என் மலர்
உள்ளூர் செய்திகள்

மயில் சாவு
- காகம் கூட்டம் மயிலை சூழ்ந்து கொண்டு கொத்தியதாக கூறப்படுகிறது.
- வனத்துறையினர் மயிலை எடுத்து சென்று வனசரக அலுவலகத்தில் புதைத்தனர்.
அந்தியூர்:
அந்தியூர் தவிட்டுப்பாளையம் மூப்பனார் சிலை அருகே பழனியப்பா குறுக்கு 4-வது வீதி பகுதியில் இரவு நேரங்களில் அருகில் உள்ள தோட்டப்பகுதிகளில் மயில்கள் அதிகளவில் வந்து செல்லும்.
இந்த நிலையில் நேற்று இரவு வந்த ஒற்றை மயில் காகங்கள் கூடு கட்டி இருக்கும் இடத்தின் அருகே சென்று சத்தமிட்டு கொண்டிருந்தது.
இதனை பார்த்த காகம் கூட்டம் மயிலை சூழ்ந்து கொண்டு கொத்தியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த மயில் இறந்த நிலையில் கிடந்துள்ளது.
இதனை இன்று காலை அந்த பகுதி பொதுமக்கள் பார்த்தவுடன் அந்தியூர் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து அந்த மயிலை எடுத்து சென்று வனசரக அலுவலகத்தில் புதைத்தனர்.
Next Story






