கடலூர் துறைமுகத்தில் நடுநிலை பள்ளியில் மேயர் ஆய்வு

கடலூர் துறைமுகத்தில் நடுநிலை பள்ளியில் மேயர் ஆய்வு செய்தார்.பள்ளி வகுப்பறை கட்டிடம் போன்றவற்றை பார்வையிட்டு அங்குள்ள மாணவரிடம் சத்துணவு சரியான முறையில் வழங்கப்படுகிறதா என ஆய்வு செய்தார்.
கடலூர் துறைமுகம் நடுநிலை பள்ளியை மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா நேரில் சென்று ஆய்வு செய்தார்.
கடலூர் துறைமுகம் நடுநிலை பள்ளியை மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா நேரில் சென்று ஆய்வு செய்தார்.
Published on

கடலூர்:

கடலூர் துறைமுகத்தில் சீமான் தோட்ட நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஒவ்வொரு வகுப்பறையாக மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா நேரில் சென்று பள்ளி வகுப்பறை கட்டிடம் போன்றவற்றை பார்வையிட்டு அங்குள்ள மாணவரிடம் சத்துணவு சரியான முறையில் வழங்கப்படுகிறதா? மற்றும் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா? என்பதனை கேட்டறிந்தார். பின்னர் அங்கிருந்த ஆசிரியர்களிடம் மாணவர்களுக்கு எந்த வித இடர்பாடுகள் இல்லாமல் பாடம் நடத்தி மாணவர்களின் கல்வி கற்கும் தரத்தை உயர்த்த வேண்டும் இவ்வாறு கூறினார். அப்பொழுது மாநகர திமுக செயலாளர் கே. எஸ்.ராஜா, மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் பாலாஜி,மாநகராட்சி கவுன்சிலர்கள் இளையராஜா, பாலசுந்தரம் மற்றும் தலைமை ஆசிரியர் ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com