
சேத்தியாத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் திவ்யபாரதி கலைமணி (வயது 21). இவர் நேற்று தன்னுடைய காதல் கணவரான காட்டுமன்னார்கோவில் மேலநெடும்பூர் கிராமத்தை சேர்ந்த பரணி (27) என்பவருடன் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தார். பின்னர் அவர் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ்வை சந்தித்து மனு அளித்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-
நானும், பரணியும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தோம். இருவரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால் என்னுடைய வீட்டில் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் நாங்கள் வீட்டை விட்டு வெளியேறி ஆலப்பாக்கம் பகுதியில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டோம். இதனால் எங்கள் உயிருக்கு ஆபத்து உள்ளது. ஆகவே உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.