search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பழனியில் பி.எப்.ஐ. முன்னாள் நிர்வாகியிடம் 2-வது நாளாக விசாரணை
    X

    கோப்பு படம்

    பழனியில் பி.எப்.ஐ. முன்னாள் நிர்வாகியிடம் 2-வது நாளாக விசாரணை

    • கடையில் வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது டெல்லியில் இருந்து வந்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் நிர்வாகியை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
    • பழனியில் 2வது நாளாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பழனி:

    திண்டுக்கல் மாவட்டம் பழனி புறநகரை சேர்ந்தவர் முகமது கைசர் (வயது 50). இவர் பெரிய கடைவீதியில் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் மத்திய அரசால் தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பில் மதுரை மண்டல தலைவராக இருந்தவர்.

    இவர் நேற்று தனது கடையில் வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது டெல்லியில் இருந்து வந்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் இவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். பழனி டவுன் போலீஸ் நிலையத்தில் உள்ள போக்கு வரத்து காவல்நிலைய அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த விசாரணை நேற்று மாலை 6 மணிவரை நீடித்த நிலையில் பின்னர் அவரை அனுப்பி வைத்தனர். இதனிடையே இன்று 2வது நாளாக முகமதுகைசரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்து சென்றனர். இவர் கடந்த 2016ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் பழனி சட்டமன்ற தொகுதியில் வேட்பாளராக போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    கோவையில் கடந்த தீபாவளி பண்டிகைக்கு முதல்நாள் நடந்த கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கேரளா, தெலுங்கானா, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வழக்கில் தொடர்புடையவர்கள் யாரேனும் இவரிடம் தொடர்பில் உள்ளனரா என்ற கோணத்தில் விசா ரணை நடத்தப்படுவதாக போலீசார் தெரிவித்தனர்.

    பழனியில் 2வது நாளாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×