என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vehicle overturned"

    • திருச்சி மார்க்கெட்டில் இருந்து பழனிக்கு வாழை ப்பழ லோடு ஏற்றிக்கொண்டு சரக்கு வாகனம் வந்தது.
    • நிலைதடுமாறி தாறுமாறாக ஓடிய சரக்கு வாகனம் சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    வடமதுரை:

    திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் அய்யம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தர்மராஜ் (வயது32). டிரைவர். இவர் திருச்சி மார்க்கெட்டில் இருந்து பழனிக்கு வாழை ப்பழ லோடு ஏற்றிக்கொண்டு சரக்கு வாகனத்தில் வந்தார்.

    திண்டுக்கல்-திருச்சி 4 வழிச்சாலையில் அய்யலூர் அருகே கொல்லப்பட்டி பகுதியில் வந்து கொண்டி ருந்தபோது மீன் ஏற்றி வந்த லாரி சரக்கு வாகனத்தின் பின்னால் ேமாதியது.

    இதில் நிலைதடுமாறி தாறுமாறாக ஓடிய சரக்கு வாகனம் சாலையோரத்தில் கவிழ்ந்தது. இதில் படுகாயம் அடைந்த டிரைவர் தர்ம ராஜை வடமதுரை போலீ சார் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் விபத்தை ஏற்படுத்திய மீன் லாரியை ஓட்டி வந்த நாகபட்டினத்தை சேர்ந்த செந்தில்குமார் என்பவரிடம் விசாரித்து வருகின்றனர்.

    • தக்காளி ஏற்றிச்சென்ற வாகனம் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தலைகுப்புற கவிழ்ந்தது.
    • வாகனத்தில் இருந்த தக்காளிகள் அனைத்தும் சாலையில் சிதறின. இதனால் அதனை கொண்டு சென்ற வியாபாரிகள் கவலையடைந்தனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தக்காளி விலை மீண்டும் வீழ்ச்சி அடைந்துள்ளது. ஒரு கிலோரூ.25 மற்றும் அதற்கு கீழ் விற்பனையாகிறது. இதனால் விவசாயிகள் கவலை யடைந்துள்ளனர். இதனால் தக்காளி தட்டுப்பாடு உள்ள பகுதிகளில் இருந்து வியாபாரிகள் கொள்முதல் செய்து வருவது அதிகரித்து வருகிறது.

    குறிப்பாக ஒட்டன்சத்திரம், அய்யலூர் மார்க்கெட்டுகளில் இருந்து மதுரை, திருச்சி மாவட்ட வியாபாரிகள் தக்காளிகளை வாங்கிச்செல்கின்றனர்.

    மதுரை மாவட்டம் பாலமேடு பகுதியை சேர்ந்த வியாபாரிகள் இன்று காலை ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் இருந்து தக்காளி மூடைகளை ஏற்றிக்கொண்டு நத்தம் ரோட்டில் சென்று கொண்டிருந்தனர்.

    கொசவபட்டி அருகே தனியார் பள்ளி முன்பு வாகனம் சென்றபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தலைகுப்புற கவிழ்ந்தது. இதனால் வாகனத்தில் இருந்த தக்காளிகள் அனைத்தும் சாலையில் சிதறின. இதனால் அதனை கொண்டு சென்ற வியாபாரிகள் கவலையடைந்தனர். வாகனத்தில் வந்தவர்கள் லேசான காயத்துடன் உயிர்தப்பினர்.

    • வேட சந்தூர் அருகே திண்டுக்கல்- கரூர் 4 வழிச்சாலையில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம் தாறுமாறாக ஓடியது.
    • 10 அடி பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்கு ள்ளானது.

    வேடசந்தூர்:

    கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் விஜய். இவர் நர்சரி ேதாட்டம் வைத்து ள்ளார். இந்த தோட்டத்திற்கு ரூ.2 லட்சம் மதிப்புள்ள உரமூட்டைகளை ஏற்றி க்கொண்டு மதுரையில் இருந்து கரூருக்கு சரக்கு வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

    வேட சந்தூர் அருகே திண்டுக்கல்- கரூர் 4 வழிச்சாலையில் லட்சுமணம்பட்டி நால்ரோடு பகுதியில் வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம் தாறுமாறாக ஓடியது.

    பின்னர் அங்கிருந்த 10 அடி பள்ளத்தில் தலைக்கு ப்புற கவிழ்ந்து விபத்துக்கு ள்ளானது. அதிர்ஷ்டவசமாக டிரைவர் காயமின்றி உயிர்தப்பினார். சரக்கு வாகனம் சாலையோர பள்ளத்தில் பறந்து சென்று கவிழ்ந்தது சினிமாவை மிஞ்சும் வகையில் இருந்த தாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

    ×