விருத்தாசலத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

விருத்தாசலத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.தனிநபர் ஒருவர் கட்டிடங்களை இடிக்கக் கூடாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட போது குடியிருப்பு வாசிகள் அதிகாரிகளிடம் முறையிட்ட காட்சி. 
ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட போது குடியிருப்பு வாசிகள் அதிகாரிகளிடம் முறையிட்ட காட்சி. 
Published on

விருத்தாசலம் ஆலடி ரோடு மற்றும் கடலூர் ரோடு ஸ்டேட் பேங்க் நிறுத்தம் அருகில் உள்ள இடங்களில் முல்லா ஏரி என்ற நீர்நிலை, ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வீடுகள் மற்றும் கடைகள் கட்டப்பட்டன. இதனை எதிர்த்து போடப்பட்ட பொது நல வழக்கின் பேரில் சென்னை உயர்நீதிமன்றம் நீர்நிலை ஆக்கிர மிப்புகளை உடனடி யாக அகற்றம் செய்யும்படி உத்தரவிட்டது. இதன்படி அந்த பகுதிகளில் தாசில்தார் தனபதி தலைமையில் நில அளவீடு செய்யும் பணி நடைபெற்றது. அதனை தொடர்ந்து ஆக்கிரமிப்பு–களை அகற்றும் பணி தொடங்கியது. 

தாசில்தார் தனபதி தலை–மையிலான வருவாய்த் துறையினர், ஆக்கிரமிப்பு கட்டிடங்களை ஜேசிபி., எந்திரம் மூலம் அகற்றும் பணியை தொடங்கினர். ஒரு சுற்றுச்சுவர் மற்றும் ஒரு வீட்டை இடித்த நிலையில், வருவாய்த் துறை அதிகாரிகளை சூழ்ந்து கொண்ட பொதுமக்கள் அவர்களிடம் பல ஆண்டு–களாக வசித்து வரும் வீட்டை இடித்தால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனவும் மற்றும் தாங்கள் உடனடியாக செல்ல போக்கிடம் இல்லை, கட்டிடங்களை இடிக்கக் கூடாது எனவும் கோரிக்கை விடுத்தனர். அதற்கு அதிகாரிகள் ஆக்கிரமிப்பு செய்யும் பணி தற்போது வீட்டில் இருக்கும் தங்கள் பொருட்களை எடுத்துச் செல்லும்படியும் கூறினார். இதனையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். ஆக்கிரமிப்பு செய்யும் பணி தொடங்கும் போது தனிநபர் ஒருவர் கட்டிடங் களை இடிக்கக் கூடாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ஆக்கிரமிப்பு செய்யும்போது பதற்றம் ஏதும் ஏற்படாமல் இருக்க அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com