என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2 பெண்கள் மீது வழக்கு பதிவு"

    • பெண்கள் 2 பேரை பிடித்து விசாரித்தனர்.
    • லாட்டரி எண்களை பெற்று ஏமாற்றி விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்துள்ள மைலம்பாடி, காட்டூர் பஸ் நிறுத்தத்தில் பவானி போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த பெண்கள் 2 பேரைப் பிடித்து விசாரித்தனர்.

    அதில் அவர்கள் மைலம்பாடியை சேர்ந்த சந்தியா (37), பவானியை சேர்ந்த சித்ரா (37) என்பது தெரியவந்தது. மேலும் அவர்களது உடைமைகளை சோதனையிட்டபோது ஒரு ரோஸ் கலர் பேப்பரில் எண்கள் எழுதப்பட்டிருப்பது தெரியவந்தது.

    விசாரணையில் அவர்கள் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுகள் என கூறி விற்பனை செய்து பொதுமக்களை ஏமாற்றி வந்ததும், வாட்ஸ்-அப் மூலமாக லாட்டரி எண்களை பெற்று ஏமாற்றி விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×