என் மலர்
கடலூர்
சிதம்பரம் அருகே ஏற்பட்ட வெள்ளத்தால் அரசு பள்ளிகள் கடந்த 10 நாட்களாக மூடி கிடப்பதால் மாணவர்கள் அவதியடைந்துள்ளனர்.
ஸ்ரீமுஷ்ணம்:
கர்நாடகாவில் பெய்த கனமழை காரணமாக அங்குள்ள அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்தது. பின்னர் அங்கிருந்து கீழணைக்கு வந்த காவிரி உபரிநீர் கொள்ளிடத்தில் அதிக அளவில் திறந்து விடப்பட்டது. இதனால் கொள்ளிடக்கரையோரம் உள்ள கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த திட்டு காட்டூர், அகரநல்லூர், அக்கரை ஜெயங்கொண்ட பட்டினம், பெராம்பட்டு உள்ளிட்ட 24 கிராமங்களில் வெள்ள நீர் சூழ்ந்தது.
அந்த கிராமங்களில் உள்ள பள்ளிகளுக்குள் தண்ணீர் புகுந்தது. கடும் வெள்ளப்பெருக்கால் வெள்ளம் பாதித்த கிராமங்களில் உள்ள அரசு பள்ளிகள் மூடப்பட்டன.
கீழணைக்கு வரும் நீர்வரத்து தற்போது குறைந்து வருகிறது. இதனால் கொள்ளிடத்தில் வெள்ளம் குறைய தொடங்கியுள்ளது. மேடான பகுதிகளில் உள்ள பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனால் தாழ்வான பகுதிகளில் உள்ள அகரநல்லூர், அக்கரை ஜெயங்கொண்ட பட்டினம், பெராம்பட்டு, கண்டியாமேடு, எருக்கன்காட்டு பாளையம், வெள்ளூர் உள்ளிட்ட 8 கிராமங்களில் உள்ள பள்ளிகளில் தேங்கியிருந்த தண்ணீர் இன்னும் முழுமையாக வடியவில்லை. பள்ளிகளை சுற்றிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
இதனால் அந்த 8 கிராமங்களில் உள்ள 8 அரசு பள்ளிகளும் 10 நாட்களாகியும் இதுவரை திறக்கப்படவில்லை. மாணவர்கள் அவதியடைந்துள்ளனர். எனவே பள்ளிகளை சுற்றியுள்ள தண்ணீரை வடிய வைக்க வேண்டும். பள்ளிகளை விரைவில் திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்களின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே இந்து மக்கள் கட்சி பிரமுகரின் தம்பி கொலை தொடர்பாக கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள மணப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் தேவா. இவர் இந்து மக்கள் கட்சியின் கடலூர் மாவட்ட செயலாளராக உள்ளார். இவரது தம்பி ராமன் (வயது 34), கட்டிட தொழிலாளி.
கடந்த 14-ந் தேதி ராமன் வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன்பின்பு அவர் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் ராமனை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில் பண்ருட்டி-கும்பகோணம் சாலையில் உள்ள பணிக்கன்குப்பம் முந்திரி காட்டில் உள்ள ஒரு மரத்தில் ராமன் தூக்கில் பிணமாக தொங்கினார்.
அந்த வழியாக சென்றவர்கள் இதைப்பார்த்து புதுப்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து ராமனின் அண்ணன் தேவா போலீசில் புகார் செய்தார். அதில் எனது தம்பி ராமனை யாரோ கடத்தி அடித்து கொலை செய்துவிட்டு பிணத்தை மரத்தில் தூக்கில் தொங்க விட்டுள்ளனர் என்று கூறியுள்ளார்.
புகாரின் பேரில் குற்றவாளிகளை பிடிக்க கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவின் பேரில் கடாம்புலியூர் இன்ஸ்பெக்டர் குமாரய்யா தலைமையில் தனிப்படை அமைக்கபட்டது.
தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். ராமனின் செல்போனை கைபற்றிய போலீசார் அதில் இருந்து யாருக்கு ராமன் அதிகமாக பேசியுள்ளார் என்ற தகவல்களை சேகரித்தனர்.
அப்போது பண்ருட்டி மேல்பாதி சொர்ணாவூர் பகுதியை சேர்ந்த சந்தோஷ்குமார் என்பவரின் எண்ணிற்கு ராமன் அடிக்கடி தொடர்பு கொண்டு பேசியது தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று சந்தோஷ்குமாரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை கூறினார்.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் சந்தோஷ்குமாரை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் ராமனை, சந்தோஷ்குமார் கொலை செய்தது தெரிய வந்தது. இது குறித்து போலீஸ் தரப்பில் கூறிய தகவல்கள் வருமாறு:-
சந்தோஷ்குமார் கடலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. 3-ம் ஆண்டு படித்து வருகிறார். சொர்ணாவூரில் ராமனின் அக்காள் வீடு உள்ளது. அங்கு ராமன் அடிக்கடி வருவார். அவரது அக்காள் மகளும், சந்தோஷ்குமாரும் ஒரே கல்லூரியில் படிக்கின்றனர். இதனால் அடிக்கடி ராமனின் அக்காள் வீட்டுக்கு சந்தோஷ்குமார் சென்றுள்ளார்.
அப்போது ராமனுக்கும், சந்தோஷ்குமாருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அவர்கள் இருவரும் அடிக்கடி வெளியில் சென்று ஜாலியாக சுற்றி திரிந்துள்ளனர்.
இந்த நிலையில் சந்தோஷ் குமாரும், ராமனும் ஓரின சேர்க்கை பழக்கத்துக்கு ஆளாகியுள்ளனர். இதனால் அவர்கள் இருவரும் தனிமையில் சந்தித்து ஓரின சேர்க்கையில் ஈடுபட்டு வந்தனர்.
அதன் பிறகு ராமன் செல்போன் மூலம் சந்தோஷ்குமாரை தொடர்பு கொண்டு அடிக்கடி ஓரின சேர்க்கைக்கு அழைத்துள்ளார். வரமறுத்தாலும் அவரை தொடர்ந்து ராமன் வற்புறுத்தி வந்துள்ளார். இந்த பழக்கம் வெளியில் தெரிந்து விட்டால் அவமானமாகி விடும் என்பதால் ராமனை கொலை செய்ய சந்தோஷ்குமார் திட்டமிட்டுள்ளார்.
கடந்த 14-ந் தேதி அன்று பணிக்கன்குப்பம் முந்திரி காட்டுக்கு வருமாறு சந்தோஷ்குமாரை, ராமன் அழைத்துள்ளார். உடனே சந்தோஷ்குமார் அருகில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மது வாங்கி கொண்டு அங்கு சென்றுள்ளார்.
பின்னர் அந்த மதுவில் தூக்க மாத்திரையை கலந்து ராமனுக்கு கொடுத்துள்ளார். அதை வாங்கி குடித்த அவர் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்து விட்டார்.
அதன் பின்னர் கைலியால் ராமனின் கழுத்தை இறுக்கி சந்தோஷ்குமார் கொலை செய்துள்ளார். அதைத்தொடர்ந்து ராமன் தற்கொலை செய்து கொண்டார் என்பதுபோல் இருப்பதற்காக அவரது உடலில் கயிற்றை கட்டி அங்குள்ள மரத்தில் சந்தோஷ்குமார் தொங்க விட்டுள்ளார்.
மேற்கண்ட தகவல்கள் போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து சந்தோஷ்குமாரை போலீசார் கைது செய்து பண்ருட்டி கோர்ட்டில் நீதிபதி கணேஷ் முன்னிலையில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

பண்ருட்டி அருகே கணவர் மது குடித்து வந்து தகராறு செய்ததால் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த முத்தாண்டிக்குப்பம் காலனி பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 32). தொழிலாளி.
இவரது மனைவி உஷா (28). இவர்களுக்கு திருமணமாகி 6 வருடம் ஆகிறது. 2 மகள்கள் உள்ளனர்.
பெருமாளுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. அவர் மது குடித்து விட்டு வீட்டுக்கு வருவதால் கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் சம்பவத்தன்றும் பெருமாள் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். பின்னர் அவரது மனைவி உஷாவிடம் தகராறில் ஈடுபட்டார். இதனால் மனம் உடைந்த உஷா வீட்டில் இருந்த மண்எண்ணையை தனது உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.
உடல் முழுவதும் தீ பற்றி எரிந்தது. வலி தாங்க முடியாமல் உஷா அலறி துடித்தார். அவரது சத்தம் கேட்டு பெருமாள் மற்றும் அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி சென்று தீயை அணைத்து உஷாவை மீட்டனர்.
இருப்பினும் உஷாவுக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக அவரை பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு உஷாவை அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை உஷா பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து முத்தாண்டிக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் தகாத வார்த்தைகளால் திட்டி ஏட்டுக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரி புறக்காவல் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருபவர் பரமசிவம். இவர் நேற்று வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது ஆஸ்பத்திரிக்கு மணம்தளர்ந்தபுத்தூர் பகுதியை சேர்ந்த பரதன் (வயது 28), பிரபாகரன் (25) ஆகியோர் வந்தனர்.
அவர்கள் ஆஸ்பத்திரியின் அவசர சிகிச்சை பிரிவு முன்பு நின்று கொண்டு ஆஸ்பத்திரி ஊழியர்களை தகாத வார்த்தைகளால் திட்டி கொண்டு இருந்தனர்.
அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த பரமசிவம் அங்கு சென்று அந்த 2 பேரிடமும், இந்த இடத்தில் நின்று தகாத வார்த்தைகளால் பேசாதீர்கள். உடனே இங்கிருந்து சென்று விடுங்கள் என்று கூறினார்.
ஆனால், பரதனும், பிரபாகரனும் அதனை ஏற்கவில்லை. இதனால் அவர்களுக்கும், ஏட்டு பரமசிவத்துக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியது. ஆத்திரம் அடைந்த பரதன், பிரபாகரன் ஆகிய 2 பேரும் ஏட்டு பரமசிவத்தை தகாத வார்த்தைகளால் திட்டி கொலைமிரட்டலும் விடுத்தனர்.
இது குறித்து ஏட்டு பரமசிவம் பண்ருட்டி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜவாது உசேன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பிரபாகரன், பரதன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் டெல்டா கிராமங்களில் வெள்ளம் பாதித்த மக்களுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது.
கடலூர்:
கொள்ளிடம் வெள்ளத்தால் கடலூர் மாவட்டத்தில் வள்ளம் படுகை, பழநெல்லூர், வெங்காயமேடு, அகரநல்லூர், நடுத்திட்டு, பைபூர் ஆகிய பகுதிகளில் தண்ணீர் புகுந்து மக்கள் பாதிக்கப்பட்டனர்.
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் இது குறித்து அறிந்து டெல்டா மாவட்டங்களை சேர்ந்த பொறுப்பாளர்களை வெள்ள பாதிப்பு பகுதிகளுக்கு சென்று நிவாரண பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
மக்கள் தங்குவதற்கான முகாம்கள் அமைத்தல், உணவுப்பொருட்கள், போர்வை முதலிய அத்தியாவசிய பொருட்களை வழங்குதல் போன்ற வேலைகள் நடைபெற்று வருகின்றன. அணைக்கரை பகுதியில் கொள்ளிடக்கரை ஓரத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் கரையோரப்பகுதி மக்கள் அணைக்கரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மக்கள் நீதி மய்ய பொறுப்பாளர்கள் அவர்களுக்கு உணவு, பாய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்கள்.

கீழணையில் இருந்து நீர்வரத்து அதிகரித்துள்ளதால் வீராணம் ஏரியின் நீர்மட்டம் இன்று காலை 46.40 அடியாக உயர்ந்துள்ளது. #VeeranamLake
ஸ்ரீமுஷ்ணம்:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடி ஆகும்.
இந்த ஏரியின் மூலம் கடலூர், நாகை மாவட்டங்களை சேர்ந்த 1 லட்சத்து 31 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. சென்னை மக்களின் குடிநீர் ஆதரமாகவும் வீராணம் ஏரி விளங்குகிறது.
கர்நாடகாவில் உள்ள அணைகளில் இருந்து காவிரி உபரி நீர் தமிழகத்தின் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. அந்த தண்ணீர் கல்லணை வழியாக கீழணைக்கு வந்து சேர்ந்தது. பின்னர் வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு கடந்த 27-ந் தேதி முதல் தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டது.
நேற்று வீராணம் ஏரிக்கு 1,524 கனஅடி தண்ணீர் வந்தது. இன்று 1,545 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இது நேற்றைய அளவைவிட 21 கனஅடி அதிகமாகும். ஏரியின் நீர்மட்டம் நேற்று 45.80 அடியாக இருந்தது. இன்று ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் ஏரியின் நீர்மட்டம் சற்று உயர்ந்து 46.10 அடியாக உள்ளது.
வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு வினாடிக்கு நேற்று 74 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இன்றும் அதே அளவு 74 கனஅடி தண்ணீர் தொடர்ந்து அனுப்பப்பட்டது.
கால்வாய்கள் தூர்வாரப்படாமல் இருந்ததால் வீராணம் ஏரியில் இருந்து விவசாய பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடாமல் இருந்தது.
இதையடுத்து தண்ணீரை சேமிக்கும் வகையில் வீராணம் ஏரியில் இருந்து வி.என்.எஸ். மதகு வழியாக உபரிநீர் சேத்தியாதோப்பு அணைக்கட்டுக்கு நேற்று 626 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டது. இன்று அந்த அணைகட்டுக்கு அதே அளவு 626 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டது.
பின்னர் அந்த தண்ணீர் வெள்ளைராஜன் வாய்க்கால் வழியாக வாலாஜா ஏரிக்கும், அங்கிருந்து பெருமாள் ஏரிக்கும் திறந்து விடப்பட்டது.
கால்வாய்கள் தூர்வாரும் பணி நடந்து வருகிறது. அது முடிவடையும் நிலையில் உள்ளதால் வருகிற 26-ந் தேதி வீராணம் ஏரியில் இருந்து வடவாறு, வடக்குராஜன், தெற்குராஜன் மதகுகள் வழியாக விவசாயத்துக்கு தண்ணீர் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். #VeeranamLake

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வருகிற 26-ந் தேதி வீராணம் ஏரியில் இருந்து வடவாறு, வடக்கு ராஜன், தெற்குராஜன் மதகுகள் வழியாக விவசாயத்துக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. #VeeranamLake
ஸ்ரீமுஷ்ணம்:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடி ஆகும். இந்த ஏரியானது விவசாயிகளின் உயிர் நாடியாகவும், சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது.
தற்போது கர்நாடகாவில் உள்ள அணைகளில் இருந்து காவிரி உபரி நீர் தமிழகத்தின் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. அந்த தண்ணீர் கல்லணை வழியாக கீழணைக்கு வந்து சேர்ந்தது. பின்னர் வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு கடந்த 27-ந் தேதி முதல் தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டது.
நேற்று வீராணம் ஏரிக்கு 1524 கனஅடி தண்ணீர் வந்தது. இன்றும் அதே அளவு 1524 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஏரியின் நீர்மட்டம் நேற்று 45.50 அடியாக இருந்தது. இன்று ஏரியின் நீர்மட்டம் சற்று உயர்ந்து 45.80 அடியாக உள்ளது.
வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு வினாடிக்கு நேற்று 74 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இன்றும் அதே அளவு 74 கனஅடி தண்ணீர் தொடர்ந்து அனுப்பப்பட்டது.
கால்வாய்கள் தூர்வாரப்படாமல் இருந்ததால் வீராணம் ஏரியில் இருந்து விவசாய பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடாமல் இருந்தது. தண்ணீரைசேமிக்கும் வகையில் வீராணம் ஏரியில் இருந்து வி.என்.எஸ். மதகு வழியாக உபரிநீர் சேத்தியாதோப்பு அணைக் கட்டுக்கு நேற்று 1100 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டது. இன்று அந்த அணைகட்டுக்கு 626 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டது.
பின்னர் அந்த தண்ணீர் வெள்ளைராஜன் வாய்க்கால் வழியாக வாலாஜா ஏரிக்கும், அங்கிருந்து பெருமாள் ஏரிக்கும் திறந்து விடப்பட்டது. இதையடுத்து கால்வாய்கள் தூர்வாரும்பணி நடைபெற்று வந்தது. இந்த பணி முடிந்த உடன் விவசாயத்துக்கு தண்ணீர் திறக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் வீராணம் ஏரி நிரம்பி உள்ளதால் தண்ணீர் திறக்கவேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வருகிற 26-ந் தேதி வீராணம் ஏரியில் இருந்து வடவாறு, வடக்கு ராஜன், தெற்குராஜன் மதகுகள் வழியாக விவசாயத்துக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. இதன் மூலம் கடலூர், நாகை மாவட்டங்களை சேர்ந்த 1 லட்சத்து 31 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. #VeeranamLake

செஞ்சி அருகே டிராக்டர் மோதி வாலிபர் ஒருவர் பலியானார். இந்த நிலையில் அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
செஞ்சி:
செஞ்சி வட்டம் வீரணாமூர் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் மகன் அறிவழகன்(வயது 25). இவர் நேற்று முன்தினம் இரவு, தனது மோட்டார் சைக்கிளில் நாட்டார் மங்கலம் நோக்கி சென்றார். அப்போது வீரணாமூர் என்கிற இடத்தில் சென்ற போது, எதிரே வந்த டிராக்டர் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அறிவழகன் சம்பவ இடத்திலேயே பலியானார்.
விபத்து பற்றி தகவல் அறிந்த செஞ்சி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, அறிவழகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில், நேற்று காலை செஞ்சி அரசு மருத்துவமனைக்கு வந்த அறிவழகனின் உறவினர்கள், விபத்தை ஏற்படுத்திய டிராக்டர் டிரைவரை உடனடியாக கைது செய்ய வேண்டும், அப்போது தான் அறிவழகனின் உடலை வாங்கி செல்வோம் என்று கூறி மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த செஞ்சி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து, அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். பின்னர் அறிவழகனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கிடையே விபத்தை ஏற்படுத்திய டிராக்டர் டிரைவர் அவியூரை சேர்ந்த புஷ்பராஜ் (23) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

வக்கீல் மீது தாக்குதல் நடத்தியது குறித்த வழக்கில் மற்றொரு வக்கீலுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடலூர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
கடலூர்:
குறிஞ்சிப்பாடி அருகே உள்ள தம்பிப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சரவணன்(வயது 27) வக்கீல். இவர் 20-5-2004 அன்று விபத்தில் படுகாயம் அடைந்து கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தோப்புக்கொல்லையை சேர்ந்தவர்களை பார்த்து விட்டு வெளியே வந்தார்.
அப்போது அவரை கடலூர் வக்கீல் சந்திரசேகரன் வழிமறித்து திட்டி மிரட்டியதாகவும், இதை தடுக்க முயன்ற தோப்புக்கொல்லையை சேர்ந்த ஜெயராமன் என்பவரின் கையில் பேனா கத்தியால் குத்தியதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து வக்கீல் சரவணன் கொடுத்த புகாரின் பேரில் கடலூர் புதுநகர் போலீசார் வக்கீல் சந்திரசேகரன் மீது வழக்குபதிவு செய்து, அவர் மீது கடலூர் 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு விசாரணை முடிவடைந்ததையடுத்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் குற்றம்சாட்டப்பட்ட வக்கீல் சந்திரசேகரனுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.1,000 அபராதம் விதித்து நீதிபதி அன்வர் சதாத் தீர்ப்பளித்தார். #tamilnews

கடலூர் மாவட்டத்தில் கொள்ளிடம் கரையோரம் உள்ள கிராமங்களில் வெள்ளம் வடியாததால் வீடு திரும்ப முடியாமல் 8 ஆயிரம் பேர் தவித்து வருகிறார்கள்.
சிதம்பரம்:
கர்நாடகா மாநிலத்தில் பெய்த பலத்த மழையால் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால் அங்கிருந்து உபரிநீர் 2 லட்சம் கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது.
இந்த தண்ணீர் தஞ்சை மாவட்டத்தில் உள்ள கீழணைக்கு வந்தடைந்தது. கீழணை நிரம்பியதால் அங்கிருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு கொள்ளிடம் ஆற்றில் அதிகநீர் திறந்துவிடப்பட்டது. இதனால் கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது.
கடலூர் மாவட்டத்தில் கொள்ளிடம் கரையோர பகுதியான சிதம்பரம் அருகே உள்ள திட்டுக்காட்டூர், பெராம்பட்டு, அக்கரை ஜெயங்கொண்டபட்டினம் உள்பட 7 கிராமங்களில் முதலில் தண்ணீர் சூழ்ந்தது. இதனால் அந்த கிராமங்களில் வசித்த பொதுமக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடத்துக்கு சென்றனர்.
இந்த நிலையில் கீழணையில் இருந்து வினாடிக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதனால் சிதம்பரம் அருகே உள்ள பழைய கொள்ளிடம் ஆறு, புதிய கொள்ளிடம் ஆறுகளின் பல இடங்களில் கரைகள் உடைந்து கிராமங்களில் தண்ணீர் புகுந்தது. எருக்கன் காட்டுபடுகை, அகரநல்லூர், பழைய நல்லூர், வேளக்குடி, வீரன்கோவில் திட்டு, பெரிய காரைமேடு, இளந்திரை, அம்பிகாபுரம், மடத்தான் தோப்பு, கீழகுண்டலபாடி உள்பட 24 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது.
தெருக்களில் இடுப்பளவு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த கிராமங்களில் 8 ஆயிரம் வீடுகள் சேதம் அடைந்துள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டு அங்கு அமைக்கப்பட்டுள்ள புயல் பாதுகாப்பு மையங்கள் மற்றும் கோவில்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். சுமார் 5 ஆயிரம் பேர் முகாம்களில் தங்கியுள்ளனர்.
இதையடுத்து கீழ் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரின் அளவு நேற்று முன்தினம் முதல் குறைக்கப்பட்டது. வினாடிக்கு 1 லட்சம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. தண்ணீர் திறப்பு குறைவாக இருந்தாலும் கிராமங்களில் சுற்றி தண்ணீர் தேங்கி குளம்போல் காணப்படுகிறது.
வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்கி 7 நாட்கள் ஆகியும் இன்னும் வெள்ளம் வடியவில்லை. வீடுகளை சுற்றி தேங்கியுள்ள தண்ணீர் வெளியே செல்ல வழி ஏதும் இல்லாததால் தண்ணீர் அப்படியே நிற்கிறது.
திட்டுக்காட்டூர், பெரம்பாட்டூர், அக்கரை ஜெயங்கொண்டபட்டினம், வேளக்குடி போன்ற கிராமங்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. பல கிராமங்கள் தண்ணீர் சூழ்ந்து காணப்படுவதால் தீவுபோல் காட்சியளிக்கிறது.
வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்கி நிற்பதால் முகாமில் தங்கி உள்ள பொதுமக்கள் வீட்டுக்குள் செல்ல முடியவில்லை. தெருக்களில் தண்ணீர் ஆறுபோல் ஓடுகிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 8 ஆயிரம் பேர் தவித்து வருகிறார்கள். சிலர் வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் மொட்டைமாடியில் தஞ்சடைந்து கடந்த 3 நாட்களாக சமையல் செய்து அங்கேயே தங்கி உள்ளனர். பலர் போதுமான குடிநீரும், உணவும் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறார்கள்.
வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்கி உள்ளதால் அதில் கொசுக்கள் மற்றும் விஷ பூச்சிகள் நடமாடுகின்றன. இதனால் பொது மக்கள் பலர் தங்கள் வீட்டுக்கு செல்ல அச்சமடைந்துள்ளனர்.
பல கிராமங்களில் வீடுகளை சுற்றி தண்ணீர் நிற்பதால் சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பள்ளி, கல்லூரிக்கு செல்ல முடியாமல் தவித்து வருகிறார்கள்.
வேளக்குடி, பெரும்பட்டு, கீழகுண்டலபாடி, திட்டுக்காட்டூர் போன்ற பகுதிகளில் உள்ள விளை நிலங்களில் நெல், கரும்பு, மரவள்ளிகிழங்கு மற்றும் காய்கறிகள் பயிரிடப்பட்டிருந்தன. இவைகளில் தண்ணீர் தேங்கி உள்ளதால் பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிதம்பரம் அருகே உள்ள பல்வேறு அமைப்பினர் உணவு பொருட்கள் வழங்கி வருகின்றனர்.
முகாமில் தங்கவைக்கப்பட்டிருக்கும் பொதுமக்களுக்கு உணவு மற்றும் குடிநீர் போன்றவைகள் படகுகள் மூலம் கொண்டு செல்லப் படுகிறது. அதுபோல் கால்நடைகளுக்கு தேவையான வைக்கோல் உள்ளிட்ட தீவினங்களும் படகுகள் மூலம் கொண்டு செல்லப்பட்டன.

திட்டக்குடியில் வைத்திய நாதசாமி கோவிலுக்கு சொந்தமான திருக்குளத்தை சுற்றி கட்டபட்ட 14 ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.
பெண்ணாடம்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் வைத்திய நாதசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான திருக்குளத்தை சுற்றி 30 ஆக்கிரமிப்பு வீடுகள் கட்டப்பட்டிருந்தன.
இதையடுத்து ஆக்கிரமித்து வீடு கட்டிருந்த பொது மக்களிடம் வீடுகளை காலி செய்ய வேண்டும் என்று இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நோட்டீசு வழங்கினார்கள். ஆனால் ஆக்கிரமிப்பு வீடுகளை விட்டு பொதுமக்கள் காலி செய்யாமல் இருந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் திட்டக்குடி தாசில்தார் சத்தியன் தலைமையிலான அதிகாரிகள் வைத்தியநாதசாமி கோவில் குளம் பகுதிக்கு வந்தனர்.
பின்னர் போலீசார் அங்கு வரவழைக்கப்பட்டனர். அதனை தொடர்ந்து 4 பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டது.
இதையடுத்து வீடுகளில் இருந்த பொருட்களை பொதுமக்கள் வெளியே தூக்கி வந்தனர். அதன் பின்னர் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.
இந்த நிலையில் இன்று 3-வது நாளாக ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடர்ந்தது இதுவரை அந்த பகுதியில் ஆக்கிரமித்து கட்டபட்டிருந்த 14 வீடுகள் இடித்து தரைமட்டமாக்கபட்டுள்ளன. ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்க அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. #tamilnews

கடலூர் மாவட்டத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.2 லட்சம் மோசடி செய்த இந்து மக்கள் கட்சி நிர்வாகி கைது செய்யப்பட்டார்.
கடலூர்:
கடலூர் கூத்தப்பாக்கம் வங்கி ஊழியர் தெருவை சேர்ந்தவர் சாமிநாதன் (வயது 47). அ.தி.மு.க. முன்னாள் நகர இளைஞரணி செயலாளர். இவர் கடலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் மனு கொடுத்தார்.
கடலூர் மஞ்சக்குப்பம் டெலிபோன் காலனியை சேர்ந்த இந்து மக்கள் கட்சி இளைஞர் அணி நிர்வாகி பரணிதரன் என்பவர் என்னுடைய மகன் அருண் பிரசாத்துக்கு விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம் கடலூர் பணிமனையில் சிறப்பு அதிகாரி வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.2 லட்சம் வாங்கினார்.
ஆனால் அவர் வேலை வாங்கி தரவில்லை. இதனால் சந்தேகமடைந்த நான் அவரிடம் பணத்தை திருப்பி கேட்டேன். ஆனால் அவர் பணத்தை திருப்பி தராமல் காலம் தாழ்த்தி வந்தார். தொடர்ந்து நான் பணத்தை கேட்டு வற்புறுத்தியபோது அவர் என்னை மிரட்டினார். அவர் என்னிடம் ரூ.2 லட்சத்தை மோசடி செய்தார். அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் அந்த மனுவில் கூறியிருந்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தாரகேஸ்வரி, சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு பரணிதரனை கைது செய்தனர்.