என் மலர்tooltip icon

    கடலூர்

    கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் டிரைவருக்கு வேலை வாங்கி தருவதாக கூறி போலி பணி ஆணை தயாரித்து கொடுத்து மோசடியில் ஈடுபட்ட பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை பிரிவில் தற்காலிக ஊழியராக வேலை செய்து வருபவர் வரக்கால்பட்டை சேர்ந்த அருள் மகன் பிரபு (வயது 30). இதே போல் கலெக்டர் அலுவலகத்துக்கு வரும் பொதுமக்களுக்கு மனு எழுதி கொடுத்து வருபவர் நாச்சியார்பேட்டையை சேர்ந்த மணி மனைவி லட்சுமி(46).

    இந்த நிலையில் மாற்றுத்திறனாளி லட்சுமி, பிரபு உடன் பண்ருட்டியை சேர்ந்த மாயகிருஷ்ணன் மகன் மாயமணி (34) என்பவருக்கு பழக்கம் ஏற்பட்டது. அப்போது பிரபுவும், லட்சுமியும் தாங்கள் பலருக்கு அரசு வேலை வாங்கி கொடுத்துள்ளோம், உங்களுக்கும் வேலை வாங்கி தரவேண்டுமா? என மாயமணியிடம் கேட்டுள்ளனர்.

    இதை நம்பிய மாயமணி, தனக்கு அரசு அலுவலகங்களில் ஏதாவது ஒரு வேலை வாங்கி கொடுக்கும்படி, அவர்களிடம் கூறியுள்ளார். அதற்கு அவர்கள், வேலை வாங்கி கொடுக்க வேண்டுமானால் தங்களுக்கு ரூ.3 லட்சம் தரவேண்டும் என்றனர். ஆனால் பணம் இல்லாத மாயமணி, வீட்டில் இருந்த நகைகளை எடுத்து, லட்சுமியிடம் கொடுத்து அதனை ரூ.3 லட்சத்துக்கு அடகு வைத்துக்கொள்ளும்படி கூறினார். நகைகளை பெற்றுக்கொண்ட லட்சுமி, அதனை அடகு வைத்து பணத்தை பெற்றுக்கொண்டார்.

    இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு லட்சுமியும், பிரபுவும் மாயமணியிடம் உங்களுக்கு கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் டிரைவர் வேலை கிடைத்துள்ளது என்று கூறி அதற்கான ஆணையை கொடுத்தனர்.

    அந்த ஆணையை பெற்றுக்கொண்ட மாயமணி, கலெக்டர் அலுவலகம் சென்று அங்கிருந்த அதிகாரியிடம் ஆணையை கொடுத்தார். ஆணையை பெற்ற அதிகாரி, அது போலியானது என அறிந்து, உடனே மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் குற்றப்பிரிவு போலீசார் விரைந்து வந்து, மாயமணியிடம் விசாரணை நடத்தினர். அப்போது தான், மாயமணிக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3 லட்சம் பெற்றுக்கொண்டு, லட்சுமியும், பிரபுவும் போலி முத்திரைகளை பயன்படுத்தி வேலைக்கான ஆணையை தயார் செய்தது தெரியவந்தது.

    தொடர்ந்து இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து லட்சுமி, பிரபு ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து நகை மற்றும் ரூ.1¼ லட்சம், போலி முத்திரைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
    துறையூர் அருகே தனியார் கல்லூரி விடுதியில் உதவி பேராசிரியை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    தா.பேட்டை:

    கடலூர் மாவட்டம், சிதம்பரம் தாலுகா தெற்கு தில்லைநாயகபுரம் பகுதியை சேர்ந்தவர் செல்வமணி. இவருடைய மகள் சவுமியா (வயது 29). இவர் திருச்சி மாவட்டம், துறையூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி விடுதியில் தங்கி, கல்லூரியில் உதவி பேராசிரியையாக பணியாற்றி வந்தார்.

    கடந்த ஆண்டு இவருக்கு பெற்றோர் திருமண ஏற்பாடு செய்தனர். இதனால் இவர் தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு சொந்த ஊருக்கு சென்று விட்டார். ஆனால் அவருக்கு திருமணம் நடைபெற வில்லை. இதனால் கடந்த 2-ந்தேதி சவுமியா மீண்டும் அதே கல்லூரியில் உதவி பேராசிரியையாக பணிக்கு சேர்ந்தார்.

    கல்லூரி விடுதியில் தங்கியிருந்த சவுமியா நேற்று முன்தினம் இரவு தன்னுடன் பணியாற்றும் ஊழியர்களுடன் சகஜமாக பேசிவிட்டு தூங்க சென்றார். இந்த நிலையில் நேற்று காலை தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். உடன் பணிபுரிந்தவர்கள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    பின்னர், கல்லூரி நிர்வாகத்துக்கும், ஜெம்புநாதபுரம் போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.

    இதையடுத்து முசிறி போலீஸ் துணை சூப்பிரண்டு பிரம்மானந்தம், தா.பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்று காரணம் தெரியவில்லை.

    இதைத்தொடர்ந்து சவுமியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கண்ணனூர் வடக்குவெளி கிராம நிர்வாக அதிகாரி சிவலிங்கம் கொடுத்த புகாரின் பேரில் ஜெம்புநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, உதவி பேராசிரியை சவுமியா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    விருத்தாசலம் சிறை கைதி உடல்நலக்குறைவால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே உள்ள வடக்குத்து பகுதியை சேர்ந்தவர் செல்வமுருகன் (39). இவரை திருட்டு வழக்கு தொடர்பாக நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் கடந்த 30-ந் தேதி கைது செய்தனர்.

    அவர் விருத்தாசலம் கிளை சிறையில் அடைக்கப்பட்டார். கைதி செல்வமுருகனுக்கு கடந்த 2-ந் தேதி வலிப்பு ஏற்பட்டுள்ளது. அவரை சிறை காவலர்கள் விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை முடிந்து சிறைக்கு திரும்பினார்.

    இந்த நிலையில் நேற்று இரவு செல்வமுருகனுக்கு மீண்டும் வலிப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர் விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி இறந்தார்.

    இது குறித்து செல்வமுருகன் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தனர். இது தொடர்பாக விருத்தாசலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    உடல் நலக்குறைவால் இறந்த கைதி செல்வமுருகனுக்கு பிரேமா என்ற மனைவியும், ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர்.
    சிதம்பரத்தில் தனியார் பால் நிறுவன மேலாளர் வீட்டில் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    அண்ணாமலை நகர்:

    சிதம்பரம் மெஜஸ்டிக் சிட்டி நகரை சேர்ந்தவர் கார்த்தி (வயது 28). இவர் சிதம்பரத்தில் தனியார் பால் நிறுவன மேலாளராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கார்த்தி, கோவைக்கு மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து அவர், கடந்த 28-ந்தேதி தனது வீட்டை பூட்டிவிட்டு கோவை சென்றுவிட்டார். இந்த நிலையில் நேற்று காலை கார்த்தி வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதைபார்த்த அப்பகுதியை சேர்ந்த வாட்ச்மேன் கார்த்திக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர், பதறியடித்துக்கொண்டு நேற்று மாலை வீட்டுக்கு வந்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 1½ பவுன் நகைகள், ரூ.40 ஆயிரம் மதிப்பிலான வெள்ளி பொருட்கள், ரூ.7 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை காணவில்லை. அதனை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது.

    பின்னர் இதுபற்றி கார்த்தி அண்ணாமலை நகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் தேவநாதன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் லட்சுமி ராமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் நள்ளிரவில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த நகை-பணத்தை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது.

    மேலும் கடலூரில் இருந்து மோப்ப நாய் அர்ஜூன் வரவழைக்கப்பட்டது. அது, சம்பவம் நடந்த வீட்டில் இருந்து நந்தனார் பள்ளி அருகே உள்ள பஸ் நிறுத்தம் வரை ஓடிச்சென்று நின்றது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, தடயங்களை சேகரித்து சென்றனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு நகை-பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
    சிதம்பரம் அருகே பெண்ணை மானபங்கப்படுத்தியதாக அண்ணன் தம்பிகள் 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிதம்பரம்:

    சிதம்பரம் அடுத்த புதுச்சத்திரம் அருகே உள்ள குமரன் மேடு அண்ணன் கோவில் தெருவை சேர்ந்தவர் மாயவேல் மனைவி ராதா(வயது 35). மீன் வியாபாரி. சம்பவத்தன்று இவர் ராதா குமரன் மேடு பகுதியில் மீன் விற்பனை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த ரவி மகன்கள் பிடல் காஸ்ட்ரோ(24), கன்சிலோ(22), காரல் மார்க்ஸ்(21), ஆகிய 3 பேரும் ராதாவிடம் மீன் வாங்கியபோது திடீரென ராதாவிற்கும், அவர்களுக்குமிடையே தகராறு ஏற்பட்டது. 

    இதில் ஆத்திரமடைந்த பிடல் காஸ்ட்ரோ உள்ளிட்ட 3 பேரும் சேர்ந்து ராதாவை ஆபாசமாக திட்டி தாக்கி, மானபங்கப்படுத்தியதாக தெரிகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிடல் காஸ்ட்ரோ உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சம்பளம் வழங்கக்கோரி விருத்தாசலம் ஒன்றிய அலுவலகம் முன்பு தொழிலாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    விருத்தாசலம்:

    விருத்தாசலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட புதுக்கூரைப்பேட்டை ஊராட்சியில், தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் மூலம் குளம் தூர்வாருதல், வாய்க்கால் சீரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் அவ்வாறு நடைபெற்ற பணியில் வேலைபார்த்த தொழிலாளர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளாக சம்பளம் வழங்கப்படவில்லை என தெரிகிறது. கொரோனா ஊரடங்கு மற்றும் தற்போது பண்டிகை காலங்கள் நெருங்கி வருவதால் தொழிலாளர்கள் வருமானம் இன்றி அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து அவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த தொழிலாளர்கள் நேற்று விருத்தாசலம் ஒன்றிய அலுவலகம் முன்பு திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தங்களுக்கு சம்பளம் வழங்கக்கோரி கோஷம் எழுப்பினர். இதுபற்றி தகவல் அறிந்த விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதுகுறித்து அதிகாரிகளிடம் பேசி விரைவில் சம்பளம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதையேற்று அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    கடலூரில் கஞ்சா விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கடலூர்:

    கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார் நேற்று பழைய மணிக்கூண்டு, ரெயில்வே மேம்பாலம் ஆகிய இடங்களில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். 

    அப்போது அங்கு மார்க்கெட் காலனியை சேர்ந்த காட்டுராஜா மகன் ராஜமுத்து (வயது 25), ராமு மகன் பிரசாந்த் (24) ஆகிய 2 பேரும் கஞ்சா வைத்து விற்பனை செய்ததாக தெரிகிறது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து தலா 10 கிராம் கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    சிதம்பரம் அருகே மீன் வாங்கியபோது ஏற்பட்ட தகராறில் பெண்ணை மானபங்கம் செய்த அண்ணன்-தம்பிகள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    சிதம்பரம்:

    சிதம்பரம் அடுத்த புதுச்சத்திரம் அருகே உள்ள குமரன் மேடு அண்ணன் கோவில் தெருவை சேர்ந்தவர் மாயவேல் மனைவி ராதா(வயது 35). மீன் வியாபாரி. சம்பவத்தன்று இவர் ராதா குமரன் மேடு பகுதியில் மீன் விற்பனை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த ரவி மகன்கள் பிடல் காஸ்ட்ரோ(24), கன்சிலோ(22), காரல் மார்க்ஸ்(21), ஆகிய 3 பேரும் ராதாவிடம் மீன் வாங்கியபோது திடீரென ராதாவிற்கும், அவர்களுக்குமிடையே தகராறு ஏற்பட்டது. 

    இதில் ஆத்திரமடைந்த பிடல் காஸ்ட்ரோ உள்ளிட்ட 3 பேரும் சேர்ந்து ராதாவை ஆபாசமாக திட்டி தாக்கி, மானபங்கப்படுத்தியதாக தெரிகிறது. 
    இது குறித்த புகாரின் பேரில் புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிடல் காஸ்ட்ரோ உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிதம்பரத்தில் தனியார் பால் நிறுவன மேலாளர் வீட்டில் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    அண்ணாமலை நகர்:

    சிதம்பரம் மெஜஸ்டிக் சிட்டி நகரை சேர்ந்தவர் கார்த்தி (வயது 28). இவர் சிதம்பரத்தில் தனியார் பால் நிறுவன மேலாளராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கார்த்தி, கோவைக்கு மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து அவர், கடந்த 28-ந்தேதி தனது வீட்டை பூட்டிவிட்டு கோவை சென்றுவிட்டார். இந்த நிலையில் நேற்று காலை கார்த்தி வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதைபார்த்த அப்பகுதியை சேர்ந்த வாட்ச்மேன் கார்த்திக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர், பதறியடித்துக்கொண்டு நேற்று மாலை வீட்டுக்கு வந்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 1½ பவுன் நகைகள், ரூ.40 ஆயிரம் மதிப்பிலான வெள்ளி பொருட்கள், ரூ.7 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை காணவில்லை. அதனை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது.

    பின்னர் இதுபற்றி கார்த்தி அண்ணாமலை நகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் தேவநாதன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் லட்சுமி ராமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் நள்ளிரவில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த நகை-பணத்தை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது.

    மேலும் கடலூரில் இருந்து மோப்ப நாய் அர்ஜூன் வரவழைக்கப்பட்டது. அது, சம்பவம் நடந்த வீட்டில் இருந்து நந்தனார் பள்ளி அருகே உள்ள பஸ் நிறுத்தம் வரை ஓடிச்சென்று நின்றது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, தடயங்களை சேகரித்து சென்றனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு நகை-பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
    நெல்லிக்குப்பத்தில் செல்போன் டவர் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரபரப்பு ஏற்பட்டது.
    நெல்லிக்குப்பம்:

    நெல்லிக்குப்பம் மோரை மேட்டுத்தெருவில் உள்ள ஒரு வீட்டில் தனியார் செல்போன் நிறுவனம் டவர் அமைக்க முடிவு செய்தது. அதற்கான ஏற்பாடுகளையும் அந்நிறுவனம் செய்தது. அதன்படி அந்த நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் நேற்று செல்போன் டவர் அமைப்பதற்காக அங்கு வந்தனர்.

    இது பற்றி அறிந்ததும் அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு வந்து, செல்போன் டவர் அமைக்க கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அந்த பணியையும் தடுத்து நிறுத்தினர். உடனே ஊழியர்கள், இந்த இடத்தில் தான் செல்போன் டவர் அமைக்க உள்ளோம். இதற்காக நாங்கள் நீதிமன்றத்தில் உத்தரவு பெற்று உள்ளோம் என்றனர். அதற்கு பொதுமக்கள், கடலூர் கலெக்டர் அலுவலகம், நெல்லிக்குப்பம் நகராட்சி, மின்சார துறை அலுவலகத்தில் முறைப்படி அனுமதி பெற்று உள்ளீர்களா?, அவ்வாறு அனுமதி பெற்றிருந்தால் அந்த ஆணையை காண்பிக்க வேண்டும் என்றனர்.

    ஆனால் ஊழியர்களோ அதற்கான ஆணையை காண்பிக்காமல், இங்கேதான் டவர் அமைப்போம் என்று கூறினர். இதனால் பொதுமக்களுக்கும், ஊழியர்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் இது தொடர்பாக நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்திலும் பொதுமக்கள் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஊழியர்கள், டவர் அமைக்காமல் அங்கிருந்து சென்று விட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே திருமணமான 2 மாதத்தில் பெண் அதிகாரி தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக கணவர் மற்றும் மாமியாரை போலீசார் கைது செய்தனர்.
    கடலூர்:

    கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள சின்னதானங்குப்பத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் சுசிதா கிருபாலினி (வயது 25). இவர் கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள கூட்டுறவு வீட்டு வசதி சங்க துணைப்பதிவாளர் அலுவலகத்தில் முதுநிலை ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். இவருக்கும், கடலூரை அடுத்த எம்.புதூரை சேர்ந்த சிவநாதன் மகன் சந்தோஷ்குமார்(28) என்பவருக்கும் கடந்த 30.8.2020 அன்று திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது பெண்ணின் பெற்றோர் ஒரு கார், 45½ பவுன் நகைகள் மற்றும் சீர்வரிசை பொருட்களை சந்தோஷ்குமாருக்கு கொடுத்ததாக கூறப்படுகிறது.

    கடந்த சில நாட்களாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. மேலும் சந்தோஷ்குமார், அவரது தாய் இந்திரா(50) மற்றும் குடும்பத்தினர் சுசிதா கிருபாலினியிடம், பெற்றோர் வீட்டில் இருந்து கூடுதல் வரதட்சணை வாங்கி வரும்படி கேட்டு அவரை கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று காலை சந்தோஷ்குமாரின் குடும்பத்தினர், ஆறுமுகத்தை தொடர்பு கொண்டு சுசிதா கிருபாலினி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் தெரிவித்தனர்.

    இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த ஆறுமுகம் மற்றும் அவரது குடும்பத்தினர் பதறியடித்துக் கொண்டு சந்தோஷ்குமாரின் வீட்டுக்கு வந்து, அங்கு இறந்து கிடந்த சுசிதா கிருபாலினியின் உடலை பார்த்து கதறி அழுதனர். இது பற்றி அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, சுசிதா கிருபாலினியின் தற்கொலைக்கு காரணமான சந்தோஷ்குமார், இந்திரா ஆகியோரை கைது செய்தனர்.
    சென்னை மற்றும் தென்மாவட்டங்களுக்கு கடலூர் வழியாக கூடுதல் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    கடலூர்:

    கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் 25-ந் தேதி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு, வருகிற 30-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவால் பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் ரெயில், பஸ் உள்ளிட்ட வாகனங்கள் இயக்கப்படவில்லை. இந்த நிலையில் தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு தற்போது பொது போக்குவரத்து சேவை தொடங்கியுள்ளது. இருப்பினும் ரெயில் சேவையை பொறுத்தவரை பயணிகள் ரெயில் முற்றிலும் இயக்கப்படவில்லை. மேலும் சுமார் 13 கொரோனா கால சிறப்பு ரெயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி சென்னையில் இருந்து கோவை, மதுரை, திருச்சி, செங்கோட்டை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, காரைக்குடி உள்ளிட்ட வழித்தடங்களில் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. முன்பதிவு செய்த பயணிகள் மட்டுமே இந்த ரெயில்களில் பயணிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.

    திருச்சியில் இருந்து கடலூர் வழியாக சென்னைக்கு சோழன் எக்ஸ்பிரசும், ராமேசுவரத்தில் இருந்து புவனேஸ்வருக்கு வாராந்திர சிறப்பு ரெயிலும் மட்டுமே இயக்கப்படுகிறது. ஆனால் இதுவரை தென்மாவட்டங்களுக்கு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்படவில்லை. சென்னையில் இருந்து திருச்செந்தூருக்கு தினசரி இயக்கப்பட்ட செந்தூர் எக்ஸ்பிரசும், புதுச்சேரியில் இருந்து விழுப்புரம், கடலூர் வழியாக கன்னியாகுமரிக்கு இயக்கப்பட்ட வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயிலும் இயக்கப்படவில்லை. இதனால் கடலூர் மாவட்ட மக்கள் தென்மாவட்டங்களுக்கு செல்ல வேண்டுமானால் நீண்ட தூரத்தில் உள்ள விழுப்புரம் மாவட்ட ரெயில் நிலையத்துக்கும், விருத்தாசலம் ரெயில் நிலையத்துக்கும் செல்ல வேண்டி உள்ளது. கொரோனா காலத்தில் பொதுமக்கள் நீண்ட தூரம் பயணம் செய்து, பலதரப்பட்ட மக்களை கடந்து சென்று ரெயில் ஏறும் போது தொற்று பரவ அதிக வாய்ப்புள்ளது.

    எனவே கடலூர் மாவட்ட மக்களின் நலன்கருதி கன்னியாகுமரி, திருச்செந்தூர் உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கும், வேளாங்கண்ணிக்கும், சென்னைக்கும் கடலூர் வழியாக கூடுதல் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்க ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம், கூடுதல் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கும்படி ரெயில்வே நிர்வாகத்தை வலியுறுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    ×