என் மலர்
கடலூர்
- டிரான்பார்மரில் பசுமாடு மின் கசிவால் இறந்தது.
- வட்டாட்சியர் அலுவலகம் அருகே மேய்ந்து கொண்டிருந்தது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் செல்வராஜ் நகரை சேர்ந்தவர் செல்வம் (40). இவருக்கு சொந்தமான பசுமாடு ஒன்று கடலூர் ரோட்டில் உள்ள வட்டாட்சியர் அலுவலகம் அருகே மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது அங்கிருந்த டிரான்ஸ்பார்மர் அருகே மேய்ந்து கொண்டிருந்தபோது அங்கு ஏற்பட்ட மின் கசிவு காரணமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தது. கடந்த சில தினங்களாக இப்பகுதியில் சாலை சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. அப்போது சாலையோரம் தோண்டப்பட்ட பள்ளத்தை சரிவர மூடாமல் இருந்ததே டிரான்ஸ்பார்மில் ஏற்ப்பட்ட மின் கசிவின் காரணமாக பசுமாடு உயிரிழக்க காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டினர்
- திட்டக்குடியில் தீக்காயத்துடன் உயிருக்கு போராடி குரங்கு அவதிப்பட்டு சுற்றி வருகிறது.
- வனத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட குரங்கை மீட்டு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திட்டக்குடி பெரியார் நகர் பகுதியில் குரங்கு ஒன்று உடலில் தீ காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடி வருகிறது/ இது குறித்து வனத்துறை அதிகாரிகளிடம் தகவல் கொடுத்து உள்ளனர். அப்பகுதி மக்கள் கூறுகையில் அப்பகுதியில் கடந்த 4 நாட்களாக அந்த குரங்கு தீக்காயங்கள் ஏற்பட்டு மக்கள் வசிக்கும் பகுதியில் அவதிப்பட்டு சுற்றி வருகிறது. இதனைப் பார்க்கும் போது மிகவும் வேதனையாக உள்ளது எனவே வனத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட குரங்கை மீட்டு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
- பண்ருட்டி அருகே கிராமநிர்வாக அலுவலர் அலுவலகம் முன்பு பொது மக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
- தகவல் அறிந்ததும் போலீசார்சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் வல்லம் கிராமத்தில் கிராமநிர்வா கஅலுவலர்அலுவலகம் உள்ளது இந்த கிராம நிர்வாக அலுவலர்அலுவலகம் நடுகுப்ப ம்கிராமத்திற்குமாற்றபட உள்ளதாக கிராமஊழியர்ஒருவர் தனதுமுகநூலில்பதிவிட்டு இருந்ததாககூறப்படுகிறது. ஆத்திரமடைந்தகிராம மக்கள்,கிராமநிர்வாக அலுவலர்அலுவலகம் முன்பு திரண்டனர். பின்னர்வல்லம்சாலையில் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
இது பற்றிய தகவல் அறிந்ததும் பண்ருட்டி தாசில்தார்சிவாகார்த்தி கேயன்,பண்ருட்டிபோலீஸ் இன்ஸ்பெக்டர்சந்திரன் மற்றும்முத்தாண்டிகுப்பம் போலீசார்சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கிராம நிர்வாகஅலுவலர் அலுவலகத்தை மாற்றுவதற்காக எந்த உத்தரவும் பிறப்பிக்கப்ப டவில்லைவதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என பொதுமக்களிடம் தாசில்தார் விலக்கிகூறினார். இதனை தொடர்ந்து பொது மக்கள்போராட்டத்தை விளக்கி க்கொ ண்டனர்இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது
- விருத்தாசலம் அருகே டாஸ்மாக் ஊழியரை தாக்கி பணத்தை கொள்ளையடித்தனர்.
- காயமடைந்த அசோகன் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள நடியப்பட்டு கிராமத்தில் உள்ள டாஸ்மாக்கில் அசோகன் (51) என்றவர் சூப்பர்வைசராக பணி புரிந்து வருகிறார். இவர் நேற்று இரவு டாஸ்மாக்கில் வசூலான ரூபாய் 1 லட்சத்து 30 ஆயிரம் ரூபாயை எடுத்து கொண்டு இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். அப்போது அவர் புதுப்பேட்டை என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தபோது இரு மர்ம நபர்கள் அவரை உருட்டு கட்டையால் தாக்கி அவரிடமிருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். பலத்த காயமடைந்த அசோகன் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து ஆலடி போலீசார் சந்தேகத்திற்கிடமான 2 பேரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்
- விருத்தாசலத்தில் ஆசிரியர் கண்டித்ததால் பள்ளியில் விஷம் குடித்த மாணவரால் பரபரப்பு நிலவியது.
- மேல்சிகிச்சை தேவைப்பட்ட அவரை உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனைக்கு மருத்துவர்கள் அனுப்பினர்.
கடலுார்:
கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அருகே முகாசாபரூர் கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவர் அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். அவர் தலைமுடியை அதிகமாக வளர்த்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று பள்ளிக்கு சென்ற அவரை ஆசிரியர் முடியை ஒழுங்காக வெட்டி விட்டு பள்ளிக்கு வருமாறு கூறி கண்டித்து வகுப்பறையை விட்டு வெளியே அனுப்பியுள்ளார். இதனால் வேதனையடைந்த அந்த மாணவன் நேற்று மதியம் பள்ளிவளாக்தில் வயலில் தெளிக்கும் பூச்சி மருந்தை குடித்துள்ளார். இதனால் மயக்கமடைந்த அவரை கண்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் அவரை அருகிலுள்ள மங்கலம்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். மேலும் மேல்சிகிச்சை தேவைப்பட்ட அவரை உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனைக்கு மருத்துவர்கள் அனுப்பினர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து மங்கலம்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.ஆசிரியர் திட்டியதால் பள்ளி மாணவர் தற்கொலைக்கு முயன்றது விருத்தாசலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- கடலூர் தேவனாம்பட்டினம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் போலீசார் ரோந்துபணியில் ஈடுபட்டனர்.
- தேவனாம்பட்டினம் கடற்கரையில் 5 பேர் நின்றுகொண்டு சின்னசேலம் கலவரம் பற்றி பேசிக்கொண்டிருந்தனர்.
கடலூர்:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்துவந்த மாணவி ஸ்ரீமதி மரண விவகாரம் தமிழகம் முழுவதும் எதிரொலித்துள்ளது. இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
யார் யார் வாட்ஸ்அப் மூலம் கலவரத்தை தூண்டும் நோக்கில் செயல்படுகிறார்கள் என்பதை போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.
அதன்படி கடலூர் தேவனாம்பட்டினம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் போலீசார் ரோந்துபணியில் ஈடுபட்டனர். அப்போது தேவனாம்பட்டினம் கடற்கரையில் 5 பேர் நின்றுகொண்டு சின்னசேலம் கலவரம் பற்றி பேசிக்கொண்டிருந்தனர். கடலூரிலும் இதேபோன்று செய்து மாணவியின் மரணத்துக்கு தீர்வுகாணவேண்டும் என அவர்கள் பேசியதாக போலீசார் காதுக்கு எட்டியது.
உடனே போலீசார் அவர்களை பிடிக்க முயன்றபோது 4 பேர் தப்பி ஓடிவிட்டனர். அவர்களில் ஒருவர் பிடிபட்டார். அவரது பெயர் விஜய். இவர் கடலூரில் உள்ள தனியார் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருகிறார். இவரது செல்போனை சோதித்தபோது வாட்ஸ்-அப் குழுக்கள் இருந்தது.
இதனை பரிசோதிக்கும் போது கள்ளக்குறிச்சி கலவரத்தை தூண்ட முயன்றது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து போலீசார் கல்லூரி மாணவர் விஜய்யை கைது செய்தனர். இந்த வாட்ஸ்-அப் குழுவில் இருப்பவர்கள் யார்? அவர்கள் எங்கெல்லாம் உள்ளனர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து நடத்திய விசாரணையில் கள்ளக்குறிச்சி கலவரத்தில் கடலூர் அருகே உள்ள வெள்ளக்கரையை சேர்ந்த கார்த்திக், தினேஷ் ஆகியோர் கலந்து கொண்டது தெரியவந்தது. இவர்களை போலீசார் கைது செய்தனர்.
இதனைத்தொடர்ந்து கடலூர் போலீஸ் டி.எஸ்.பி. கரிக்கால்பாரிசங்கர் தலைமையில் கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரைக்கு செல்ல மாணவர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
- கடலூர் துறைமுகத்தில் நடுநிலை பள்ளியில் மேயர் ஆய்வு செய்தார்.
- பள்ளி வகுப்பறை கட்டிடம் போன்றவற்றை பார்வையிட்டு அங்குள்ள மாணவரிடம் சத்துணவு சரியான முறையில் வழங்கப்படுகிறதா என ஆய்வு செய்தார்.
கடலூர்:
கடலூர் துறைமுகத்தில் சீமான் தோட்ட நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஒவ்வொரு வகுப்பறையாக மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா நேரில் சென்று பள்ளி வகுப்பறை கட்டிடம் போன்றவற்றை பார்வையிட்டு அங்குள்ள மாணவரிடம் சத்துணவு சரியான முறையில் வழங்கப்படுகிறதா? மற்றும் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா? என்பதனை கேட்டறிந்தார். பின்னர் அங்கிருந்த ஆசிரியர்களிடம் மாணவர்களுக்கு எந்த வித இடர்பாடுகள் இல்லாமல் பாடம் நடத்தி மாணவர்களின் கல்வி கற்கும் தரத்தை உயர்த்த வேண்டும் இவ்வாறு கூறினார். அப்பொழுது மாநகர திமுக செயலாளர் கே. எஸ்.ராஜா, மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் பாலாஜி,மாநகராட்சி கவுன்சிலர்கள் இளையராஜா, பாலசுந்தரம் மற்றும் தலைமை ஆசிரியர் ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.
- சின்னசேலம் பள்ளியில் இறந்த மாணவியின் சொந்த ஊரில் போலீஸ் படை குவிக்கப்பட்டுள்ளது.
- போராட்டத்தில் ஊடுருவிய சமூக விரோதிகள் பெரும் வன்முறையில் ஈடுபட்டு கலவரம் ஏற்பட்டது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம். அவரது மகள் ஸ்ரீமதி (17). இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்திலுள்ள தனியார் பள்ளியில் பிளஸ்2 படித்த நிலையில், கடந்த 13ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்நிலையில் மாணவி சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மாணவி உடலை வாங்க மறுத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். நேற்று முன்தினம் மாணவி படித்த தனியார் பள்ளி முன் ஸ்ரீமதியின் இறப்புக்கு நீதி கேட்டு இளைஞர்கள், பொதுமக்கள் போராட்டம் செய்தனர். இதில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
போராட்டத்தில் ஊடுருவிய சமூக விரோதிகள் பெரும் வன்முறையில் ஈடுபட்டு கலவரம் ஏற்பட்டது. கலவரத்தை கட்டுப்படுத்த கள்ளக்குறிச்சி, சின்னசேலம், நைனார்பாளையம் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதேபோல் வேப்பூர் பகுதிகளிலும் மாணவியின் இறப்புக்கு நீதி கேட்டு கிராம மக்கள் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேஷ் தலைமையில் 250-க்கும் மேற்பட்டபோலீசார் வேப்பூர் கூட்ரோடு, பெரியநெசலூர், தொண்டாங்குறிச்சி, கழுதூர் உள்ளிட்ட பகுதிகளில்பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும் தண்ணீர்பீய்ச்சி அடிக்கும் வஜ்ரா வாகனம் வேப்பூர் போலீஸ் நிலையத்தில் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மாணவியின் இறுதி சடங்கு முடியும் வரை வேப்பூர் பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட அறிவுத்தப்பட்டுள்ளது.
- கடலூரில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்த விழிப்புணர்வு மின்னனு வீடியோ வாகனத்தை கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
- 54 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் நிகழ்வுகள் நடைபெற உள்ளது.
கடலூர்:
பேரறிஞர் அண்ணாவால்'தமிழ்நாடு" என அறிவிக்கப்பட்ட ஜுலை -18-ம் நாளினை தமிழ்நாடு திருநாளாக கொண்டாடப்படும் வகையில் கடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மேல் அழிஞ்சிப்பட்டு ஊராட்சியில் மரக்கன்றுகள் நடும் விழா கலெக்டர் பாலசுப்ரமணியம் தொடங்கி வைத்தார். தொடர்ந்து கட லூர் ஊராட்சி ஒன்றியத்தி ற்குட்பட்ட ஊராட்சிகளில் 1100 மரக்கன்றுகள் நடப்படப்பட்டு வருகிறது. மேலும் கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் தமிழ்நாடு திருநாளை கொண்டாடும் வகையில் 54 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் நிகழ்வுகள் நடைபெற உள்ளது.
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளதை முன்னிட்டு கடலூர் மாவட்டத்தில் பொதுமக்கள், மாணவ, மாணவியர்கள் அறிந்து கொள்ளும் வகையில் ஒலிம்பிக் ஜோதி விழிப்புணர்வு பேரணி, மரக்கன்றுகள் நடுதல், விழிப்புணர்வு நடைபயணம் மேற்கொள்ளுதல், வணிக வளாகங்கள், உணவகங்கள் மற்றும் கடைகளில் செஸ் ஒலிம்பியாட் சின்னம் ஸ்டிக்கர் ஒட்டுதல், செஸ் போட்டிகள் நடத்துதல் மற்றும் செஸ் போட்டிகள் குறித்து மாணவ-மாணவியர்களுக்கிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வினாடி வினா போட்டிகள் நடத்துதல் என பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
அதன் தொடர்ச்சியாக கடலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான அதிநவீன மின்னனு வீடியோ வாகனத்தை கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இவ்வாகனம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் சென்று செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவுள்ளது. இந்நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பவன்குமார் கிரியப்பனவர். , சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர் ஜி.ஆர்.துரைராஜ், துணைத் தலைவர் செல்ல பாண்டியன் பகுதி செயலாளர்கள் சதீஷ், தமிழ் முருகன், மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- கடலூரில் மக்கள் குறைகேட்பு கூட்டதில் மனுக்கள் மீது காலம் தாழ்த்தாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
- உதவித்தொகை, கழிப்பறை, வீடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தான மனுக்களை உடனடி–யாக பரிசீலனை செய்து தீர்வு காணவேண்டும்.
கடலூர்:
கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் அனைத்துத்துறை அலுவலர்களுடன் மாவட்ட கலெக்டர் பாலசுப்ரமணியம், தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் குடும்பஅட்டை, முதியோர் உதவித்தொகை, மாற்றுதிறனாளிகள் உதவித் தொகை, பட்டா, நிலஅளவை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் கலெக்டரிடம் நேரில் அளித்தனர். மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் பட்டா தொடர்பான 58 மனுக்களும், முதியோர் உதவித்தொகை தொடர்பாக 196 மனுக்களும், வேலை வாய்ப்பு தொடர்பாக 13 மனுக்களும், காவல்துறை தொடர்பாக 12 மனுக்களும், பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா வீடு வழங்கும் திட்டம் தொடர்பாக 38 மனுக்களும், தையல் எந்திரம் கோரி 48 மனுக்களும், இதர மனுக்கள் 73 ஆக மொத்தம் 438 மனுக்கள் வரப்பெற்றன. பொதுமக்கள் அளித்த மனுக்களை தீர ஆராய்ந்தும், கள ஆய்வு செய்தும், விதிமுறைகளுக்குட்பட்டும் துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு மனுதார–ருக்கு தீர்வு வழங்க வேண்டும்.
மேலும் உதவித்தொகை, கழிப்பறை, வீடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தான மனுக்களை உடனடியாக பரிசீலனை செய்து தீர்வு காணவேண்டும். பொதுமக்களின் குறை தீர்ப்பது தான் நம்முடைய தலையாய கடமையாகும். அவ்வாறு அவர்கள் அளிக்கும் மனுக்கள் மீது காலம் தாழ்த்தாமல் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என கலெக்டர் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்களுக்கும் துறை ரீதியாக மேஜைகள் அமைக்கப்பட்டு, பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை மூலம் உடனடியாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) கிருஷ்ணன், தனித்துணை கலெக்டர் (ச.பா.தி) கற்பகம் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- திட்டக்குடி அருகே வீடுகளில் கருப்பு கொடி கட்டி கிராம மக்கள் போராட்டம்
- அப்பகுதி ஆதிதிராவிட பொதுமக்கள் ஒன்று சேர்ந்து கொரக்கை காலனியில் உள்ள ஆலமரத்து அடியில் அய்யனார் கோவிலில் சாமி தரிசனம் செய்ய எல்லா சாதியினரையும் பாகுபாடின்றி அனுமதிக்கவேண்டும்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே கொரக்கை கிராமத்தில் அமைந்துள்ள சாந்ப்ப அய்யனார் கோவிலில் அனைத்து சாதியினரையும் அனுமதிக்க வேண்டுமென திட்டக்குடி வட்டாட்சியரிடம் இது சம்பந்தமாக மனு கொடுத்துள்ளனர். இதுவரை நடவடிக்கை எடுக்காததை கண்டித்து அப்பகுதி ஆதிதிராவிட பொதுமக்கள் ஒன்று சேர்ந்து கொரக்கை காலனியில் உள்ள ஆலமரத்து அடியில் அய்யனார் கோவிலில் சாமி தரிசனம் செய்ய எல்லா சாதியினரையும் பாகுபாடின்றி அனுமதிக்கவேண்டும் எனக்கோரிக்கை வைத்து வீடுகளில் கருப்புக்கொடி கட்டியும் , கையில் கருப்பு கொடி ஏந்தி 100-க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.
- சிதம்பரத்தில் இன்று விபத்து மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியத்தில் தனியார் நிறுவன அதிகாரி பலியானார் .
- விபத்தில் முத்துகுமரன் தூக்கி வீசப்பட்டார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கீரைப்பாளையத்தைை சேர்ந்தவர் முத்துக்குமரன் (வயது 45). இவர் சிதம்பரத்தில் மோட்டார் சைக்கிள் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார். இவர் இன்று காலை மோட்டார் சைக்கிளில் சிதம்பரம் நோக்கி சென்றார். அப்போது எதிரேவந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இதனை திருநின்றவூரை சேர்ந்த கல்லூரி மாணவர் ஹரீஷ் ஒட்டிவந்தார். இந்த விபத்தில் முத்துகுமரன் தூக்கி வீசப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் முத்துகுமரன் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். விபத்து குறித்து சிதம்பரம் டவுன் போலீசார் விசாரிக்கிறார்கள்.






