search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புகையிலை பொருட்கள் கடத்தல்"

    • பஸ் ஸ்டாண்ட் பகுதியில் ரோந்து சென்றனர்.
    • ஆசாமி போலீசை கண்டவுடன் தப்பி ஓடிவிட்டான்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் திருப்பதி மற்றும் போலீசார் புது பஸ் ஸ்டாண்ட் பகுதியில் ரோந்து சென்றனர்.

    அப்போது ஒசூரிலிருந்து பழனி செல்லும் பேருந்தில் 67 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதை கடத்தி வந்த ஆசாமி போலீசை கண்டவுடன் தப்பி ஓடிவிட்டான்.

    அந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் தப்பிய ஆசாமியை தேடி வருகின்றனர். கைப்பற்றப்பட்ட புகையிலை பொருட்களின் மதிப்பு ரூ.54,000 என்று கூறப்படுகிறது.

    • திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி போலீசார் காரமடை பகுதி யில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர்.
    • அவ்வழியே வந்த வாகனத்தில் புகையிலைப் பொருட்கள் 210 கிலோ இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் வெள்ளை யப்பன் தலைமையிலான போலீசார் காரமடை பகுதி யில் வாகன தணிக்கை யில் ஈடுபட்டுக் கொண்டு இருந்த னர்.

    அப்போது அந்த வழியாக நம்பர் பிளேட் இல்லாமல் அடுத்தடுத்து வந்த ஒரு கார் மற்றும் மோட்டார் சைக்கி ளை கண்டு அதிர்ச்சியடைந்த னர். அதனை நிறுத்த முயன்ற போது அவர்கள் மின்னல் வேகத்தில் சென்ற னர்.

    இருந்தபோதும் போலீ சார் அந்த வாகனங்களை துரத்திச் சென்று மடக்கினர். அந்த வாகனங்களில் தடைசெய்யப்பட்ட புகை யிலைப் பொருட்கள் 210 கிலோ இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

    போலீசார் விசாரணை யில் இதனை கடத்திய தாடிக்கொம்பு அருகே உள்ள சுக்காம்பட்டியைச் சேர்ந்த சூரியபிரகாஷ் (வயது 24). உலகம்பட்டியைச் சேர்ந்த சேசுராஜ் (62), என்.பஞ்சம்பட்டியைச் சேர்ந்த ஆறுமுகம் (39), வெயி லடிச்சான்பட்டியைச் சேர்ந்த நல்லபாண்டி (25) என தெரிய வந்தது.

    அவர்கள் 4 பேரையும் கைது செய்த போலீசார் புகையிலைப் பொருட்கள் மற்றும் நம்பர் பிளேட் இல்லாத கார் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

    ×