என் மலர்tooltip icon

    கடலூர்

    • நெல் ரகங்கள் மற்றும் சாகுபடி தொழில்நுட்பங்கள் விவசாயி களுக்கு எடுத்துக்கூறப்பட்டது.
    • விவசாயிகளுக்கு வேளாண்மை துணை இயக்குநர் எடுத்துரைத்தார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிக ளுக்கான குறைகேட்பு மற்றும் விவசா யிகள் மேம்பாட்டி ற்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது. விவசாயிகளுக்கு வேளாண்மை அறிவியியல் நிலைய விஞ்ஞானி நட ராஜன் சம்பா பருவத்திற்கு ஏற்ற நெல் ரகங்கள் மற்றும் சாகுபடி தொழில்நுட்பங்கள் விவசாயி களுக்கு எடுத்துக்கூறப்பட்டது. வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத்துறை மூலம் தேசிய வேளாண்மை சந்தை திட்டம் குறித்து விவசாயி களுக்கு அறிவுறுத்தப்பட்டது. நுண்ணீர் பாசன திட்டம் மற்றும் நீர் மோலண்மை குறித்து விவசாயிகளுக்கு வேளாண்மை துணை இயக்குநர் (நுண்ணீர் பாசனம்) ஜெயக்குமார் எடுத்துரைத்தார்.

    அதனை தொடர்ந்து, விவசாயிகளின் கோரிக்கை களை ஆய்வு செய்து உடனடி யாக நடவடிக்கை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார். விவசாயிகள் இக்கூட்டத்தில் தெரிவித்த கோரிக்கைகள் ஆய்வு மேற்கொண்டு தீர்வு காணப்படும் எனவும், விவசாயிகள் வாய்க்கால் தூர் வாருதல் மற்றும் தடுப்பணை அமைப்பது தொடர்பாக தெரிவித்த கோரிக்கைகளுக்கு உரிய துறை அலுவலர்கள் மூலம் ஆய்வு மேற்கொண்டு நிதி ஆதாரத்தின் அடிப்படை யில் பணிகள் மேற்கொள்ள ப்படும் எனவும் தெரிவிக்க ப்பட்டது. புதுக்கூரைப்பேட்டை மற்றும் விஜயமாநகரம் கிராம விவசாயிகளுக்கு விரைவில் பட்டா வழங்க நடவடிக்கை மேற்கொள்ள ப்படும் எனவும் தெரிவிக்க ப்பட்டது. விவசாயிகள் தெரிவித்த கோரிக்கைகள் தொடர்பாக விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு அதற்கான பதிலை சம்மந்த ப்பட்ட விவசாயிகளுக்கு அனுப்பி வைத்திட அறிவுரை வழங்கப்பட்டது.

    இக்கூட்டத்தில் வேளாண்மைத் துறை இணை இயக்குநர் கண்ணையா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) ரவிச்சந்திரன், வேளாண் உதவி இயக்குநர்கள், தோட்டக்கலை உதவி இயக்குநர்கள், அனைத்து துறைகளின் அரசு அலுவலர்கள் மற்றும் 14 வட்டார விவசாய சங்க பிரதி நிதிகள் கலந்துகொண்டனர்.

    • ஒருபுறத்தில் சாலை ஓரமாக வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
    • மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளனர்.

    கடலூர்:

    கடலூர் கோண்டூரில் இருந்து மடப்பட்டு வரை 230 கோடி ரூபாய் செலவில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெறு வருகிறது. இதில் நெல்லிக்குப்பம் திரவுபதி அம்மன் கோவிலில் இருந்து கீழ்பட் டாம்பாக்கம் வரை ஒருபுறத்தில் சாலை ஓரமாக வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. நேற்று மாலை நெல்லிக்குப்பத்தில் கன மழை காரணமாக சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் வடிகால் வாய்க் காலுக்காக தோண்டப் பட்ட பள்ளத்திலும் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது. ஆனால் கொட்டும் மழையிலும் தேங்கி இருந்த மழை நீரில் விடாப்படியாக ஊழி யர்கள் தலையில் துண்டு அணிந்து கொண்டு சிமெண்ட் கலவை கொட்டி வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணியை செய்து கொண்டிருந்தனர்.

    இதனை பார்த்த பொது மக்கள் கடும் அதிர்ச்சி அறிந்து மக்கள் வரிப் பணத்தை வீணாக்குவதில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மழை, வெயில் என்று பாராமல் வேலை செய்து வருவதாக கடும் குற்றச்சாட்டை வைத்தனர். மேலும் தற்போது இந்த பணிகள் அவசர அவசரமாக நடைபெற்று வருவதால் சில மாதங்களில் தரமற்ற பணியால் வடிகால் வாய்க்கால் இடிந்து விழுவதோடு சாலை ஓரத்தில் இருப்பதால் வாகன ஓட்டிகள் அல்லது பொதுமக்கள் விழுந்து உயிர் பலி ஏற்படும் அபாயமும் உள்ளது. மேலும் நெல்லிக்குப்பம் பகுதியில் நெடுஞ்சாலைத் துறையினர் சரியான முறையில் அளவீடு செய்யாமல் ஆக்கிரமிப்பு கள் அகற்றம் செய்யாமல் கடமைக்கு பணி செய்து வருவதாக கடந்த 3 நாட்கள் முன்பு வரை சுமார் 8 மாதமாக தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. ஆனால் கலெக்டர் கடும் எச்சரிக்கை விடுத்தும் நெடுஞ்சாலைத்துறை யினர் சரியான முறையில் ஆக்கிரமிப்பு அகற்றம் செய்யவில்லை என குற்றச்சாட்டு எழுந்த நிலையில் தற்போது கொட்டும் மழையிலும் சிமெண்ட் கலவை அமைத்து வடிகால் அமைக்கும் பணியை எந்த அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பார்கள் என்பது தெரியாமல் பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளனர். ஆகையால் கலெக்டர் அருள் தம்புராஜ், சாலை விரிவாக்க பணி மற்றும் வடிகால் அமைக்கும் பணியை நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பாரா? என பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    • ஊர் காவல் படை பயிற்சியும், 10 பேருக்கு கடலோர காவல் குழுமத்தில் பணி புரிவதற்கான பயிற்சியும் கடலூர் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது.
    • போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் ஊர் காவல் படையில் பணிபுரிவதற்கு 33 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் 23 பேருக்குஊர் காவல் படை பயிற்சியும், 10 பேருக்கு கடலோர காவல் குழுமத்தில் பணி புரிவதற்கான பயிற்சியும் கடலூர் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது.கடந்த 45 நாட்களாக இவர்களுக்கு அடிப்படைக் கவாத்து பயிற்சி, நீச்சல் பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இந்த பயிற்சியின் நிறைவு விழா இன்று காலை கடலூர் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது.

    ஊர்க்காவல் படை விழுப்புரம் சரக உதவி தளபதி கேதர்நாதன் தலைமை தாங்கினார். வட்டார தளபதி அம்ஜத் கான் வரவேற்றார். கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பயிற்சி முடித்த ஊர் காவல் படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.பின்னர் பயிற்சியில் சிறப்பாக செயல்பட்ட 3 பேருக்கு பதக்கங்களை அணிவித்து கவுரவித்து பேசினார். இந்த நிகழ்ச்சியில் ஆயுதப் படை ஆய்வாளர் அருள்செல்வன், ஊர் காவல் படை வட்டார துணை தளபதி கலாவதி, செய்தி தொடர்பாளர் ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • தேசிய நெடுஞ்சாலையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.
    • முன்னுக்குபின் முரணாக கூறியதால் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே ராமநத்தம் மற்றும் இதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் கடந்த சில மாதங்களாக விலையுயர்ந்த மோட்டார் சைக்கிள்கள் திருடு போய்வந்தது. இதனால் அந்த பகுதியில் மோட்டார் சைக்கிளை குறிவைத்து திருடும் கும்பலை பிடிக்க திட்டக்குடி போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் இன்று காலை திட்டக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபிநாத் தலைமையிலான போலீசார் திட்டக்குடி அருகே சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    அப்போது இந்த சர்வீஸ் சாலையில் உள்ள ஒரு தனியார் லாட்ஜ் அருகே சந்தேகத்திற்கு இடமாக கும்பல் ஒன்று நின்று கொண்டிருந்தது. இதை பார்த்த போலீசார் அங்கு சென்று அவர்களிடம் விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் முன்னுக்குபின் முரணாக கூறியதால் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து சென்று போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் அவர்கள் திட்டக்குடி மா.புடையூர் பகுதியை சேர்ந்த ராஜமாணிக்கம் மகன் ராஜகோபால் (வயது 24), போத்திரமங்கலம் முத்தழகன் மகன் ராஜா (20), பெரம்பலூர் மாவட்டம் அகரம் சீகூர் பகுதியை சேர்ந்த அசோக்குமார் மகன் வசந்தகுமார் (20), திருமாந்துறை அண்ணாநகர் வீரமுத்து மகன் அன்பரசன் (20) என்பது தெரியவந்தது.

    மேலும் ராமநத்தம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர் மோட்டார் சைக்கிள்களை திருடி செல்வதை ஒப்பு க்கொண்டனர். இவர்கள் இரவு, பகல் நேரத்தில் கூட சாலை மற்றும் வீட்டின் அருகே நின்று கொண்டிருக்கும் மோ ட்டார் சைக்கிள்களை கள்ள ச்சாவி பயன்படுத்தியும், மோட்டார் சைக்கிளில் போடப்ப ட்டுள்ள லாக்கை உடைத்தும் இந்த திருட்டில் ஈடுபட்டு வந்தது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் மோட்டார் சைக்கிள்களை குறிவைத்து திருடும் கும்பலான ராஜகோபால், ராஜா, வசந்தகுமார். அன்பரசன் ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து தொடர்ந்து வேறுபகுதியில் இந்த மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டு உள்ளனாரா என விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடம் இருந்து 3 விலையுயர்ந்த மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • 20 பவுன் மற்றும் சீர்வரிசைகள் கார் வாங்குவதற்கு இரண்டரை லட்சம் பணம் கொடுத்துள்ளார்.
    • அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    கடலூர்:

    பண்ருட்டி பெரிய கள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த தயாநிதி மகள் நித்யா ( 25 )என்பவருக்கு விழுப்புரம் மாவட்டம் வளவனூர் கிராமத்தைச் சேர்ந்தராமமூர்த்திமகன் ராமச்சந்திரனுக்கும் ஜனவரி மாதம் 27-ந் தேதி திருமணம் நடைபெற்றது. 20 பவுன் மற்றும் சீர்வரிசைகள் கார் வாங்குவதற்கு இரண்டரை லட்சம் பணம் கொடுத்தும் மேலும் 10 லட்சம் பணம் கேட்டு கணவன் ராமச்சந்திரன், மாமியார்சாந்தி, மாமனார் ராமமூர்த்தி , நாத்தனார்ரம்யாஆகியோர்கள் அடித்து மிரட்டி கொடுமைப்படுத்துவதாக நித்யா பண்ருட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

    • பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது.
    • பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கடலூர்:

    பண்ருட்டி ஆர்.எஸ்.மணி நகர் 8-வது தெருவை சேர்ந்தவர் பாபு. இவரது மனைவி சுதா (வயது34) இவர் நேற்று அதிகாலை விஷம் குடித்தார். இதனையடுத்து அவரை பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.தகவல் அறிந்த பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • பட்டா வேண்டி 40 வருடங்களாகவே போராடி வருகின்றனர்.
    • வருவாய் துறையினர் உரிய இடத்தை அளவீடு செய்து இதுநாள் வரை தரப்படவில்லை.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே அங்கு செட்டிப்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட புதுநகர் உள்ளது. இங்கு உள்ள ஆதிதிராவிடர் பொதுமக்களுக்கு அரசால் கொடுக்கப்பட்ட இடத்தில் பட்டா வேண்டி 40 வருடங்களாகவே போராடி வருகின்றனர்.கடந்த ஆண்டு காத்திருப்பு போராட்டம், சாலை மறியல், உண்ணாவிரதம் போன்ற பல்வேறு போராட்டம் நடத்தினர். ஆனால் பட்டா வழங்கும் இடத்தை வேறு நபருக்கு விற்பனை செய்து கொடுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதில் வருவாய் துறையினர் உரிய இடத்தை அளவீடு செய்து இதுநாள் வரை தரப்படவில்லை. இந்நிலையில் இன்று அப்பகுதி பொதுமக்கள் திடீரென அந்த இடத்தில் கும்பலாக சென்று குடி ஏறும் போராட்டம் செய்து வருகின்றனர்.

    • பெற்றோர்கள் சிறுமிகளை தேடினர். அவர்கள் கிடைக்கவில்லை.
    • போலீசார் விசாரணை மேற்கொண்டு சிறுமிகளை தேடி வந்தனர்.

    கடலூர்:

    நெல்லிக்குப்பம் அடுத்த எழுமேடு பகுதியை சேர்ந்த மாணவி 10-ம் வகுப்பு படித்து வருகிறார். அவரது தோழி 15 வயது சிறுமி. இருவரையும் திடீரென்று காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்களது பெற்றோர்கள் சிறுமிகளை தேடினர். அவர்கள் கிடைக்கவில்லை. இது குறித்து நெல்லிக்குப்பம் போலீசில் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    அதன் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு சிறுமிகளை தேடி வந்தனர். அப்போது திருவண்ணாமலை அடுத்த சேத்துப்பட்டு பகுதியில் 2 சிறுமிகள் இருந்தது தெரிய வந்தது. பின்னர் நெல்லிக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களை பாதுகாப்பாக மீட்டு வந்தனர். வீட்டில் குடும்ப பிரச்சினை இருந்து வந்ததால் ஊரை விட்டு சென்றுவிடலாம் என்று எண்ணிக் கொண்டு 2 சிறுமிகள் சென்றதாக போலீசாருக்கு தெரியவந்தது. இது போன்ற நடவடிக்கைகளில் வருங்காலங்களில் ஈடுபடக்கூடாதென சிறுமிகளிடம் அறிவுரை கூறிய போலீசார், அவர்களது பெற்றோர்களுடன் அனுப்பி வைத்தனர்.

    • அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் சிறுமியை தேடினர். அவர் எங்கும் கிடைக்கவில்லை.
    • கடலூர் முதுநகர் போலீசில் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

    கடலூர்:

    கடலூர் முதுநகர் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி வீட்டில் இருந்து வந்தார். திடீரென்று சிறுமியை காணவில்லை. அதிர்ச்சிடைந்த அவரது உறவினர்கள் சிறுமியை தேடினர். அவர் எங்கும் கிடைக்கவில்லை. அக்கம் பக்கத்தில் விசாரித்த போது, அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் பள்ளி மாணவியை கடத்தி சென்றதாக தெரியவந்தது. இது குறித்து கடலூர் முதுநகர் போலீசில் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், சிறுமியை கடத்தி சென்ற வாலிபரை தேடி வருகின்றனர்.

    • கடலூர் மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி செயல் வீரர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது.
    • அரியலூரில் இருந்து வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு மாவட்ட எல்லையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    விருத்தாசலம்:

    கழுதூரில் ஒருங்கிணைந்த கடலூர் மாவட்ட திமுக இளைஞர் அணி செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

    கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகேயுள்ள சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கழுதூர் உள்ளது. இங்குள்ள வெங்கடேஸ்வரா கல்வியியல் கல்லூரி வளாகத்தில் கலைஞர் திடல் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த திடலில் ஒருங்கிணைந்த கடலூர் மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி செயல் வீரர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் தி.மு.க. இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்பு உரையாற்றினார்.

    இதில் கடலூர் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சருமான சி.வெ. கணேசன், கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளரும் தமிழக வேளாண்துறை அமைச்சருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் 30 ஆயிரத்திற்க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    மேலும், தி.மு.க. இளைஞரணி மாநகர, நகர, பேரூர், கிளை நிர்வாகிகள், தொண்டர்களும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு ஒருங்கிணைந்த கடலூர் மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பில் பொன்னாடை அணிவித்து வெள்ளி வாள் பரிசளிக்கப்பட்டது.

    முன்னதாக அரியலூரில் இருந்து வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு மாவட்ட எல்லையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    • கல்வி நிறுவனங்கள் என சுற்றுச்சூழல் மாறிப்போனது.
    • மின் மயானம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது .

    கடலூர்:

    குறிஞ்சிப்பாடி பேரூராட்சி அருகே பழமையான மயானம் ஒன்று உள்ளது. தொடக்கத்தில் இந்த இடம் வயல்வெளிகளுக்கு இடையே இருந்தது. நாடா வட்டத்தில் இப்பகுதியில் குடியிருப்புகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் என சுற்றுச்சூழல் மாறிப்போனது. இந்த மயானத்தால் சிறு சிறு சங்கடங்கள் இருந்து வந்தாலும் அதனைப் பொதுமக்கள் சகிப்புத்தன்மையுடன் ஏற்றுக் கொண்டனர்.

    இந்த நிலையில் இந்த மயானத்தை மின் மயானமாக மாற்ற பேரூராட்சி முடிவு செய்து அதற்கான நிதியையும் ஒதுக்கியது. இதனை அறிந்த அப்பகுதி மக்கள் இந்த மின் மயானத்தை வேறு மயானத்திற்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.அமைச்சர் கலெக்டர் உள்ளிட்டோ ருக்கு மனுவும் அனுப்பினர். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக அதே இடத்தில் மின் மயானம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது . இதனைக் கண்டித்து அப்பகுதி பெண்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குறிஞ்சிப்பாடி போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர் அதனைத் தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது.

    • ஆவணி மாதம் சோமவார பிரதோஷ சிறப்பு வழிபாடு நடந்தது.
    • பிரதோஷ வழி பாட்டை காண ஏராளமான வந்திருந்தனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி திருவதிகையில் அமைந் துள்ளது வீரட்டானேஸ்வரர் கோவில். இங்கு பிரதோஷ வழிபாடு வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. ஆவணி மாதம் சோமவார பிரதோஷ சிறப்பு வழிபாடு நடந்தது. இதனை முன்னிட்டு அபிஷேகம், ஆராதனை, விசேஷ பூஜை ஆகியவை களை தொடர்ந்து மகா தீபாராதனையும், பின்னர் நந்தி தேவரின் இரு கொம்புகளுக்கு இடையே சிவனின் நடனக்காட்சி காணும்ஐதீக நிகழ்வும் நடந்தது. மாலை 6 மணிக்கு பிரதோஷ நாதர் ரிஷப வாகனத்தில் சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளி பிரகார வலம் வரும் நிகழ்ச்சியும், அருள்பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது,

    பிரதோஷ விரதம் சிவபெருமானுக்குரிய மிக உயர்வான விரதம் என்பதால் இந்த நாளில் விரதம் இருந்து சிவபெரு மானையும், நந்தி தேவரையும் அருகம்புல் மற்றும் வில்வம் சாத்தி வழிபட்டால் அனைத்து விதமான பாவங்களும் நீங்கி சிவபதம் கிடைக்கும் என்பதால் பிரதோஷ வழி பாட்டை காண ஏராளமான வந்திருந்தனர். வேண்டுதல் நிறைவே றவும், நேர்த்திக்கடனுக் காவும், பெண்கள் விளக்கேற்றி வழிபாடு நடத்தினர். இதில் வர்த்தக சங்க தலைவர் சண்முகம், செயலாளர் வீரப்பன், பெண்கள் பள்ளி செயலாளர் மாதவன், நகைக்கடை அதிபர் சரவணன், பிரதோஷ உற்சவ தாரர் வீரமணி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    ×