கடலூர் மாவட்ட மாணவர்களுக்கு தூரிகை 2023 ஓவிய போட்டி கலெக்டர் தகவல்

வள்ளலார் குருகுலம் மேல்நிலைப்பள்ளியில் தூரிகை 2023 ஓவியப்போட்டி நடத்தப்படுகிறது. ஆன்லைனில் விண்ணப்பித்து இந்தப்போட்டியில் கலந்துகொண்டு பயனடையலாம்
கடலூர் மாவட்ட மாணவர்களுக்கு தூரிகை 2023 ஓவிய போட்டி கலெக்டர் தகவல்
Published on

கடலூர்:

கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது -

கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி 32 கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. தற்போது வங்கியில் 3 வயது முதல் 18 வயது வரை உள்ள பள்ளி மாணவ மாணவிகளுக்காக 'அரும்புகள்' என்ற பெயரில் சேமிப்பு கணக்கு திட்டத்தை மேம்படுத்திட ஏதுவாக, செப்டம்பர் 9-ந் தேதி வடலூரில் உள்ள வள்ளலார் குருகுலம் மேல்நிலைப்பள்ளியில் தூரிகை 2023 ஓவியப்போட்டி நடத்தப்படுகிறது.

ஓவியப் போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் மாணவ மாணவியர், வங்கியின் விளம்பரப்பலகை, பள்ளியின் விளம்பரப்பலகை படத்துடன் வாட்ஸ்அப் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பித்து இந்தப்போட்டியில் கலந்துகொண்டு பயனடைய, அனைத்து பள்ளி மாணவ மாணவிகளுக்கும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com