search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Farmers Union Executives"

    • கடலூர் கலெக்டர் அலுவலகத்தை விவசாயி சங்க நிர்வாகிகள் முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
    • போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் தொடர்ந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இன்று காலை விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து மாவட்டத்தில் இருந்து பல்வேறு விவசாயிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த நிலையில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் மாநில தலைவர் அய்யா கண்ணு தலைமையில் விவசாய சங்க நிர்வாகிகள் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட திரண்டனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மாநிலத் தலைவர் அய்யாகண்ணு மற்றும் விவசாயிகள் கலெக்டர் அலுவலகம் முன்பு தடுத்து நிறுத்தி ஆர்ப்பாட்டம் செய்ய அனுமதி கிடையாது எனக்கூறினர்.இந்த நிலையில் போலீசார் விவசாய சங்க நிர்வாகிகளிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் விவசாய சங்க நிர்வாகிகள் திட்டவட்டமாக தங்கள் போராட்டத்தை நடத்துவோம் என கூறினர்‌. பின்னர் திடீரென்று கடலூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலையில் அமர்ந்து அய்யாகண்ணு தலைமையில் போராட்டம் நடைபெற்றது. அப்போது மாநிலத் தலைவர் அய்யா கண்ணு நிருபர்களிடம் கூறியதாவது:-

    தனியார் சர்க்கரை ஆலைக்கு டன் கணக்கில் கரும்புகளை விவசாயிகள் வழங்கினர். மத்திய மற்றும் மாநில அரசு ஒரு டன்னுக்கு 2,700 வழங்குவதற்கு உத்தரவிட்டனர். ஆனால் சர்க்கரை ஆலை திவாலாகி மூடப்பட்டதால் தனியார் நிறுவனம் சர்க்கரை ஆலை கையகப்படுத்தி உள்ளதால், தற்போது ஒரு டன்னுக்கு 300 ரூபாய் தருவதாக கூறுகின்றனர். இதன் மூலம் விவசாயம் குடும்பம் முழுவதும் கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். மேலும் சர்க்கரை ஆலை நிர்வாகம் கரும்பு வெட்டுவதற்கு விவசாயிகளிடம் இருந்து கையெழுத்து பெற்று வங்கிகளில் 40 கோடி ரூபாய் கடன் பெற்றனர். அந்த பணத்தையும் வழங்காமல் உள்ளதால் தற்போது விவசாயிகள் நிலத்தை ஜப்தி செய்வதோடு அவர்களின் பொருட்களையும் ஜப்தி செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதன் காரணமாக இந்த பிரச்சனைக்கு தீர்வு காண விவசாய சங்க நிர்வாகிகள் கடந்த ஆறு மாதமாக மாவட்ட நிர்வாகத்தை நேரில் சந்தித்து மனு அளித்து வந்தனர். ஆனால் இதுவரை இதற்கு நிரந்தர தீர்வு இல்லை.

    ஆகையால் இன்று மறியல் போராட்டம் அறிவித்து தற்போது மறியல் போராட்டம் நடைபெற்று வருகின்றது. ஆனால் இதற்கு நிரந்தர தீர்வு கிடைக்கவில்லை என்றால் தேசிய நெடுஞ்சாலையில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளை ஆடு, மாடுகளை திரட்டி மிகப்பெரிய அளவில் போராட்டம் விரைவில் நடத்தப்பட உள்ளோம். மேலும் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நெல் டன் ஒன்றுக்கு 2500 ரூபாயும், கரும்புக்கு 4000 ரூபாயும் வழங்கப்படுவதாக உறுதி அளித்தார். அவர் வழங்குவார் என நம்பிக்கை வைத்துள்ளோம். மேலும் கூட்டுறவு கடன் சங்கத்தில் ஒரு ஏக்கர் நெல் பயிரிடுவதற்கு 32,000 கடன் வழங்க வேண்டும். ஆனால் பத்தாயிரம் ரூபாய் மட்டுமே வழங்குகிறார்கள். மேலும் நேரடி கொள்முதல் நிலையத்தில் லஞ்சம் தலைவிரித்து ஆடுவதால் விவசாயிகள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். ஆகையால் இதற்கெல்லாம் தீர்வு காண இந்த போராட்டம் நடைபெற்று உள்ளது இவ்வாறு கூறினார். இதனை தொடர்ந்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் தொடர்ந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கலெக்டரை சந்தித்து எங்கள் கோரிக்கைகள் தொடர்பாக பேச வேண்டும் என திட்டவட்டமாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து முக்கிய நிர்வாகிகள் கலெக்டரை சந்தித்து மனு அளிக்க போலீசார் அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கு இருந்து வருவதால் பரபரப்பாக காணப்பட்டு வருகிறது.

    ×