என் மலர்tooltip icon

    கடலூர்

    • பண்ருட்டி அருகே சிறுவத்தூர் இருளர் குடியிருப்பை சேர்ந்தவர் முருகன்.
    • கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.

    பண்ருட்டி:

    பண்ருட்டி அருகே சிறுவத்தூர் இருளர் குடியிருப்பை சேர்ந்தவர் முருகன். செங்கல் சூளையில் கல் அறுக்கும் தொழிலாளி. இவரது மகன் அர்ஜுன். அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான்.

    குடிபழக்கத்திற்கு அடிமையான முருகன், கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து கொண்டு மனைவியிடம் மது குடிப்பதற்கு பணம் கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்து வந்தார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.

    நேற்று இரவு முருகன் மதுகுடிக்க பணம் கேட்டு மீண்டும் தகராறு செய்தார். இதனால் மனைவியுடன் தகராறு முற்றவே ஆத்திரமடைந்த முருகன் வீட்டைவிட்டு வெளி சென்றார்.

    நள்ளிரவு குடிபோதையில் வீட்டிற்குவந்த முருகன் மகன் என்று தெரியாமல் மனைவி என்று நினைத்துக் கொண்டு அங்கு தூங்கிக் கொண்டிருந்த அவரது மகன்அர்ஜுன் தலையில் குழவி கல்லை தூக்கிபோட்டார். இதனால் பலத்த காயமடைந்த அர்ஜுன் பரிதாபமாக துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் இறந்தார்.

    இது பற்றிய தகவல் அறிந்ததும்புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சீனிவாசன், செல்வம் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சிறுவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    • பண்ருட்டி அருகே மர்ம நபர்கள் அரசு பள்ளி பூட்டுகளில் தாரை ஊற்றி சேதப்படுத்தியுள்ளனர்.
    • பள்ளிக்கு வந்த மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே பூங்குணத்தில் அரசு துவக்க பள்ளி உள்ளது. இங்கு 400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில்பள்ளி விடுமுறை தினமானநேற்று அப்பகுதியை சேர்ந்தசிலர் உள்ளே புகுந்து அங்குள்ள வகுப்பறை கட்டிடங்களுக்கு போடப்பட்டு இருந்து பூட்டுகளில் தாரைஊற்றி பூட்டை சேதப்படுத்தி உள்ளனர். இன்று காலை பள்ளிக்கு வந்த மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் பெற்றோர்கள்அதிர்ச்சி அடைந்தனர். இது பற்றி கல்வி குழு தலைவர் திரு நாயனார்,பஞ்சாயத்து தலைவர் காயத்ரி வெங்கடேசன் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தனர்.பஞ்சாயத்து தலைவர் முன்னிலையில் தார் ஊற்றப்பட்ட பூட்டுகளுக்கு தீ வைத்து கூட்டில் உள்ள தாரை உருக செய்து பின்னர் பள்ளியை திறந்தனர். இதனால் ஒரு மணி நேரத்துக்கு மேலாக மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் வெளியில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது பள்ளிகளில்சமூக விரோத செயலில் ஈடுபடும் கும்பலைதடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • திட்டக்குடி அருகே ரூ. 15 லட்சம் செலவில் புதிய ரேசன் கடை அமைச்சர் கணேசன் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
    • ரூ. 15 லட்சம் செலவில் புதிய ரேசன் கடை கட்ட அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    திட்டக்குடி:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே இறையூர் கிராமத்தில் உள்ள காலனி மக்கள் அரிசி கோதுமை பருப்பு உள்ளிட்ட பொருட்கள் வாங்க ரேசன் கடைக்கு சென்று வருவதற்கு சுமார் 4 மணி நேரத்திற்கு மேல் ஆகிறது. இதனால் நாங்கள் வேறு எந்த வேலைக்கும் செல்ல முடிவதில்லை எனவே எங்கள் பகுதியில் புதிய ரேசன் கடை வேண்டி அமைச்சரிடம் மனு அளித்தனர். இதைத் தொடர்ந்து இறையூர் காலனி பகுதியில் சுமார் ரூ. 15 லட்சம் செலவில் புதிய ரேசன் கடை கட்ட அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ. கணேசன் புதிய ரேசன் கடை கட்ட அடிக்கல் நாட்டினார். மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசும்போது விரைவில் கட்டிடம் கட்டப்பட்டு புதிய பகுதி நேர ரேசன் கடை விரைவில் திறக்கப்படும் என தெரிவித்தார்.

    • கடலூரில் பா.ஜ.க.வினர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    கடலூர்:

    கடலூர் மஞ்சகுப்பம் தலைமை தபால் நிலையம் அருகே பாஜக எஸ்.சி, எஸ்.டி பிரிவு மாநில பொதுச் செயலாளர் அரசு ரங்கேஷ் தலைமையில் நிர்வாகிகள் காரைக்கண்ணன், வெற்றிவேல், மாநகராட்சி கவுன்சிலர் சக்திவேல், சுரேஷ் பிச்சை பிள்ளை, அக்னி கிருஷ்ணமூர்த்தி, மேகநாதன், விஜி, வெங்கடேசன் மற்றும் நிர்வாகிகள் திரண்டனர். பின்னர் திடீரென்று சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் அவர்கள் கூறுகையில், சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற செமஸ்டர் தேர்வில் சாதி தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒரு சமூகத்தை இழிவு படுத்தும் விதமாக உள்ளது. 

    ஆகையால் ஜாதி வன்கொடுமையின் கீழ் மிகவும் கண்டிக்கத்தக்கதோடு, வினாத்தாள் தயார் செய்த பல்கலைக்கழக பேராசிரியர் மீதும் துணைவேந்தர் மீதும் சட்டப்படி வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து போலீசார் பேச்சுவார்த்தை ஈடுபட்டதை தொடர்ந்து கலைந்து சென்றனர். இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதோடு பரபரப்பாக காணப்பட்டது.

    • நடுவழியில் தவித்த சிறுமியை போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
    • எங்கே செல்வது என்று தெரியாமல் வேப்பூர் கூட்டு சாலையில் அழுது கொண்டு இருந்துள்ளார்.

    கடலூர்: 

    கடலூர் மேற்கு மாவட்டம் வேப்பூர் கூட்டு சாலையில் தனிமையில் அழுது கொண்டிருந்த 12 வயது சிறுமியை வேப்பூர் போலீஸ் ஏட்டு தென் எழிலன் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று வேப்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திராவிடம் ஒப்படைத்தார். இதுபற்றி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரா சிறுமியிடம் விசாரணை செய்தபோது, சிறுமி திட்டக்குடி வட்டம் கல்லூர் கிராமத்தில் மாரியம்மன் கோவில் அருகே உள்ள கிழக்கு தெருவில் வசித்து வரும் நல்லதம்பி -சங்கீதாவின் தம்பதி மகள் நவநீதா என்றும், அவர் மா.புடையூர் சந்ததோப்பு பள்ளியில் 7-ம் வகுப்பு படிக்கிறார் என தெரிவித்தார். சிறுமியின் தந்தை நல்லதம்பி சென்னையில் பழக்கடையில் கூலி வேலை பார்த்து வருகிறார் என்றும், சிறுமி நவநீதாவின் பாட்டி பவுனு என்பவர், தனது உறவுக்காரர் வீட்டு சுப நிகழ்ச்சிக்கு சிறுமியின் பாட்டி பவுனு, சிறுமியின் அத்தை உமா, மற்றும் சிறுமியின் தம்பி குரல்எழிலன் ஆகிய 3 பேரும் கல்லூர் கிராமத்திலிருந்து சென்னைக்கு சென்றுள்ளனர். இதனால் நானும் சென்னைக்கு வருகிறேன் என்று சிறுமி நவநீதா அழுதுள்ளதாகவும், நீ வர வேண்டாம் அம்மாவுடன் வீட்டில் இரு, என்று கூறிவிட்டு,  சென்றுவிட்டனர்.

    மேலும் சிறுமி நவநீதாவின் தாய் சங்கீதா மாடு மேய்ப்பதற்காக சென்றுள்ளார். வீட்டில் தனியாக இருந்த சிறுமி நவநீதா, தனது பாட்டியிடம் சென்னைக்கு செல்லும் எண்ணத்தில் கல்லூர் கிராமத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வேப்பூர் கூட்டு சாலை வரையில் நடந்தே வந்ததாகவும் கூறியுள்ளார். பிறகு அங்கிருந்து எங்கே செல்வது என்று தெரியாமல் வேப்பூர் கூட்டு சாலையில் அழுது கொண்டு இருந்துள்ளார். அப்போது வேப்பூர் காவல் நிலையத்திலிருந்து ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர் தென்எழிலன் என்பவர் சிறுமி நவநீதாவை அழைத்து வந்து வேப்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திராவிடம் ஒப்படைத்துள்ளார்.

    • கடலூர் அருகே அரசு பஸ் கண்ணாடியை மர்ம நபர்கள் உடைத்தனர்.
    • அரசு பஸ் ஒன்று பயணிகளை ஏற்றிக் கொண்டு கடலூர் ஓட்டேரி பகுதியில் சென்று கொண்டிருந்தது.

    கடலூர்:

    பண்ருட்டியில் இருந்து பாலூர் வழியாக கடலூர் நோக்கி அரசு பஸ் ஒன்று இன்று காலை பயணிகளை ஏற்றிக் கொண்டு கடலூர் ஓட்டேரி பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென்று மர்ம நபர்கள் பஸ் பின்பக்க கண்ணாடி மீது திடீரென்று கல் வீசினர். அப்போது பலத்த சத்தத்துடன் கண்ணாடி உடைந்ததோடு, உள்ளிருந்த பயணிகள் அலறி கத்தினர். பின்னர் அரசு பஸ் உடனடியாக நிறுத்தி மர்மநபர்கள் யார் என்று பார்த்தபோது கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பித்து ஓடி விட்டனர்.

    இதனை தொடர்ந்து அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க உடனடியாக அரசு பஸ்ஸை கடலூர் நோக்கி டிரைவர் கொண்டு சென்றார். இது குறித்து நெல்லிக்குப்பம் சப்-இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் சம்பவத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இது குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து பஸ் கண்ணாடி உடைத்தது யார்? என்று பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடலூரில் சாலையில் சுற்றி திரியும் மாடுகளால் விபத்து ஏற்படும் நிலை உள்ளது.
    • சைக்கிளில் செல்பவர்கள் மற்றும் வாகனங்களில் செல்பவர்களுக்கும் விபத்து ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் சிறப்புமிக்க கோவில்களும் மற்றும் தொழில் நிறுவனங் களுக்கு உகந்த தொழிற் சாலைகளும் அதிகமாக உள்ளது. கடலூர் மாவட்டத்தில் மழை பெய்தாலும் வெயில் அடித்தாலும் இங்கு அதிகமாக இருக்கும். இந்நி–லையில் இங்கு மோட்டார் சைக்கிள் மற்றும் வாகனங்களில் செல்ப–வர்கள் எண்ணிக்கை அதிக–மாக உள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது அதிகமாக இருக்கும். 

    தற்போது இந்த போக்கு–வரத்து நெரிசல் மட்டுமின்றி கடலூர் மற்றும் கடலூரை சுற்றியுள்ள சாலைகளிலும் தெருக்களிலும் ஆங்காங்கே சுற்றி தெரியும் மாடுகளால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த மாடுகள் சாலையின் குறுக்கே ஆங்காங்கே செல்வதால் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் மற்றும் வாகனங்களில் செல்பவர்களுக்கும் விபத்து ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளது. எனவே உரிய அதிகாரிகள் இதில் தலையிட்டு மக்களின் நலனை பாதுகாக்க சாலையில் சுற்றி தெரியும் மாடுகளை அப்புறப்படுத்தி விபத்து ஏற்படாமல் தடுக்க வழிவகை செய்ய வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

    • விருத்தாசலத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
    • தனிநபர் ஒருவர் கட்டிடங்களை இடிக்கக் கூடாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    விருத்தாசலம் ஆலடி ரோடு மற்றும் கடலூர் ரோடு ஸ்டேட் பேங்க் நிறுத்தம் அருகில் உள்ள இடங்களில் முல்லா ஏரி என்ற நீர்நிலை, ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வீடுகள் மற்றும் கடைகள் கட்டப்பட்டன. இதனை எதிர்த்து போடப்பட்ட பொது நல வழக்கின் பேரில் சென்னை உயர்நீதிமன்றம் நீர்நிலை ஆக்கிர மிப்புகளை உடனடி யாக அகற்றம் செய்யும்படி உத்தரவிட்டது. இதன்படி அந்த பகுதிகளில் தாசில்தார் தனபதி தலைமையில் நில அளவீடு செய்யும் பணி நடைபெற்றது. அதனை தொடர்ந்து ஆக்கிரமிப்பு–களை அகற்றும் பணி தொடங்கியது. 

    தாசில்தார் தனபதி தலை–மையிலான வருவாய்த் துறையினர், ஆக்கிரமிப்பு கட்டிடங்களை ஜேசிபி., எந்திரம் மூலம் அகற்றும் பணியை தொடங்கினர். ஒரு சுற்றுச்சுவர் மற்றும் ஒரு வீட்டை இடித்த நிலையில், வருவாய்த் துறை அதிகாரிகளை சூழ்ந்து கொண்ட பொதுமக்கள் அவர்களிடம் பல ஆண்டு–களாக வசித்து வரும் வீட்டை இடித்தால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனவும் மற்றும் தாங்கள் உடனடியாக செல்ல போக்கிடம் இல்லை, கட்டிடங்களை இடிக்கக் கூடாது எனவும் கோரிக்கை விடுத்தனர். அதற்கு அதிகாரிகள் ஆக்கிரமிப்பு செய்யும் பணி தற்போது வீட்டில் இருக்கும் தங்கள் பொருட்களை எடுத்துச் செல்லும்படியும் கூறினார். இதனையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். ஆக்கிரமிப்பு செய்யும் பணி தொடங்கும் போது தனிநபர் ஒருவர் கட்டிடங் களை இடிக்கக் கூடாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ஆக்கிரமிப்பு செய்யும்போது பதற்றம் ஏதும் ஏற்படாமல் இருக்க அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    • கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது.
    • பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தனர்.

    கடலூர்:

    தமிழக பகுதிகளில் மேற்கு திசை காற்று வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தனர்.அதன்படி கடலூர் மாவட்டத்தில் நேற்று மாலை பரவலாக மழை பெய்தது. இதில் கடலூர், நெல்லிக்குப்பம், குறிஞ்சிப்பாடி, சிதம்பரம், ஸ்ரீமுஷ்ணம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில், விருத்தாச்சலம், லால்பேட்டை, அண்ணாமலை நகர் உள்ளிட்ட மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்தது.கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக இரவு நேரங்களில் மழையும், பகல் நேரத்தில் சுட்டெரிக்கும் வெயிலும் இருந்து வருகின்றன. இதன் காரணமாக சீதோசன மாற்றம் ஏற்பட்டு பொதுமக்களுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு வருவதையும் காண முடிகிறது. இந்த நிலையில் பகல் நேரங்களில் வழக்கத்தை விட அதிக வெயில் அடித்து வரும் நிலையில் மாலை நேரங்களில் குளிர்ந்த காற்று மற்றும் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் சற்று மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    மேலும் மாவட்டம் முழுவதும் திடீர் மழை காரணமாக ஆங்காங்கே விவசாய பணிகள் பாதிப்படைந்து வருவதையும் காணமுடிகிறது. கடலூர் மாவட்டத்தில் மழை அளவு மில்லி மீட்டர் அளவில் பின்வருமாறு:- கீழச்செருவாய் - 56.0, தொழுதூர் - 23.0 ,அண்ணாமலைநகர் - 22.4 4, கொத்தவாச்சேரி - 21.0, லக்கூர் - 21.0, குறிஞ்சிப்பாடி - 18.0, பரங்கிப்பேட்டை - 16.7, சிதம்பரம் - 15.2, வடக்குத்து - 13.0, ஸ்ரீமுஷ்ணம் - 12.3, புவனகிரி - 12.0, பெல்லாந்துறை - 9.8, லால்பேட்டை - 9.0,காட்டுமன்னார்கோயில் - 5.2, . சேத்தியாதோப்பு - 3.8, கடலூர் - 2.0, கலெக்டர் அலுவலகம் - 1.6 குப்பநத்தம் - 1.2, விருத்தாச்சலம் - 1.0 என் மொத்தம் 264.20 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகி உள்ளது.

    • கடலூர் அருகே த.வா.க பேனரை கிழித்த நிர்வாகி மீது தாக்குதல் காரணமாக பா.ம.க.வினர் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • தமிழக வாழ்வுரிமை கட்சி ஒன்றிய தலைவர் சுந்தர் என்பவரை வழிமறித்து திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது

    கடலூர்:

    கடலூர் முதுநகர் அருகே கண்ணாரப்பேட்டையில் சில நாட்களுக்கு முன்பு தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாநில நிர்வாக குழு தலைவர் கண்ணன் கட்சிக்கொடி ஏற்றினார். இதனை யொட்டி அப்பகுதியில் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் பேனர் வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று அங்கு வைக்கப்பட்டிருந்த பேனரை மர்ம கும்பல் கத்தியால் கிழித்து சேதப்படுத்தினர். மேலும் அவ்வழியாக வந்த தமிழக வாழ்வுரிமை கட்சி ஒன்றிய தலைவர் சுந்தர் என்பவரை வழிமறித்து திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.இது குறித்து கடலூர் முதுநகர் போலீஸ் நிலையத்தில் சுந்தர் கொடுத்த புகாரின் பேரில் பாமகவை சேர்ந்த ராஜேஷ் (வயது 21), கீர்த்தி வாசன் (வயது 21), வெங்கடேசன், தனுஷ், சதீஷ் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் ராஜேஷ் மற்றும் கீர்த்திவாசன் ஆகியோரை கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அப் பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

    • கடலூர் மாவட்டத்தில் 7 மையங்களில் நீட் தேர்வு இன்று மதியம் நடைபெற உள்ளது.
    • மாணவிகளுக்கு கம்மல்,மூக்குத்தி, வளையல் அணிய தடைவிதிக்கப்பட்டு இருந்தது.

    கடலூர்:

    நாடு முழுவதும் கடும் கட்டுப்பாடுகளுடன் 18.72 லட்சம் மாணவர்கள் மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு இன்று எழுதுகின்றனர். கடலூர் மாவட்டத்தில் கடலூர் மஞ்சக்குப்பம் புனிதவளனார் பள்ளி உள்ளிட்ட 7 மையங்களில் இந்த தேர்வுநடக்கிறது. அதாவது கடலூரில் 4 மையம், நெய்வேலியில் 2 மையம், விருத்தாசலத்தில் 1 மையத்தில் இன்று மதியம் தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வையொட்டி மாணவ- மாணவிகள் காலை 11 மணி முதல் அனுமதிக்கப்பட்டனர். தற்போது கொரோனா பரவி வருவதால் முக கவசம் அணிந்த வர கட்டாயமாக்கப்பட்டது. அதோடு மாணவ- மாணவிகளுக்கு வெப்பமானி மூலம் பரிசோதிக்கப்பட்டது/ மாணவிகளுக்கு கம்மல்,மூக்குத்தி, வளையல் அணிய தடைவிதிக்கப்பட்டு இருந்தது.

    • கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் 63 நாயன்மார்களுடன் சாமி வீதி உலா நடைபெற்றது.
    • ஸ்ரீ மனோன்மணி அம்பிகா சமேத சந்திரசேகர் சாமிக்கும் விசேஷ சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாரதனை நடைபெற்றது.

    கடலூர்:

    கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் பிரசித்தி பெற்ற பாடலீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் 63 நாயன்மார்கள் உற்சவம் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் காலையில் பாடலீஸ்வரருக்கும், ஸ்ரீ மனோன்மணி அம்பிகா சமேத சந்திரசேகர் சாமிக்கும் விசேஷ சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாரதனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து பாடலீஸ்வரர் மற்றும் 63 நாயன்மார்களுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வெளியில் கொண்டுவரப்பட்டன. பின்னர் ரிஷப வாகனத்தில் பாடலீஸ்வரர், 63 நாயன்மார்களும் வாகனங்களில் எழுந்தருளினர். பின்னர் ஊர்வலமாக பாடலீஸ்வரரும், 63 நாயன்மார்களும் முக்கிய மாடவீதியில் சென்றனர்.இந்த காட்சி பக்தி பரவசத்தை ஏற்படுத்தியதோடு ஏராளமான பொதுமக்கள் சாமி ஊர்வலத்துடன் சென்றனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்‌ பூஜைக்கான ஏற்பாடுகளை நாகராஜ் குருக்கள், ராகேஷ் குருக்கள் மற்றும் பலர் செய்திருந்தனர்

    ×