என் மலர்tooltip icon

    கடலூர்

    • கடலூர் மாவட்டத்தில் 10 மையங்களில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வு நடந்தது.
    • கடலூர் மாவட்டத்தில் கடலூர், புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் உள்ளிட்ட 10 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது.

    கடலூர்:

    தமிழக அரசு துறை–களில் கிராம நிர்வாக அலுவலர் இளநிலை உதவி–யாளர் உள்பட பல்வேறு பதவிகளில் 7,301 பணி–யிடங்களை நிரப்புவதற்கு டி.என்.பி.எஸ்.சி. சார்பில் கடந்த மார்ச் மாதம் 30-ந் தேதி அறிவிப்பு வெளியி–டப்பட்டது. இதையொட்டி இந்த பணிக்காக தமிழகம் முழு–வதும் தேர்வு எழுத 22 லட்சத்து 2,942 பேர் விண்ணப்பித்திருந்தனர். இந்த தேர்வு இன்று (24-ந் தேதி) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக தமிழகம் முழு–வதும் 316 தாலுகாகளில் 7,689 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

    கடலூர் மாவட்டத்தில் இந்த தேர்வினை 99,437 பேர் எழுத விண்ணப்பித்தி–ருந்தனர். இதற்காக கடலூர் மாவட்டத்தில் கடலூர், புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் உள்ளிட்ட 10 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது. இந்த தேர்வு இன்று காலை தொடங்கியது. தேர்வினை கண்காணிக்க 54 நடமாடும் குழு அமைக்கப்பட்டிருந்தது. 331 பறக்கும் படையினர் தீவிரமாக தேர்வினை கண்காணித்தனர். அதோடு 333 தேர்வு அறைகளுக்கு 342 வீடியோ கிராபர்கள் இந்த தேர்வினை பதிவு செய்தனர். இன்று காலை 9.30 மணிக்கு தேர்வு தொடங்கியது. தேர்வு மையத்தில் பலத்த சோத–னைக்கு பின்னறே தேர்வு எழுதுவோர் அனு–மதிக்கப்பட்டனர். மஞ்சக்குப்பம் புனித வளனார் பள்ளியில் அமைக்கப்பட்ட தேர்வு மையத்துக்கு ஒருவர் கால–தாமதமாக வந்தார். அவரை தேர்வு அலுவலர்கள் தேர்வு எழுத அனுமதிக்கவில்லை. ஆத்திரம் அடைந்த அவர் ஹால் டிக்கெட்டை கிழித்து எறிந்தார். இதேபோன்று பலர் தாம–தமாக வந்தனர். அவர்களை அதிகாரிகளை–யும் தேர்வு எழுத அனுமதிக்க வில்லை. அனுமதிக்கவில்லை.

    • பண்ருட்டி கோவில்களில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு பக்தர்கள் அலகு குத்தி தேர் இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.
    • நேர்த்தி கடனுக்காக பக்தர்கள் தலையில் மிளகாய்பொடி கரைசல் ஊற்றி அபிஷேகம் நடைபெற்றது.

    கடலூர்:

    பண்ருட்டி, திருவதிகை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் ஆடி கிருத்திகை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நேற்று நடை பெற்றது இதில் ஏராள மான பக்தர்கள் கலந்து கொண்டுநேர்த்தி கடனுக்காகவும் வேண்டு தல் நிறைவேறவும் அலகு குத்திக்கொண்டு வாகனங்களை இழுத்தனர். பண்ருட்டி ஒன்றியம் வீரப்பெருமாநல்லூர் சிவன் கோவிலில் அமைந்துள்ள தண்டபாணி சுவாமி சன்னதியில்ஆடி கிருத்திகை முன்னிட்டு சிறப்பு அபிஷே கம், ஆராதனை, சிறப்பு அலங்காரம், மகா தீபாராத னையும் நடந்தது.

    இதற்கான ஏற்பாடுகளை பண்ருட்டி அய்யப்பன் சுவாமி ஜவுளி ஸ்டோர் நிறுவனத்தினர் செய்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். முடிவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப் பட்டது. பண்ருட்டி அருகே புலவனூரில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற பால முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை முன்னிட்டு செடல் திருவிழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அலகு குத்திக்கொண்டு தேர் இழுத்தனர். முன்னதாக நேர்த்தி கடனுக்காக பக்தர்கள் தலையில் மிளகாய்பொடி கரைசல் ஊற்றி அபிஷேகம் நடை பெற்றது.

    • நீர்வரத்து அதிக உள்ளதால் வீராணம் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது.
    • இன்று காலை 8 மணி நிலவரப்படி 44.85 அடியாக உயர்ந்தது

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் நீர்மட்டம் 47.50 அடியாகும். இந்த ஏரி மூலம 44,856 ஏக்கர் நிலம் பாசனவசதி பெறுகிறது. அதோடு சென்னை மாந–கரின் குடிநீருக்கு முக்கிய ஆதராமாக உள்ளது. இந்த ஏரிக்கு பருவ–காலங்களில் பெய்யும் மழை மேட்டூர் அணை மூலம் தண்ணீர் வரத்து இருக்கும். இந்த ஆண்டு மேட்டூர் அணை முன்கூட்டியே திறக்கப்பட்டது. அதன்படி வீராணம் ஏரிக்கு மேட்டூர் அணை தண்ணீர் கடந்த மாதம் வந்து சேர்ந்தது. இதனால் நீர்மட்டம் படிபடி–யாக உயர்ந்தது.

    கடந்த 4 நாட்களுக்கு முன்பு மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியது. இதனால் அணையில் இருந்து 1.10 லட்சம் கனஅடி உபரி நீர் வெளியேற்றப்பட்டது. இந்த தண்ணீர் காவிரி, கொள்ளிடம் ஆறு வழியாக கடலில் பாய்ந்தது. வீராணம் ஏரிக்கு கொள்ளிடத்தில் இருந்து கீழணைக்கு தண்ணீர் திறந்துவிடப்படும். அங்கி–ருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு தண்ணீர் வரத்து இருக்கும். தற்போது கொள்ளி–டத்தில் வெள்ளப்பெருக்கு காரணமாக வீராணம் ஏரிக்கு தண்ணீர் அதிக அளவில் திறந்து–விடப்பட்டது. இதனால் ஏரியின் நீர்மட்டம் இன்று காலை 8 மணி நிலவரப்படி 44.85 அடியாக உயர்ந்தது. ஏரிக்கு 3,391 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. சென்னை மாநகர் குடிநீருக்காக 68 கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது. இதேபோன்று நீர் வரத்து இருந்தால் இந்த வாரத்துக்குள் வீராணம் ஏரி நிரம்பிவிடும் என்று பொது–பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • கடலூர் ெரயில் நிலையத்தில் அனைத்து ெரயில்களும் நின்று செல்ல வலியுறுத்தப்பட்டது.
    • திருப்பாதி–ரிப்புலியூர் ெரயில் நிலையத்தில் நின்று செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும்.

    கொேரானா ஊரடங்கு பிறகு ெரயில்கள் இயக்கப் பட்ட பின் கடலூர் திருப்பா–திரிப்புலியூர் ெரயில் நிலையத்தில் நின்று சென்ற மன்னார்குடி (16179, 16180), காரைக்கால் விரைவு ெரயில்கள் (16175, 16176) தற்போது நிற்பதில்லை. இதனால் இரவு நேரத்தில் சென்னை செல்லும் பயணிகள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். எனவே மீண்டும் திருப்பாதி–ரிப்புலியூர் ெரயில் நிலை–யத்தில் நின்று செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும்.

    ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் (16851, 16852), உழவன் எக்ஸ்பிரஸ் (16865, 16866), திருப்பதி (16780) வண்டிகளும் கடலூர் முதுநகர் ெரயில் நிலை–யத்தில் நின்று செல்வதற்கு ஏற்பாடு செய்திட வேண்டும்.

    கன்னியாகுமரி புதுச்சேரி (16862), மஹால் எக்ஸ்பிரஸ் (22623), (22624) ெரயில்கள் கடலூரில் நின்று செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும். 06122 சேலம் விருதாச்சலம் விரைவு ெரயில் கடலூர் முதுநகர் வரை நீட்டிக்க வேண்டும்.

    மயிலாடுதுறை இருந்து மைசூருக்கு இயக்கப்படும் ஜன்சாதப்தி விரைவு ெரயில் (16231), (16232) கடலூர் துறைமுகம் வரை நீட்டிக்கவும், விழுப்புரம் - தாம்பரம் பாசஞ்சர் முதுநகர் வரை நீட்டிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்ட குழு வலியுறுத்தி உள்ளது.

    • பாரத ஸ்டேட் வங்கி விவசாயிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது.
    • ரூபாய் ஒரு கோடி அளவிலான கடன் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வழங்கப்பட்டது.

    கடலூர்:

    சிதம்பரம் கிளை பாரத ஸ்டேட் வங்கி சார்பில் சிதம்பரம் அருகே உள்ள அய்யனூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் விவசாயிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமில் விவசாயிகளுக்கு ரூ.1 கோடி மதிப்பிலான கடன் திட்டங்கள் வழங்கப்பட்டது. வங்கி சார்பாக ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு ஸ்கூல் பேக் வழங்கப்பட்டது. மேலும் விவசாயிகளுக்கு ரூபாய் ஒரு கோடி அளவிலான கடன் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வழங்கப்பட்டது. விழாவில் கலந்து கொண்ட விவசாயிகள் அனைவருக்கும் மரக்கன்றுகள் பரிசாக வழங்கப்பட்டது. இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக அய்யனுர் சிறுகாலூர் மற்றும் பண்ணப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்து கொண்டனர். பாரத ஸ்டேட் வங்கியின் சார்பாக கிளை முதன்மை மேலாளர் .புருஷோத்தமன், புதுச்சேரி மண்டல மேலாளர் சதீஷ் பாபு, சென்னை தலைமை அலுவலக துணை பொது மேலாளர் ஜெகதீஷ் ஆகியோர்கள் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

    • கடலூர் மாவட்டத்தில் ஜீவன் ரக்ஷா பதாக் தொடர் விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
    • தகுதியுடையவர்கள் மாவட்ட சமூகநல அலுவலகம் ,அரசுசேவை இல்ல வளாகம், நெல்லிக்குப்பம் மெயின்ரோடு, கடலூர் என்ற விலாசத்தில் விண்ணப்பங்கள் பெற்று 30 ந்தேதி க்குள் கருத்துருக்களை சமர்ப்பிக்க வேண்டும்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் ஜீவன் ரக்ஷா பதாக் தொடர் விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இவ்விருதானது துணிச்சல் மிகுந்த பாராட்டுதலுக்குறிய செயல்கள் செய்தவர்களுக்கு வழங்கப்படுகிறது. மனித உயிர்களை காப்பாற்றும் பொருட்டு நீரில் மூழ்கி விபத்தில் சிக்கியவர்கள், தீ விபத்தில் சிக்கியவர்கள், மின்சார விபத்து நிலச்சரிவு, விலங்குகள் தாக்குதல் மற்றும் சுரங்க விபத்திலிருந்து மனிதர்களை காப்பாற்றியவர்களுக்கு இவ்விருதானது மூன்று வகைகளாக வழங்கப்படுகிறது. சர்வோட்டம் ஜீவன் ரக்ஷாபதாக், உத்தம் ஜீவன் ரக்ஷாபதாக, ஜீவன் ரக்ஷாபதாக் மேற்கண்ட வகைகள் கொண்ட விருதுகள் பெற தகுதியுடையவர்கள் மாவட்ட சமூகநல அலுவலகம் ,அரசுசேவை இல்ல வளாகம், நெல்லிக்குப்பம் மெயின்ரோடு, கடலூர் என்ற விலாசத்தில் விண்ணப்பங்கள் பெற்று 30 ந்தேதி க்குள் கருத்துருக்களை சமர்ப்பிக்குமாறு கலெக்டர் பாலசுப்ரமணியம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருந்தது.

    • கடலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு நேர்முகத் தேர்வு தற்காலிகமாக நிறுத்தம் என்று மாவட்ட முதன்மை நீதிபதி அறிவித்துள்ளார்.
    • நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் மற்றும் நேரம் பின்னர் அறிவிக்கப்படும்.

     கடலூர்:

    கடலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் கீழ் இயங்கும் அலுவலகத்தில் பணியிடங்கள் நிரப்பப்பட விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மேற்படி காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு நேர்முகத் தேர்வு நாளை மறுநாள் (25 -ந்தேதி) நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழு உத்தரவின் பேரில் நாளை மறுநாள் 25ந்தேதி நடைபெறவிருந்த நேர்முகத்தேர்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் மற்றும் நேரம் பின்னர் அறிவிக்கப்படும் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்கள் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்த கடலூர் மாவட்ட நீதிமன்ற http://districts.ecourts.gov.in/Cuddalore என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளுமாறு கடலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான ஜவகர் தெரிவித்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கடலூர் மாவட்டத்தில் அஞ்சல்வழி கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி தொடங்கப்பட உள்ளது.
    • இப்பயிற்சியில் சேருவதற்கான விண்ணப்பப் படிவம் 19 ந்தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது.

    கடலூர்:

    டாக்டர் எம்.ஜி.ஆர் . கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2022-2023 ஆம் ஆண்டிற்கு அஞ்சல் வழி கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி தொடங்கப்பட உள்ளது . இப்பயிற்சியானது அனைத்து கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் கூட்டுறவு பட்டயப் பயிற்சி பெறாத பணியாளர்களுக்கு பயிற்சி பெற ஒரு நல்ல வாய்ப்பாகும். கல்வித்தகுதியாக பழைய 10 - ம் வகுப்பு தேர்ச்சி ( பழைய எஸ்.எஸ்.எல்.சி ) புதிய 10 - ம் வகுப்பு தேர்ச்சி இப்பயிற்சிக்கான பெற்றிருக்க வேண்டும் . அஞ்சல் வழி கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி அனைவருக்கும் வழங்குவதில் தடைகள் வேண்டுவ தி ல்லையாதலால் ஓராண்டு தொடர் பணி இருக்க வேண்டுமென்ற நிபந்தனையின்றி கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து நிரந்தர பணியாளர்களும் இந்தப் பயிற்சியினை மேற்கொள்ளலாமெனத் தெரிவிக்கப்படுகிறது.

    விண்ணப்ப படிவத்தில் விண்ணப்பதாரர் பணிநியமனம் செய்யப்பட்ட முறைகள் குறித்து அதாவது வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக ( அல்லது ) கருணை அடிப்படையில் ( அல்லது ) அரசு பதிவாளர் உத்தரவுப்படி விவரம் குறிப்பிடப்பட வேண்டும் . பயிற்சி அலுவலக வார விடுமுறை நாட்களில் நடைபெறும் . தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்களுக்கு பயிற்சி முடிவில் கூட்டுறவு மேலாண்மை பட்டயம் கணினி மேலாண்மை , மற்றும் நகைமதிப்பிடும் அதன் நுட்பங்களும் ஆகிய மூன்று சான்றிதழ்கள் வழங்கப்படும். இப்பயிற்சியில் சேருவதற்கான விண்ணப்பப் படிவம் 19 ந்தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது . டாக்டர் எம்.ஜி.ஆர் கூட்டுறவு மேலாண்மை நிலைய அலுவலகத்தில் 100 ரூபாய் ரொக்கமாக செலுத்தி நேரில் பெற்றுக்கொள்ளலாம்.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி ஆகஸ்ட் 1 ந்தேதி ஆகும் . இப்பயிற்சியானது 8 ந்தேதி தொடங்கப்படவுள்ளது . மேலும் விபரங்களுக்கு டாக்டர் எம்.ஜி.ஆர் . கூட்டுறவு மேலாண்மை நிலையம், எண் .3 கடற்கரை சாலை , சரவணபவா கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை வளாகம் , கடலூர் -1 தொலைபேசி எண் 04142-222619 மூலமாகவோ அல்லது நேரிலோ தொடர்பு கொள்ளலாம் என கூட்டுறவு துறை மண்டல இணை பதிவாளர் நந்தகுமார் செய்திக்குறிப்பில் கூறிப் பட்டிருந்தது. 

    • கடலூரில் தி.மு.க. அரசை கண்டித்து நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பெருந் திரளாக கலந்து கொள்ள வேண்டும்: முன்னாள் அமைச்சர் எம்.சி. சம்பத் வலியுறுத்தினார்.
    • பொதுச் செயலாளராக பதவி ஏற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமி சிறப்பாக ஆட்சி நடத்தி மக்களிடையே செல்வாக்கு பெற்றார்.

    கடலூர்:

    அ.தி.மு.க. சார்பில் மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை கண்டுகொள்ளாத திமுக அரசை கண்டித்து கடலூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பாக நடைபெற உள்ள ஆர்ப்பாட்டம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் பாதிரிக்குப்பம் அ.தி.மு.க. அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கடலூர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் தொழில் துறை அமைச்சருமான எம்.சி.சம்பத் தலைமை தாங்கினார். மீனவர் அணி செயலாளர் தங்கமணி, பேரவை துணை செயலாளர் ஆர்.வி.ஆறுமுகம், மாவட்ட அவைத் தலைவர் சேவல் குமார், ஒன்றிய செயலாளர் காசிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கடலூர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.சி.சம்பத் பேசியதாவது:-

    அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் தான் முதன்முதலாக தமிழக மக்களுக்கு 100 யூனிட் மின்சாரத்தை இலவசமாக ெஜயலலிதா வழங்கினார். மேலும் வீட்டு மின் இணைப்புகளுக்கு பல சலுகைகளை கொடுத்த அரசு அதிமுக அரசு. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் சொத்து வரி உயர்த்தப்பட்டது.கள்ளக்குறிச்சி சம்பவமே இதற்கு சாட்சி. உளவுத்துறை தோல்வி அடைந்துள்ளது. இதை நாம் மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும். அ.தி.மு.க ஆட்சி காலத்தில் மின்மிகை மாநிலமாக இருந்த தமிழ்நாடு இப்போது மின்தடை மாநிலமாக உள்ளது. நமது இடைக்கால பொதுச் செயலாளராக பதவி ஏற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமி சிறப்பாக ஆட்சி நடத்தி மக்களிடையே செல்வாக்கு பெற்றார். இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் . இவ்வாறு அவர் பேசினார்

    கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர்கள் பக்கிரி, மணிமேகலை தஷ்ணா, வர்த்தக பிரிவு வரதராஜன், இலக்கிய அணி ஏழுமலை, பகுதி கழக செயலாளர்கள் வெங்கட்ராமன், வக்கீல் பாலகிருஷ்ணன், கெமிக்கல் மாதவன், வினோத்ராஜ், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் தமிழ்ச்செல்வி ஆதிநாராயணன், கல்யாணி ரமேஷ், மாநகராட்சி கவுன்சிலர்கள் பரணிமுருகன், அலமேலு ராஜி, ஒன்றிய கவுன்சிலர்கள் வேல்முருகன், கிரிஜா செந்தில்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • மாணவியின் இறுதி சடங்கில் வெளியூர் ஆட்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • ஏராளமானோர் சொந்த ஊருக்கு செல்ல முயன்றனர். இதனை அறிந்த போலீசார் மாணவியின் சொந்த ஊரில் குவிக்கப்பட்டனர்.

    கடலூர்:

    சின்னசேலம் பள்ளியில் இறந்த மாணவியின் ஸ்ரீமதியின் உடல் இன்று காலை 6.50 மணிக்கு பெற்றோரிடம் ஒப்டைக்கப்பட்டது. அதன்பின்னர் ஆம்புலன்ஸ் வேன் மூலம் மாணவியின் சொந்த ஊராக பெரியநெசலூர் கிராமத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. மாணவியின் உடல் இன்று கொண்டு வரபடுவதையொட்டி ஏராளமானோர் சொந்த ஊருக்கு செல்ல முயன்றனர். இதனை அறிந்த போலீசார் மாணவியின் சொந்த ஊரில் குவிக்கப்பட்டனர். அப்போது போலீசார் ஜீப் மூலம் வெளியூர் நபர்கள் யாரும் மாணவியின் ஊருக்கு வரவேண்டாம். அப்படி மீறி வந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தனர். அதனை தொடர்ந்து வெளியூர் நபர்கள் வருவது கண்காணிக்கப்பட்டது. கள்ளக்குறிச்சியில் இருந்து மாணவியின் ஊர் வரை போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். பெரியநெசலூர் கிராமத்தில் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    • கடலூரில் பயங்கரம் நகைக்காக சப்-இன்ஸ்பெக்டர் மனைவியை கொன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • தனக்கு தெரிந்த ஒருவரை பார்த்து விட்டு வருவதாக கூறி , வெளியே சென்றுள்ளார் . அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை .

     கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி காங்கேயன்குப்பத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற போலீஸ் சிறப்பு சப் - இன்ஸ்பெக்டர் சதாசிவம்.அவரது மனைவி மலர்க்கொடி ( வயது 54). இவர்களது மகன் சிவகுரு ( 30 ). போலீஸ்காரரான இவர் கடலூர் புதுக்குப்பம் போலீஸ் குடியிருப்பில் தங்கி கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்தில் வேலை பார்த்து வருகிறார். உடல் நிலை சரியில்லாத மலர்க்கொடி கடலூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தனது மகன் சிவகுரு வீட்டுக்கு சென்றார் பின்னர் மாலை ஆைணக்குப்பத்தில் உள்ள தனக்கு தெரிந்த ஒருவரை பார்த்து விட்டு வருவதாக கூறி , வெளியே சென்றுள்ளார் . அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை .

    இதற்கிடையில் கடலூர் ஆனைக்குப்பத்தில் ஏற்க னவே வசித்த பழைய போலீஸ் குடியிருப்பில் மலர்க்கொடி தலையில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அப்போது மலர்க்கொடி முகம் சிதைக்கப்பட்டு இருந்தது . அவரை மர்ம நபர் அடித்துக் கொலை செய்திருப்பது தெரியவந்தது. இருப்பினும் ஒரு காது அறுக்கப்பட்டு , ேதாடு கிடந்தது. மற்றொரு காதில் இருந்த நகையை காணவில்லை. மேலும் தகவல் அறிந்ததும் சிவகுருவும் சம்பவ இடத்துக்கு சென்று , இறந்தது தனது தாய் மலர்க்கொடி தான் என்பதை உறுதி செய்தார். இந்த நிலையில் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மலர்கொடி உடலை பார்வையிட்டு அதிகாரிகளிடம் சம்பவம் குறித்து கேட்டறிந்தார்.

    தகவல் அறிந்த துணை போலீஸ் கரிகால் பாரி சங்கர், இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர் கதிரவன் ஆகிய மூன்று பேர் தலைமையில் தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதன் விளைவாக போலீசாரிடம் வாலிபர் பிடிபட்டார். அவரது பெயர் சத்தியம் (34). கடலூர் புதுக்குப்பம் பகுதிரயை சேர்ந்த இவர் நகைககாக போலீஸ் அதிகாரி மனைவி மலர்கொடியை கொன்றதாக போலீசாரிடம் தெரிவித்தனர். அவர் மலர்கொடியிடம் இருந்து கம்மலை பறித்து சென்றார். இதுதொடர்பாக அந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். கைதான அவரிடம் நகையை பறிமுதல் செய்ய உள்ளனர். நகைக்காக போலீஸ் அதிகாரி மனைவி கொலை செய்யப்பட்ட சம்பவம் கடலூரில் பரபரப்ைப ஏற்படுத்தி உள்ளது.

    • கடலூர் மாவட்டத்தில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
    • சுற்றி இருக்கும் வெயிலும் அதிகரித்து காணப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

    கடலூர்:

    தமிழகத்தில் மேல் வளிமண்டல சுழற்சி நிலவுவதால் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், திருவாரூர் நாகப்பட்டினம் மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி நேற்று மாலை கடலூர் மாவட்டத்தில் கடலூர், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, காட்டு மயிலூர், காட்டுமன்னா ர்கோவில்,வேப்பூர், லால்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த இடியுடன் கூடிய மழை பெய்து வந்தது. இப்பகுதிகளில் நேற்று இரவு முதல் அதிகாலை வரை மழை பெய்து வந்தன.

    இதன் காரணமாக கடலூர், நெல்லிக்குப்பம் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய மழை காரணமாக மின்தடை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து மின்சார துறை ஊழியர்கள் இரவு முழுவதும் மின்தடை காரணம் குறித்து ஆய்வு செய்து மின் இணைப்பு அதிகாலை வரை வழங்கி வந்தனர். மேலும் கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் சுற்றி இருக்கும் வெயிலும் அதிகரித்து காணப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும். கடலூர் மாவட்டத்தில் மழை அளவு மில்லி மீட்டர் அளவில் பின்னும் வருமாறு:- காட்டுமன்னார்கோவில் - 44.2,எஸ்.ஆர்.சி குடிதாங்கி - 42.5, வேப்பூர் - 39.0,லால்பேட்டை - 38.0,பண்ருட்டி - 30.0 ஆட்சியர் அலுவலகம் - 21.6வானமாதேவி - 21.6 காட்டுமயிலூர் - 4.0 9. கடலூர் - 3.8 என‌ மொத்த - 244.70 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகி உள்ளது

    ×