என் மலர்tooltip icon

    திண்டுக்கல்

    • கடையில் வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது டெல்லியில் இருந்து வந்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் நிர்வாகியை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
    • பழனியில் 2வது நாளாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பழனி:

    திண்டுக்கல் மாவட்டம் பழனி புறநகரை சேர்ந்தவர் முகமது கைசர் (வயது 50). இவர் பெரிய கடைவீதியில் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் மத்திய அரசால் தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பில் மதுரை மண்டல தலைவராக இருந்தவர்.

    இவர் நேற்று தனது கடையில் வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது டெல்லியில் இருந்து வந்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் இவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். பழனி டவுன் போலீஸ் நிலையத்தில் உள்ள போக்கு வரத்து காவல்நிலைய அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த விசாரணை நேற்று மாலை 6 மணிவரை நீடித்த நிலையில் பின்னர் அவரை அனுப்பி வைத்தனர். இதனிடையே இன்று 2வது நாளாக முகமதுகைசரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்து சென்றனர். இவர் கடந்த 2016ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் பழனி சட்டமன்ற தொகுதியில் வேட்பாளராக போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    கோவையில் கடந்த தீபாவளி பண்டிகைக்கு முதல்நாள் நடந்த கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கேரளா, தெலுங்கானா, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வழக்கில் தொடர்புடையவர்கள் யாரேனும் இவரிடம் தொடர்பில் உள்ளனரா என்ற கோணத்தில் விசா ரணை நடத்தப்படுவதாக போலீசார் தெரிவித்தனர்.

    பழனியில் 2வது நாளாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கடந்த 2 நாட்களாக அனைத்து வனத்துறை சுற்றுலா தளங்களுக்கும் செல்ல ஒரே கட்டணம் ஒரே நுழைவுச்சீட்டு என பெரியவர்களுக்கு ரூ.30, சிறியவர்களுக்கு ரூ.15, கேமராவுக்கு ரூ.50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
    • கோசன் ரோடு வனத்துறை சோதனை சாவடியில் கட்டணம் வாங்கப்படுகிறது.

    கொடைக்கானல்:

    தொடர் விடுமுறையின் காரணமாக கொடைக்கானலில் கடந்த சில நாட்களாகவே கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. காணும் பொங்கல் தினமான இன்று அனைத்து சுற்றுலாத்தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

    மோயர்சதுக்கம், பைன் மரச்சோலை, தூண்பாறை, கோக்கர்ஸ் வாக், பிரையண்ட் பூங்கா, நட்சத்திர ஏரிப்பகுதிகளில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்தனர். நட்சத்திர ஏரியில் படகு சவாரி, ஏரிச்சாலை பகுதிகளில் சைக்கிள் சவாரி செய்து மகிழ்ந்தனர். இதன் காரணமாக கொடைக்கானலில் பல்வேறு பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது.

    போக்குவரத்து காவலர்கள் பற்றாக்குறையால் உள்ளூர் டாக்ஸி ஓட்டுனர்களே ஏரிச்சாலை பகுதிகளில் போக்குவரத்தை சீர் செய்து போக்குவரத்து நெரிசலை குறைத்தனர். கொடைக்கானல் பொதுமக்களின் நீண்ட ஆண்டு கோரிக்கையான போக்குவரத்துக் காவலர்களை அதிக அளவில் நியமிப்பது என்ற கோரிக்கை எட்டாக்கனியாகவே உள்ளது.

    மேலும் தொடர் விடுமுறை நாட்களில் கொடைக்கானலுக்கு அதிக அளவில் போக்குவரத்துக் காவலர்களை அனுப்பி போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

    கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டில் பேரிஜம், மோயர் சதுக்கம், பைன் மரச்சோலை, தூண்பாறை, குணா குகை போன்ற சுற்றுலாத்தலங்கள் உள்ளன. இப்பகுதிகளில் டிக்கெட் கட்டணம் நீண்ட காலமாக அந்தந்த பகுதிகளில் வசூல் செய்யப்பட்டது.

    கடந்த 2 நாட்களாக அனைத்து வனத்துறை சுற்றுலா தளங்களுக்கும் செல்ல ஒரே கட்டணம் ஒரே நுழைவுச்சீட்டு என பெரியவர்களுக்கு ரூ.30, சிறியவர்களுக்கு ரூ.15, கேமராவுக்கு ரூ.50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கோசன் ரோடு வனத்துறை சோதனை சாவடியில் இந்த கட்டணம் வாங்கப்படுகிறது.

    இதன் காரணமாக மேல்மலை கிராமங்களுக்கு செல்லும் பிரதான நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஒவ்வொரு சுற்றுலா பயணிகளும் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக சுற்றுலா தலங்களுக்கு செல்ல முடியாமல் தவித்தனர். மேல்மலை கிராமங்களுக்கு செல்லும் பயணிகள் பஸ் உரிய நேரத்தில் செல்ல முடியாமல் சிக்கி திணறியது. ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் பெரும்பாலான சுற்றுலா இடங்களை காண முடியாமல் திரும்பி செல்லும் நிலையும் ஏற்பட்டது. எனவே இந்த நடைமுறையை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக ஆம்புலன்ஸ் வாகனங்கள் சிக்கி நீண்ட நேரம் போராட்டத்திற்கு பின் நகர முடிந்தது. அதிகமான கடைகளும் இருபுறமும் வாகனங்கள் நிறுத்தப்படுவதாலும் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசலுக்கு காரணமாக உள்ளது. எனவே வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் சாலையின் இரு புறங்களிலும் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.

    அவசரத்துக்கு விபத்தில் சிக்கிக்கொண்டவர்களை கூட ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே இங்கு போக்குவரத்து காவலர்கள் நிரந்தரமாக நியமிக்கப்பட வேண்டும்.

    • பழனி முருகன் கோவிலில் வருகிற 27-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
    • ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் பக்தர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
    • வருகிற 18-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை 3 நாட்கள் முன்பதிவு செய்யலாம்.

    அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமிகோவிலில் வருகிற 27-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

    இதனை முன்னிட்டு யாகசாலை அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. கும்பாபிஷேகத்துக்கான பூர்வாக பூஜைகள் வருகிற 18ந் தேதி தொடங்குகிறது. 23ந் தேதி மாலை முதல் கால யாகை பூஜை அதனைத் தொடர்ந்து தண்டாயுதபாணி சுவாமி ஆவாஹனம் நடக்கிறது. இதனைத் தொடர்ந்து பழனி கோவில் மண்டபத்தில யாகசாலை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகுறது.

    இதில் 90க்கும் மேற்பட்ட யாக குண்டங்கள் அமைக்கப்பட உள்ளன. யாகசாலையில் வண்ண அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது.

    கும்பாபிஷேகத்தில் 2 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதற்கு இணையதளம் மூலம் கட்டணமில்லா முன்பதிவு வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. முன்பதிவு செய்த பக்தர்களில் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும் 2 பேர் மட்டுமே கும்பாபிஷேகத்தில கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

    கோவிலின் இணையதளம் மற்றும் இத்துறைக்கான வலைதளங்களில் பக்தர்கள் வருகிற 18ந் தேதி முதல் 20ந் தேதி வரை கட்டணமில்லா முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    இந்த முன்பதிவுக்கு பான் கார்டு, வாக்காளர் அட்டை, பாஸ்போட், வங்கி சேமிப்பு கணக்கு, ஓட்டுனர் உரிமம், குடும்ப அட்டை, தேசிய அடையாள அட்டை இவற்றில் ஏதேனும் ஒன்றை சான்றாக இணைக்க வேண்டும். மேலும் செல்போன் எண்ணுடன் மின் அஞ்சல் முகவரி இருப்பின் அதனையும் இணைக்க வேண்டும்.

    21ந் தேதியன்று குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் பக்தர்களுக்கு அந்த எண் அல்லது மின் அஞ்சல் முகவரிக்கு தகவல் அனுப்பி வைக்கப்படும். உறுதி செய்யப்பட்ட மின் அஞ்சல், குறுந்தகவல் கிடைக்கப்பெற்றவுடன் 23ந் தேதி முதல் 24ந் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணிக்குள் அந்த கட்டணமில்லா சீட்டினை பெற்றுக்கொள்ளலாம்.

    குறிப்பிட்ட நேரத்துக்கு பின்பு வருபவர்களுக்கு வழங்கப்பட மாட்டாது. இந்த அனுமதி சீட்டு வைத்திருப்பவர்களுக்கு ரோப்கார் மற்றும் மின் இழுவை ரெயில் சேவைக்கு சலுகை வழங்கப்படாது. படிப்பாதை வழியாக மட்டுமே மலைக்கோவிலுக்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதனிடையே பழனி கோவில் கும்பாபிஷேகம் மற்றும் தைப்பூசத்துக்கு முன்பாகவே ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக நடந்து வந்த வண்ணம் உள்ளனர். தொடர் விடுமுறை என்பதாலும் கும்பாபிஷேகத்தில் குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே அனுமதி என்பதாலும் பழனி முருகனை தரிசிக்க பல்வேறு ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். இதனால் மலைக்கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. சுமார் 3 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    • மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் 16வருடங்களுக்கு பிறகு வருகிற 27ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
    • உள்ளூர் விடுமுறை அளிக்க ப்படுமா? என பக்தர்கள் எதிர்பார்க்கி ன்றனர்.

    பழனி:

    அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் 16வருடங்களுக்கு பிறகு வருகிற 27ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்காக கோவிலின் சீரமைப்பு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.

    கும்பாபிஷேகத்திற்கு குறைந்த நாட்களே உள்ளதால் மாவட்ட நிர்வாகம் மற்றும் தேவதாஸ்தானம் சார்பில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்துதர தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    வருகிற 23ந் தேதி மூலவருக்கு மருந்து சாத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதனால் அன்று மாலை 3 மணி வரை மட்டுமே மூலவரை தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படு வார்கள். அதன்பிறகு 26ந் தேதி வரை பக்தர்கள் மூலவரை தரிசனம் செய்ய அனுமதி இல்ைல. அதே வேளையில் யாகசாலையில் எழுந்தருளும் சாமியை தரிசனம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் மலை க்கோவிலில் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் 6 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற பக்தர்கள் எல்.இ.டி. திரையில் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    பழனி கோவிலுக்கு கும்பாபிஷேக நிகழ்ச்சியை காண தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தரு வார்கள் என்ப தால் அன்று உள்ளூர் விடுமுறை அளிக்க ப்படுமா? என பக்தர்கள் எதிர்பார்க்கி ன்றனர்.

    • திருச்சி மார்க்கெட்டில் இருந்து பழனிக்கு வாழை ப்பழ லோடு ஏற்றிக்கொண்டு சரக்கு வாகனம் வந்தது.
    • நிலைதடுமாறி தாறுமாறாக ஓடிய சரக்கு வாகனம் சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    வடமதுரை:

    திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் அய்யம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தர்மராஜ் (வயது32). டிரைவர். இவர் திருச்சி மார்க்கெட்டில் இருந்து பழனிக்கு வாழை ப்பழ லோடு ஏற்றிக்கொண்டு சரக்கு வாகனத்தில் வந்தார்.

    திண்டுக்கல்-திருச்சி 4 வழிச்சாலையில் அய்யலூர் அருகே கொல்லப்பட்டி பகுதியில் வந்து கொண்டி ருந்தபோது மீன் ஏற்றி வந்த லாரி சரக்கு வாகனத்தின் பின்னால் ேமாதியது.

    இதில் நிலைதடுமாறி தாறுமாறாக ஓடிய சரக்கு வாகனம் சாலையோரத்தில் கவிழ்ந்தது. இதில் படுகாயம் அடைந்த டிரைவர் தர்ம ராஜை வடமதுரை போலீ சார் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் விபத்தை ஏற்படுத்திய மீன் லாரியை ஓட்டி வந்த நாகபட்டினத்தை சேர்ந்த செந்தில்குமார் என்பவரிடம் விசாரித்து வருகின்றனர்.

    • கொடைக்கானல் மலைப்பகுதியில் விளைவிக்கப்படும் காய்கறிகள் பழனி உழவர் சந்தைக்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
    • பெரும்பாலான காய்கறிகள் விலை குறைந்துள்ளதால் மக்களும் மகிழ்ச்சியுடன் வாங்கி சென்றனர்.

    பழனி:

    பழனி உழவர் சந்தைக்கு தினந்தோறும் பல கிராமங்களில் இருந்து ஏராளமான விவசாயிகள் தாங்கள் விளைவித்த காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இதுமட்டுமின்றி கொடைக்கானல் மலைப்பகுதியில் விளைவிக்கப்படும் காய்கறிகளும் பழனி உழவர் சந்தைக்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

    தினந்தோறும் 15 முதல் 20 டன் வரை இங்கு காய்கறிகள் விற்பனையாகிறது. தற்போது போகி பண்டிகை, பொங்கல் மற்றும் தொடர்விடுமுறை காரணமாக இன்று ஒரேநாளில் 30 டன் காய்கறிகள் விற்பனை யானது. தினந்தோறும் சுமார் 2000 பேர் உழவர்சந்தைக்கு வந்து சென்ற நிலையில் இன்று சுமார் 3500-க்கும் மேற்பட்டோர் சந்தைக்கு வந்துள்ளதாக நிர்வாக அலுவலர் வினோத்குமார் தெரிவித்தார்.

    தற்போது பெரும்பாலான காய்கறிகள் விலை குறைந்துள்ளதால் மக்களும் மகிழ்ச்சியுடன் அதனை வாங்கி சென்றனர். தாங்கள் கொண்டு வந்த காய்கறிகள் அனைத்தும் விற்று தீர்ந்ததால் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர். ஒரு சில காய்கறிகளின் விலை மட்டும் உயர்ந்திருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதனால் இன்று பழனி உழவர்சந்தையில் விற்பனை களைகட்டியது.

    • சிகிச்சை பலனின்றி பொன்னர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே புதுக்கல ராம்பட்டியை சேர்ந்தவர் பொன்னர் (வயது25). இவர் அதே பகுதியில் உள்ள நாடகமேடை அருகே தவமணி (24) என்பவருடன் கேரம்போர்டு விளையாடிக் கொண்டிருந்தார்.

    அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் தவமணி மற்றும் அவரது உறவினர்கள் ஒன்று சேர்ந்து பொன்னரை சரமாரியாக கட்டையால் தாக்கினர்.

    இதில் படுகாயம் அடைந்த பொன்னர் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பொன்னர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்த புகாரின் பேரில் வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணவேணி வழக்குப்பதிவு செய்து கொலை தொடர்பாக தவமணி, அவரது உறவினர்கள் சுபாஷ் (வயது27), மகாலட்சுமி (27), பகவதி (19) ஆகிய 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்தார். உயிரிழந்த பொன்னருக்கு நதியா என்ற மனைவியும், யுவஸ்ரீ என்ற 1½ வயது மகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஸ்கேன் சென்டர் முன்பு ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • தற்போது பழனி அரசு ஆஸ்பத்திரி வளாகத்திலும் அதே போன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பழனி:

    பழனி அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள மரத்தில் இன்று காலை தூக்கு மாட்டிய நிலையில் ஒரு வாலிபர் இறந்து கிடந்தார். ஆஸ்பத்திரி ஊழியர்கள் இதை பார்த்து அதிர்ச்சியடைந்து பழனி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவரது உடலை கைப்பற்றினர். அவர் பாக்கெட்டில் இருந்த ஒரு செல்போனில் கடைசியாக பேசிய எண்ணில் தொடர்பு கொண்டு பேசினர்.

    அப்போது இறந்தவர் கோவை சரவணம்பட்டி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சரவணபாரதி (வயது 37) என தெரியவந்தது. இவர் எதற்காக பழனிக்கு வந்தார்? எங்கே வேலை பார்த்தார்? அரசு ஆஸ்பத்திரியில் யாரை பார்க்க வந்தார்? என போலீசார் விசாரித்து வருகின்றனர். திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஸ்கேன் சென்டர் முன்பு ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தற்போது பழனி அரசு ஆஸ்பத்திரி வளாகத்திலும் அதே போன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • இயற்கை எழில் கொஞ்சும் கொடைக்கானலில் தற்போது இதமான சீதோஷ்ண நிலை நிலவுகிறது.
    • பிரையண்ட் பூங்காவில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் ஆர்னமென்டல் செர்ரி மலர்கள் பூத்துக்குலுங்குகின்றன.

    கொடைக்கானல்:

    இயற்கை எழில் கொஞ்சும் கொடைக்கானலில் தற்போது இதமான சீதோஷ்ண நிலை நிலவுகிறது. இதனை அனுபவிக்க சுற்றுலா பயணிகளின் வருகை தினந்தோறும் அதிகரித்து வருகிறது. வருகை தரும் சுற்றுலா பயணிகள் பிரையண்ட் பூங்கா, பில்லர் ராக் உள்ளிட்ட இடங்களை கண்டு களிக்கின்றனர்.

    இந்நிலையில் பிரையண்ட் பூங்காவில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் ஆர்னமென்டல் செர்ரி மலர்கள் பூத்துக்குலுங்குகின்றன. இவை குளிர்காலத்தை வரவேற்கும் விதமாக டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் மட்டும் பூத்துக்குலுங்கி தானாக உதிர்ந்து விழுகின்றன, இந்த வகை மலர்களில் இருந்து தேன்சிட்டு குருவிகளும், தேனீக்களும் தேன் எடுக்கும் காட்சி சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.

    இந்த செர்ரி மலர்களை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசிப்பதுடன், புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.

    • வருகிற 27-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
    • 23-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை காலபூஜை கட்டளை, தங்கரத புறப்பாடு, ஆகியவை நடைபெறாது.

    பழனி முருகன் கோவிலில் வருகிற 27-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதையொட்டி கும்பாபிஷேக திருப்பணிகள் முழுவீச்சில் நடைபெறுகிறது. இந்நிலையில் கும்பாபிஷேகத்துக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம், பழனியாண்டவர் கலைக்கல்லூரியில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் விசாகன் தலைமை தாங்கினார். வருவாய் அலுவலர் லதா, போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், கோவில் இணை ஆணையர் நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வருவாய், போலீஸ், சுகாதாரம், போக்குவரத்து என அனைத்து துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில், கும்பாபிஷேகத்தின்போது பக்தர்களுக்கான அனுமதி, முன்னேற்பாடு வசதிகள் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. பின்னர், கும்பாபிஷேகத்தில் 6 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுவது எனவும், இதில் கோவில் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் பக்தர்களில் 3 ஆயிரம் பேர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு பங்கேற்க உள்ளனர் என்றும் முடிவு செய்யப்பட்டது. மேலும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய போதிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது, அடிவார பகுதியில் உள்ள தங்கும்விடுதிகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை கண்காணிக்க குழு அமைத்து சோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டது.

    கும்பாபிஷேகத்தில் கலந்துகொள்ளும் பக்தர்கள் அன்றைய தினம் அதிகாலை 4 மணி முதல் 7.15 மணி வரை ரோப்கார், மின்இழுவை ரெயில் மற்றும் படிப்பாதை வழியே அனுமதிக்கப்படுவர். பின்னர் கருப்பணகவுண்டன்வலசு அருகே பைபாஸ் சாலையில் தற்காலிக பஸ்நிலையம் அமைக்கவும், அங்கிருந்து பழனி நகருக்கு வர சிறப்பு பஸ்கள் இயக்குவது எனவும் முடிவு செய்யப்பட்டது. மேலும் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடு பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    பின்னர் கும்பாபிஷேகம் குறித்து கோவில் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது:-

    பழனி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 18-ந்தேதி மாலை பூர்வாங்க பூஜைகள் தொடங்குகிறது. எனவே அன்று ஒரு நாள் மட்டும் மலைக்கோவிலில் சாயரட்சை பூஜை மாலை 4 மணிக்கு நடைபெறும். மேலும் 23-ந்தேதி மாலை முதற்கால யாகசாலை பூஜை தொடங்கி, கலசத்தில் ஆவாஹணம் செய்து யாகசாலையில் எழுந்தருளியுள்ள சுவாமியை தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கும்பாபிஷேகம் முடிவடைந்து மகா தீபாராதனைக்கு பின்பு வழக்கம்போல் சுவாமி தரிசனம் செய்யலாம்.

    23-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை காலபூஜை கட்டளை, தங்கரத புறப்பாடு, ஆகியவை நடைபெறாது. 28-ந்தேதிக்கு பிறகு வழக்கம்போல் நடைபெறும். அதேபோல் மலைக்கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் அன்னதான சேவை 23-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை வடக்கு கிரிவீதியில் உள்ள குடமுழுக்கு நினைவரங்குகளில் நடைபெறும். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மூலவருக்கு நடைபெறும் அஷ்டபந்தன மருந்து சாற்றும் நிகழ்வின்போது சொர்ணபந்தனத்தில் அனைத்து பக்தர்கள் சார்பாக கோவில் நிர்வாகத்தில் விலை உயர்ந்த தங்கம், நவரத்தின கற்கள் வைக்கப்படும்.

    இந்தவகைக்கு பக்தர்கள் பங்களிப்பு செய்ய விரும்பினால் கோவிலில் உரிய ரசீது பெற்று கொள்ளலாம். கும்பாபிஷேக நிகழ்ச்சியை காண அடிவாரம் குடமுழுக்கு நினைவரங்கம், கிரிவீதிகளில் 18 பெரிய டி.வி.க்கள் மற்றும் கிரிவீதி, மத்திய பஸ்நிலையம், கோவில் பஸ்நிலையம் உள்ளிட்ட இடங்களில் 8 எல்.இ.டி. வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    கும்பாபிஷேக நன்கொடை செலுத்த விரும்பும் பக்தர்கள் திருப்பணி வங்கி கணக்கில் நன்கொடை செலுத்திவிட்டு அதன் விவரம், ரசீது வழங்க வேண்டிய முகவரியை குறிப்பிட்டு கோவில் jceomdu 32203.hrce@tn.gov.in என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வைக்கவும், மேலும், மின்பரிவர்த்தனை மூலம் நன்கொடை வழங்கும் பக்தர்கள் ரசீது வழங்க ஏதுவாக குறிப்பு காலத்தில் தங்களது பெயர் மற்றும் முகவரியை குறிப்பிடவும்.

    அதேபோல் கும்பாபிஷேக யாகசாலை பூஜைப்பொருட்கள், அன்னதானத்திற்கு தேவையான பொருட்கள் வழங்க விரும்பும் பக்தர்கள் தண்டபாணி நிலைய தங்கும் விடுதியில் ஒப்படைத்து ரசீது பெற்றுக்கொள்ளலாம். மேலும் புண்ணிய தீர்த்தங்களான கங்கை, யமுனை, பிரம்மபுத்திரா, நர்மதை, சிந்து, கிருஷ்ணா, கோதாவரி, காவிரி, அமராவதி, பவானி, தாமிரபரணி, வைகை, கோடி தீர்த்தம் மற்றும் இதர புண்ணிய தீர்த்தங்களை உரிய விரத நியமத்துடன் எடுத்து வந்து மலைக்கோவிலில் தங்கரத புறப்பாடு பதிவு செய்யும் அலுவலகத்தில் 15-ந்தேதி முதல் 17-ந்தேதி மாலை 5 மணிக்குள் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • கொல்கத்தாவில் இருந்து வெள்ளை, இளஞ்சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், நீலம் உள்ளிட்ட 20 நிறங்களில் 5 ஆயிரம் டேலியா மலர் செடி நாற்றுகள் கொண்டு வரப்பட்டுள்ளது.
    • மலர் செடிகள் நாற்று நடும் பணி 3 நாட்கள் நடைபெறும்.

    கொடைக்கானல்:

    சர்வதேச சுற்றுலா தலமான கொடைக்கானலில் ஏப்ரல், மே மாதத்தில் குளுகுளு சீசன் தொடங்கும். இதையொட்டி கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடைபெறும். இந்த ஆண்டு குளுகுளு சீசனை முன்னிட்டு பிரையண்ட் பூங்காவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு முதல் கட்ட மலர் செடிகள் நடும் பணி நடந்தது. தற்போது 2-ம் கட்ட மலர் செடிகள் நடும் பணி நேற்று காலை தொடங்கியது.

    இதற்காக கொல்கத்தாவில் இருந்து வெள்ளை, இளஞ்சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், நீலம் உள்ளிட்ட 20 நிறங்களில் 5 ஆயிரம் டேலியா மலர் செடி நாற்றுகள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த டேலியா மலர் செடிகளை நடவு செய்யும் பணியில் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.மலர் செடிகள் நாற்று நடும் பணி 3 நாட்கள் நடைபெறும். குளுகுளு சீசன் தொடங்கும்போது சுற்றுலா பயணிகள் வரவேற்கும் விதமாக டேலியா மலர் செடிகள் பல நிறங்களில் மலர்ந்து காணப்படும் என்று பூங்கா மேலாளர் சிவபாலன் தெரிவித்தார்.

    • திமுக அரசு கொடுத்த உரையில் உள்ள பொய்யான விஷயங்களை ஆளுநர் தவிர்த்துள்ளார்.
    • அவர்கள் கொடுத்ததை ஆளுநர் அப்படியே படிக்கவில்லை என்பதுதான் திமுகவினரின் பிரச்சனை.

    திண்டுக்கல்:

    தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திண்டுக்கலில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சட்டசபையில் வாசிக்கப்பட்ட ஆளுநர் உரையில் எங்களுக்கும் திருப்தி இல்லை. ஏனென்றால் அவர் பல இடங்களில் திமுகவையும் ஆட்சியையும் பாராட்டி பேசியிருக்கிறார். திமுக கொடுத்ததை ஆளுநர் அப்படியே வாசித்துள்ளார். ஆளுநர் எந்த இடத்திலும் தனது சொந்த கருத்தை திணித்து பேசவில்லை. திமுக அரசு கொடுத்த உரையில் உள்ள சில விஷயங்களை ஆளுநர் தவிர்த்துள்ளார், காரணம் அவை பொய்.

    அவர்கள் கொடுத்ததை ஆளுநர் அப்படியே படிக்கவில்லை என்பதுதான் திமுகவினரின் பிரச்சனை. திமுக கொடுத்ததை அப்படியே படித்திருக்கிறார் என்பது பாஜகவின் பிரச்சனை.

    அரசு கொடுக்கும் உரையை ஆளுநர் சட்டசபையில் படிப்பது என்பது மரபு. ஆனால் உண்மை நிலையை கொடுக்கவேண்டும் என திமுக அரசை கேட்டுக்கொள்கிறேன். கொடுக்கப்பட்டுள்ள தகவல் சரியா? என்பதை சரிபார்த்து கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×