என் மலர்tooltip icon

    ஈரோடு

    • லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக கோபி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்றுக் கொண்டிருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கோபி அருகே லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக கோபி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்றுக் கொண்டிருந்த சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியை சேர்ந்த நெடுஞ்செழியன் மகன் நிகாந் (வயது 25), அதே பகுதியை சேர்ந்த சிவக்குமார் மகன் சிவப்பிரகாஷ் (21) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    • பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக காஞ்சிக்கோவில் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

     ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் காஞ் சிகோவில் கொண்டையன் காட்டு வலசுபகுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக காஞ்சிக்கோவில் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற சப்-இன்ஸ்பெக்டர் துரைசாமி அங்கு பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த சேலம் மாவட்டம் ராமகிருஷ்ணா காலனியை சேர்ந்த முனுசாமி மகன் மணி (வயது 42), காஞ்சிகோவில் பகுதியை சேர்ந்த பூபதி மகன் ஜெ கதீஷ் (29),

    பெத்தம்பாளையத்தை சேர்ந்த மாணிக்கம் மகன் ரவி (53), காஞ்சிக்கோவில் தெற்கு ரத வீதியை சேர்ந்த தண்டபாணி மகன் ராமராஜ் (32), வெங்கட்ராமர் தெருவை சேர்ந்த காவிரி மகன் சுந்தரம் (28) ஆகியோரை மடக்கி பிடித்தார்.

    பின்னர் அவர்களிடம் இருந்த சீட்டு கட்டு மற்றும் ரூ.1,650 போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பாராளுமன்ற தேர்தல் பணிக்காக மாவட்டம் வாரியாக எனது கட்சி நிர்வாகிகளை சந்தித்து உற்சாகப்படுத்தி வருகிறேன்.
    • மக்களின் மீது அக்கறை உள்ள அரசு இவ்வாறு செய்யாது.

    கோபி:

    ஈரோடு மாவட்டத்தில் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார். அதன்படி இன்று 2-வது நாள் நிகழ்ச்சியாக கோபிசெட்டிபாளையம் தனியார் திருமண மண்டபத்தில் பவானி, கோபி, அந்தியூர், பவானிசாகர் சட்டமன்ற தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்றார்.

    பின்னர் சீமான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தல் பணிக்காக மாவட்டம் வாரியாக எனது கட்சி நிர்வாகிகளை சந்தித்து உற்சாகப்படுத்தி வருகிறேன். மத்திய அரசு சிலிண்டர் விலை ரூ.200-ஐ குறைத்துள்ளது. இது மக்கள் மீதான அக்கறை இல்லை. பாராளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு விலை குறைக்கப்பட்டுள்ளது. இதை ஏன் மத்திய அரசு ஆட்சிக்கு வந்தவுடன் குறைக்கவில்லை.

    மக்களின் மீது அக்கறை உள்ள அரசு இவ்வாறு செய்யாது. மக்களின் நலன் சார்ந்த அத்தியாவசி பொருட்களின் விலையை பாராளுமன்ற தேர்தலுக்காக குறைக்கின்றனர். மக்களை நம்ப வைத்து ஏமாற்றுகின்றனர். நான் தமிழகத்தில் தனியாக நின்று தேர்தலை சந்திக்க தயார். ஆனால் 10 ஆண்டுகளாக ஆட்சி செய்த பா.ஜனாதாவினர் என்னை எதிர்த்து ஒரு சதவீதம் வாக்கு அதிகமாக வாங்க முடியுமா?

    பா.ஜ.க.வில் 40 தொகுதியிலும் போட்டியிட வேட்பாளர்கள் உள்ளார்களா? அப்படி நின்றாலும் அ.தி.மு.க. நிற்க விடுமா? எங்கே சுற்றினாலும் அ.தி.மு.க. அலுவலகத்தில் தான் நிற்க வேண்டும். அவர்கள் 6 முதல் 7 சீட்டு தான் ஒதுக்குவார்கள். காலையில் குடித்துவிட்டு போனால் உற்சாகமாக வேலை செய்வார்கள் என ஒரு அமைச்சர் கூறுகிறார்.

    சந்திராயன்-3 இறங்கிய இடத்திற்கு சிவசக்தி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. வேண்டுமென்றால் பெயர் பலகை கூட அவர்கள் வைக்கட்டும். அங்கேயும் சென்று ராமர் கோவில் கட்டட்டும். ஒரு கிரகத்தை அழித்து விட்டனர். அடுத்து கிரகத்தை அளிக்க தயாராகி விட்டனர்.

    சந்திராயன்-2 தோல்வி அடைகிறது. ஆனால் சந்திராயன்-3 சரியாக அனுப்பப்பட்டு தரையிறக்கம் சரியாக இறக்கப்படுகிறது என்றால் பாராளுமன்ற தேர்தல் வருவதால் தான் சரியாக இறங்கி இருக்கிறது.

    தமிழர்கள் முதல்வரிடம் இருந்து வாழ்த்துகளை கூட கேட்டு வாங்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. நடிகர் ரஜினிகாந்த் உத்தரபிரதேச முதல்வர் காலில் விழுந்தது அவரது தனிப்பட்ட விருப்பம். அவர் தமிழ்நாட்டின் பெருமை. கலைகளின் அடையாளம். தமிழக அரசுக்கு மாணவர்கள், மீனவர்கள் மீது திடீர் அக்கறை வருகிறது. அதற்கு காரணம் பாராளுமன்ற தேர்தல் தான். வரும் பாராளுமன்ற தேர்தலில் நாங்கள் யாருடனும் கூட்டணியில் இல்லை. தனித்து தான் போட்டியிடுகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

      ஈரோடு:

      ஈரோட்டில் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

      பிரதமரால் நாட்டில் ஏற்பட்ட இழப்புகள் எப்படி நாம் சரி செய்ய முடியும் என்று பார்க்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் 2 கோடி பேருக்கு வேலை தருவேன் என்றார். தந்தாரா?. பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரான மனநிலையை மக்களிடம் உருவாக்க வேண்டும். அதை இந்தியா கூட்டணி செய்தால் நான் மனதாக வரவேற்கிறேன்.

      இந்திய அரசின் தலைமை தணிக்கையாளர் அறிக்கை வந்துள்ளது. இன்று ஊழலை பற்றி பேசுகிறார்கள். ஊழலை பற்றி பேசுபவர்கள் அனைவருமே தூய்மையானவர்கள் அல்ல. நாட்டின் வளம் கொள்ளையடிக்கப்படுகிறது பாழ்படுத்தப்பட்டுள்ளது. இதை எப்படி சரி செய்ய முடியும்.

      அதேபோன்று தி.மு.க. 80 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றியதாக கூறுகிறது. நிறைவேற்றிய 8 சதவீத வாக்குறுதிகளையாவது அவர்கள் கூறட்டும். காலை உணவு, மதிய உணவு, பெண்களுக்கு ஆயிரம் என்று மக்களை கையேந்த வைத்தது தான் இந்த அரசின் சாதனையாகும்.

      தேர்தலின் போது அனைத்து பெண்களுக்கும் ஆயிரம் தருவதாக கூறினார்கள். இப்போது தகுதி வாய்ந்த பெண்களுக்கு என்கிறார்கள். எங்கள் பெண்களின் தகுதியை நிர்ணயப்பதற்கு இவர்கள் யார்?. 3 மந்திரிகளின் ஊழல் குற்றச்சாட்டை தானாக எடுத்து விசாரிக்கும் நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் கருத்தை வரவேற்கிறேன்.

      இன்று தமிழகத்தில் துப்புரவு தொழிலாளிகள், மருத்துவர்கள், ஆசிரியர்கள் என அனைத்து தரப்பினரும் போராடுகிறார்கள். தனிநபர் வருமானம் உயர்ந்து விட்டதாக கூறுகிறார்கள்.

      ஆனால் நானே வீட்டு வாடகை செலுத்த கஷ்டப்படுகிறேன். கர்நாடகாவில் தி.மு.க.வின் கூட்டணி கட்சி காங்கிரஸ் ஆளுகிறது. காவிரியில் தண்ணீர் தர அந்த அரசு மறுக்கிறது. கூட்டணியை விட்டு திமுக வெளியேற வேண்டியது தானே .தமிழகத்தில் நிலக்கரி வளம் நெய்வேலியில் சுரண்டப்படுகிறது .

      இது குறித்து நீதிபதி தண்டபாணி கவலை தெரிவித்ததை வரவேற்கிறேன். அதில் இருந்து தயாரிக்கும் இலவச மின்சாரத்தை விவசாயிகளுக்கு வழங்குகிறார்கள். ஆனால் நிலத்தை விவசாயிகளிடம் இருந்து பறிக்கிறார்கள் .

      சூரிய ஒளி காற்றாலை நீர் மின்சக்தி போன்ற இயற்கை வளங்களால் மின்சாரத்தை உற்பத்தி செய்யலாம். ஆனால் அதை தனியார் மயமாக்குகிறார்கள். அதானியின் சோலார் மின் உற்பத்தி நிலையத்திற்கு முதலீடு ரூ.4500 கோடி. இதை செய்ய தமிழக அரசுக்கு நிதி இல்லையா?

      இப்போது எங்கு சென்றாலும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எந்த நிலையில் உள்ளது என்ற கேள்வி எழுகிறது. கஞ்சா போதை பொருள்கள் நடமாட்டம், மது அதிகரித்து விட்டது.

      நடிகர் விஜயலட்சுமியின் புகாரில் உண்மை இருந்தால் போலீஸ் விசாரணைக்கு எடுத்திருப்பார்கள் அதைப் பற்றி பேசுவது கேவலம் என நினைக்கிறேன். என்னை நம்பி தமிழகத்தில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இருக்கின்றன. அதை பற்றி பேசுவது அக்குடும்பங்களையும் பாதிக்கும். எனக்கு மனைவி, 2 குழந்தைகள் இருக்கின்றனர். அவர் குற்றம் சாட்டுவதற்கு அரசியல் கூட காரணமாக இருக்கலாம்.

      வரும் பாராளுமன்ற தேர்தலில் ராமநாதபுரத்தில் பிரதமர் மோடி போட்டியிட்டால் அவரை எதிர்த்து போட்டியிடுவேன். அவர் இங்கு போட்டியிடவில்லை எனில் நான் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட மாட்டேன். சட்டமன்ற தேர்தலில் மட்டுமே போட்டியிடுவேன்.

      நீட் தேர்வால் மருத்துவர்களின் தரம் உயருமா.?. தகுதி இல்லாத 11,12-ம் வகுப்பு எதற்கு.? அதனை நீக்கி விடலாமே. மோடிக்கு உடல்நிலை சரியில்லை என்றால் ஏற்கனவே உள்ள மருத்துவர்களை தவிர்த்து நீட் படித்து வந்த மருத்துவர்களை தேடி பிடித்து வைத்தியம் பார்க்க செல்வாரா.?

      சனாதனம் பேசும் ஆளுனர், ராஜ்பவன் மாளிகையில் இருக்க வேண்டிய நபர் அல்ல. அவர் பைத்தியகார மருத்துவ மனையில் இருக்க வேண்டியவர்.

      அமலாக்க துறை பழிவாங்கும் நோக்கில் சோதனை நடத்துகிறது. தி.மு.க.விற்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் செயல்படுகிறது. ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆளான அ.தி.மு.க. அப்போதைய அமைச்சர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.

      ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை. தற்போது திட்டமிட்டு தி.மு.க. அமைச்சர் வீடுகளில் சோதனை நடத்தப்படுவது அப்பட்டமான பழிவாங்கும் நடவடிக்கையாக தெரிகிறது.

      இவ்வாறு அவர் கூறினார்.

      • சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த இருவரை பிடித்து விசாரித்தனர்.
      • கஞ்சா சுமார் 300 கிராம் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது.

      ஈரோடு:

      ஈரோடு மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட போதை பொருள்கள் விற்பனையைத் தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

      அதன்படி ஈரோடு மாவட்டம், பவானியை அடுத்துள்ள அம்மாபேட்டை போலீசார் தங்களது காவல் உள்பட்ட பகுதியில் கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

      அப்போது, மாணிக்கம்பாளையம் பிரிவு பஸ் ஸ்டாப் அருகில் சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த இருவரைப் பிடித்து விசாரித்தனர்.

      அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசியதையடுத்து அவர்களை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர்.

      அதில் அவர்கள் மாணிக்கம்பாளையம் பிரிவைச் சேர்ந்த கதிர்வேல் (23), கேசரிமங்கலம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (23) என்பது தெரியவந்தது.

      மேலும், விசாரணையில் அவர்கள், அரசால் தடை செய்யப்பட்ட, அதிக போதை தரும் கஞ்சா சுமார் 300 கிராம் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது.

      இதையடுத்து, போலீசார் அவர்கள் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்த 300 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

      • பெரிய ஓடை மாஸ் கிளினீங் முறையில் சுத்தம் செய்யும் பணி தொடங்கியது.
      • தற்போது வரை 250 டன் சாக்கடை கழிவுகள் அகற்றப்பட்டது.

      ஈரோடு:

      ஈரோடு மாநகராட்சியில் 4 மண்டலங்களில் 60 வார்டுகள் உள்ளன. இந்த 4 மண்டலங்களிலும் மழை நீர் வடிகால்களாக உள்ள கழிவு நீர் ஓடைகளை தூர்வாரி சுத்தம் செய்யும் பணி, குப்பைகளை அகற்றும் பணி என மாஸ் கிளினீங் என்ற பெயரில் அவ்வப்போது நடைபெற்றது.

      இந்நிலையில் ஈரோடு மாந கராட்சி 35-வது வார்டுக்கு உட்பட்ட தெப்பக்குளம் வீதி, காமராஜர் வீதியில் மழை பெய்யும் போது கழிவு நீர் ஒடை நிரம்பி குடியிருப்பு களுக்குள் தண்ணீர் புகுந்து விடுவதாகவும்,

      இதற்கு கழிவு நீர் ஓடைகளை தூர்வாரிட அப்பகுதி மக்கள் மாநகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர்.

      இதையடுத்து மாநகராட்சி ஆணையாளர் ஜானகி ரவீந்திரன் உத்தரவின்பேரில் தெப்பக்குளம் வீதி, காமராஜர் வீதியில் உள்ள பெரிய ஓடை மாஸ் கிளினீங் முறையில் சுத்தம் செய்யும் பணி கடந்த 2 நாட்களுக்கு முன் தொடங்கியது.

      இதில் 80-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள், ஜே.சி.பி. வாகனம் உட்பட 6 வாகனங்களில் சாக்கடையை தூர்வாரி, கழிவுகளை அகற்றினர். தற்போது வரை 250 டன் சாக்கடை கழிவுகள் அகற்றப்பட்டதாகவும்,

      இந்த கழிவுகள் முனிசிபல் காலனி யில் உள்ள தாழ்வான பகுதி யில் கொட்டப்பட்டு சமன் படுத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

      • கொடுமுடி , எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் தேங்காய், கொப்பரை ஏலம் நடைபெற்றது.
      • மொத்தம் ரூ.87 லட்சத்து 90 ஆயிரத்துக்கு விற்பனையாகின.

      ஈரோடு:

      கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் தேங்காய் விற்பனைக்கான ஏலம் நடைபெற்றது.

      இதில் 10 ஆயிரத்து 267 எண்ணிக்கையிலான 3 ஆயிரத்து 711 கிலோ எடை கொண்ட தேங்காய்களை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

      இவை கிலோ ஒன்று க்கு குறைந்தபட்ச விலையாக ரூ.19.19 காசுகள், அதிகபட்ச விலையாக ரூ.23.65 காசுகள், சராசரி விலையாக ரூ.22.70 காசுகள் என்ற விலைகளில் மொத்தம் 82 ஆயிரத்து 601 ரூபாய்க்கு விற்பனையாகின.

      இதனை யடுத்து நடந்த தேங்காய் பருப்பு விற்பனைக்கான ஏலத்தில் 835 மூட்டைகள் கொண்ட 40 ஆயிரத்து 340 கிலோ எடைகொண்ட தேங்காய் பருப்பு விற்பனையானது.

      விற்பனையான பருப்பில் முதல்தர பருப்பு கிலோ ஒன்றுக்கு குறைந்த பட் சவிலையாக ரூ.77.95 காசுகள், அதிகபட்ச விலையாக ரூ.78.98 காசுகள், சராசரி விலையாக ரூ.78.70 காசுகள் என்ற விலைகளிலும்,

      2-ம் தர பருப்பு குறைந்த பட்ச விலையாக ரூ.60, அதிகபட்ச விலையாக ரூ.76.49 காசுகள், சராசரி விலையாக ரூ.74.39 காசுகள் என்ற விலைகளில் மொத்தம் ரூ.30 லட்சத்து 19 ஆயிரத்து 114 ரூபாய்க்கு விற்பனையானது. மொத்தம் தேங்காய் மற்றும் தேங்காய்பருப்பு சேர்த்து ரூ.31 லட்சத்து 1 ஆயிரத்து 715-க்கு விற்பனையாகின.

      இதேபோல எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூ டத்தில்74 ஆயிரத்து 398 கிலோ எடையுள்ள தே ங்காய் பருப்பு விற்பனைக்கான ஏலம் நடந்தது.

      விற்பனையான பருப்பில் முதல் தர பருப்பு கிலோ ஒன்றுக்கு குறைந்த பட்ச விலையாக ரூ.78.85 காசு கள், அதிகபட்ச விலையாக ரூ.81, சராசரி விலையாக ரூ.79.99 காசுகள் என்ற விலைகளிலும்,

      2-ம் தர பருப்பு குறைந்த பட்ச விலையாக ரூ.60.15 காசுகள், அதிகபட்ச விலையாக ரூ.74.66 காசுகள், சராசரி விலையாக ரூ.73.36 காசுகள் என்ற விலைகளில் மொத்தம் ரூ.56 லட்சத்து 88 ஆயிரத்து 779-க்கு விற்பனையானது.

      மொத்தம் கொடுமுடி , எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் ரூ.87 லட்சத்து 90 ஆயிரத்துக்கு தேங்காய், கொப்பரை விற்பனையாகின.

      • ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஓட்டல்களில் ஆய்வு செய்தனர்.
      • இது தொடர்பாக 3 கடைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

      ஈரோடு:

      தமிழக அரசின் உணவு பாதுகாப்பு துறை சார்பில் அனைத்து உணவ கங்களி லும் தேங்காய் சட்னி, தயிர், மோர் வகைகள், ஷவர்மா உள்ளிட்ட உணவு பொருட்கள் குறித்து ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளது.

      இதன்படி ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்கள் செல்வன், அருண்குமார் ஆகியோர் 15-க்கும் மேற்பட்ட ஓட்ட ல்களில் ஆய்வு செய்தனர்.

      இதில், கடைகளில் உள்ள குளிர்பதன பெட்டியில் (பிரிட்ஜில்) இருப்பு வைக்க ப்பட்டிருந்த 12 லிட்டர் தேங்காய் சட்னி, சமைத்த நிலையில் வைக்கப்பட்டி ருந்த ஷவர்மா இறைச்சி வகைகள் 3.5 கிலோவை பறிமுதல் செய்யப்பட்டு உணவு பாதுகாப்பு, தரங்கள் சட்ட விதிகளுக்கு உட்பட்டு அவைகள் உடனடியாக அழிக்கப்பட்டன.

      இது தொடர்பாக 3 கடைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது. 2 கடைகளுக்கு தலா ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டது.

      இதுகுறித்து மாவட்ட நியமன அலுவலர் தங்க விக்னேஷ் கூறுகையில்,

      மாவட்டம் முழுவதும் இதேபோன்று திடீர் ஆய்வு தொடரும். பொதுமக்கள் தரமில்லாத உணவு பண்டங்கள், பொருட்கள் கண்டறிந்தால் உடனடியாக 94440 42322 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என்றார்.

      • நீரில் முழ்கி கிடந்தது கொமரன் என்பது தெரிய வந்தது.
      • சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

      ஈரோடு:

      ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், நடுப்பாளை யம் காலனியைச் சேர்ந்தவர் கொமரன் (73). இவரது மனைவி கருப்பம்மாள் (50). இருவரும் கூலித் தொழி லாளிகள். இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமண மாகி தனியாக வசித்து வருகின்றனர்.

      இந்த நிலையில் சம்பவத்த ன்று மாலை 6 மணியளவில், பவானி ஆற்றில் குளித்து விட்டு வருவதாக கூறி சென்ற கொமரன் வெகு நேரமாகியும் வீடு திரும்ப வில்லை.

      இதையடுத்து, கருப்ப ம்மாள், அருகில் வசித்து வரும் தனது மகள்களுடன் சேர்ந்து தேடிப் பார்த்துள்ளனர். நள்ளிரவு ஆகிவிட்ட தால் இருவரும் வீடு திரும்பி விட்டனர்.

      இந்த நிலையில், நேற்று காலை 6.30 மணியளவில் பவானி ஆற்றில் ஒருவர் நீரில் மூழ்கிய நிலையில் கிடப்பதாக கருப்பம்மாளுக்கு தகவல் கிடைத்துள்ளது.

      உடனடியாக அவர் அங்கு சென்று பார்த்தபோது, நீரில் முழ்கிக் கிடந்தது கொமரன் என்பது தெரிய வந்தது. இதையடுத்து, அவரை மீட்டு சத்திய மங்கலம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்ற னர்.

      அங்கு அவரை பரிசோ தித்த மருத்துவர், ஏற்கனவே கொமரன் இறந்துவிட்டதாக கூறியுள்ளார்.

      இதுகுறித்து, சத்தியமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

      • மாயமான மாணவியை உடனடியாக கண்டுபிடிக்க வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
      • போலீஸ் தரப்பில் சரியான பதில் தரவில்லை என கூறப்படுகிறது.

      அம்மாபேட்டை:

      ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள பூதப்பாடியில் 17 வயது மாணவி கடந்த சில நாட்களுக்கு முன்பு மாயமாகிவிட்டார்.

      இது குறித்து அவரது உறவினர் திருநங்கை புவனேஸ்வரி என்பவர் அம்மாபேட்டை போலீஸ் நிலையத்தில் மாணவி மாயமானது குறித்து புகார் அளித்து அவரை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதன் பேரில் அம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

      ஆனால் புகார் அளித்து 8 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டதால் மாணவி குறித்து எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து திருநங்கை புவனேஸ்வரி ஒவ்வொரு நாளும் அம்மாபேட்டை போலீஸ் நிலையத்திற்கு சென்று மாணவி குறித்து தகவல் கேட்டுள்ளார். ஆனால் போலீஸ் தரப்பில் சரியான பதில் தரவில்லை என கூறப்படுகிறது.

      இந்நிலையில் இன்று காலை திருநங்கை புவனேஸ்வரி தலைமையில் 25-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் அம்மாபேட்டை போலீஸ் நிலையத்திற்கு எதிரே உள்ள சாலையில் திடீரென அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாயமான மாணவியை உடனடியாக கண்டுபிடிக்க வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

      பின்னர் திடீரென அவர்கள் அம்மாபேட்டை போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது. இதையடுத்து அந்தியூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் திருநங்கைகளிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

      அப்போது அவர்கள் மாயமான மாணவியை மீட்டு தரும் வரை நாங்கள் இந்த இடத்தை விட்டு நகர மாட்டோம் என்று கூறி தொடர்ந்து கோஷம் எழுப்பி வருகின்றனர்.

      இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

      • படுக்கையறையில் ஆனந்த் பேனில் தூக்கிட்டு தொங்கியுள்ளார்.
      • கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

      ஈரோடு:

      ஈரோடு, கருங்கல் பாளையம், கமலா நகரைச் சேர்ந்தவர் வள்ளி (50).இவரது கணவர் செல்வம் கடந்த 3 வருடங்களுக்கு முன்னர் இறந்துவிட்டார்.

      இவர்களுக்கு 2 மகன்கள். மூத்த மகன் பிரபாகரன் (32). கூலிவேலை செய்து வருகிறார். இளைய மகன் ஆனந்த் (29). டிப்ளமோ படித்துள்ள இவர், பி.வி.சி. கதவுகள் பொருந்தும் வேலை செய்துவந்தார்.

      இந்த நிலையில், தனக்கு திருமணம் செய்து வைக்கு மாறு ஆனந்த் தனது தாயிடம் கேட்டு வந்துள்ளார்.

      அவரும், மூத்த மகன் பிரபாகரனுக்கு திருமணம் செய்த பின்னர் ஆனந்துக்கு செய்து வைப்பதாக கூறி யுள்ளார். இதனால், ஆனந்த் மன வருத்தத்தில் இருந்து ள்ளார்.

      இந்த நிலையில் வள்ளி, தங்களது உறவினர் வீட்டுத் திருமணத்துக்கு நேற்று முன் தினம் சென்று விட்டார்.

      அன்று இரவு வீட்டில் வள்ளியின் மகன்கள் பிரபாகரனும், ஆனந்தும் இருந்துள்ளனர். மூத்த மகன் பிரபாகரன் இருவருக்கும் சாப்பாடு வாங்குவதற்காக சென்றுவிட்டு இரவு 11 மணியளவில் வீட்டுக்கு வந்துள்ளார்.

      அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டி ருந்துள்ளது. நீண்ட நேரமாக கதவைத் தட்டியும் திறக்கா ததால் அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர்.

      அப்போது, படுக்கையறையில் ஆனந்த் பேனில் தூக்கிட்டு தொங்கியுள்ளார். உடனடியாக அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

      அங்கு அவரை பரிசோ தித்த மருத்துவர், ஏற்கனவே ஆனந்த் இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

      இதுகுறித்து, கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

      • காகம் கூட்டம் மயிலை சூழ்ந்து கொண்டு கொத்தியதாக கூறப்படுகிறது.
      • வனத்துறையினர் மயிலை எடுத்து சென்று வனசரக அலுவலகத்தில் புதைத்தனர்.

      அந்தியூர்:

      அந்தியூர் தவிட்டுப்பாளையம் மூப்பனார் சிலை அருகே பழனியப்பா குறுக்கு 4-வது வீதி பகுதியில் இரவு நேரங்களில் அருகில் உள்ள தோட்டப்பகுதிகளில் மயில்கள் அதிகளவில் வந்து செல்லும்.

      இந்த நிலையில் நேற்று இரவு வந்த ஒற்றை மயில் காகங்கள் கூடு கட்டி இருக்கும் இடத்தின் அருகே சென்று சத்தமிட்டு கொண்டிருந்தது.

      இதனை பார்த்த காகம் கூட்டம் மயிலை சூழ்ந்து கொண்டு கொத்தியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த மயில் இறந்த நிலையில் கிடந்துள்ளது.

      இதனை இன்று காலை அந்த பகுதி பொதுமக்கள் பார்த்தவுடன் அந்தியூர் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து அந்த மயிலை எடுத்து சென்று வனசரக அலுவலகத்தில் புதைத்தனர்.

      ×