லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் மீது வழக்குப்பதிவு

கருங்கல்பாளையம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.போலீசார் பூபதி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் மீது வழக்குப்பதிவு
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுகிறதா? என்பதை கண்காணிக்க போலீசார் தங்கள் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கருங்கல்பாளையம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது ராஜாஜிபுரம் சுப்பையா தெரு அருகே லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்த போலீசார் அங்கு சென்ற போது கருங்கல்பாளையம் கே.என்.கே ரோடு பகுதியை சேர்ந்த பூபதி (46) என்பவர் அரசால் தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி சீட்டு நம்பரை வெள்ளை தாளில் எழுதி பரிசு விழும் என்று கூறி விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.

மேலும் அவரிடம் இருந்து 9 கேரளா லாட்டரி சீட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் சித்தோடு சப்-இன்ஸ்பெக்டர் குகனேஸ்வரன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அம்பேத்கார் நகர் அருகே லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.

போலீசார் அங்கு சென்றபோது ஆர்.என்.புதூர் அமராவதி நகரை சேர்ந்த விக்னேஷ் (30) என்பவர் அரசால் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுகள் எண்களை வெள்ளைத்தாளில் எழுதி பரிசு பெறும் என்று கூறி லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.

அவரிடமிருந்து 2 லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து சித்தோடு போலீசார் விக்னேஷ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com