search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bhavanisagar dam reservoir"

    • பவானிசாகர் அணை நீர்த்தேக்க பகுதியில் மீன் குஞ்சுகள் விடும் நிகழ்ச்சி நடந்தது.
    • ரூ.3.45 லட்சம் மதிப்பில் குஞ்சுகள் விடப்பட்டன.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் அடுத்த பவானி சாகர் அணை நீர்த்தேக்க பகுதியில் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகம் சார்பில் மீன் குஞ்சு வளர்க்கப்பட்டு வருகிறது.

    குறித்த காலத்துக்கு ஒருமுறை மீன் குஞ்சு விடப்படுவது வழக்கம். அதன்படி பவானிசாகர் அணை நீர்த்தேக்கப் பகுதியில் மீன் குஞ்சுகள் விடும் நிகழ்ச்சி நடந்தது.

    ரோகு இனம் ரூ.2.44 லட்சம், மிர்கால் ரூ.1 லட்சம் என ரூ.3.45 லட்சம் மதிப்பில் குஞ்சுகள் விடப்பட்டன.

    இந்த சீசனில் 3.28 லட்சம் மீன் குஞ்சுகள் விட இலக்கு நிர்ணயி க்கப்பட்டு அதைவிட கூடுதலாக மீன் குஞ்சுகள் விடப்பட்டு ள்ளதாக மீன் வளர்ச்சி கழக அதிகாரிகள் தெரிவித்து ள்ளனர்.

    இதில் மீன்பிடி ஒப்பந்ததாரர், பவானிசாகர் அணை நீர்த்தேக்க பகுதி மீனவர்கள் கலந்து கொண்டனர். 

    • கடந்த 2 மாதங்களுக்கு மேலாக அணையின் நீர் தேக்க பகுதிகளில் பரவலாக பலத்த மழை கொட்டியது.
    • மேலும் நீர் தேக்க பகுதியையொட்டிய பகுதிகளில் விவசாய நிலங்களிலும் தண்ணீர் புகுந்து வருகிறது.

    சத்தியமங்கலம்:

    பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாட்டங்களில் சுமார் 2.50 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.

    நீலகிரி மலை ப்பகுதியில் மழை பெய்தால் அணைக்கு நீர் வரத்து அதிகரிக்கும். மேலும் ஊட்டி மலைப்பகுதி, மேட்டுப்பாளையம் மற்றும் பவானிசாகர் நீர் தேக்க பகுதிகளில் விவசாயிகள் பலர் வாழை உள்பட பல்வேறு பயிர்களை சாகு படி செய்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையில் கடந்த மாதம் வரை 102 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு வந்தது.

    அணையின் பாதுகாப்பு வழிமுறைப்படி இந்த மாதம் (நவம்பர்) 105 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்க முடிவு செய்யப்பட்டது. இதையொட்டி அணையில் 104 அடிக்கு மேல் தண்ணீர் தேக்கி வைக்கபட்டு வரு கிறது.

    இந்த நிலையில் அணையில் 100 அடிக்கு குறைவாக இருக்கும் போது போது நீர் தேக்க பகுதியை யொட்டி உள்ள மேட்டுப்பாளையம் முதல் பவானிசாகர் வரை விவசாய நிலங்களில் வாழை, தட்டைக்காய், செண்டு மல்லி ஆகியவை சாகுபடி செய்வது வழக்கம்.

    இதே போல் கடந்த ஆண்டு பவானிசாகர் அணையில் 100 அடிக்கு கீழ் தண்ணீர் இருந்தது. இதை யொட்டி ஈரோடு மாவட்ட த்துக்குட் பட்ட பவானிசாகர் அணையின் நீர் தேக்க பகுதிகளான சித்தன் குட்டை, ஜே.ஜே.நகர், கனரா மொக்கை, புதுக்காடு உள்பட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் கடந்த ஆண்டு சுமார் 2 லட்சம் வாழைகள் சாகுபடி செய்தனர். ஒரு ஆண்டு பயிர் என்பதால் வாழை களுக்கு தண்ணீர் பாய்ச்சி வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக அணையின் நீர் தேக்க பகுதிகளில் பரவலாக பலத்த மழை கொட்டியது. இதனால் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு படிப்படி யாக உயர்ந்து அணையின் நீர் மட்டம் 104 அடிக்கு மேல் இருந்து வருகிறது.

    இதனால் நீர் தேக்க பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து செல்கிறது. மேலும் நீர் தேக்க பகுதியையொட்டிய பகுதிகளில் விவசாய நிலங்களிலும் தண்ணீர் புகுந்து வருகிறது.

    இதையொட்டி சித்தன் குட்டை, புதுக்காடு உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள வாழை தோட்டங்களில் தண்ணீர் புகுந்தது. இதனால் சுமார் 2 லட்சம் வாழைகள் தண்ணீரில் மூழ்கியது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து வருகிறார் கள்.

    ×