என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆதிதிராவிட, பழங்குடியின மாணவர்களுக்கு தொழில் பாதை திட்டம்கடலூர் கலெக்டர் தகவல்
- ஐ.ஐ.டி மற்றும் தாட்கோ நிறுவனம் இணைந்து தொழில் பாதை திட்டத்தை செயல்படுத்தப்பட உள்ளது.
- பயிற்சியின் முடிவில் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் போதுமானது.
கடலூர்:
கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் விடுத்துள்ள செய்தி குறி ப்பில் கூறியிருப்பதாவது-
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பாக 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ ர்களுக்கு இந்திய தொழி ல்நுட்பக் கழகம்(மெட்ராஸ் ஐ.ஐ.டி) மற்றும் தாட்கோ நிறுவனம் இணைந்து தொழில் பாதை திட்டத்தை செயல்படுத்தப்பட உள்ளது. இந்திய தொழில்நுட்பக் கழகம்உலகிலேயே முதல் முறையாக இளங்கலை தரவு அறிவியல் மற்றும் மிண்ணணு அமைப்புகள் பட்டப்படிப்பு திட்டத்தை தொடங்கியுள்ளது. இதில் 12-ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பு டிப்ளோமா முடித்த மாணவர்கள் அனைவரும் விண்ணப்பித்து4 ஆண்டு பட்டப்படிப்பு படிக்கலாம். செப்டம்பர் மாதம் ஆண்டு வகுப்புகளுக்கான விண்ணப்பங்கள் இணை யதளத்தில் வரவேற்க ப்படுகிறது.இத்திட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் சேர்ந்து படிப்பதற்கு இந்திய தொழில்நுட்பக் கழகம் மூலம் நடத்தப்படும் நுழைவுத் தேர்வில் பங்கு பெறத் தேவையில்லை. அதற்கு பதிலாக 12-ம் வகுப்பு அல்லது அதற்கு மேல் இணையான படிப்பு முடித்தமாணவர்களுக்கு இந்திய தொழில்நுட்பக் கழகம் மற்றும் தாட்கோ மூலம் அளிக்கப்படும் 4 வார பயிற்சியின் முடிவில் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் போதுமானது.
மேலும் இத்திட்டத்தில் பயில அனைத்து பாடப்பிரிவு மாணவர்களும் விண்ணப்பி க்கலாம். இத்திட்டத்தின் ஒவ்வொரு நிலையின் முடிவிலும் வெளியேறும் வழிகள் உள்ளன. மற்றும் மாணவர்கள் ஒரு அடிப்படைச் சான்றிதழ், ஒன்று அல்லது இரண்டு டிப்ளமோக்கள் அல்லது பட்டப்படிப்புடன் வெளி யேறலாம். இவ்வகுப்புகள் இணையதளம் வழியாகவே நடத்தப்படும். நாடு முழுவதும் உள்ள தேர்வு மையங்களில் தேர்வுகள் நேரில் நடத்தப்படுகின்றன. மாணவர்கள் ஒரே நேரத்தில் தங்களது விருப்ப பட்டப்படிப்பினை படித்துக் கொண்டே இந்திய தொழில்நுட்பக் கழக ம்வழங்கும் பட்டப்படிப்பில் ஏதேனும் ஒன்று படிக்கலாம். தற்போது இந்தியா மற்றும் வெளிநாடுகளில் 12,500-க்கும் மேற்பட்டோர் இத்திட்டத்தில் சேர்ந்து படித்து வருகின்றனர். அடுத்த 5 ஆண்டுகளில் 11 மில்லியனுக்கும் அதிகமாக வேலைவாய்ப்புகள் இத்துறையில் உள்ளது. இத்திட்டத்தில் முறையாக 4 வருடம் படித்து முடிக்கும் மாணவர்களுக்கு இந்திய தொழில்நுட்பக் கழகம்(மெட்ராஸ் ஐ.ஐ.டி)நேரடியாக படிப்பதற்கான கேட் தேர்வு எழுதுவதற்கான தகுதியாக ஏற்றுக் கொள்ளப்படும் . இதற்கா ன தகுதிகள்12-ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பு தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவர்களாக இருக்க வேண்டும். மாண வர்கள் தங்களது 12-ம்வகுப்பு கல்வியில் மொத்த மதிப்பெ ண்ணில் 60 சதவீததிற்கு மேல் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். 10ம் வகுப்பு ஆங்கிலம் மற்றும் கணித பாடத்தில் 60 சதவீதத்திற்கு மேல் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். தாட்கோவில் பதிவு செய்தமாணவர்கள் இந்திய தொழில்நுட்பக் கழகம்(மெட்ராஸ் ஐ.ஐ.டி ), நடத்தும் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். விண்ணப்ப கட்டணம் ரூ.1500 மற்றும் தேர்வு கட்டணம் ரூ.3000 ஆகும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்திற்கு மிகாமல் இருக்கும் மாணவர்களுக்கு தாட்கோ மூலம் கல்வி உதவித் தொகை வழங்கப்படும். இந்திய தொழில்நுட்பக் கழகம்(மெட்ராஸ் ஐ.ஐ.டி ), நடத்தும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான 4 வார பயிற்சியில் கலந்து கொண்டு, அவர்கள் தேர்ச்சி பெற்றால் இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் சேர்க்கை பெறுவார்கள். இப்படிப்பிற்கான செலவீனம் தாட்கோவால் வழங்கப்படும்
இவ்வாறுஅதில் கூறப்பட்டுள்ளது .






