில் ஒரு குவிண்டால் மஞ்சள் ரூ.6 ஆயிரத்து 500 முதல் ரூ.7 ஆயித்து 500 ரூபாய்க்கு விற்பனையானது. வடமாநிலங்களில் அதிக மழையால் மஞ்சள் விளைச்சல் பாதிக்கப்பட்டு தரம் குறைந்த மஞ்சள் உற்பத்தியாவதால் வியாபாரிகளுக்கும் நிறுவனங்களுக்கும் தரமான மஞ்சள் அங்கு கிடைக்கவில்லை. குறிப்பாக மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் தரம் குறைந்த மஞ்சளே அதிகம் கிடைப்பதால் வியாபாரிகள் ஈரோடு பகுதி மஞ்சளை அதிகம் வாங்க தொடங்கியுள்ளனர்.
தமிழகத்தில், ஈரோடு, சேலம் பகுதி மஞ்சள் தரமாக உள்ளதால் படிப்படியாக விலை அதிகரித்து வருகிறது. இந்த மாத தொடக்கத்தில் 8,500 ரூபாயாக இருந்த ஒரு குவிண்டால் மஞ்சள் கடந்த வாரம் 10 ஆயிரம் ரூபாயை எட்டியது. கிட்டத்தட்ட 12 வருடங்களுக்கு பிறகு மஞ்சள் குவிண்டால் ரூ. 10 ஆயிரத்தை எட்டியது. கடந்த வெள்ளியன்று 10,500 ரூபாயாக உயர்ந்தது. இந்நிலையில் இன்று மேலும் 2 ஆயிரம் ரூபாய் உயர்ந்து, முதல் தர மஞ்சள் அதிகபட்சமாக 12,600 ரூபாய்க்கு விற்பனையானது.
கடந்த 6 மாதங்களில் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் மஞ்சளின் அளவு 25 சதவீதம் உயர்ந்துள்ளதாலும், வட மாநிலங்களில் பெய்த மழையினாலும் ஈரோடு சந்தையில் மஞ்சள் விலை உயர்ந்துள்ளதாக கூறும் வணிகர்கள், இன்னும் விலை உயரும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் பலரும் மஞ்சளை இருப்பு வைத்துள்ளதாக தெரிவித்தனர்.
மஞ்சள் ஓராண்டு பயிர் என்பதால் அடுத்த ஆண்டு உற்பத்தியை கணக்கிட்டு மஞ்சள் விலை நிர்ணயிக்கப்படுகிறது. மராட்டியத்தில் மஞ்சள் மொத்த சாகுபடி பரப்பு அடுத்த மாதம் தெரியவரும் என்றும், அப்போது விலையில் மாற்றம் ஏற்படலாம், அதுவரை இதே விலை நீடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.
மஞ்சள் விலை 3 மாதங்களில் குவிண்டாலுக்கு சுமார் 5 ஆயிரம் ரூபாய் வரை உயர்ந்திருப்பது விவசாயிகளிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு மஞ்சளுக்கு திடீர் கிராக்கி ஏற்பட்டுள்ளதால் வெளி மாநில வியாபாரிகள் ஈரோடு நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர்.






