search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Consultation meeting on"

    • கருத்து கேட்பு கூட்டம் அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில் நடைபெற்றது.
    • சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் தொடர்புடைய அலுவலர்களுடன் நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ளப்படும்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் பெருந்துறை சிப்காட் வளாகத்தில் இருந்து வெளியேறும் கழிவுகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த கருத்து கேட்பு கூட்டம் கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா முன்னிலையில், அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் அமைச்சர் முத்துசாமி தெரிவித்ததாவது:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டத்திற் குட்பட்ட சிப்காட் தொழிற் பேட்டை வளாகத்தில் இருந்து வெளியேறும் கழிவுகளால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாக பொதுமக்கள் சார்பிலான தொழிற்சங்கங்கள், பல்வேறு அமைப்பினர் மற்றும் தொழிற்துறை யினருடனான கருத்து கேட்புக் கூட்டம் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் தொழிற்பேட்டை வளாகத்தில் இருந்து வெளியேறும் கழிவுகள் தொடர்பான பாதிப்புகள் குறித்தும் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்தும் அனைத்து தரப்பினரிடம் இருந்து பல்வேறு கருத்துக்கள் கேட்கப்பட்டுள்ளது.

    மேலும் தமிழ்நாடு அரசை பொறுத்தளவில், தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலா ளர்களின் நலனுக்காக தொழிற்சாலைகளுக்கு அதிக சலுகைகள் வழங்கியுள்ளது.

    அதேபோன்று, தொழிற்சாலைகள் பொதுமக்கள் மற்றும் இயற்கையை பாதுகாக்கும் வகையில் அரசின் விதி முறைகளை முழுமையாக பின்பற்றிட வேண்டும்.

    அவ்வாறு இல்லாமல் காற்று மற்றும் குடிநீர் மாசு ஏற்படுத்தும் வகையில், விதி முறைகளை பின்பற்றாத தொழிற்சாலைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்வதோடு, பல்வேறு பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் விரைவில் நல்ல தீர்வு மேற்கொள்ளப்படும்.

    தொடர்ந்து வரும் நாட்களில் பெருந்துறை சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் தொடர்புடைய அலுவலர்களுடன் நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக அமைச்சர் முத்துசாமி பெருந்துறை சிப்காட் வளாகத்தில் இருந்து வெளியேறும் கழிவு களால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாக பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரிடம் இருந்து கருத்துக்களை கேட்டறிந்தார்.

    இக்கூட்டத்தில் அந்தியூர் செல்வராஜ் எம்.பி, அ.கணேசமூர்த்தி எம்.பி., மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) மணிஷ், சென்னி மலை ஊராட்சி ஒன்றிய தலைவர் காயத்ரி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் செல்வம், பெருந்துறை தாசில்தார் பூபதி, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுலவர்கள், அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், தொழில் துறையினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் பலர் கலந்து கொண்டனர்.

    • வழிகாட்டி நெறி முறைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    • சென்ற ஆண்டு சிலை வைத்தவர்களுக்கு மட்டுமே இந்த ஆண்டு அனுமதி வழங்கப்படும்.

    பவானி:

    பவானி வர்ணபுரம் முதல் வீதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்ட பத்தில் வரும் 18-ந் தேதி கொண்டாடப்பட உள்ள விநாயகர் சதுர்த்தி விழாவின் போது கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டி நெறி முறைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    பவானி டி.எஸ்.பி. அமிர்தவர்ஷினி தலைமை வகித்தார். சித்தோடு இன்ஸ்பெக்டர் முருகையா, அந்தியூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், பவானி அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் பொன்னம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் கலந்து கொண்ட இந்து அமைப்பினர் இடை யே போலீசார் பேசுகையில்,

    சிலை ஒன்பது அடிக்கும் மேல் உயரம் இருக்கக் கூடாது. சென்ற ஆண்டு சிலை வைத்தவர்களுக்கு மட்டுமே இந்த ஆண்டு அனுமதி வழங்கப்படும். சென்ற ஆண்டு ஊர்வலம் நடத்தி யவர்களுக்கு மட்டும் இந்த ஆண்டு ஊர்வலம் நடத்த அனுமதி வழங்கப்ப டும். சிலை வைக்கப்படும் நபர்கள் சிலையை பாது கா ப்பாகவும், அரசு வழிகாட்டு நெறிமுறை பின்பற்றப்பட வேண்டும் என்பது உட்பட ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் பவானி, ஆப்பக்கூடல், அம்மா பேட்டை, வெள்ளித்திருப்பூர் போன்ற பகுதி சப்- இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.

    • செல்லியாண்டிம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடத்திட அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
    • கும்பாபிஷேகம் நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    பவானி:

    பவானி நகர மக்களின் காவல் தெய்வமாக செல்லியண்டியம்மன்- மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.

    இந்த கோவிலில் கும்பா பிஷேகம் நடைபெற்று சுமார் 12 ஆண்டுகள் முடி ந்த நிலையில் கொரோனா நோய் தொற்று காரணமாக அரசின் விதிமுறைகள் படி 3 ஆண்டுகள் கும்பாபிஷேக பணிகள் நிறுத்தி வைக்க ப்பட்டிருந்தது.

    கும்பாபிஷேகம் நடைபெற்று 15 ஆண்டுகள் முடிந்த நிலையில் செல்லி யாண்டி அம்மன் கோவில் நிர்வாகத்தினர் தமிழக அரசிடம் கும்பாபிஷேகம் நடத்திட கோரிக்கை வைத்தி ருந்தனர்.

    தமிழக அரசின் உத்தரவுப்படி இந்து அறநிலைத்துறை மூலம் செல்லியாண்டிம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடத்திட அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

    இதனைத்தொ டர்ந்து கோவில் வளாகத்தில் பவானி நகர் மன்ற தலைவர் சிந்தூரி இளங்கோவன் தலைமையில், தி.மு.க. நகர செயலாளர் நாகராசன், அ.தி.மு.க. நகர செயலாளர் சீனிவாசன், கும்பாபிஷேக திருப்பணி விழா குழு தலை வர் மகேந்திரன் ஆகியோர் முன்னிலையில் கும்பாபிஷேகம் நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் சிறப்பு அழை ப்பாளராக முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்ப ணன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார். அப்போது அவர் கூறுகையில்,

    பவானி நகர மக்களின் காவல் தெய்வமாக விளங்கி வரும் செல்லியாண்டி அம்மன்-மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் விழா மிக சிறப்பான முறை யில் நடத்துவது பற்றியும், பாலாலயம் நடத்துவது குறித்து செல்லாண்டி அம்மனிடம் வாக்கு கேட்டு அதில் அடுத்த மாதம் 11-ந் தேதி (திங்கட்கிழமை) அன்று பாலாலயம் நடத்த உறுதி அளித்ததை அடுத்து கோபுர கலசத்திற்கு மட்டும் பாலாலயம் செய்து கும்பாபிஷேக பணிகள் மேற்கொள்ள பட உள்ளது.

    பின்னர் சுமார் ரூ.4 கோடி மதிப்பீட்டில் தரை தளம் கருங்கற்கலில் அமை த்தல், கோபுரம் வர்ணம் தீட்டி புதுப்பித்தல், பரா மரிப்பு பணி மேற்கொ ள்ளுதல் குறித்து ஆலோ சனை வழங்கினார்.

    இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பவானி நகர த்தில் உள்ள தி.மு.க., அ.தி.மு.க., ப.ம.கா., பா.ஜனதா, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி நிர்வாகிகள், 36 சமூக கட்டளைதார்கள், கோவில் நிர்வாகத்தினர், பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர். முடிவில் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் கவுன்சிலர் சரவணன் நன்றி கூறினார்.

    ×