என் மலர்tooltip icon

    ஈரோடு

    • பள்ளி மாணவ, மாணவிகளுக்கான குறுமைய விளையாட்டு போட்டி தொடங்கியது.
    • இதில் கபாடி விளையாட்டு போட்டி நடந்து வருகிறது.

    ஈரோடு:

    ஊஞ்சலூர் அரசு பள்ளியில் மொடக்குறிச்சி மற்றும் கொடுமுடி ஒன்றியங்களை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகளுக்கான குறுமைய விளையாட்டு போட்டி தொடங்கியது. இதில் கபாடி விளையாட்டு போட்டி நடந்து வருகிறது.

    ஆண்களுக்கான போட்டிகளை கொடுமுடி ஒன்றிய தி.மு.க செயலாளர் சின்னசாமி தொடங்கி வைத்தார்.

    இதில் ஆண்கள் பிரிவில் 19 வயதுக்குட்பட்டோருக்கு பிரிவில் 12 அணிகளும், 17 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் 13 அணிகளும், 14 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் 14 அணிகளும் பங்கேற்றன.

    தொடர்ந்து இன்று மாணவிகள் பங்கேற்கும் பெண்களுக்கான கபாடி போட்டியில் 19 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் 6 அணிகளும்,

    17 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் 6 அணிகளும், 14 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் 5 அணிகளும் பங்கேற்று விளையாடி வருகின்றன.

    • சேவல் சண்டை நடப்பதாக பவானி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம், பவானியில் உள்ள பழனிபுரம், பவானி ஆற்றின் கரையோரம் பணம் பந்தயம் வைத்து சேவல் சண்டை நடப்பதாக பவானி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில், போலீசார் அங்கு சென்று பார்த்தபோது அதே பகுதியை சேர்ந்த சரவணன் (41), பவானி, கல்தொழிலாளர் முதல் வீதியைச் சேர்ந்த மணிகண்டன் (34) ஆகிய இருவரும், பணம் பந்தயம் வைத்து சேவல் சண்டையில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இதையடுத்து, போலீசார் அவர்கள் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும், அவர்க ளிடமிருந்து 2 சேவல்கள், பணம் ரூ. 500 ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

    • விரைவு மின் இணைப்பு வழங்கல் திட்டம் நடைமுறை படுத்தப்பட்டு விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகிறது.
    • முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு, ஆக. 29-

    தமிழ்நாடு முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் படி விவசாய மின் இணைப்பு பெற காத்திருப்பு பட்டியலில் உள்ள விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள், விரைந்து விவசாய மின் இணைப்பு பெறும் வகையில் விரைவு (தட்கல்) மின் இணைப்பு வழங்கல் திட்டம் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தால் நடைமுறை படுத்தப்பட்டு விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகிறது.

    மேலும் தட்கல் முறையில் ஏற்கனவே பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கும், தற்போது தட்கல் முறையில் பதிவு செய்யும் விவசாயிகளுக்கும் முன்னுரிமை அடிப்படையில் விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    எனவே, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் ஏற்கனவே விவசாய மின் இணைப்பு கேட்டு பதிவு செய்துள்ள விருப்பமுள்ள விவசாயிகள், இந்த தட்கல் சிறப்பு திட்டத்தின் கீழ் விவசாய மின் இணைப்பு பெற தங்கள் பகுதியில் உள்ள மின் வாரிய செயற்பொறியாளரை தொடர்பு கொள்ளலாம்.

    • வாகனங்களை வழிமறைத்து கரும்புகளை தின்பதும் தொடர்கதையாகி வருகிறது.
    • சுமார் 15 நிமிடத்திற்கு மேலாக சாலையை வழிமறைத்த யானை தானாக வனப்பகுதியில் சென்றது.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தின் வழியாக திண்டுக்கல்லில் இருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது.

    தேசிய நெடுஞ்சாலையை யானைகள் குட்டிகளுடன் அவ்வப்போது சாலையை கடந்து செல்வது வழக்கம். கடந்த சில நாட்களாக கரும்புகளை தின்பதற்காக யானைகள் குட்டியுடன் சாலையில் உலா வருவதும், வாகனங்களை வழிமறைத்து கரும்புகளை தின்பதும் தொடர்கதையாகி வருகிறது.

    இந்நிலையில் நேற்று இரவு தாளவாடியில் இருந்து சத்தியமங்கலம் தனியார் சர்க்கரை ஆலைக்கு கரும்பு பாரம் ஏற்றி கொண்டு லாரி ஒன்று சென்றது. ஆசனூர் அடுத்த திம்பம் அருகே சாலையில் வனப்பகுதியில் இருந்து குட்டியுடன் வெளியேறிய காட்டு யானை கூட்டம் கரும்பு லாரியை எதிர்பார்த்து சாலை ஓரத்தில் காத்திருந்தது.

    கரும்பு லாரியை கண்டதும் குடியுடன் ஓடி சென்று லாரியை வழிமறைத்து கரும்பை தின்றது. இதனால் தமிழகம் -கர்நாடகம் இடையே போக்குவரத்து பாதிக்கப் பட்டது. வாகனங்கள் அணைத்தும் அணிவகுத்து நின்றன. சுமார் 15 நிமிடத்திற்கு மேலாக சாலையை வழிமறைத்த யானை தானாக வனப்பகுதியில் சென்றது.

    கடந்த சில நாட்களாக வனப்பகுதியில் இருந்து வெளியேறும் யானைகள் சாலையில் உலா வருவதும் வாகனங்களை துரத்துவதும் வடிக்கையாகிவிட்டது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர். 

    • ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கேரளா மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஓணம் திருவிழாவை கொண்டாடினர்.
    • ஆடல், பாடல் பாடி நடனம் ஆடி மகிழ்ந்தனர்.

    ஈரோடு:

    கேரளா மாநில மக்களால் ஓணம் திருவிழா உலகம் ழுழுவதும் இன்று மகாபலி மன்னரை வரவேற்று அத்த ப்பூ கோலமிட்டு சிறப்பாக கொண்டாடப்பட்டு வரு கிறது. இதே போல் தமிழகம் முழுவதும் மலையாள மக்க ளால் ஓணம் விழா உற்சாக மாக கொண்டாடப் பட்டது.

    கேரள மாநிலத்தை மகாபலி என்ற மன்னர் சிறப்போடு ஆண்டு வந்தார். தானம், தருமங்கள் செய்வ தில் சிறந்து விளங்கிய இந்த மன்னன் ஒருமுறை வேள்வி செய்யும்போது கிருஷ்ணர் வாமணனாக (குள்ள உருவில்) உருவெ டுத்து வந்து மூன்றடி மண் கேட்டார்.

    மகாபலியும் தந்தார். ஒரு அடியால் இந்தப் பூமியையும் மறு அடியால் விண்ணையும் அளந்த கிருஷ்ணருக்கு மூ ன்றாவது அடிக்காகத் தனது தலையையே கொடு த்தார் மகாபலி மன்னர். அவருக்கு முக்தி அளிக்க வேண்டி அவர் தலையில் கால் வைத்து அவனைப் பாதாள உலகிற்கு தள்ளி னார் கிருஷ்ணர்.

    மகாபலி மன்னர் இன்னும் மூமிக்கு அடியில் இன்னும் வாழ்ந்து கொண்டு இருப்பதா கவும், அவர் ஆண்டுக்கு ஒரு முறை திருவேணம் அன்று பூமிக்கு வந்து மக்களை சந்தி ப்பதாக வும் கேரள மக்களின் நம்பிக்கையாக உள்ளது. இதை யொட்டி அவரை வரவேற்கும் வகையில் திருவேணம் நாளன்று மலையாள மக்க ளால் ஓணம் திருவிழா கொண்டாடப்பட்டு வரு கிறது.

    இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதி களில் கேரளா மாநிலத்தை சேர்ந்தவர்கள் வசித்து வருகிறார்கள். அவர்கள் மகாபலி மன்னரை வரவேற்கு ம் வகையில் ஓணம் திருவிழா வை கடந்த 10 நாட்களாக வாசல்களில் கோலமிட்டு கொண்டாடி வருகிறார்கள்.

    முதல் நாள் ஒரே வகையான பூக்கள் 2-ம் நாள் இரண்டு, மூன்றாம் நாள் மூன்றெனத் தொடர்ந்து பத்தாம் நாள் 10 வகையான பூக்களால் அழகு செய்தனர். 10-ம் நாள், பூக்கோலத்தின் அளவு பெரிதாக இருக்கும். தும்பை, காசி, அரிப்பூ, சங்குப்பூ போன்ற பூக்களுக்கு முதலிடம் தந்து இன்று பெரிய அளவிலான அத்தப்பூ கோலமிட்டனர்.

    இதையொட்டி ஒணத்தின் 10-வது நாளான மலையாள மக்கள் இன்று அதிகாலை யிலேயே குளித்து புத்தம் புதிய துணிகள் அணந்து வீட்டு வாசல்களில் அத்தப்பூ கோலமிட்டு மகாபலி மன்ன ரை வரவேற்றனர். தொட ர்ந்து மகாபலி மன்னரின் உருவத்தை வீட்டில் வைத்து கோலமிட்டு வழிபட்டனர்.

    இதை தொடர்ந்து இன்று மதியம் தங்கள் உறனர்களை வீட்டுக்கு அழைத்து திரு வோண சக்தி விருந்து கொடு த்தனர். கேரள உணவுகள் என்றதுமே, புட்டு, கிழங்கு, பயறு என்பவை நினைவுக்கு வரும். ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு உணவு கள் தயார் செய்யப்படும்.

    "கானம் விற்றாவது ஓணம் உண்" என்ற பழமொழி ஓண சாத்யா என்ற உணவின் சிறப்பைக் கூறுகிறது. 6 சுவை களில் கசப்பு தவிர மற்ற சுவைகளில் "ஓண சாத்யா" என்ற உணவு தயாரிக்கப்படு கிறது.

    புது அரிசி மாவில் தயார் செய்யப்பட்ட அடை, அவியல், அடை பிரதமன், பால் பாயாசம், அரிசி சாதம், பருப்பு, நெய், சாம்பார், காலன், ஓலன், ரசம், மோர், தோரன், சர்க்கரப் புரட்டி, கூட்டு, கிச்சடி, பச்சடி, இஞ்சி ப்புளி, எரிசேரி, மிளகாய் அவியல், பரங்கிக்காய் குழம்பு பப்படம், காய வறுத்தது, சீடை, ஊறுகாய்கள் என உணவுகள் தயார் செய்யப்ப ட்டு கடவுளுக்கு படைக்கப்பட்டன.

    பெரும்பாலான உணவு வகைகளில் தேங்காய் மற்றும் தயிர் பெரும் பங்கு பெறுகிறது. 2 வகையான பாயசம், இனிப்பு வகைகள் பச்சடி, அப்பம், நேந்தி சிப்ஸ், பீட்ரூட் உறுகாய், சரக்கரை வரட்டி உள்பட 26 வகையாக உணவு வகைகளை சமைத்து கேரள பாரம்பரியம்படி விள க்கேற்றி வழிபாடு நடத்தினர். தொடர்ந்து தங்கள் உறவினர்க ளுக்கு விருந்து வழங்கினர்.

    இதை தொடர்ந்து ஒரு வருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறி கொண்ட னர். மேலும் ஆடல், பாடல் பாடி நடனம் ஆடி மகிழ்ந்தனர்.

    • வாழைகளை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை சேதப்படுத்தியது.
    • வனத்துறையினர் அகழி பராமரிப்பு செய்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.

    டி.என்.பாளையம்:

    டி.என்.பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட கணக்கம்பாளையம், கொண்டையம்பாளையம் ஊராட்சியையொட்டி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று கள்ளிப்பட்டி அருகே உள்ள சுண்டக்கரடு மலை வாழ் மக்கள் காலனிக்குள் இரவு நேரங்களில் புகுந்து உலா வருவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    கணக்கம்பாளையம் ஊரா ட்சி சுண்டக்கரடு பகுதியில் செந்தில் என்ற விவசாயி தனது 2½ ஏக்கர் விவசாய நிலத்தில் வாழை பயிரிட்டு இருந்தார். 8 மாதங்களே ஆன வாழைகளை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை சேதப்படுத்தியது.

    கடந்த 10 நாட்களாக கொண்டையம்பாளையம், கணக்கம்பாளையம் ஊராட்சி வன எல்லையில் கரும்பு, வாழை உள்ளிட்ட பயிர்களை விவசாயம் செய்து வரும் தனியார் சிலரின் விவசாய தோட்டத்துக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை பயிர்க ளை தொடர்ந்து சேதப்படுத்தி வருவதாக அப்பகுதி விவசாயிகள் கூறுகின்றனர்.

    வனப்பகுதியில் இருந்து சுண்டக்கரடு பகுதியில் உள்ள ஊருக்குள் யானை செல்லா மல் இருக்க வனத்துறையின ரால் அகழி தோண்டப்பட்டுள்ளது.

    ஒரு சில இடங்களில் பாறை பகுதி உள்ளதால் அகழி தோண்டப்படாத தாலும், அகழி முற்புதர்களால் மண் மூடி கிடப்பதாலும் பராமரிப்பு இன்றி காணப்படு வதால் வன எல்லையில் இருந்து காட்டு யானை ஊருக்குள் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்துவதாக விவசா யிகள் தெரிவிக்கின்றனர்.

    எனவே காட்டு யானை ஊருக்குள் புகாமலும், விவ சாய பயிர்களை சேதப்படு த்தாத வகையிலும் அகழிகளை பராமரிப்பு செய்ய வேண்டும் என்றும் டி.என்.பாளையம் வனத்துறையினருக்கு, ஊர்ப்பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    இந்த நிலையில் நேரில் சம்பவ இடத்திற்கு சென்ற டி.என்.பாளையம் வனத்துறை யினர் அகழி பராமரிப்பு செய்து நடவடிக்கை எடுப்ப தாக தெரிவித்து சென்றனர்.

    • டாக்டர்கள் ரபிஹஸ்தா ஏற்கனவே இறந்து விட்ட தாக தெரிவித்தனர்.
    • நம்பி யூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நம்பியூர்:

    நம்பியூர் அருகே ஓனாக்குட்டை பகுதியில் இயங்கி வரும் தனியார் மில்லில் மேற்கு வங்க மாநிலம் மல்ட்டா மாவட்டம் ஹக்ரா ஹரி சந்திராபூர் பாபுக் பகுதியை சேர்ந்த ரபிஹஸ்தா (58) என்பவர் வேலை செய்து வந்தார். இவரும் தனது சகோதரர் மகன் ஹேமந்த் சரேணும் (25) தனியாக அறை எடுத்து தங்கி வேலை செய்து வந்தனர்.

    இந்நிலையில் சம்பவத்த ன்று ரபிஹஸ்தா தனக்கு உடல்நிலை சரியில்லை நான் வேலைக்கு வரவில்லை என ஹேமந்த் சரேணிடம் கூறியுள்ளார்.

    இதனை யடுத்து ஹேமந்த் சரண் வேலைக்கு சென்று விட்டு மதிய உணவு இடை வேளை க்கு தங்கியிருக்கும் அறைக்கு வந்து பார்த்த பொழுது தனது சித்தப்பா எந்தவித பேச்சும், அசைவும் இல்லா மல் இருப்பது தெரிந்து அருகில் இருந்தவர்கள் உதவியுடன் கோபி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு பரிசோதித்த அரசு டாக்டர்கள் ரபிஹஸ்தா ஏற்கனவே இறந்து விட்ட தாக தெரிவித்தனர். இதையடுத்து ஹேமந்த் சரேண் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த நம்பி யூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.35.75 லட்சம் மோசடி செய்துள்ளனர்
    • பாதிக்கப்பட்டவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு

    ஈரோடு,

    திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் கோமதி. இவரு க்கு குன்னத்தூர் கருங்கல் மேடு பகுதியை சேர்ந்த ஒரு வர் அறிமுகம் ஆகியுள்ளார். அந்த நபர் கோமதியிடம் தனக்கு அரசு உயர் அதிகா ரிகள் நன்றாக தெரியும் என்றும் உங்களுக்கு கிராம உதவியாளர் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். ஆனால் அதற்கு ரூ.8 லட்சம் தேவைப்படுகிறது என்றும் கூறியுள்ளார்.

    இதை உண்மை என்று நம்பிய கோமதி அவரிடம் ரூ.8 லட்சம் கொடுத்து உள்ளார். இதேபோல் கோபி அடுத்த கொள ப்பலூர் பகுதியை சேர்ந்த கோபிநாத்திடம் அந்த நபர் மற்றும் அவருக்கு ஏஜெ ண்டாக செயல்பட்ட மேலும் 2 நபர்கள் அணுகி கோபிநாத்திடம் சப்-இன்ஸ்பெக்டர் வேலை வாங்கி தருவதாக ரூ.15ல ட்சம் வாங்கியுள்ளனர். இதைப்போல் மோகனாம்பாளிடம் இந்து சமய அறநிலைத்துறையில் வேலை வாங்கி தருவதாக ரூ.2.75 லட்சமும், கணேச னிடம் டாஸ்மாக் டெண்டர் ஒப்பந்தம் வாங்கி தருவதாக ரூ.10 லட்சம் என 4 பேரிடம் மொத்தம் ரூ.33.75 லட்சம் வாங்கிக்கொண்டு அவர்க ளுக்கு கூறியவாறு அரசு வேலை வாங்கி தரவில்லை.

    கிட்டத்தட்ட ஒரு ஆண்டு காலமாக அரசு வேலை வாங்கி தருவதாக அவர்க ளிடம் காலம் தாழ்த்தி ஏமாற்றி வந்துள்ளனர். இதனால் பணம் கட்டி ஏமாந்த 4 பேரும் அவர்க ளிடம் வேலை வாங்கித் தரவில்லை என்றாலும் பரவாயில்லை பணத்தை திருப்பி தருமாறு கேட்டு ள்ளனர். அதற்கும் அவர்கள் சரியாக பதில் அளிக்க வில்லை. இதையடுத்து இன்று காலை கோமதி, கணேசன், மோகனாம்பாள், கோபிநாத் ஆகியோர் ஈரோடு கலெ க்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்ட த்தில் கலந்து கொண்டு கலெக்டர் ராஜகோபால் சுன்கராவை சந்தித்து அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.35.75 லட்சம் மோ சடி செய்தவர்கள் மீது சட்ட ப்படி நடவடிக்கை எடுத்து த ங்கள் பணத்தை மீட்டு தர வலி யுறுத்தி மனு அளித்தனர்.

    • ஈரோட்டில் மசாஜ் சென்டரில் விபசாரம் நடந்தது
    • தலைமறைவாக உள்ள உரிமையாளரை தேடும் பணி தீவிரம்

    ஈரோடு,

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள மசாஜ் சென்டர்களில், இளம்பெண்களை வைத்து விபசாரம் நடப்பதாக ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகருக்கு புகார் வந்தது. அதன்பேரில் அவர் மாவட்ட த்தில் உள்ள அனை த்து போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள மசாஜ் சென்டர்களில் சோத னை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்படி ஈரோடு, பெருந்துறை, பவானி, கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம் ஆகிய 5 போலீஸ் உட்கோட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மசாஜ் சென்டர்களில் சோத னை நடத்தப்பட்டது.

    அப்போது ஈரோடு ஈ.வி.என். ரோட்டில் உள்ள ஒரு மசாஜ் சென்டரில் பெண்களை வைத்து விபசாரம் செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி மசாஜ் சென்டர் மேலாளரான ஈரோடு மாணிக்கம்பாளையம் பகுதியை சேர்ந்த சிவா (வயது 41) என்பவரை ஈரோடு அரசு ஆஸ்பத்திரி போலீசார் கைது செய்தனர். மேலும் அந்த மசாஜ் சென்டரில் இருந்து வெளி மாநிலங்களை சேர்ந்த 4 பெண்கள், திருப்பூர் மாவ ட்டத்தை சேர்ந்த ஒரு பெண், கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண் என 20 வயது முதல் 26 வயதுடைய 6 இளம்பெ ண்களை போலீசார் மீட்டு காப்பகத்தில் சேர்த்தனர்.

    மசாஜ் சென்டரின் உரிமையாளர் கோவையைச் சேர்ந்த பாலகுமாரன் என்பவர் தலைமறைவாகி விட்டார். அவரைப் பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த மசாஜ் சென்டருக்கு வாடிக்கையாளர் போல் சென்ற ஒரு வாலிபர் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் சோதனை நடத்தி 6 பெண்களை மீட்டுள்ளனர். இதைப்போல் மாவட்டம் முழுவதும் இயங்கி வரும் மசாஜ் சென்டர்களிலும் இனி வரும் காலங்களில் தீவிர சோதனை நடத்தப்படும் என போலீசார் தெரிவித்தனர். ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக ஜவகர் பதவி ஏற்றது முதல் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

    முதலில் போதை கும்பலை ஒழிக்கும் வகையில் தீவிர நடவடிக்கை எடுத்து முக்கிய குற்றவாளிகள் கைது செய்ய ப்பட்டனர். அதைத்தொடர்ந்து கள்ளச்சாரையும் விற்பவர்களும் கைது செய்யப்பட்டனர். பின்னர் லாட்டரி சீட்டு விற்பனை முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். தற்போது மசாஜ் சென்டரில் விபச்சாரம் செய்யும் கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

    • அந்தியூர் பகுதியில் முகமூடி அணிந்து மர்ம நபர்கள் குழந்தைகளை கடத்த வந்ததாக பரபரப்பு ஏற்பட்டது
    • எனவே போலீசார் அந்தியூர் பகுதியில் இரவு ரோந்து பணியினை தீவிரப்படுத்தி கண்காணிக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    அந்தியூர்;

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள சாந்திய பாளை யம் பகுதியில் ஏராளமான பொது மக்கள் வசித்து வருகிறார்கள். அந்த பகுதியில் ஒரு மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த நிலையில் அந்த பகுதியில் நேற்று இரவு குழந்தைகள் விளையாடி கொண்டு இருந்தனர். அப்போது அங்கு ஒரு காரில் மர்ம நபர்கள் சிலர் முகமூடி அணிந்து கொண்டு வந்தனர். அந்த மர்ம நபர்கள் குழந்தையை கடத்த வந்ததாக கூறப்படுகிறது.

    அவர்கள் பொதுமக்களை கண்டதும் அங்கு இருந்து காரில் தப்பி சென்றாக மக்கள் கூறினர். இது குறித்த தகவல் அந்தப் பகுதி பொதுமக்கள் சமூக வளை தலங்களில் பதிவிட்டனர். இந்த தகவல் வேகமாக பரவியது. இத னால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது. இது குறித்து போலீசா ருக்கு தகவல் தெரிவிக்க ப்பட்டது. இதனை அடுத்து அந்தப் பகுதிக்கு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சக்திவேல், கமலக்கண்ணன் மற்றும் போலீசார் சென்று விசா ரணை நடத்தினர்.

    மேலும் காரில் வந்த மர்ம நபர்கள் யார் என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசார ணை நடத்தி வரு கிறார்கள். இதனால் அந்த பகுதி பொது மக்கள் ஒரு வித அச்சத்தோடு இருந்து வரு கிறார்கள். எனவே போலீசார் அந்தியூர் பகுதியில் இரவு ரோந்து பணியினை தீவிரப்படுத்தி கண்காணிக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • ரூ.10 ஆயிரம் கடன் உதவி பெற சாலையோர வியாபாரிகள் விண்ணப்பிக்கலாம் என ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் தகவல் தெரிவித்தார்
    • ஈரோடு மாநகரா ட்சிக்கு உட்பட்ட பகுதிக ளில் உள்ள சாலையோர வியாபாரிகள் மத்திய அரசின் நிதி உதவி திட்டத்தின் கீழ் ரூ.10 ஆயிரம் கடன் உதவி வழங்கப்பட்டு வருகிறது.

    ஈரோடு,

    ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் ஜானகி ரவீந்திரன் வெளி யிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதா வது:- ஈரோடு மாநகரா ட்சிக்கு உட்பட்ட பகுதிக ளில் உள்ள சாலையோர வியாபாரிகள் மத்திய அரசின் நிதி உதவி திட்டத்தின் கீழ் ரூ.10 ஆயிரம் கடன் உதவி வழங்கப்பட்டு வருகிறது. எனவே ஈரோடு மாநக ராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வியாபாரம் செய்யும் தகுதி உள்ள சாலையோர வியாபா ரிகள், மாநகராட்சி சமு தாய அமைப்பாளர்க ளை ஆதார் கார்டு, ஸ்மார்ட் கார்டு, பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படும், வங்கி கணக்கு புத்தகம், வாக்காளர் அடையாள அட்டை ஆகிய ஆவ ணங்களுடன், அலுவலக வேலை நாட்களில் நேரிலோ அல்லது தொ லைபேசி மூலமாகவோ தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நெஞ்சு வலியால் அரசு விதைப் பண்ணை மேலாளர் உயிரிழந்தார்
    • இதுகுறித்து பவானி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஈரோடு,

    ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்துள்ள ஒலகடம் கூனக்காபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஈஸ்வர மூர்த்தி (வயது 42). இவர் நம்பியூர் அரசு விதைப் பண்ணையில் மேலாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமா கவில்லை. தனது தந்தை மற்றும் தம்பி ஆகியோருடன் வசித்து வந்தார். ஈஸ்வர மூர்த்திக்கு கடந்த ஒரு வருடமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்ததால் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று ஈஸ்வர மூர்த்திக்கு திடீரென நெஞ்சு வலி மற்றும் எரிச்சல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை அவரது குடும்பத்தினர் அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் வரும் வழியிலேயே ஈஸ்வர மூர்த்தி இறந்து விட்டதாக தெரிவித்தார். பின்னர் இதுகுறித்து பவானி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×