search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "impacts of waste"

    • கருத்து கேட்பு கூட்டம் அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில் நடைபெற்றது.
    • சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் தொடர்புடைய அலுவலர்களுடன் நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ளப்படும்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் பெருந்துறை சிப்காட் வளாகத்தில் இருந்து வெளியேறும் கழிவுகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த கருத்து கேட்பு கூட்டம் கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா முன்னிலையில், அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் அமைச்சர் முத்துசாமி தெரிவித்ததாவது:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டத்திற் குட்பட்ட சிப்காட் தொழிற் பேட்டை வளாகத்தில் இருந்து வெளியேறும் கழிவுகளால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாக பொதுமக்கள் சார்பிலான தொழிற்சங்கங்கள், பல்வேறு அமைப்பினர் மற்றும் தொழிற்துறை யினருடனான கருத்து கேட்புக் கூட்டம் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் தொழிற்பேட்டை வளாகத்தில் இருந்து வெளியேறும் கழிவுகள் தொடர்பான பாதிப்புகள் குறித்தும் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்தும் அனைத்து தரப்பினரிடம் இருந்து பல்வேறு கருத்துக்கள் கேட்கப்பட்டுள்ளது.

    மேலும் தமிழ்நாடு அரசை பொறுத்தளவில், தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலா ளர்களின் நலனுக்காக தொழிற்சாலைகளுக்கு அதிக சலுகைகள் வழங்கியுள்ளது.

    அதேபோன்று, தொழிற்சாலைகள் பொதுமக்கள் மற்றும் இயற்கையை பாதுகாக்கும் வகையில் அரசின் விதி முறைகளை முழுமையாக பின்பற்றிட வேண்டும்.

    அவ்வாறு இல்லாமல் காற்று மற்றும் குடிநீர் மாசு ஏற்படுத்தும் வகையில், விதி முறைகளை பின்பற்றாத தொழிற்சாலைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்வதோடு, பல்வேறு பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் விரைவில் நல்ல தீர்வு மேற்கொள்ளப்படும்.

    தொடர்ந்து வரும் நாட்களில் பெருந்துறை சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் தொடர்புடைய அலுவலர்களுடன் நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக அமைச்சர் முத்துசாமி பெருந்துறை சிப்காட் வளாகத்தில் இருந்து வெளியேறும் கழிவு களால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாக பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரிடம் இருந்து கருத்துக்களை கேட்டறிந்தார்.

    இக்கூட்டத்தில் அந்தியூர் செல்வராஜ் எம்.பி, அ.கணேசமூர்த்தி எம்.பி., மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) மணிஷ், சென்னி மலை ஊராட்சி ஒன்றிய தலைவர் காயத்ரி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் செல்வம், பெருந்துறை தாசில்தார் பூபதி, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுலவர்கள், அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், தொழில் துறையினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் பலர் கலந்து கொண்டனர்.

    ×