என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
வேடசந்தூர் அருகே 4 வழிச்சாலையில் கவிழ்ந்த சரக்கு வாகனம்
- வேட சந்தூர் அருகே திண்டுக்கல்- கரூர் 4 வழிச்சாலையில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம் தாறுமாறாக ஓடியது.
- 10 அடி பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்கு ள்ளானது.
வேடசந்தூர்:
கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் விஜய். இவர் நர்சரி ேதாட்டம் வைத்து ள்ளார். இந்த தோட்டத்திற்கு ரூ.2 லட்சம் மதிப்புள்ள உரமூட்டைகளை ஏற்றி க்கொண்டு மதுரையில் இருந்து கரூருக்கு சரக்கு வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
வேட சந்தூர் அருகே திண்டுக்கல்- கரூர் 4 வழிச்சாலையில் லட்சுமணம்பட்டி நால்ரோடு பகுதியில் வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம் தாறுமாறாக ஓடியது.
பின்னர் அங்கிருந்த 10 அடி பள்ளத்தில் தலைக்கு ப்புற கவிழ்ந்து விபத்துக்கு ள்ளானது. அதிர்ஷ்டவசமாக டிரைவர் காயமின்றி உயிர்தப்பினார். சரக்கு வாகனம் சாலையோர பள்ளத்தில் பறந்து சென்று கவிழ்ந்தது சினிமாவை மிஞ்சும் வகையில் இருந்த தாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
Next Story






