என் மலர்
கடலூர்
பண்ருட்டி அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் பெண்ணின் தந்தை புகார் கொடுத்தார்.
பண்ருட்டி:
பண்ருட்டி அடுத்த அரசடிக்குப்பம் காலனியை சேர்ந்தவர் ஆரோக்கிய பிரபாகரன்(வயது 30). இவருக்கும் அழகப்ப சமுத்திரத்தை சேர்ந்த அந்தோணிசாமி மகள் கரோலின் சிறுமலர்(24) என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இந்த நிலையில் ஆரோக்கிய பிரபாகரன் அடிக்கடி மதுகுடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்றும் கணவன்-மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த கரோலின் சிறுமலர் வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டார். மயங்கிய நிலையில் கிடந்த இவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கரோலின் சிறுமலர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து கரோலின் சிறுமலர் தந்தை அந்தோணிசாமி காடாம்புலியூர் போலீசில் புகார் கொடுத்தார். அதில் தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூரில் பிஎஸ்என்எல் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக 35 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடலூர்:
பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் ஆட்குறைப்பு என்ற பெயரில் 50 சதவீத ஒப்பந்த ஊழியர்கள் ஊதியமின்றி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தொழிலாளர் நல அலுவலரின் வழிகாட்டல், நீதிமன்ற உத்தரவை மதிக்காத நிர்வாகத்தின் இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும். சம்பள பாக்கி மற்றும் போனஸ் பெற்றுத்தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் கடந்த சில வாரங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 2-ந் தேதி (அதாவது நேற்று) முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் அறிவித்து இருந்தனர்.
அதன்படி நேற்று காலை கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகத்தை ஊழியர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்து வந்த கடலூர் புதுநகர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் அவர்கள் போராட்டத்தை கைவிட மறுத்து, பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் கடலூர் மாவட்டத்தில் சுமார் 400 ஒப்பந்த ஊழியர்கள் பணியாற்றி வந்துள்ள நிலையில் தற்போது 50 சதவீத ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என கோஷம் எழுப்பினர். இதில் ஊழியர்கள் கே.டி.சம்பந்தம், குழந்தை நாதன், விஜய்ஆனந்த், குருபிரசாத், விடுதலைசிறுத்தைகள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் திருமார்பன், சி.ஐ.டி.யு. சுப்புராயன், என்.இ.டி.இ.சி.எல். ஆனந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 35 பேரை போலீசார் கைது செய்து, அங்குள்ள ஒரு திருமண மண்டபத்தில் அடைத்தனர். பின்னர் கைதான அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் கடலூரில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்.
ஸ்ரீமுஷ்ணம்:
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் ஸ்ரீமுஷ்ணத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கொரோனா பாதிப்பால் அமைச்சர் துரைக்கண்ணு, காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார், தி.மு.க. எம்.எல்.ஏ. அன்பழகன் உள்பட பலரும் இறந்து உள்ளனர். இந்நோயால் தமிழகம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. தொடக்கத்தில் தமிழக முதல்-அமைச்சர் 3 நாட்களில் சரியாகிவிடும் என்றார். ஆனால் இதுவரை கொரோனா வைரசை கட்டுப்படுத்த முடியாமல் தொடர்கதையாகி வருவது கவலை அளிக்கிறது. ஊசி, மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில், தடுப்பூசிகள் இலவசமாக போடப்படும் என்று பிரதமரும், முதல்-அமைச்சரும் கூறுவது கேலிக்கூத்தானது. விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு எதிரான சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றி இருப்பது கடும் கண்டனத்துக்குரியது. அதை திரும்ப பெற வேண்டும்.
மனுதர்மத்தில் பெண்களையும், சூத்திரர்களையும் குறித்து தரம் தாழ்ந்த கருத்துகள் சொல்லப்பட்டுள்ளன. அதனை ஆதாரங்களோடு நிரூபிக்கவும், அது பற்றி பொது மேடைகளில் விவாதிக்கவும் கம்யூனிஸ்டு கட்சி தயாராக இருக்கிறது. ஆனால் மனுதர்மம் பற்றி பேசக் கூடாது என்று போலீசார் மூலம் அச்சுறுத்தி, திருமாவளவன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம். மனுநீதி நூலை தடை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் கடலூர் மாவட்ட பொருளாளர் செல்வராஜ் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
நெல்லிக்குப்பம் அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதிய விபத்தில் லேப் டெக்னீசியன் பலியானார்.
நெல்லிக்குப்பம்:
நெல்லிக்குப்பம் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் அமர்நாத் பெயிண்டர். இவருடைய மனைவி நித்யா (வயது 32). இவர் கடலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் லேப் டெக்னீசியனாக பணி புரிந்து வந்தார். இந்த நிலையில் நேற்று தனது உறவினரான கடலூர் சுத்துக்குளத்தை சேர்ந்த விஷ்ணுப்பிரியன்(25) என்பவருடன் ஒரு மோட்டார் சைக்கிளில் நெல்லிக்குப்பத்தில் இருந்து கடலூர் நோக்கி சென்று கொண்டு இருந்தார். நெல்லிக்குப்பம் அடுத்த கீழ்பட்டாம்பாக்கம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது கடலூரில் இருந்து பண்ருட்டி நோக்கி சென்ற தனியார் பஸ் ஒன்று இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நித்யா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தார்.
பலத்த காயமடைந்த விஷ்ணுப்பிரியனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே விபத்து பற்றி அறிந்த நெல்லிக்குப்பம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்து குறித்து விசாரணை நடத்தினர். பின்னர் நித்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உளுந்தூர்பேட்டை அருகே பழைய பிளாஸ்டிக் பொருட்கள் சேமிப்பு குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
உளுந்தூர்பேட்டை:
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள காட்டு நெமிலி கிராமத்தில் அண்ணாமலை (வயது 48) என்பவருக்கு சொந்தமான பழைய பிளாஸ்டிக் பொருட்கள் சேமிப்பு குடோன் இயங்கி வருகிறது. இந்த குடோனில் நேற்று இரவு 10 மணி அளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. முதலாவதாக குடோன் முன்பு உளுந்தூர்பேட்டை-விருத்தாசலம் சாலையோரம் கொட்டி வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பொருட்கள் தீப்பிடித்து எரிந்தது. பின்னர் தீ மளமளவென எரிந்து குடோன் முழுவதும் பரவியது. இதனால் தீப்பிழம்புடன் கரும்புகை வானுயர எழும்பியது.
இதுபற்றிய தகவல் அறிந்து உளுந்தூர்பேட்டை மற்றும் மங்கலம்பேட்டை தீயணைப்பு நிலையங்களில் இருந்து வீரர்கள் தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பல மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மயிலம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி வாலிபர் உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய போலீஸ்காரருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.
மயிலம்:
விழுப்புரம் மாவட்டம் மயிலம் அடுத்த பெரமண்டூர் கிராமத்தை சேர்ந்தவர் அய்யனார். இவரது மகன் தர்மன் (வயது 25). இவர் பெரமண்டூரில் இருந்து மோட்டார் சைக்கிளில் தீவனூருக்கு சென்று கொண்டிருந்தார். கோபாலபுரம் பகுதியில் வந்து கொண்டிருந்த போது, கூட்டேரிப்பட்டில் இருந்து தீவனூர் நோக்கி சென்ற கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த தர்மன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் காரின் அடியில் சிக்கி சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வரை இழுத்து சென்றது. இந்த சம்பவத்தை பார்த்த பொதுமக்கள் காரை துரத்தி சென்று தீவனூர் அருகே மடக்கி பிடித்தனர். அப்போது காரில் இருந்து 4 பேர் இறங்கி தப்பி ஓடிவிட்டனர். தொடர்ந்து காரை வேகமாக ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற டிரைவரை பிடித்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.
இதற்கிடையே சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மயிலம் போலீசார், டிரைவரை மீட்டு போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். விபத்தை ஏற்படுத்திய காரில், போலீஸ் என்று ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்தது. மேலும் காரை ஓட்டி வந்தவர் குமரவேல் என்பதும், இவர் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது. இதற்கிடையே விபத்தில் இறந்த தர்மனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஊதியம் கேட்ட தன் மீது பெருந்துறை போலீசில் பொய் புகார் கூறியதால் உயிருக்கு பயந்து தனியார் நிறுவன பஸ்சுடன் விருத்தாசலம் நீதிமன்றத்திற்கு டிரைவர் வந்தார்.
விருத்தாசலம்:
விருத்தாசலம் அருகே உள்ள டி.வி.புத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பரசுராமன்(வயது 50). டிரைவர். இவர் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள ஒரு தனியார் கார்மென்ட்ஸ் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். அங்கு அவருக்கு நிறுவனத்துக்கு சொந்தமான பஸ்சை ஓட்டுவதற்கான வேலை வழங்கப்பட்டது. அங்கேயே தங்கி பஸ் ஓட்டி வந்த பரசுராமனுக்கு, அந்த நிறுவனம் கடந்த 4 மாதமாக ஊதியம் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தனியார் கார்மென்ட்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான பஸ்சை அங்கிருந்து பரசுராமன் ஓட்டிக்கொண்டு விருத்தாசலத்துக்கு வந்தார். பின்னர் என்னசெய்வதென்று தெரியாமல் திகைத்த அவர், நேற்று காலையில் நீதிமன்ற வளாகத்தில் அந்த பஸ்சை நிறுத்தினார். ஆனால் நேற்று நீதிமன்றம் விடுமுறை என்பதால் அங்கு யாரும் இல்லை. அந்த சமயத்தில் அங்கு வந்த வக்கீல் அருள்குமாரிடம் பரசுராமன் மனு கொடுத்தார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:- நான் கடந்த 7 மாதங்களாக பெருந்துறையில் உள்ள தனியார் கார்மென்ட்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறேன். அந்த நிறுவனம் எனக்கு 4 மாதம் சம்பளம் தரவில்லை. எனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு, தான் பணிபுரிந்த நிறுவனத்தில் சம்பள பாக்கியை கேட்டபோது, அந்த நிறுவன ஊழியர்கள் 4 பேர், என்னை திட்டி, தாக்கி உணவு கொடுக்காமல் கட்டிப்போட்டு ஒரு அறையில் சிறை வைத்தனர். அப்போது நான் அவர்களிடம் வேலை வேண்டாம், சொந்த ஊருக்கு செல்கிறேன். எனவே நான், பணியில் சேரும்போது நிறுவனத்திடம் கொடுத்த அசல் ஓட்டுனர் உரிமத்தை கொடுங்கள் என்று கேட்டேன். அதற்கு அவர்கள் என்னை விடுவித்து, மீண்டும் பணிக்கு அனுப்பினர்.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அந்த நிறுவனத்துக்கு சொந்தமான பஸ்சில் பணியில் இருந்தேன். அப்போது பெருந்துறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் என்னை செல்போனில் தொடர்பு கொண்டு, நீங்கள் தனியார் நிறுவன பஸ்சை கடத்திச் சென்றதாக புகார் வந்துள்ளது என்றும், பஸ்சை ஒப்படைத்துவிட்டு உங்களுக்கு சொந்தமான அசல் ஓட்டுனர் உரிமம் மற்றும் சம்பளபாக்கியை வாங்கி செல்லுமாறு கூறினார். இதனால் அதிர்ச்சியடைந்த நான் அங்கு சென்றால் பொய் புகாரின் பேரில் என்னை கைது செய்வார்கள் என்று நினைத்தும், உயிருக்கு பயந்தும் அந்த பஸ்சை ஓட்டிக்கொண்டு வந்து விருத்தாசலம் நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தி விட்டேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து வக்கீல் அருள்குமார், பரசுராமனை விருத்தாசலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணனிடம் ஒப்படைத்தார். இது தொடர்பாக பரசுராமனிடம் விருத்தாசலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கொரோனா 2-வது அலைக்கு தற்போது வாய்ப்பு இல்லை. வணிக நிறுவனங்களில் கூட்டம் கூட அனுமதித்தால் சீல் வைக்கப்படும் என்று கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடலூர்:
கடலூர் மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 3 லட்சத்து 10 ஆயிரத்து 590 பேருக்கு உமிழ்நீர் எடுத்து பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 23 ஆயிரத்து 162 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதில் தற்போது தொற்று உறுதியாகி 281 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். இருப்பினும் நாம் நோய் தொற்றை கட்டுப்படுத்த கட்டுப்பாட்டு பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறோம்.
வீடு, வீடாக சென்று சளி, காய்ச்சல் இருக்கிறதா? என்று சோதனை செய்து, அவர்களுக்கு தொற்று கண்டறியப்பட்டால் தீவிர சிகிச்சை அளித்து வருகிறோம். தொற்று அதிகம் உள்ள பகுதிகளை கண்காணித்து, அங்கு சென்று சிறப்பு காய்ச்சல் முகாம் நடத்தி, பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து அவர்களுக்கும் சிகிச்சை அளிக்கிறோம்.
இது வரை 30 ஆயிரம் காய்ச்சல் முகாம் நடத்தி, 12 லட்சம் பேரை சோதனை செய்து உள்ளோம். தமிழகத்தில் கடலூர் மாவட்டத்தில் அதிக காய்ச்சல் முகாம் நடத்தி உள்ளோம். கடந்த ஜூன் மாதம் 500 பேருக்கு பரிசோதனை என ஆரம்பித்ததில் 40, 50 பேருக்கு பாதிப்பு இருந்தது. ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் 1700 முதல் 3 ஆயிரத்து 500 பேர் வரை பரிசோதனை செய்ததில், 500 பேர் முதல் 250 பேர் வரை பாதிப்பு இருந்தது.
தற்போதும் அதே எண்ணிக்கையில் பரிசோதனை செய்து வருகிறோம். ஆனால் 50-க்கும் குறைவான நபர்களுக்கு தான் பாதிப்பு உள்ளது. . கடலூர் மாவட்டம் எடுத்து வரும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக கொரோனா 2-வது அலைக்கு தற்போது வாய்ப்பு இல்லை.
தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் வேளையில் வணிக நிறுவனங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். முக கவசம், சானிடைசர் மூலம் கைகளை சுத்தம் செய்ய வேண்டும். குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நபர்களை மட்டும் வணிக நிறுவனங்களுக்குள் அனுமதித்தால் நல்லது. இதை மீறி வணிக நிறுவனங்களில் கூட்டம் கூடினால், சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருத்தல், முக கவசம் அணியாமல் செல்லுதல் போன்ற உத்தரவை மீறி செயல்பட்டால் சம்பந்தப்பட்ட வணிக நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்படும். ஆகவே அரசு உத்தரவை வணிக நிறுவனங்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தெரிவித்தார்.
புவனகிரி அருகே இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறு தொடர்பாக 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிதம்பரம்:
புவனகிரி அருகே நந்தமேடு கிராமம் குளத்து மேட்டு தெருவை சேர்ந்தவர். ராஜேந்திரன். இவருடைய மனைவி வேம்பு (வயது45). இவரும் இவருடைய அக்கா அன்புக்கரசி என்பவரும் ஆடுகள் வளர்த்து வருகின்றனர். அதே கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் (37), இவர் வாத்துகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று அன்புக்கரசி நந்தமேடு ஏரி கரை பகுதியில் ஆடுகளை மேய்த்து கொண்டிருந்தார். அப்போது அங்கு சரவணன் தனது வாத்துகளுக்கு வைத்திருந்த அரிசியை ஆடுகளை தின்றதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக சரவணனுக்கும், அன்புக்கரசிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் திட்டி தாக்கிக்கொண்டனர். இது குறித்து வேம்பு அளித்த புகாரின் பேரில் மருதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணன், சரண்ராஜ் (20), விநாயகமூர்த்தி (30), சதீஷ்குமார் (26) ஆகிய 4 பேரையும், சரவணன் அளித்த புகாரின் பேரில் விஜய் (22), ராஜேஷ் (27), சஞ்சீவி (29) ஆகியோரையும் கைது செய்தனர்.
பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர்.
கடலூர்:
சேத்தியாத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் திவ்யபாரதி கலைமணி (வயது 21). இவர் நேற்று தன்னுடைய காதல் கணவரான காட்டுமன்னார்கோவில் மேலநெடும்பூர் கிராமத்தை சேர்ந்த பரணி (27) என்பவருடன் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தார். பின்னர் அவர் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ்வை சந்தித்து மனு அளித்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-
நானும், பரணியும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தோம். இருவரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால் என்னுடைய வீட்டில் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் நாங்கள் வீட்டை விட்டு வெளியேறி ஆலப்பாக்கம் பகுதியில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டோம். இதனால் எங்கள் உயிருக்கு ஆபத்து உள்ளது. ஆகவே உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

விருத்தாசலத்தில் ஆய்வு செய்ய வந்த கலெக்டரின் காரை மறித்து பொதுமக்கள் முற்றுகையிட முயன்றனர். அப்போது அவர்கள், வீட்டுமனையாக மாறிய சுடுகாட்டை மீட்டு தரக்கோரி மனு கொடுத்தனர்.
விருத்தாசலம்:
கடலூர் மாவட்டத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் விருத்தாசலம் சேமிப்பு கிடங்கில் பாதுகாப்பாக பூட்டி வைக்கப்பட்டு, காவல்துறை மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் தலைமை தேர்தல் ஆணையரின் ஆணைக்கிணங்க மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள சேமிப்பு கிடங்கின் பாதுகாப்பு மற்றும் உறுதித்தன்மை குறித்து அங்கீகரிக்கப்பட்ட மத்திய, மாநில அரசியல் கட்சியின் பிரதிநிதிகளின் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அதன்படி மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சந்திரசேகர் சாகமூரி நேற்று அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள விருத்தாசலம் சேமிப்பு கிடங்கை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தற்போது இக்கிடங்கில் வாக்குப்பதிவு எந்திரம்-1276, கட்டுப்பாட்டு எந்திரம்-84 மற்றும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் எந்திரம்-55 ம் இருப்பு உள்ளது. ஆய்வின் போது விருத்தாசலம் சப்-கலெக்டர் பிரவின்குமார், தாசில்தார் சிவக்குமார், தாசில்தார் (தேர்தல்) பாலமுருகன் மற்றும் அங்கீரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
முன்னதாக கலெக்டர் வருவது பற்றி தகவல் அறிந்ததும் விருத்தாசலம் கஸ்பா தெருவை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் அங்கு திரண்டு வந்தனர். அப்போது கலெக்டரின் காரை வழிமறித்து அவர்கள் முற்றுகையிட முயன்றனர்.
அந்த சமயத்தில் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது பொதுமக்கள், தாங்கள் கலெக்டரை சந்தித்து மனு கொடுக்க வந்ததாக தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து போலீசார், சிலரை மட்டும் மனு கொடுக்க அனுமதி அளித்தனர். பின்னர் சிலர் மட்டும் கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:- கஸ்பா தெருவில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். யாரேனும் இறந்தால், அவர்களை புதைப்பதற்காக பயன்படுத்தும் சுடுகாட்டை சில தனி நபர்கள் ஆக்கிரமித்து வீட்டு மனையாக விற்பனை செய்து வருகிறார்கள்.
இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை கூறியும் நடவடிக்கை இல்லை. எனவே ஆக்கிரமிப்பை அகற்றி, வீட்டுமனையாக மாறிய சுடுகாட்டை மீட்டு தருமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது. மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

சேலத்தில் இருந்து விருத்தாசலத்திற்கு சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.12 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் டிரைவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
சிறுபாக்கம்:
வேப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவு சிறுபாக்கம் சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சேலம் மார்க்கத்தில் இருந்து விருத்தாசலம் நோக்கி சரக்கு வாகனம் வேகமாக வந்தது. அந்த வாகனத்தை நிறுத்துமாறு போலீசார் சைகை காண்பித்தனர். போலீசாரை கண்டதும் டிரைவர், சரக்கு வாகனத்தை வேகமாக ஓட்டிச்சென்றார்.
உடனே போலீசார் தங்களது வாகனங்களில் துரத்திச்சென்று, 5 கிலோ மீட்டர் தொலையில் அந்த சரக்கு வாகனத்தை மடக்கினர். உடனே டிரைவரும், அவருடன் வந்தவரும் சரக்கு வாகனத்தை நிறுத்தி விட்டு தப்பி ஓடினர். இதையடுத்து போலீசார் விரட்டிச்சென்று 2 பேரையும் பிடித்தனர்.
இதையடுத்து போலீசார், அந்த சரக்கு வாகனத்தை சோதனை செய்தனர். அதில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த அட்டைபெட்டிகளில் ரூ.12 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் இருந்தது. இதனை தொடர்ந்து அந்த சரக்கு வாகனத்தையும், புகையிலை பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
பிடிபட்ட 2 பேரிடம் நடத்திய விசாரணையில், சேலம் மாவட்டம் சங்ககிரி அடுத்த மகுடஞ்சாவடியை சேர்ந்த டிரைவர் தனபால்(வயது 28), உதவியாளர் ஆனந்த்(28) ஆகியோர் என்பதும், சேலத்தில் இருந்து புகையிலை பொருட்களை விருத்தாசலத்திற்கு கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் சரக்கு வாகன உரிமையாளரான மகுடஞ்சாவடியை சேர்ந்த மதன்(38) என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.