என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sewage disposal"

    • கழிவு நீர் அகற்றும் வாகனங்களை முறைப்படுத்த மாநகராட்சி சார்பில் உரிமம் வழங்கப்படுகிறது.
    • 5 வாகனங்களுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் கழிவு நீர் அகற்றும் வாகனங்களை முறைப்படுத்த மாநகராட்சி சார்பில் உரிமம் வழங்கப்படுகிறது.

    அதன்படி, உரிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தற்போது வரை 5 வாகனங்களுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது.

    இதற்கான விண்ணப்பம் மாநகராட்சி அலுவலகத்தில் விநியோகிக்கப்பட்டு வரு கிறது. தொடர்ந்து விண்ண ப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.

    எனவே இதுவரை விண்ணப்பிக்காத கழிவு நீர் அகற்றும் வாகன உரிமை யாளர்கள், உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து வாகன உரிமம் பெற்றுக்கொள்ளலாம்.

    தவறும்பட்சத்தில் உரிமம் பெறாத கழிவு நீர் அகற்றும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    • பெரிய ஓடை மாஸ் கிளினீங் முறையில் சுத்தம் செய்யும் பணி தொடங்கியது.
    • தற்போது வரை 250 டன் சாக்கடை கழிவுகள் அகற்றப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மாநகராட்சியில் 4 மண்டலங்களில் 60 வார்டுகள் உள்ளன. இந்த 4 மண்டலங்களிலும் மழை நீர் வடிகால்களாக உள்ள கழிவு நீர் ஓடைகளை தூர்வாரி சுத்தம் செய்யும் பணி, குப்பைகளை அகற்றும் பணி என மாஸ் கிளினீங் என்ற பெயரில் அவ்வப்போது நடைபெற்றது.

    இந்நிலையில் ஈரோடு மாந கராட்சி 35-வது வார்டுக்கு உட்பட்ட தெப்பக்குளம் வீதி, காமராஜர் வீதியில் மழை பெய்யும் போது கழிவு நீர் ஒடை நிரம்பி குடியிருப்பு களுக்குள் தண்ணீர் புகுந்து விடுவதாகவும்,

    இதற்கு கழிவு நீர் ஓடைகளை தூர்வாரிட அப்பகுதி மக்கள் மாநகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர்.

    இதையடுத்து மாநகராட்சி ஆணையாளர் ஜானகி ரவீந்திரன் உத்தரவின்பேரில் தெப்பக்குளம் வீதி, காமராஜர் வீதியில் உள்ள பெரிய ஓடை மாஸ் கிளினீங் முறையில் சுத்தம் செய்யும் பணி கடந்த 2 நாட்களுக்கு முன் தொடங்கியது.

    இதில் 80-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள், ஜே.சி.பி. வாகனம் உட்பட 6 வாகனங்களில் சாக்கடையை தூர்வாரி, கழிவுகளை அகற்றினர். தற்போது வரை 250 டன் சாக்கடை கழிவுகள் அகற்றப்பட்டதாகவும்,

    இந்த கழிவுகள் முனிசிபல் காலனி யில் உள்ள தாழ்வான பகுதி யில் கொட்டப்பட்டு சமன் படுத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×