search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Occupied housing"

    திட்டக்குடியில் வைத்திய நாதசாமி கோவிலுக்கு சொந்தமான திருக்குளத்தை சுற்றி கட்டபட்ட 14 ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.
    பெண்ணாடம்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் வைத்திய நாதசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான திருக்குளத்தை சுற்றி 30 ஆக்கிரமிப்பு வீடுகள் கட்டப்பட்டிருந்தன.

    இதையடுத்து ஆக்கிரமித்து வீடு கட்டிருந்த பொது மக்களிடம் வீடுகளை காலி செய்ய வேண்டும் என்று இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நோட்டீசு வழங்கினார்கள். ஆனால் ஆக்கிரமிப்பு வீடுகளை விட்டு பொதுமக்கள் காலி செய்யாமல் இருந்தனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் திட்டக்குடி தாசில்தார் சத்தியன் தலைமையிலான அதிகாரிகள் வைத்தியநாதசாமி கோவில் குளம் பகுதிக்கு வந்தனர்.

    பின்னர் போலீசார் அங்கு வரவழைக்கப்பட்டனர். அதனை தொடர்ந்து 4 பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டது.

    இதையடுத்து வீடுகளில் இருந்த பொருட்களை பொதுமக்கள் வெளியே தூக்கி வந்தனர். அதன் பின்னர் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.

    இந்த நிலையில் இன்று 3-வது நாளாக ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடர்ந்தது இதுவரை அந்த பகுதியில் ஆக்கிரமித்து கட்டபட்டிருந்த 14 வீடுகள் இடித்து தரைமட்டமாக்கபட்டுள்ளன. ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்க அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. #tamilnews
    கும்பகோணம் அருகே ஆக்கிரமிப்பு வீட்டுக்கு சீல் வைத்ததால் முன்னாள் கோவில் ஊழியர் மனைவி மற்றும் தாய் வி‌ஷம் குடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    கும்பகோணம்:

    கும்பகோணம் அடுத்த பந்தநல்லூரில் உள்ள பசுபதீஸ்வரரர் கோவிலுக்கு சொந்தமான இடங்கள் அங்குள்ள கோட்டை பகுதியில் அமைந்துள்ளது. இந்த இடங்களில் சிலர் ஆக்கிரமித்து வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர்.

    இந்த நிலையில் இந்த ஆக்கிரமிப்பு இடங்களில் குடியிருப்பவர்களை அகற்றி வீடுகளுக்கு சீல் வைக்க இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் இளையராஜா தலைமையில் திருவிடைமருதூர் தாசில்தார் ராஜேஸ்வரி, துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரன் உள்ளிட்ட போலீசார் மற்றும் அதிகாரிகள் இன்று மதியம் அங்கு திடீர் என்று சென்றனர். அங்கு ஆக்கிரமித்து குடியிருந்து வரும் ராஜா என்பவர் வீட்டுக்கு சென்று பூட்டி சீல் வைக்க முயன்றனர்.

    அப்போது வீட்டில் இருந்த ராஜா அதிகாரிகளிடம் வீட்டை காலி செய்ய கால அவகாசம் கேட்டுள்ளார். ஆனால் அதிகாரிகள் பிடிவாதமாக மறுத்து அவரது வீட்டை பலகைகளால் அடைத்து சீல் வைத்து விட்டு சென்றனர்.

    இதனால் மனமுடைந்த ராஜாவின் மனைவி அபினேஸ்வரி (வயது35) மற்றும் ராஜாவின் தாய் சந்திரா(80) ஆகிய இருவரும் வி‌ஷம் குடித்து மயங்கி விழுந்தனர். உடனடியாக இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கும்ப கோணம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    பசுபதீஸ்வரர் கோவிலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த கீழமணக்குடி, ரங்கராஜபுரம் ஆகிய கோவில்களின் ஐம்பொன் சிலைகள் மாயமான வழக்கில் கடந்தாண்டு கைது செய்யப்பட்ட 10 பேரில் பந்தநல்லூர் கோவில் முன்னாள் தலைமை எழுத்தர் ராஜாவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ளார்.

    இதுகுறித்து ராஜா கூறுகையில், வருகிற 11-ந்தேதி சிலை மாயமானது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வருகிறது. எனவே என்னை மிரட்டும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×