கஞ்சா விற்ற 2 பேர் கைது

சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த இருவரை பிடித்து விசாரித்தனர்.கஞ்சா சுமார் 300 கிராம் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது.
கஞ்சா விற்ற 2 பேர் கைது
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட போதை பொருள்கள் விற்பனையைத் தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி ஈரோடு மாவட்டம், பவானியை அடுத்துள்ள அம்மாபேட்டை போலீசார் தங்களது காவல் உள்பட்ட பகுதியில் கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, மாணிக்கம்பாளையம் பிரிவு பஸ் ஸ்டாப் அருகில் சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த இருவரைப் பிடித்து விசாரித்தனர்.

அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசியதையடுத்து அவர்களை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர்.

அதில் அவர்கள் மாணிக்கம்பாளையம் பிரிவைச் சேர்ந்த கதிர்வேல் (23), கேசரிமங்கலம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (23) என்பது தெரியவந்தது.

மேலும், விசாரணையில் அவர்கள், அரசால் தடை செய்யப்பட்ட, அதிக போதை தரும் கஞ்சா சுமார் 300 கிராம் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, போலீசார் அவர்கள் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்த 300 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com