வருவாய்த்துறை ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வருவாய்த்துறை ஊழியர்கள் காத்திரு ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.காத்திருப்பு போராட்டத்தையொட்டி சூரம்பட்டி போலீசார் பலத்த பாதுகா ப்பு பணியில் ஈடுபட்டனர்.
வருவாய்த்துறை ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
Published on

ஈரோடு:

கள்ளக்குறிச்சி மாவட்ட தாசில்தாரை பணியிட நீக்கம் செய்ததை கண்டித்து ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வருவாய்த் துறை ஊழியர்கள் காத்திரு ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலை வர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். துணைத்த லைவர் தினகரன் முன்னி லை வகித்தார்.

ஆர்ப்பாட்ட த்தில் கலந்து கொண்டவர்கள் சென்னை உயர் நீதிமன்றம் உத்த ரவுப்படி ஆக்கிரமிப்பு களை அகற்றிய கள்ளக்கு றிச்சி மாவட்ட தாசில்தாரின் பணி இடைநீக்கத்தை திரும்ப பெற கோரியும், ரிஷிவந்தியம் தொகுதி எம்.எல்.ஏ. வருவாய்த்துறை ஊழியர்களை தரக்குறை வாக பேசுவதை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்தி ருந்த வருவாய்துறை ஊழிய ர்கள் கலந்து கொண்டனர். காத்திருப்பு போராட்டத்தையொட்டி சூரம்பட்டி போலீசார் பலத்த பாதுகா ப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com