என் மலர்
கடலூர்
- கடலூரில் சுருக்குமடி வலையை கைப்பற்றி அதிகாரிகள் சேதப்படுத்தினர்.
- தொடர்ந்து நடந்த ஆய்வின்போது மீன்பிடிப்பதற்கு உதவியாக இன்னொரு நாட்டு படகு நின்றது.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் மீன் வளத்துறை தடைவிதித்து உள்ளது. அதன்படி மீன் வளத்துறை அதிகாரிகள் கடல் பகுதியில் ரோந்து சுற்றி வருகிறார்கள். இன்று காலை மீன்வளத்துறை ஆய்வாளர் பதுருதீன் தலைமையில் சார் ஆய்வாளர் பிரபாகரன், கடல் மீன்பிடி சட்ட அமலாக்க பிரிவு காவலர் சாம்பவசிவம் மற்றும் ஊழியர்கள் கடல் பகுதியில் ரோந்து சென்றனர். சுபஉப்பலவாடி பகுதியில் ரோந்து சென்ற போது ஒரு படகில் சுருக்குமடி வலைலைய பயன்படுத்தி மீன் பிடித்ததை அதிகாரிகள் கண்டு பிடித்தனர். விசாரணையில் படகில் வந்த மீனவர்கள் புதுவை பனித்திட்டு பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிய வந்தது. உடனே மீன்வளத்துறை அதிகாரிகள் சுருக்குமடி வலையை பறிமுதல் செய்து அதனை பயன்படுத்த முடியாத அளவுக்கு சேதப்படுத்தினர். தொடர்ந்து நடந்த ஆய்வின்போது மீன்பிடிப்பதற்கு உதவியாக இன்னொரு நாட்டு படகு நின்றது. அதனையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
- கடலூர் கலெக்டர் அலுவலகத்தை விவசாயி சங்க நிர்வாகிகள் முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
- போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் தொடர்ந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
கடலூர்:
கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இன்று காலை விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து மாவட்டத்தில் இருந்து பல்வேறு விவசாயிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த நிலையில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் மாநில தலைவர் அய்யா கண்ணு தலைமையில் விவசாய சங்க நிர்வாகிகள் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட திரண்டனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மாநிலத் தலைவர் அய்யாகண்ணு மற்றும் விவசாயிகள் கலெக்டர் அலுவலகம் முன்பு தடுத்து நிறுத்தி ஆர்ப்பாட்டம் செய்ய அனுமதி கிடையாது எனக்கூறினர்.இந்த நிலையில் போலீசார் விவசாய சங்க நிர்வாகிகளிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் விவசாய சங்க நிர்வாகிகள் திட்டவட்டமாக தங்கள் போராட்டத்தை நடத்துவோம் என கூறினர். பின்னர் திடீரென்று கடலூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலையில் அமர்ந்து அய்யாகண்ணு தலைமையில் போராட்டம் நடைபெற்றது. அப்போது மாநிலத் தலைவர் அய்யா கண்ணு நிருபர்களிடம் கூறியதாவது:-
தனியார் சர்க்கரை ஆலைக்கு டன் கணக்கில் கரும்புகளை விவசாயிகள் வழங்கினர். மத்திய மற்றும் மாநில அரசு ஒரு டன்னுக்கு 2,700 வழங்குவதற்கு உத்தரவிட்டனர். ஆனால் சர்க்கரை ஆலை திவாலாகி மூடப்பட்டதால் தனியார் நிறுவனம் சர்க்கரை ஆலை கையகப்படுத்தி உள்ளதால், தற்போது ஒரு டன்னுக்கு 300 ரூபாய் தருவதாக கூறுகின்றனர். இதன் மூலம் விவசாயம் குடும்பம் முழுவதும் கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். மேலும் சர்க்கரை ஆலை நிர்வாகம் கரும்பு வெட்டுவதற்கு விவசாயிகளிடம் இருந்து கையெழுத்து பெற்று வங்கிகளில் 40 கோடி ரூபாய் கடன் பெற்றனர். அந்த பணத்தையும் வழங்காமல் உள்ளதால் தற்போது விவசாயிகள் நிலத்தை ஜப்தி செய்வதோடு அவர்களின் பொருட்களையும் ஜப்தி செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதன் காரணமாக இந்த பிரச்சனைக்கு தீர்வு காண விவசாய சங்க நிர்வாகிகள் கடந்த ஆறு மாதமாக மாவட்ட நிர்வாகத்தை நேரில் சந்தித்து மனு அளித்து வந்தனர். ஆனால் இதுவரை இதற்கு நிரந்தர தீர்வு இல்லை.
ஆகையால் இன்று மறியல் போராட்டம் அறிவித்து தற்போது மறியல் போராட்டம் நடைபெற்று வருகின்றது. ஆனால் இதற்கு நிரந்தர தீர்வு கிடைக்கவில்லை என்றால் தேசிய நெடுஞ்சாலையில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளை ஆடு, மாடுகளை திரட்டி மிகப்பெரிய அளவில் போராட்டம் விரைவில் நடத்தப்பட உள்ளோம். மேலும் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நெல் டன் ஒன்றுக்கு 2500 ரூபாயும், கரும்புக்கு 4000 ரூபாயும் வழங்கப்படுவதாக உறுதி அளித்தார். அவர் வழங்குவார் என நம்பிக்கை வைத்துள்ளோம். மேலும் கூட்டுறவு கடன் சங்கத்தில் ஒரு ஏக்கர் நெல் பயிரிடுவதற்கு 32,000 கடன் வழங்க வேண்டும். ஆனால் பத்தாயிரம் ரூபாய் மட்டுமே வழங்குகிறார்கள். மேலும் நேரடி கொள்முதல் நிலையத்தில் லஞ்சம் தலைவிரித்து ஆடுவதால் விவசாயிகள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். ஆகையால் இதற்கெல்லாம் தீர்வு காண இந்த போராட்டம் நடைபெற்று உள்ளது இவ்வாறு கூறினார். இதனை தொடர்ந்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் தொடர்ந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கலெக்டரை சந்தித்து எங்கள் கோரிக்கைகள் தொடர்பாக பேச வேண்டும் என திட்டவட்டமாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து முக்கிய நிர்வாகிகள் கலெக்டரை சந்தித்து மனு அளிக்க போலீசார் அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கு இருந்து வருவதால் பரபரப்பாக காணப்பட்டு வருகிறது.
- சிதம்பரத்தில் கடைக்கு சென்ற 7-ம் வகுப்பு மாணவன் மாயமானர்.
- சந்தேகம் அடைந்த பெற்றோர் பல்வேறு பகுதிகளில் தேடியும் கிடைக்கவில்லை.
கடலூர்:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் மேல புதுத் தெருவை சேர்ந்தவர் சபரிநாதன். அவரது மகன் சதீஷ்குமார் (வயது 12). இவர் சிதம்பரத்தில் உள்ள ஆறுமுகநாவலர் மேல்நிலைப் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 19-ந் தேதி அன்று மாலை வீட்டின் அருகே உள்ள பெட்டிக் கடையில் மாவு வாங்கி வரச் சென்றார்.ஆனால் கடைக்கு சென்ற சதீஷ்குமார் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர் பல்வேறு பகுதிகளில் தேடியும் கிடைக்கவில்லை. இதனையடுத்து இவர் தந்தை சபரிநாதன் சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் சிறுவனை தேடி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக அருகே 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் முகத்தில் இரத்தக்காயங்களுடன் இறந்த நிலையில் கிடந்தார். தகவல் அறிந்த கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால் பாரிசங்கர் தலைமையில் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். பின்னர் இறந்த பெண் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தினர். அப்போது விசாரணையில் அதிர்ச்சி தகவல் கிடைத்தன. பண்ருட்டி காங்கே யன் குப்பத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற போலீஸ் சிறப்பு சப் - இன்ஸ்பெக்டர் சதாசிவம் மனைவி மலர்க்கொடி (வயது 54). இவர்களது மகன் சிவகுரு (30). போலீஸ்காரரான இவர் கடலூர் புதுக்குப்பம் போலீஸ் குடியிருப்பில் தங்கி கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்தில் வேலை பார்த்து வருகிறார் . நேற்று உடல் நிலை சரியில்லாத மலர்க்கொடி கடலூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தனது மகன் சிவகுரு வீட்டுக்கு சென்றார . பின்னர் மாலை ஆைணக்குப்பத்தில் உள்ள தனக்கு தெரிந்த ஒருவரை பார்த்து விட்டு வருவதாக கூறி , வெளியே சென்றுள்ளார் . அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை . இதற்கிடையில் ஆனைக்குப்பத்தில் ஏற்க னவே வசித்த பழைய போலீஸ் குடியிருப்பில் மலர்க்கொடி தலையில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார் .
அப்போது மலர்க்கொடி முகம் சிதைக்கப்பட்டு இருந்தது . அவரை மர்ம நபர் அடித்துக் கொலை செய்திருப்பது தெரியவந்தது . இருப்பினும் ஒரு காது அறுக்கப்பட்டு , தோடோடு கிடந்தது. மற்றொரு காதில் இருந்த நகையை காணவில்லை. மேலும் தகவல் அறிந்ததும் சிவகுருவும் சம்பவ இடத்துக்கு வந்து , இறந்தது தனது தாய் மலர்க்கொடி தான் என்பதை உறுதி செய்தார். இந்த நிலையில் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மலர்கொடி உடலை பார்வையிட்டு அதிகாரிகளிடம் சம்பவம் குறித்து கேட்டறிந்தார். இந்த நிலையில் துணை போலீஸ் கரிகால் பாரி சங்கர், இன்ஸ்பெ க்டர் குருமூர்த்தி, சப்-இ ன்ஸ்பெக்டர் கதிரவன் ஆகிய மூன்று பேர் தலைமையில் தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்ததிலும் , பொதுமக்களிடம் நடத்திய விசாரணையிலும் , அந்த வழி யாக வாலிபர் ஒருவர் ரத்தக்கறையுடன் நடந்து சென்றது தெரியவந்தது
. இந்த நிலையில் நேற்று இரவு சந்தேகத்தின் பேரில் வாலிபர் ஒருவரை புதுவை மாநிலம் சாராயக்கடையில் இருந்து பிடித்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? இந்த சம்பவத்திற்கும் அவருக்கும் தொடர்பு உண்டா? உள்ளிட்ட பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வேறு யாராவது இதில் சம்பந்தப்பட்டு உள்ளார்களா? என்பதை குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் மலர்கொடி கொலை செய்யப்பட்ட இடம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் மற்றும் போலீசார் குடியிருப்பு பகுதி என்பதால் எந்நேரமும் போலீசார் சென்றுவரும் பகுதியில் இந்த கொலை சம்பவம் நடைபெற்று உள்ளது பொதுமக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
- கொள்ளிடம் ஆற்றை கடக்க முயன்ற போது படகு கவிழ்ந்து பெண் பலியானார்.
- ராசுகுட்டி மற்றும் கணேசன் நீந்தி கரை தப்பினர்.
கடலூர்:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே அனுமந்தபுரம் நாதல்படுகை பகுதியை சேர்ந்தவர் கணேசன். அவரது மனைவி காந்திமதி. இந்த தம்பதி மகன் ராசுகுட்டி. இவர்கள் கீழகுண்டல பாடி கொள்ளிடம் ஆற்று கரையோரம் ஆடு மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்த போது கொள்ளிடம் ஆற்றில் திடீரென வெள்ள ப்பெருக்கு ஏற்பட்டது. உடனே சிறிய நாட்டுப் படகில் ஆற்றை கடக்க முயற்சித்தனர். அப்போது ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் தோணி ஆற்றில் கவிழ்ந்தது. இதில் ராசுகுட்டி மற்றும் கணேசன் நீந்தி கரை தப்பினர். ஆனால் காந்திமதி நீரில் மூழ்கினார். உடனடியாக அவரை மீட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்க ப்பட்டு சிகிச்சையில் இருந்த காந்திமதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து அண்ணாமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மே ற்கொண்டு வருகின்றனர்.
- கடலூரில் மோசமான சாலைகளால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளளாகினர்.
- உரிய நடவடிக்கை எடுக்க மனு கொடுத்தும் சாலை அமைக்க எந்த நடவடிக்கையும் எடுககப்படவில்லை.
கடலூர்:
கடலூர் மாவட்டம் தொழிற்சாலை அதிகம் உள்ள பகுதியாக விளங்கி வருகிறது. குறிப்பாக கடலூர் சிப்காட் பகுதியில் அதிக தொழிற்சாலைகள் அமைய பெற்று உள்ளது. சிப்காட் அருேக கடலூர் துறைமுகம் பகுதியில் ெரயில்வே ஜங்ஷன் உள்ளது. இங்கு பல்வேறு ஐஸ் கட்டி தொழிற்சாலைகளும் உள்ளது. கடலூர் சிப்காட் வளாகத்தில் கெமிக்கல் தொழிற்சாலை, மாத்திரை தயாரிக்கும் தொழிற்சாலை, பெயிண்ட் தொழிற்சாலை, அலுமினிய பாத்திரங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளிட்ட பலவிதமான தொழிற்சாலைகள் உள்ளது.இப்படி கடலூரில் மற்றும் கடலூரை சுத்தி பலவிதமான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. மேலும் இங்கு பல்வேறு ஹோட்டல்கள், சுற்றுலா தலமான சில்வர் பீச் போன்றவற்றை உள்ளடக்கியது கடலூர். இப்படி முக்கியமானதாக இருந்தாலும் அனைவரும் போக்குவரத்துக்கு பயன்படுத்தக்கூடிய சாலை கடலூரில் மிக மோசமாக உள்ளது.
இந்த சாலை கடலூரிலும், பல்வேறு தொழிலை உள்ளடக்கிய துறைமுகத்திலும் சாலை மிக மோசமாக உள்ளது. இதனால் மோட்டார் சைக்கிளில் செய்பவர்கள் மற்றும் வாகனங்களில் செல்வோர் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த மோசமான நிலையில் உள்ள சாலையால் பல்வேறு விதமான பிரச்சினைகள் ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். மோசமான சாலையை சரி செய்ய உரிய நடவடிக்கை எடுக்க மனு கொடுத்தும் சாலை அமைக்க எந்த நடவடிக்கையும் எடுககப்படவில்லை. எனவே உரிய அதிகாரிகள் இதில் தலையிட்டு சாலையை சரி செய்ய வேண்டும் என்றுபொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
- கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் மகளை காதலிப்பதாக கூறி தாயை மானபங்கம்படுத்திய வாலிபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
- மலரை மானபங்கபடுத்தி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
கடலூர்:
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியை சேர்ந்தவர் மலர் (வயது 42). சம்பவத்தன்று அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் மலர் வீட்டுக்கு நேரில் சென்று அவரது மகளை காதலிப்பதாகவும், திருமணம் செய்து வைக்க வேண்டும் என கூறினார். பின்னர் மலரை மானபங்கபடுத்தி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் மலர் கொடுத்த புகாரின் பேரில் சக்தி ஆகாஷ் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பண்ருட்டி அருகே கிராம நிர்வாக அலுவலகத்தை மாற்ற எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
- ஆத்திரம் அடைந்த கிராம மக்கள்,கிராமநிர்வாகஅலுவலர்அலுவலகம்முன்பு திரண்டனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி வேகாக் கொல்லை கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் உள்ளது இந்த கிராம நிர்வாக அலுவலர்அலுவலகத்தை அதே பகுதியில் உள்ள அழகப்ப சமுத்திரம் ஊராட்சிசிறுதொண்டமாதேவிகிராமத்திற்கு மாற்றப்பட உள்ளதாகதகவல் பரவியது. ஆத்திரம் அடைந்த கிராம மக்கள்,கிராமநிர்வாகஅலுவலர்அலுவலகம்முன்பு திரண்டனர். பின்னர்கொள்ளு காரன் குட்டை- குள்ளஞ்சாவடி சாலையில்காட்டு வேகாகொல்லையில்சாலைமறியல்ஈடுபட்டனர்.இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
இது பற்றிய தகவல் அறிந்ததும் பண்ருட்டி தாசில்தார்சிவாகார்த்தி கேயன்,பண்ருட்டிபோலீஸ்இன்ஸ்பெக்டர்சந்திரன் மற்றும்காடாம்புலியூர்போலீசார்சம்பவஇடத்துக்குவிரைந்து சென்றனர்.பொதுமக்களிடம் பேச்சுவார்த்தைநடத்தினர். கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தை மாற்று வதாக எந்த உத்தரவும் பிறப்பிக்கப்பட வில்லை வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் எனபொதுமக்களிடம் தாசில்தார் விலக்கிகூறினார். இதனை தொடர்ந்து பொதுமக்கள்போராட்டத்தைவிலக்கிக்கொண்டனர் இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- பண்ருட்டியில் அடுத்தடுத்து 5 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை அடிக்கப்பட்டது.
- காலை கடையை திறக்க வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக்கண்டுஅதிர்ச்சி அடைந்தார்.
கடலூர்:
பண்ருட்டி-கும்பகோணம் சாலையில் பழக்கடை நடத்தி வருபவர் முத்து இவர் வழக்கம்போல நேற்று இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். இன்று காலை கடையை திறக்க வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக்கண்டுஅதிர்ச்சி அடைந்தார்.கடையில் இருந்தகல்லாப்பெட்டி உடைத்து அதில் இருந்த பணத்தை கொள்ளை அடித்துள்ளனர். இதே போல அருகில் இருந்த பால் கடை, மளிகை கடைகளிலும் பூட்டு உடைக்கப்பட்டு கொள்ளை நடந்தது மேலும்பண்ருட்டி அரசூர்ரோட்டில் மணி–நகரில் இருந்த ஸ்டூடியோ மருந்து கடை ஆகிய–வற்றில் பூட்டை உடைத்து விலை உயர்ந்த கேமரா கொள்ளையடித்து சென்ற–னர். இது பற்றி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். தகவல்அறிந்ததும் பண்ருட்டி போலீஸ்இன்ஸ்பெக்டர் சந்திரன், சப்இன்ஸ்பெக்டர் ரங்கநாதன் மற்றும் போலீ–சார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கடலூ–ரில் இருந்து கைரேகை நிபுணர்கள் தடை அறிவி–யல் நிபுணர்கள் வரவழைக் கப்பட்டனர். அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த–னர். தொடர்ந்து தனிப்படை அமைத்து மர்ம ஆசாமிகளை வலை வீசி தேடிவருகின்றனர் இந்த சம்பவம் இந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
- கடலூர் அருகே பள்ளி மாணவியை கடத்திய வாலிபரால் பரபரப்பு நிலவியது.
- அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் மாணவியை எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
கடலூர்:
கடலூர் அருகே சுனாமி நகரை சேர்ந்த 17 வயது பள்ளி மாணவி 12- ம் வகுப்பு படித்து முடித்து வீட்டில் இருந்தார். சம்பவத்தன்று மாணவி அதே பகுதியில் உள்ள கடைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த ஒரு வாலிபர் திடீரென்று மாணவியை கடத்தி சென்றார். அப்போது அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் பார்த்து அவர்களது பெற்றோர்களிடம் தெரிவித்தனர். அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் மாணவியை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து கடலூர் தேவனாம்பட்டினம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் வாலிபர் அஜய் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
- விருத்தாசலத்தில் செஸ்போட்டியில் சாதனை படைத்தவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
- செஸ் போட்டியில் முதல் மற்றும் இரண்டாம் நிலை பெற்ற 137 மாணவர்கள் பங்குபெற்றனர்.
கடலூர்:
உலக செஸ் தினம் மற்றும் சென்னையில் நடைபெறும் 44வது நடைபெறும் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் செஸ் போட்டி நடைபெற்றது. உலக செஸ் தினம் மற்றும் சென்னையில் வருகிற 28ம் தேதி தொடங்க உள்ள 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வட்டார அளவிலான சதுரங்க போட்டி நடைபெற்றது.
இப்போட்டியை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் தொடங்கி வைத்தார். மேலும் மாவட்ட கல்வி அலுவலர், வட்டார கல்வி அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் உடற்கல்வி இயக்குனர்கள் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அரசு மேல்நிலை, உயர்நிலை, நடுநிலை பள்ளிகளில் பயிலும், செஸ் போட்டியில் முதல் மற்றும் இரண்டாம் நிலை பெற்ற 137 மாணவர்கள் பங்குபெற்றனர். போட்டியில் முதல் 3 இடம் பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் வட்டார கல்வி அலுவலர்கள் ராஜேஸ்வரி, விமலா, வட்டார வளமை மேற்பார்வையாளர் செந்தில்குமார், உதவி தலைமையாசிரியர் கலையரசன், உடற்கல்வி அலுவலர்கள் ராஜராஜசோழன், பிரகாசம், தியாகு உள்ளிட்ட பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
- கடலூர் அருகே பெண் திடீரென மூச்சுதிணறல் ஏற்பட்டு இறந்தார்.
- ஜெகதீசன் கடந்த 2 வருடத்திற்கு முன்பு வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்று உள்ளார்.
கடலூர்:
கடலூர் முதுநகர் சேர்ந்தவர் ஜெகதீசன். இவரது மனைவி வினோதினி (வயது 28). இவர்களுக்கு திருமணமாகி 6 வருடம் ஆகியுள்ள நிலையில் ஒரு பெண் குழந்தை இருந்து வருகிறது. ஜெகதீசன் கடந்த 2 வருடத்திற்கு முன்பு வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்று உள்ளார். இந்த நிலையில் வினோதினிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திடீர் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்ட காரணத்தினால் சிகிச்சை பெற்று வந்துள்ளார். நேற்று மாலை திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட்டதால் கடலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று, பின்னர் புதுவை மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி வினோதினி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






