search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Case registered against"

    • பெண்கள் 2 பேரை பிடித்து விசாரித்தனர்.
    • லாட்டரி எண்களை பெற்று ஏமாற்றி விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்துள்ள மைலம்பாடி, காட்டூர் பஸ் நிறுத்தத்தில் பவானி போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த பெண்கள் 2 பேரைப் பிடித்து விசாரித்தனர்.

    அதில் அவர்கள் மைலம்பாடியை சேர்ந்த சந்தியா (37), பவானியை சேர்ந்த சித்ரா (37) என்பது தெரியவந்தது. மேலும் அவர்களது உடைமைகளை சோதனையிட்டபோது ஒரு ரோஸ் கலர் பேப்பரில் எண்கள் எழுதப்பட்டிருப்பது தெரியவந்தது.

    விசாரணையில் அவர்கள் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுகள் என கூறி விற்பனை செய்து பொதுமக்களை ஏமாற்றி வந்ததும், வாட்ஸ்-அப் மூலமாக லாட்டரி எண்களை பெற்று ஏமாற்றி விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பணம் வைத்து சூதாடி கொண்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • போலீசார் விசாரணை நடத்தி சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள ராஜீவ் நகர் கோட்டை முனியப்பன் கோவில் அருகே சிவா என்பவரின் தோட்டத்தில் உள்ள அறையில் பணம் வைத்து சூதாடி கொண்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சோதனை செய்தபோது ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடி கொண்டு இருப்பது தெரிய வந்தது.

    இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி சூதாட்டத்தில் ஈடுபட்ட சிவா, மோகன், சுரேஷ், தங்கராஜ், பாஸ்கர், சமரேஷ், விஜயகுமார் ஆகிய 7 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

    மேலும் ரொக்க பணம் ரூ.31 ஆயிரத்து 600, 3 மோட்டார் சைக்கிள்கள், ஒரு கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    • காசிபாளையம் அருகே உள்ள அரசலமரம் பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர்.
    • இது குறித்து கடத்தூர் போலீசார் 7 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கடத்தூர் இன்ஸ்பெக்டர் துரைப்பாண்டியன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது கடத்தூர் அடுத்த காசிபாளையம் அருகே உள்ள அரசலமரம் பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர்.

    போலீசார் அந்த கும்பலை மடக்கி பிடித்து விசாரணை நடத்தியதில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த அய்யாசாமி (53), கிருஷ்ணன் (68), பெருமாள் (56), பரமேஸ்வரன் (50), நஞ்சப்பன்(62), முருகேசன் (50) ஆகியோர் என்பதும் இவர்கள் பணம் வைத்து சூதாடி கொண்டு இருப்பதும் தெரிய வந்தது.

    இது குறித்து கடத்தூர் போலீசார் 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து சீட்டுக்கட்டுகள், பணம் ரூ.7,050 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    • கருங்கல்பாளையம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
    • போலீசார் பூபதி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுகிறதா? என்பதை கண்காணிக்க போலீசார் தங்கள் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் கருங்கல்பாளையம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது ராஜாஜிபுரம் சுப்பையா தெரு அருகே லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனையடுத்த போலீசார் அங்கு சென்ற போது கருங்கல்பாளையம் கே.என்.கே ரோடு பகுதியை சேர்ந்த பூபதி (46) என்பவர் அரசால் தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி சீட்டு நம்பரை வெள்ளை தாளில் எழுதி பரிசு விழும் என்று கூறி விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.

    மேலும் அவரிடம் இருந்து 9 கேரளா லாட்டரி சீட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் சித்தோடு சப்-இன்ஸ்பெக்டர் குகனேஸ்வரன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அம்பேத்கார் நகர் அருகே லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.

    போலீசார் அங்கு சென்றபோது ஆர்.என்.புதூர் அமராவதி நகரை சேர்ந்த விக்னேஷ் (30) என்பவர் அரசால் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுகள் எண்களை வெள்ளைத்தாளில் எழுதி பரிசு பெறும் என்று கூறி லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.

    அவரிடமிருந்து 2 லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து சித்தோடு போலீசார் விக்னேஷ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×