என் மலர்
ஈரோடு
- ஈரோடு மாவட்டத்தில் மகளிர் உரிமை தொகை பெற 2.25 லட்சம் பேர் பதிவு செய்தனர்
- இதுவரை 3.30 லட்சம் விண்ணப்பங்கள் வழ ங்கப்பட்டுள்ளன.
ஈரோடு,
ஈரோடு மாவட்டத்தில் 1,207 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகிறது. இதில் 7 லட்சத்து 67 ஆயி ரத்து 316 ரேஷன் கார்டுகள் உள்ளன. ரேஷன் கடை க்காரர்கள் மூலம் 2 கட்ட மாக மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் பெறுவதற்கான விண்ண ப்பம், டோக்கன் வழங்க ப்பட்டது. இதுவரை 3.30 லட்சம் விண்ணப்பங்கள் வழ ங்கப்பட்டுள்ளன. இதற்காக நடந்த பதிவேற்ற முகா ம்களில் இதுவரை 2.25 லட்சம் பேர் மட்டுமே பதி வேற்றம் செய்துள்ள னர்.
இது குறித்து அதிகாரிகள் கூறியதா வது:- பதிவேற்றம் செய்ய ப்பட்ட விண்ண ப்பங்கள், மாநில அரசு தனி சாப்ட்வேர் மூலம் பரிசீ லனை செய்து, தகுதியான நபர்கள் மற்றும் தகுதி இல்லாத நபர்களுக்கும் எஸ்.எம்.எஸ். மூலம் குறு ஞ்செய்தி அனுப்பி உள்ளது. அந்த விவரங்கள் இது வரை மாவட்டங்களுக்கு தெரிவிக்கப்படவில்லை. அப்பணி முழுமையாக நிறைவு செய்த பின் எவ்வ ளவு பயனாளிகள் தகுதி யானவர்கள் என்ற விவரம் தெரிய வரும். இவ்வாறு அவர்கள் கூறினார்.
- அளவுக்கு அதிகமாக மது அருந்தியவர் உயிரிழந்தார்
- புகாரின் பேரில் அறச்சலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஈரோடு,
ஈரோடு மாவட்டம் அவ ல்பூந்துறை தெற்கு வீதியைச் சேர்ந்தவர் குணசேகரன் (வயது 60). இவரது மனைவி கடந்த 9 வருடங்களுக்கு முன்னர் இறந்து விட்டார். இவரது மகன் பூவேந்திரன் (34) மனைவியுடன் தனியாக வசித்து வருகிறார். குணசேகரன் தனது சகோ தரி கோமதியின் வீட்டில் சாப்பிட்டுக் கொண்டு தனது வீட்டில் வசித்து வந்துள்ளார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து ள்ளது. இந்த நிலையில் கட ந்த 24-ம் தேதி காலையில் வழக்கம் போல தனது சகோ தரியின் வீட்டில் சாப்பிட்டு விட்டு தனது வீட்டுக்குச் சென்ற குணசேகரன், அன்று இரவு சாப்பிடச் செல்லவில்லை என கூற ப்படுகிறது. மது அருந்தும் பழக்கம் உள்ளதால் சில நாட்களில் போதையில் சாப்பிட வராமல் தனது வீட்டிலேயே குணசேகரன் தங்கி விடுவாராம்.
இந்நிலையில் சம்பவத்த ன்று குணசேகரனின் வீட் டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் ஜன்னல் வழியாக பார்த்தபோது குணசேகரன் உயிரிழந்த நிலையில் வீட்டினுள் கிட ந்துள்ளார். பின்னர் இதுகு றித்து மகன் பூவேந்திரன் அளித்த புகாரின் பேரில் அறச்சலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- சட்டவிரோதமாக மது விற்ற 2 பெண்கள் உள்பட 11 பேர் கைது செய்யபட்டனர்
- 113 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்தனர்
ஈரோடு,
ஈரோடு மாவட்ட போலீ சார் சட்ட விரோத மது விற் பனையை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதனடிப்ப டையில் வரப்பாளையம், ஈரோடு தாலுகா, சூரம்பட்டி, வீரப்பன் சத்திரம், கடத்தூர், பர்கூர் மற்றும் ஈரோடு டவுண் போலீசார் தங்களது காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணி யில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அரசு மதுபா னத்தை சட்டவிரோதமாக கடத்தி, அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்த நம்பி யூர் தாலுகா பொலவபா ளையம் தண்டுக்காரன் தோட்டத்தைச் சேர்ந்த நடராஜ் ( வயது 50), ஈரோடு மூலப்பாளையம் பாரதி நகரைச் சேர்ந்த சந்தோ ஷ்குமார் (23), புதுக்கோ ட்டை மாவட்டம் பொன்ன மராவதி கங்கானிபட்டியைச் சேர்ந்த சின்னையன் (48), தஞ்சாவூர் மாவட்டம் திரு வாரன்குறிச்சி வடபாதி கள்ளிக்காடு பகுதியைச் சேர்ந்த ரங்கராஜ் (50), ஈரோடு பெரியசேமூர் சின்னவலசு பகுதியைச் சேர்ந்த சொக்கலிங்கம் (47), சத்தியமங்கலத்தை அடுத்த உக்கரம் சம நகரைச் சேர்ந்த ரேவதி (46), சரசாள் (62), உக்கரம் வண்டி பாளை யத்தைச் சேர்ந்த சுப்ரமணி (65), பவானி தாலுகா கீழ்வாணி இந்திரா நகரைச் சேர்ந்த இந்திரஜித் (20), சிவகங்கை மாவட்டம் அரி யாண்டிபட்டியைச் சேர்ந்த சோலைராஜன் (36), ஈரோடு சூரம்பட்டியைச் சேர்ந்த ஈஸ்வரன் (42) ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருது 113 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
- இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்
- வீட்டில் உள்ள 43 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது
ஈரோடு,
ஈரோடு மாவட்டம் கதிர ம்பட்டி அடுத்துள்ள நஞ்ச ப்பாநகரை சேர்ந்தவர் கவிதா. இவரது கணவர் சங்கர் உயிரிழந்த நிலையில் கவிதாவின் மகள் கோவை யில் தங்கியுள்ளார். கவிதா மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார். இவர் ஈரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் கண க்காளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கவிதா கடந்த 25-ம் தேதி கோவையில் உள்ள மகள் வீட்டிற்கு சென்றுவிட்டார். நேற்று மாலை கவிதா மகள் வீட்டிலிருந்து ஈரோட்டில் உள்ள வீட்டிற்கு வந்தார்.
அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிரு ப்பதை கண்டு அதிர்ச்சிய டைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் பொருட்கள் சிதறி கிடந்தன. பீரோ உடைக்க பட்டு அதில் இருந்த 43 பவுன் தங்க நகைகள் கொள்ளையடி க்கப்பட்டது தெரியவந்தது. பின்னர் இதுகுறித்து தாலுக்கா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு டவுண் டி.எஸ்.பி. ஆறுமுகம் தலைமை யிலான போலீசார் வந்து தீவிர விசாரணை மேற்கொ ண்டனர்.
மேலும் சம்பவ இடத்திற்கு மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுண ர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமரா காட்சி களை கொண்டு போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
- பவானி பெண்ணை கொன்ற வாலிபர் சிறையில் அடைக்கப்பட்டார்
- இது குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பவானி,
ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள சித்தோடு அண்ணாமலை யார் வீதியைச் சேர்ந்தவர் சிவகார்த்தி. இவர் கடந்த 7 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது மனைவி மேனகா (47). இவர்களுக்கு 22 வயதில் ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் மேனகா கடந்த சில நாட்களுக்கு முன்பு கட்டிலில் இருந்து தவறி விழுந்து இறந்தார். இதையடுத்து போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிரேத பரிசோதனை அறிக்கையில் மேனகாவின் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்ய ப்பட்டி ருப்பது தெரியவந்தது. இதனால் இந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் விசாரணையை தீவிர படுத்தியதில் மேனகாவை கொன்றது அவரது மகளின் காதலன் தினேஷ் பாலா (22) என தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் கூறும் போது, மேனகாவின் மகள் யூ-டியூப் எடிட்டரான தினேஷ் பாலாவை காத லித்து வந்துள்ளார்.
இரு வீட்டிலும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்து அதற்கான ஏற்பா டுகளும் நடந்து வந்தது. இந்நிலையில் மேனகாவின் நடவடிக்கை சரியில்லா ததால் அவரது மகள் தாயை கண்டித்துள்ளார். இந்நிலையில் சம்ப வத்தன்று மேனகா வீட்டில் இருந்து உள்ளார். அப்போது அங்கு வந்த தினேஷ் பாலா தனது வருங்கால மாமியா ரிடம் அவரது நடவடிக்கை குறித்து பேசி உள்ளார். அப்போது இருவர் இடை யே தகராறு ஏற்ப ட்டுள்ளது.
இதில் ஆத்திர மடைந்த மேனகா, தினேஷ் பாலாவை அடித்துள்ளார். இதனால் ஆத்திரத்தில் தினேஷ் பாலா மேனகாவை கழு த்தை நெரித்து கொலை செய்துள்ளார். இச்சம்பவம் குறித்து அவர் தனது காதலியிடம் கூறியுள்ளார். அவரும் கொலையை மறை க்க காதலனுக்கு உதவி செய்துள்ளார். இது குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து தினேஷ் பாலா மற்றும் அவரது காதலியை கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்ப் படுத்தப்பட்ட தினேஷ் பா லா கோவை மத்திய சிறை யில் அடைக்கப்பட்டார்.
- தற்போது தண்ணீர் வரவர கிளை வாய்க்கால்களிலும் தண்ணீர் திறந்து விவசாயப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
- குறிப்பிட்ட கால அளவுக்கு முன்னதாகவே தண்ணீர் கடைமடையை எட்டியுள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து இந்த ஆண்டுக்கான முதல் போகத்துக்கான தண்ணீர் கீழ்பவானி வாய்க்காலின் இரட்டைப் படை மதகுகள் மற்றும் சென்னசமுத்திரம் பகிர்மானக் கால்வாயின் ஒற்றைப் படை மதகுகளில் கடந்த 15-8-2023 முதல் 13-12-2023 வரை 120 நாள்களுக்கு தண்ணீர் திறந்துவிடப்படும் என உத்தரவிடப்பட்டிருந்தது.
ஆனால், கீழ்பவானி வாய்க்காலில் மேற்கொள்ளப்பட்டு வந்த பராமரிப்புப் பணிகள் முடிவடையாத நிலையில், ஆகஸ்ட் 15ம் தேதி மாலை 5 மணியளவில் தண்ணீர் திறக்கப்பட்டு சிறிது நேரத்திலேயே மீண்டும் நிறுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, மீண்டும் 19-ந் தேதி காலை 11 மணியளவில் பவானிசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 200 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
தொடர்ந்து அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறப்பு படிப்படியாக அதிகரிக்கப்பட்டது. 20-ந் தேதி காலை 8 மணி நிலவரப்படி அணையில் இருந்து வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
இதுமேலும் தினமும் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு நேற்று காலை 8 மணி நிலவரத்தின் படி அணைக்கு வினாடிக்கு 2,200 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. வாய்க்காலில் தண்ணீர் திறந்துவிடப்பட்டபோது 105 அடி உயரம் கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் நீர் இருப்பு 82.71 அடியாக இருந்த நிலையில், தண்ணீர் திறப்பு அதிகரித்ததையடுத்து, அணையின் நீர் மட்டமும் படிப்படியாக குறைந்து தற்போது 80.46 அடியாக உள்ளது.
இந்நிலையில், கீழ்பவானி வாய்க்காலில் கடந்த 19ம் தேதி திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று மாலையில் அதன் கடைமடைப் பகுதியான 125-வது மைலில் உள்ள மங்களப்பட்டியை எட்டியது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதுகுறித்து, கீழ்பவானி பாசன பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் ரவி கூறியதாவது:-
கடந்த 19-ந் தேதி கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டதையடுத்து, குறிப்பிட்ட கால அளவுக்கு முன்னதாகவே தண்ணீர் கடைமடையை எட்டியுள்ளது. தவிர எப்போதும், கடைமடையை தண்ணீர் எட்டிய பின்னரே கிளை வாய்க்கால்களில் தண்ணீர் திறப்பார்கள். ஆனால், தற்போது தண்ணீர் வரவர கிளை வாய்க்கால்களிலும் தண்ணீர் திறந்து விவசாயப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பிட்ட கால அளவுக்கு முன்னதாகவே தண்ணீர் கடைமடையை எட்டியதற்கு காரணம், கடந்த போகத்தில் வாய்க்காலை முறையாக தூர் வாரி, மணல் திட்டுகளை அகற்றியதே ஆகும். காங்கிரீட் போட்டால் தான் தண்ணீர் கடைமடைக்கு போய்ச் சேரும் என கூறிவரும் சிலரின் கூற்று இதன் மூலமாக பொய்யாகியுள்ளது.
பல்வேறு இடையூறுகளுக்கு இடையிலும், எங்களது கோரிக்கையை ஏற்று குறிப்பிட்ட காலத்தில், இந்த போகத்துக்கு, எவ்வித பாதிப்பும் இன்றி வாய்க்காலில் தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை எடுத்த மாவட்ட அமைச்சர் சு.முத்துசாமிக்கும், கலெக்டர் ராஜகோபால் சுன்கரா மற்றும் சம்பந்தப்பட்ட நீர்வளத் துறை அதிகாரிகளுக்கும் எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிலையில் இன்று தண்ணீர் கடைமடையை எட்டியதையடுத்து அதைக் கொண்டாடும் விதமாக அப்பகுதி விவசாயிகள் கடைமடைப் பகுதியில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர்.
- டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென லாரி சாலையோரம் கவிழ்ந்தது.
- விபத்து குறித்து பர்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மற்றும் தாமரைக்கரை மலைப்பகுதி வழியாக கர்நாடகா மாநிலம் மைசூருக்கு தினமும் கார், வேன், இருசக்கர வாகனங்கள் என தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.
குறிப்பாக தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து சரக்கு வாகனங்கள் அதிகளவில் இந்த வழியாக மைசூருக்கு சென்று வருகிறது.
இந்த நிலையில் ஈரோட்டில் இருந்து அட்டை லோடுகள் ஏற்றிக்கொண்டு அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதி வழியாக ஒரு லாரி சென்று கொண்டு இருந்தது. இந்த லாரியை டிரைவர் நடராஜ் (வயது 52) என்பவர் ஓட்டி சென்றார்.
இதையடுத்து அந்த லாரி பர்கூர்-மைசூரு நெடுஞ்சாலையில் சென்றது. தொடர்ந்து அந்த லாரி பர்கூர் அடுத்த வேலாம்பட்டி பிரிவில் சென்று கொண்டிருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென லாரி சாலையோரம் கவிழ்ந்தது. அப்போது லாரியில் இருந்த அட்டைகள் கீழே விழுந்து கிடந்தது.
இதில் டிரைவர் நடராஜூக்கு தலை மற்றும் கால் பகுதிகளில் அடிபட்டு படுகாயம் அடைந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டிகள் அவரை மீட்டு ஆம்புலன்சு மூலம் அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு முதல் சிகிச்சை பெற்று பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனால் அந்த பகுதியில சிறுது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து பொக்லைன் எந்திரம் மூலம் லாரி அப்புறப்படுத்தப்பட்டது.
இதுகுறித்து பர்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, பர்கூர் மலைப்பாதை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் கர்நாடகா மாநிலத்துக்கு சென்று வருகிறது. இந்த வேலாம்பட்டி பிரிவு பகுதியில் வரும்போது அடிக்கடி லாரிகள் கவிழ்வது நடந்து வருகிறது. ரோடு வளைவு பகுதியாக இருப்பதால் புதிதாக வரும் டிரைவர்கள் வளைவு பகுதியை கவனிக்காமல் செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது என்றனர்.
- அணையின் நீர்வரத்தை விட பாசனத்திற்காக அதிக அளவில் தண்ணீர் தொடர்ந்து திறந்து விடப்பட்டு வருவதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.
- குண்டேரி பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 24.98 அடியாக உள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக கடந்த 15-ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால் கீழ்பவானி வாய்க்காலில் மேற்கொள்ளப்பட்டு வந்த பராமரிப்புப் பணிகள் முடிவடையாததால் சிறிது நேரத்தில் தண்ணீர் மீண்டும் நிறுத்தப்பட்டது.
பின்னர் சீரமைப்பு பணிகள் முடிவடைந்து கடந்த 19-ம் தேதி முதல் மீண்டும் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. முதலில் 200 கனஅடி திறக்கப்பட்டது.
அதன் பிறகு படிப்படியாக நீர்ப்பரப்பு அதிகரித்தது. இந்த நிலையில் இன்று காலை பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 2,200 கன அடியாக அதிகரித்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 105 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீர் மட்டம் இன்று காலை நிலவரப்படி 80.46 அடியாக சரிந்துள்ளது.
அணைக்கு வினாடிக்கு 386 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 500 கன அடியும், காளிங்கராயன் பாசனத்திற்கு 500 கனஅடியும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து 3,300 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
அணையின் நீர்வரத்தை விட பாசனத்திற்காக அதிக அளவில் தண்ணீர் தொடர்ந்து திறந்து விடப்பட்டு வருவதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. இதே போல் மாவட்டத்தின் மற்ற அணைகளின் நீர்மட்டமும் சரிந்து வருகிறது.
குண்டேரி பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 24.98 அடியாக உள்ளது. பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 16.30 அடியாக உள்ளது. வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 21.52 அடியாக உள்ளது.
- மக்கள் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்கின்றனர்.
- வெயிலுடன் அனல் காற்று வீசுவதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. காலை 8 மணிக்கு தொடங்கும் வெயிலின் தாக்கம் மாலை 5 மணி வரை நீடித்து வருகிறது. குறிப்பாக காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெயிலின் தாக்கம் உச்சத்தில் உள்ளது.
மாவட்டத்தில் தொடர்ந்து 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகி வருவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். அக்னி நட்சத்திரத்தை மிஞ்சும் வகையில் மாவட்டத்தில் கலந்து சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
வீட்டுக்குள் கடும் புழுக்கம் நிலவுவதால் குழந்தைகள் முதியவர்கள் அவதி அடைந்து வருகின்றனர். 24 மணி நேரமும் மின்விசிறி இயங்கினாலும் வெப்ப காற்றால் சிரமம் அடைந்து வருகிறார்கள்.
இதைவிட வாகன ஓட்டைகளின் நிலைமை பரிதாபமாக உள்ளது. வெயிலுடன் அனல் காற்று வீசுவதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.
ஈரோடு மாநகராட்சி பகுதியில் தற்போது பல்வேறு இடங்களில் வளர்ச்சி திட்ட பணிகளுக்காக குழி தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் இந்த பகுதிகளை கடந்து செல்ல கூடுதல் நேரம் ஆகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இந்த சமயம் வெயிலின் தாக்கம் அதிகரித்து இருப்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். வெயில் தாக்கத்திலிருந்து தப்பிக்கவும், உடல் சூட்டை தணிக்கும் வகையிலும் இளநீர், கரும்பு பாலை அதிக அளவில் பருகி வருகின்றனர். இதனால் இந்த வியாபாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
இதேப்போல் வெள்ளரிக்காய், தர்பூசணி பழ வியாபாரமும் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. வெயில் தாக்கம் காரணமாக எப்போதும் பரபரப்பாக காணப்படும் பன்னீர்செல்வம் பார்க் ரோடு, மேட்டூர் ரோடு, காந்திஜி ரோடு, பெருந்துறை ஈரோடு ஈஸ்வரன் கோவில் வீதி, கே.என்.கே.ரோடு போன்றவை மக்கள் நடமாட்டம் இன்றி வெறி ச்சோடி காணப்படுகிறது.
கடைவீதிகளிலும் இன்று கூட்டம் சுமாராகவே இருந்தது. மக்கள் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்கின்றனர்.
- மீன் மார்க்கெட்டிற்கு 16 டன் மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது.
- கடுவா இந்த வாரம் 100 ரூபாய் அதிகரித்து 350-க்கு விற்கப்பட்டது.
ஈரோடு:
ஈரோடு ஸ்டோனி பிரிட்ஜ் மீன் மார்க்கெட்டில் 30-க்கும் மேற்பட்ட மீன் கடைகள் உள்ளன. இங்கு கடல் மீன்கள் விற்கப்படு கின்றன. தூத்து க்குடி, நாகப்பட்டினம், காரை க்கால், கேரளா, ராமேஸ்வரம் போன்ற பகுதிகளில் இருந்து கடல் மீன்கள் அதிக அளவில் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
இங்க சாதாரண நாட்களை விட வார இறுதி நாட்களில் வியாபாரம் அதிக அளவில் நடைபெற்று வரும். ஏனெனில் ஆடி மாதம் காரணமாக கடந்த சில வாரமாக மீன்கள் விற்பனை மந்த நிலையில் இருந்தது.
ஆனால் இன்று மீன்கள் வரத்து அதிகரித்து விலையும் குறைந்ததால் வியா பாரம் கடந்த வாரத்தை விட விறு விறுப்பாக நடைபெற்றது.
இன்று மீன் மார்க்கெட்டிற்கு 16 டன் மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது. மீன் வரத்து அதிகரித்து காணப்பட்டதால் கடந்த வாரத்தை விட இன்று மீன்கள் கிலோ ரூ.50 முதல் ரூ.150 வரை விலை குறைந்து காணப்பட்டது. ரூ.1,200-க்கு விற்கப்பட்ட வஞ்சரம் இன்று கிலோவுக்கு 400 ரூபாய் குறைந்து ரூ.800-க்கு விற்கப்பட்டது.
இதேபோல் 550 ரூபாய்க்கு விற்கப்பட்ட விளாமீன் 450-க்கும், 500 ரூபாய்க்கு விற்கப்பட்ட தேங்காய் பாறை 450-க்கும், 450-க்கு விற்க ப்பட்ட சீலா 350-க்கும், 650-க்கு விற்கப்பட்ட நண்டு 500 ரூபாய்க்கும், 450-க்கு விற்க ப்பட்ட பொட்டு நண்டு 350-க்கும், 350-க்கு விற்கப்பட்ட அயிலை 300 ரூபாய்க்கும்,
700 ரூபாய்க்கு விற்கப்பட்ட இறால் 650-க்கும், 800 ரூபாய்க்கு விற்கப்பட்ட வெள்ளை வாவல் 600 ரூபா ய்க்கும், 650-க்கு விற்கப்பட்ட கருப்பு வாவல் 500 ரூபாய்க்கும், 700 ரூபாய்க்கு விற்கப்பட்ட மயில் மீன் 600 ரூபாய்க்கும், 600-க்கு விற்கப்பட்ட கிளி மீன் 500-க்கும், 350-க்கு விற்கப்பட்ட நெத்திலி 250-க்கும் விற்கப்பட்டது.
இதேப்போல் மற்ற மீன்களின் விலை கிலோவில் வருமாறு:-கேரளா மத்தி-250, சின்ன இறால்-500, திருக்கை -300, சூரி-300-க்கும் விற்கப்பட்டது. அதே நேரத்தில் போன வாரம் 250 ரூபாய்க்கு விற்கப்பட்ட கடுவா இந்த வாரம் 100 ரூபாய் அதிகரித்து 350-க்கு விற்கப்பட்டது.
- சென்னிமலை கைலாசநாதருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
- இதில் ஏராளமாக பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
கொடுமுடி:
மதுரை மாநகரில் முன்பு ஒரு காலத்தில் வந்தி அம்மையார் என்ற மூதாட்டி, பிட்டு அமுது சமைத்து அதை விற்று பிழைத்து வந்தார்.
வைகை நதியில் வெள்ள ப்பெருக்கு ஏற்பட்டு மக்கள் துன்பம் அடைந்து பாண்டிய அரசனிடம் முறையிட்டனர். அப்போது அரசன் உடனடி யாக மந்திரியை அழைத்து வீட்டுக்கு ஒருவர் வைகை கரைக்கு சென்று கரையை அடைக்க வேண்டும் என உத்தரவிட்டான்.
வந்தி மூதாட்டி தன்னு டைய முதுமை காரணமாக வேலைக்கு செல்ல முடியா மல் கூலிக்கு ஆள் தேடியும் கிடைக்க வில்லை. பிறகு தான் எந்நேரமும் போற்றும் சிவபெருமானை வணங்கி கொண்டருந்தார்.
அப்போது சுந்தரேச பெரு மான் கூலி ஆளாக வந்தி மூதாட்டி முன்பு நின்று, தான் பிட்டு உணவையே கூலியாக பெற்று கொள்வ தாக கூறி வேலைக்கு சென்று வைகை கரையை அடைத்தார். இறுதி யில் வந்தி மூதாட்டிக்கும் பாண்டிய மன்ன னுக்கும் சிவபெருமான் தரி னசமாக காட்சியளித்தார்.
அந்த நாளே ஆவணி மாத மூல நட்சத்திர நாளாக கருதப்படுவது உண்டு. சென்னிமலையில் உள்ள கைலாசநாதர் கோவிலில் இவ்விழா கடந்த 43 வருடங்க ளாக நடைபெற்று வருகிறது.
இந்த வருட விழா நேற்று காலை 10 மணிக்கு கைலாசநாதருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. சென்னிமலை மலை கோவிலுக்கு செல்லும் பார்க் ரோட்டில் வைகை கரை அமைக்கப்ப ட்டிரு ந்தது.
மாலை 5.20 மணிக்கு வைகை கரைக்கு கைலா சநாதர், சிவகாசி அம்மாள், மற்றும் வள்ளி தெய்வா னை யுடன் சுப்பிரமணிய சுவாமி சகடை தேரில் எழுந்தருளி வைகை கரைக்கு வந்தனர்.
சென்னிமலை முருகன் கோவில் தலைமை குருக்கள் ஸ்ரீலஸ்ரீ ராமநாத சிவாச்சா ரியார் தலைமையில் சிறப்பு வழிபாடு நடை பெற்றது. ஓதுவார் மூர்த்தி ஆனந்த் சிவபெருமானின் பிட்டு திருவிளையாடல் குறித்து பாடல்களை பாடினார்.
இதில் ஏராளமாக பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் கொடுமுடி மகுடேஸ்வரர் கோவிலில் இறைவன் பிட்டுக்கு மண்சு மந்த நிகழ்வு கோவில் அர்ச்ச கர்களால் நடத்தி காட்டப்ப ட்டது.
நிகழ்வின் தொடக்க மாக மகுடேஸ்வர ருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்த ப்பட்டு அலங்காரங்கள் முடி ந்த பின்னர் உற்சவர் திருவீதி உலா நடந்தது.
இதனையடுத்து கோவில் எதிரே உள்ள காவிரி ஆற்றில் பிட்டுக்கு மண் சுமக்கும் நிகழ்வு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
- சம்பவத்தன்று சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
- நிலை தடுமாறி கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் கொடுமுடி வடுகனூரை சேர்ந்தவர் மணி (வயது 60). இவர் நீண்ட நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தொ டர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் சம்பவத்தன்று சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப் போது வடுகனூர் அருகே சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தார்.
இதை அடுத்து அவரை ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சை க்காக அழைத்துச் சென்ற னர். பின்னர் மேல் சிகிச்சை க்காக சேலம் அரசு மருத்து வமனைக்கு கொண்டு சென்றனர்.
இந்நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த மணி சிகிச்சை பலனி ன்றி உயிரிழந்தார். பின்னர் இது குறித்து அவரது மகன் சங்கரன் மலையம்பாளையம் போ லீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






