search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம்"

    • நியமனம் செய்யப்படு வோருக்கு மாதம் ரூ.20,000/- தொகுப்பு ஊதியம் மட்டும் வழங்கப்படும்.
    • விண்ணப்பத்தாரர் எவ்விதமான குற்ற வழக்குகளிலும் ஈடுபட்டிருக்கக் கூடாது.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் பணியமைப்பு, குற்ற வழக்குகள் தொடர்பான வழக்குகள் மற்றும் மேல்முறையீடுகளில் வரைவு வாதுரை, எதிர்வாதுரை தயார் செய்வதற்கு உதவியாக ஒரு சட்ட அலுவலர் பணியிடம் ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.

    எனவே அந்த பதவிக்கு கீழ்கண்ட விதிகளின் தகுதி உள்ளவர்கள் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். நியமனம் செய்யப்படு வோருக்கு மாதம் ரூ.20,000/- தொகுப்பு ஊதியம் மட்டும் வழங்கப்படும் பிற படிகள் எதுவும் வழங்கப்பட மாட்டாது.

    அலுவலராக பணி நியமனம் செய்யப்படுபவர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலை கழகத்தில் பி.எல். சட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். அல்லது 5 வருட ஒருங்கிணைந்த சட்டப் படிப்பு தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பத்தாரர் தனது சட்டப் படிப்பினை தமிழ்நாடு பார் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். மேலும் 5 வருடம் உயர்நீதிமன்றம் அல்லது மாவட்ட நீதிமன்றங்களில் பணியமைப்பு, குற்றம் தொடர்பான வழக்குகளில் வாதாடியிருக்க வேண்டும். மேலும் விண்ணப்பத்தாரர் எவ்விதமான குற்ற வழக்கு களிலும் ஈடுபட்டிருக்கக் கூடாது. சட்ட அலுவலர் பணியிடம் ஒரு வருட ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படும்.

    எனவே தகுதியான நபர்க ளிடமிருந்து விண்ணப்ப மனு மற்றும் அவர்களின் சுய விபரத்துடன் தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வருகிற 4.12.2023-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    ×