என் மலர்
உள்ளூர் செய்திகள்

சிதம்பரம் அரசு பள்ளியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு சட்டங்கள் குறித்து விழிப்புணர்வு நடைபெற்றது.
சிதம்பரம் அரசு பள்ளியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு சட்டங்கள் குறித்து விழிப்புணர்வு
- போக்சோ சட்டம், மகளிர் வன் கொடுமை சட்டம், குழந்தைகள் திருமண சட்டம் ஆகிய சட்ட பிரிவுகள் மற்றும் அதன் தண்டனைகள் குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
- மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் பார்த்தீபராஜ், சித்ரா ஆகியோர் பங்கேற்று விழிப்புணர்வு உரையாற்றினர்.
கடலூர்:
சிதம்பரம் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சிதம்பரம் ரயில்வே காவல்துறை சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கான போக்சோ சட்டம், மகளிர் வன் கொடுமை சட்டம், குழந்தைகள் திருமண சட்டம் ஆகிய சட்ட பிரிவுகள் மற்றும் அதன் தண்டனைகள் குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சிதம்பரம் ரயில்வே போலீஸ் நிலையம் இன்ஸ்பெக்டர் அருண்குமார் , அரசினர் பெண்கள் மேல்நிலை பள்ளி உதவி தலைமை ஆசிரியர் இளவரசி, கடலூர் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் பார்த்தீபராஜ், சித்ரா ஆகியோர் பங்கேற்று விழிப்புணர்வு உரையாற்றினர்.
Next Story






