என் மலர்
உள்ளூர் செய்திகள்

பழனியில் அரசு ஆஸ்பத்திரியில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
- திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஸ்கேன் சென்டர் முன்பு ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- தற்போது பழனி அரசு ஆஸ்பத்திரி வளாகத்திலும் அதே போன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பழனி:
பழனி அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள மரத்தில் இன்று காலை தூக்கு மாட்டிய நிலையில் ஒரு வாலிபர் இறந்து கிடந்தார். ஆஸ்பத்திரி ஊழியர்கள் இதை பார்த்து அதிர்ச்சியடைந்து பழனி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவரது உடலை கைப்பற்றினர். அவர் பாக்கெட்டில் இருந்த ஒரு செல்போனில் கடைசியாக பேசிய எண்ணில் தொடர்பு கொண்டு பேசினர்.
அப்போது இறந்தவர் கோவை சரவணம்பட்டி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சரவணபாரதி (வயது 37) என தெரியவந்தது. இவர் எதற்காக பழனிக்கு வந்தார்? எங்கே வேலை பார்த்தார்? அரசு ஆஸ்பத்திரியில் யாரை பார்க்க வந்தார்? என போலீசார் விசாரித்து வருகின்றனர். திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஸ்கேன் சென்டர் முன்பு ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்போது பழனி அரசு ஆஸ்பத்திரி வளாகத்திலும் அதே போன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






