என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "jewelery at knife point"

    • விஜய பிரியா வந்த மொபட்டை தடுத்து நிறுத்தி வழி மறித்தார்.
    • கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தாலி சங்கிலியை பறித்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார்.

    சென்னிமலை:

    சென்னிமலை யூனியன் அத்தப்பம்பாளையம் ஐத்ரேயா நகரை சேர்ந்தவர் குமரேசன். இவருடைய மனைவி விஜய பிரியா (வயது 45). இவர் ஈரோடு-பெருந்துறை ரோட்டில் உள்ள திண்டல் பகுதியில் மருந்து கடை வைத்து நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் விஜய பிரியா சம்பவத்தன்று இரவு வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு மொபட்டில் அத்தப்பம்பாளையத்தில் உள்ள தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். திண்டல் ரிங் ரோடு அருகே சென்றபோது அங்கு மர்மநபர் ஒருவர் வந்தார்.

    அவர் திடீரென விஜய பிரியா வந்த மொபட்டை தடுத்து நிறுத்தி வழி மறித்தார். பின்னர் அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரது கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தாலி சங்கிலியை பறித்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார்.

    இதுகுறித்து விஜய பிரியா வெள்ளோடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தாலிசங்கிலியை பறித்து விட்டு தப்பிய மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

    ×