காலிங்கராயன் பாசனத்திற்கு 300 கனஅடியாக நீர் திறப்பு குறைப்பு

பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 2,300 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.அணையின் நீர் மட்டம் இன்று காலை நிலவரப்படி 79.18 அடியாக சரிந்துள்ளது.
காலிங்கராயன் பாசனத்திற்கு 300 கனஅடியாக நீர் திறப்பு குறைப்பு
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கா ல் பாசனத்திற்காக கடந்த 15-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.

ஆனால் கீழ்பவானி வாய்க்காலில் மேற்கொள்ள ப்பட்டு வந்த பராமரிப்பு பணிகள் முடிவடையாததால் சிறிது நேரத்தில் தண்ணீர் மீண்டும் நிறுத்தப்பட்டது.

பின்னர் சீரமைப்பு பணி கள் முடிவடைந்து கடந்த 19-ந் தேதி முதல் மீண்டும் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. முதலில் 200 கனஅடி திறக்கப்பட்டது. அதன் பிறகு படிப்படியாக நீர்திறப்பு அதிகரித்தது.

இந்த நிலையில் இன்று காலை பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 2,300 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 105 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீர் மட்டம் இன்று காலை நிலவரப்படி 79.18 அடியாக சரிந்துள்ளது.

அணைக்கு வினாடிக்கு 1,519 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 400 கனஅடி, காளிங்கராயன் பாசனத்திற்கு 300 கனஅடி,

குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து 3,100 கனஅடி நீர் வெளியேற்ற ப்பட்டு வருகிறது.

அணையின் நீர்வரத்தை விட பாச னத்திற்காக அதிக அளவில் தண்ணீர் தொட ர்ந்து திற ந்து விடப்பட்டு வருவதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.

இதேபோல் மாவட்ட த்தின் மற்ற அணைகளின் நீர்மட்டமும் சரிந்து வருகிறது. குண்டேரிபள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 24.95 அடியாக உள்ளது.

பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 15.94 அடியாக உள்ளது. வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 21.49 அடியாக உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com