என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடலூரில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.2 லட்சம் மோசடி - இந்து மக்கள் கட்சி நிர்வாகி கைது
    X

    கடலூரில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.2 லட்சம் மோசடி - இந்து மக்கள் கட்சி நிர்வாகி கைது

    கடலூர் மாவட்டத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.2 லட்சம் மோசடி செய்த இந்து மக்கள் கட்சி நிர்வாகி கைது செய்யப்பட்டார்.
    கடலூர்:

    கடலூர் கூத்தப்பாக்கம் வங்கி ஊழியர் தெருவை சேர்ந்தவர் சாமிநாதன் (வயது 47). அ.தி.மு.க. முன்னாள் நகர இளைஞரணி செயலாளர். இவர் கடலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் மனு கொடுத்தார்.

    கடலூர் மஞ்சக்குப்பம் டெலிபோன் காலனியை சேர்ந்த இந்து மக்கள் கட்சி இளைஞர் அணி நிர்வாகி பரணிதரன் என்பவர் என்னுடைய மகன் அருண் பிரசாத்துக்கு விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம் கடலூர் பணிமனையில் சிறப்பு அதிகாரி வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.2 லட்சம் வாங்கினார்.

    ஆனால் அவர் வேலை வாங்கி தரவில்லை. இதனால் சந்தேகமடைந்த நான் அவரிடம் பணத்தை திருப்பி கேட்டேன். ஆனால் அவர் பணத்தை திருப்பி தராமல் காலம் தாழ்த்தி வந்தார். தொடர்ந்து நான் பணத்தை கேட்டு வற்புறுத்தியபோது அவர் என்னை மிரட்டினார். அவர் என்னிடம் ரூ.2 லட்சத்தை மோசடி செய்தார். அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் அந்த மனுவில் கூறியிருந்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தாரகேஸ்வரி, சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு பரணிதரனை கைது செய்தனர்.
    Next Story
    ×