search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Power loom owner"

    • சிவா சேலையால் தூக்கிட்டு தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.
    • அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்துள்ள வெள்ளித்திருப்பூர் அண்ணா நகரை சேர்ந்தவர் சிவா (43). விசைத்தறி உரிமையாளர். இவரது மனைவி தமிழ்செ ல்வி.இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

    இந்த நிலையில் கடந்த 6 மா தங்களுக்கு முன்னர் சிவாவின் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதனால் கடன் கொடுத்தவர்களுக்கு பண த்தை திருப்பி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    இதனையடுத்து சிவா மதுவுக்கு அடிமையாகி தொழிலையும் சரி வர கவனிக்காமல் இருந்து வந்துள்ளார்.

    இந்நிலையில் சம்பவத்த ன்று காலை தங்களது உறவினர் ஒருவரை பார்க்க தமிழ் செல்வி வெளியே சென்றுவிட்டார். மகளும் பள்ளிக்கு சென்றுவி ட்டார்.

    தொடர்ந்து சிவாவின் மகன் மாலையில் வீட்டுக்கு வந்தபோ து வீட்டின் உள் அறையில் சிவா சேலையால் தூக்கிட்டு தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.

    உடனடியாக அவரை அக்கம்பக்கத்தினர் உதவியு டன் மீட்டு அந்தியூர் அரசு மரு த்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே சிவா இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடன் பிரச்சனையால் மன வருத்தத்தில் இருந்த விசைத்தறி உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • இதுகுறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சென்னிமலை:

    சென்னிமலை அருகே உள்ள சேமலை பாளை யத்தை சேர்ந்தவர் கதிரே சன் (37). இவர் அரச்சலூர் அருகே உள்ள மீனாட்சி வலசு பகுதியில் தறிப்பட்டறை ஒன்றை லீசுக்கு எடுத்து கடந்த 9 ஆண்டுகளாக நடத்தி வந்தார்.

    இவர் வங்கி மற்றும் மகளிர் சுயஉதவிக்குழுக்களிடம் கடன் பெற்று தொழில் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கொரோனா காலத்தில் சரியான வருமானம் இல்லாததால் இவருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாதவும் கூறப்படுகிறது.

    இதனால் அவரால் கடன் கட்ட முடியவில்லை. தொடர்ந்து கடன் பிரச்சனை இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் மன வருத்தத்தில் கதிரேசன் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் கதிரேசன் வாந்தி எடுத்து கொண்டு இருந்தார். இதை கண்டு அவரது மனைவி கவிதா அவரிடம் விசாரித்தார். அப்போது கதிரேசன் எலி மருந்தை (விஷம்) தின்றது தெரிய வந்தது.

    இதையடுத்து அவரை அக்கம் பக்கத்தினர் உதவி யுடன் மீட்டு பெரு ந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த கதிரேசன் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இதுகுறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×