என் மலர்tooltip icon

    கடலூர்

    • கடலூரில் புதிய பஸ் நிலையம் அமைக்காவிட்டால் கள்ளக்குறிச்சி மாவட்டம் போல் கடலூர் மாறும் என முன்னாள் அமைச்சர் எம்.சி. சம்பத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    • தற்போது மின்சார கட்டணம் வரலாறு காணாத வகையில் உயர்த்தி உள்ளனர்.தமிழகத்தில் 40 சதவீதம் மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

    கடலூர்: 

    கடலூர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மின் கட்டணம் உயர்வு, சொத்து வரி உயர்வு மற்றும் சட்ட ஒழுங்கு சீர்கேட்டினை கண்டு கொள்ளாத தி.மு.க. அரசை கண்டித்து கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத் தலைமை தாங்கி பேசினார்.அவர் ேபசியதாவது:- அ.தி.மு.க. .ஆட்சி காலத்தில் 100 யூனிட் இலவசம் மின்சாரம் வழங்கப்பட்டது. ஆனால் தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்று ஒரு வருடத்தில் தற்போது மின்சார கட்டணம் வரலாறு காணாத வகையில் உயர்த்தி உள்ளனர்.தமிழகத்தில் 40 சதவீதம் மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. தனியாரிடம் ரூ.2.73-க்கு ஒரு யூனிட் மின்சாரம் கிடைத்து வரும் நிலையில் ரூ.5.25-க்கு மின்சாரம் வாங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் மக்கள் மீது அரசு வரியை சுமத்தி வருகின்றனர். மேலும் சொத்து வரி 50 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை வீடுகளுக்கும், கமர்சியல் இடத்திருக்கும் தமிழக அரசு உயர்த்தி உள்ளதால் வணிகர்கள், பொதுமக்கள் கடும் அவதிஅடைந்து உள்ளனர்.

    இது மட்டும் இன்றி சிமெண்ட், கம்பி, ஜல்லிக்கற்கள் போன்றவற்றின் விலை கடுமையாக விலை உயர்ந்து உள்ளதால் பொதுமக்களின் அடிப்படை வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது. ஆனால் அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் தாலிக்கு தங்கம், மாணவர்களுக்கு லேப்டாப், பெண்களுக்கு ஸ்கூட்டி, மற்றும் அம்மா குடிநீர், அம்மா மருந்தகம், அம்மா சிமெண்ட் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றி பொதுமக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். தற்போது தி.மு.க. ஆட்சியில் கடலில் பேனா வைப்பதற்கு 80 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ள இருப்பதாக தகவல் வந்துள்ளன. ஆனால் தமிழகம் முழுவதும் மக்கள் கடும் நிதி நெருக்கடியில் உள்ள நிலையில் 80 கோடி ரூபாய் செலவில் இந்த பணிகள் மேற்கொள்வது அரசுக்கு நியாயமா?.

    தமிழகத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சினை தலைவிரித்து ஆடுகிறது. இதற்கு எடுத்துக்காட்டாக கள்ளக்குறிச்சி சம்பவம் அனைவருக்கும் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியதோடு சட்ட ஒழுங்கு பிரச்சினை கேள்விக்குறியாக்கி உள்ளது. இது மட்டும் இன்றி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் லாக்கப்பில் சாவு ஏற்பட்டு உள்ளது. ஆனால் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற அ.தி.மு.க. ஆட்சியில் சட்ட ஒழுங்கு சீர்நிலையில் இருந்து வந்தது. இந்த நிலையில் கடலூர் மக்கள் பயன்பெறும் வகையில் கலெக்டர் அலுவலகம் அருகில் பஸ் நிலையம் அமைப்பதற்கு அ.தி.மு.க. ஆட்சியில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டது.

    ஆனால் தற்போது தி.மு.க. ஆட்சியில் எம். புதூர் பகுதியில் புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருவதை மக்கள் ஏற்றுக் கொள்வார்களா? அல்லது அந்த இடத்தை மக்கள் விரும்புகிறார்களா? என்பதனை பார்க்க வேண்டும் .மேலும் கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். ஆகையால் கடலூரில் புதிய பஸ் நிலையம் அமைக்காவிட்டால் கள்ளக்குறிச்சி மாவட்டம் போல் கடலூர் மாவட்டம் மாறும் என்பதனை கலெக்டர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோருக்கு எச்சரிக்கை விடுகிறோம். இது போன்ற சம்பவங்கள் முழுவதும் தவிர்க்கப்பட வேண்டுமானால் தி.மு.க. ஆட்சியை அகற்றி தூக்கி எறிய வேண்டும். மேலும் தமிழகத்தில் மந்திரிகள், அதிகாரிகள் தனிப்பட்ட முறையில் செயல்பட முடியாமல் குடும்ப ஆட்சியாக திமுக செயல் படுகின்றது மக்களை வஞ்சிக்கின்ற ஆட்சியாக திமுக செயல் படுகின்றது. ஆகையால் மக்கள் பிரச்சினை தீர்க்கும் அரசாக அதிமுக இருந்து வருவதால் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு அமைய மக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக முன்னாள் அமைச்சர் எம்.சி. தாமோதரன், அ.தி.மு.க. மருத்துவர் அணி தலைவர் டாக்டர் சீனிவாச ராஜா, மாநில இளைஞரணி துணை செயலாளர் சி.கே.எஸ். கார்த்திக்கேயன், மீனவரணி தங்கமணி, பேரவை துணைச் செயலாளர் ஆர்.வி. ஆறுமுகம், பகுதிகளை செயலாளர்கள் வெங்கட்ராமன், வக்கீல் பாலகிருஷ்ணன், கெமிக்கல் மாதவன், வினோத் ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட அவை தலைவர் சேவல் குமார், ஒன்றிய செயலாளர் காசிநாதன், மாவட்ட பொருளாளர் ஜானகிராமன், மாவட்ட துணை செயலாளர் பக்கிரி ஆகியோர் வரவேற்றனர். முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் திமுக அரசை கண்டித்து கண்டன கோஷம் எழுப்பப்பட்டன.ஆர்ப்பாட்டத்தில் வட்ட துணை செயலாளர் மணிமேகலை தஷ்ணா, மாநகராட்சி கவுன்சிலர்கள் சங்கீதா வசந்த ராஜ், ஏ.ஜி.தஷ்ணா, ஏ.ஜி.எம். வினோத்குமார், ஒன்றிய செயலாளர்கள் கந்தன், தமிழ்ச்செல்வம், நாகபூஷணம், சிவா, நகர செயலாளர்கள் முருகன், காசிநாதன், பேரூராட்சி செயலாளர்கள் கனகராஜ், அர்ஜுனன், மாவட்ட மாணவரணி செயலாளர் கலையரசன், வர்த்தக பிரிவு வரதராஜன், இலக்கிய அணி ஏழுமலை, இணைச் செயலாளர் முத்து, சிறுபான்மை பிரிவு தாஜுதீன், ஒன்றிய கவுன்சிலர்கள் மகேஸ்வரி விஜய ராயலு, வேல்முருகன், கிரிஜா செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய செயலாளர் அழகானந்தம் நன்றி கூறினார். முன்னதாக அ.தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான நிர்வாகிகள் மற்றும் பெண்கள் திரண்டு வந்ததால் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டிருந்தது.

    • திட்டக்குடி டி.எஸ்.பி. அலுவலகம் முன்பு மூதாட்டி தீக்குளிக்க முயன்றார்.
    • நீண்ட நாட்களாக செந்தில் அசல் பணத்தையும் தரவில்லை, வட்டியும் தரவில்லை. 2017-ம் ஆண்டு 23 ஆயிரம் கொடுத்துள்ளார்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே ஆவினங்குடி கிராமத்தை சேர்ந்தவர் வடிவேல். இவரது மனைவி வள்ளி (வயது60) கூலி தொழிலாளி. தனது மகன் கடந்த 2009 ஆம் ஆண்டு சாலை விபத்தில் உயிரிழந்தார். நீதிமன்ற உத்தரவு பேரில் சாலை விபத்தில் இறந்து போன மகனுக்கு 40 ஆயிரம் நஷ்ட ஈடாக வழங்கப்பட்டது. அந்த பணத்தினை அதே பகுதியை சேர்ந்த பூமாலை மகன் செந்தில் (43) என்பவருக்கு கடந்த 2014-ம் ஆண்டு 40 ஆயிரத்தையும் அவரிடம் கொடுத்துள்ளார். நீண்ட நாட்களாக செந்தில் அசல் பணத்தையும் தரவில்லை, வட்டியும் தரவில்லை. 2017-ம் ஆண்டு 23 ஆயிரம் கொடுத்துள்ளார். இந்நாள் வரை மீதி தொகையை தராமல் இழுத்த–டித்தார். பணம் கேட்டால் ஆபாசமாக திட்டி உன்னை கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டியதாக கூறப்படுகிறது. 

    இது குறித்து வள்ளி ஆவினங்குடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகார் செய்தும் காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்காத–தால் மன உளைச்சலான மூதாட்டி இன்று காலை திட்டக்குடி டி.எஸ்பி. அலுவலகம் முன்பு மண்எண்ணை கேனுடன் வந்து தனது உடல் முழுவதும் மண்எண்ணயை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அங்கிருந்த போலீசார் அவர் மீது தண்ணீரை ஊற்றினர் டி.எஸ்பி. அலுவலகம் அழைத்து சென்று விசாரணை செய்தனர் . உங்களது பணம் விரைவில் பெற்றுத் தரப்படும் என காவல்துறையினர் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து மூதாட்டி சிகிச்சைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

    • விருத்தாசலத்தில் பயங்கரம் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
    • உயிருக்கு போராடிய ரம்யா–வை வயலில் வேலை செய்தவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்து மீட்டு விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே கார்மாங்குடி பகுதியை சேர்ந்தவர் அம்பலவாணன். அவரது மகன் ஸ்ரீதர்இவருக்கும் குறிஞ்சிப் பாடி பெத்தநாயகன் குப்பம் பகுதி சேர்ந்த ரம்யா என்ப வரும் 5 வருடங்களாக காதலித்து வந்தனர். இந்நிலையில் இவர்களுக்கு கடந்த 2 மாதத்துக்கு முன்பு திருமணம் நிச்சயக்கப் பட்டது.

    இந்நிலையில் ஸ்ரீதர் புதுப்பெண் ரம்யாவை மோட்டார் சைக்கிளில் கார்மாங்குடிக்கு அழைத்து வந்தார். அப்போது கார்மாங்குடி அருகே வந்த போது இருவருக்கும் இடையில் வாய் தகராறு ஏற்பட்டது.

    ஆத்திரமடைந்த ஸ்ரீதர் தனது மோட்டார் சைக்கிளை சாலை ஓரமாக நிறுத்தி மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த சுத்தியலால் ரம்யாவின் தலையில் அடித்தார். இதனால் அவர் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்தார். பின்னர் ஸ்ரீதர் அங்கிருந்து தனது மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுவிட்டார்.

    இதனை அருகே வயலில் வேலை செய்தவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் உயிருக்கு போராடிய ரம்யாவை மீட்டு விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். தற்ேபாது 2 நாட்களுக்கு முன்பு கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இன்று காலை சிகிச்சை பலனின்றி ரம்யா பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து கருவேப்பிலங்குறிச்சி போலீசார் கொலை வழக்காக மாற்றி இதற்கு காரணமான ஸ்ரீதரை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

    • விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகில் இன்று காலை அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
    • முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் தலைமை தாங்கினார்.

    கடலூர்:

    கடலூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் மின் கட்டணம் உயர்வு, சொத்து வரி உயர்வு மற்றும் சட்ட ஒழுங்கு சீர்கேட்டை கண்டு கொள்ளாத தி.மு.க. அரசை கண்டித்து கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத் தலைமை தாங்கினார்.

    முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் திமுக அரசை கண்டித்து கண்டன கோஷம் எழுப்பப்பட்டன.

    விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகில் இன்று காலை அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் தலைமை தாங்கினார்.

    ஆர்ப்பாட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் சக்கரபாணி, அர்ஜுனன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தி.மு.க. பிரமுகர் கலியமூர்த்திக்கும், அதே பகுதியை சேர்ந்த தனபால் என்பவருக்கும் அந்த பகுதியில் உள்ள கோவிலில் திருவிழா நடத்துவது தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டது.
    • போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் நேரில் விசாரணை நடத்தினார். அதனை தொடர்ந்து தாசில்தார் சிவா.கார்த்திக்கேயன் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார்.

    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள குடுமியான் குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் கலியமூர்த்தி. தி.மு.க. பிரமுகர். இவர் நேற்று இரவு வீட்டில் குடும்பத்துடன் தூங்கினார்.

    நள்ளிரவு சமயம் மர்மநபர்கள் அங்கு வந்தனர். அவர்கள் கலியமூர்த்தி வீட்டின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி சென்றனர். அது பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. அதிர்ச்சி அடைந்த கலியமூர்த்தி வெளியே வந்து பார்த்தார்.

    அப்போது பெட்ரோல் குண்டுகள் வீசியது கண்டு அந்த பகுதியில் யாராவது உள்ளார்களா? என தேடினார். ஆனால் யாரும் தென்படவில்லை.

    இதுகுறித்து புதுப்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையிலான போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் பரபரப்பு தகவல் கிடைத்து உள்ளது.

    தி.மு.க. பிரமுகர் கலியமூர்த்திக்கும், அதே பகுதியை சேர்ந்த தனபால் என்பவருக்கும் அந்த பகுதியில் உள்ள கோவிலில் திருவிழா நடத்துவது தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டது.

    இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் நேரில் விசாரணை நடத்தினார். அதனை தொடர்ந்து தாசில்தார் சிவா.கார்த்திக்கேயன் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். இதில் கலியமூர்த்தி பங்கேற்கவிலை. எனவே தனபால் தரப்பு திருவிழா நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. எனவே இந்த முன்விரோதத்தில் கலியமூர்த்தி வீடு மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த சம்பவத்தால் அங்கு பதட்டம் நிலவுகிறது. இதனை தொடர்ந்து போலீசார் அங்கு குவிக்கப்பட்டு உள்ளனர்.

    • பண்ருட்டி அருகே மானடிகுப்பத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கபடி போட்டியில் விளையாடினார். அப்போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்தார்.
    • கீழே விழுந்ததும் கீழகுப்பம் கிராம எதிர் அணியை சேர்ந்த வீரர் பிடிக்க முற்பட்ட போது இவரது மார்பில் அடிபட்டு சுய நினைவில்லாமல் கிடந்தார்.

    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே பெரிய புறங்கணிமுருகன் கோவில் தெரு சேர்ந்தவர் விமல்ராஜ் (வயது21) கபடி அணி வீரர். இவர் சேலம் தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி 2-ம் ஆண்டு படித்து வந்தார். சேலத்தில் உள்ள கபடி அகாடமி ஒன்றில் கபடி பயிற்சி பெற்று வந்தார்.

    இவர் நேற்று இரவு பண்ருட்டி அருகே மானடிகுப்பத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கபடி போட்டியில் விளையாடினார். அப்போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்தார்.

    கீழே விழுந்ததும் கீழகுப்பம் கிராம எதிர் அணியை சேர்ந்த வீரர் பிடிக்க முற்பட்ட போது இவரது மார்பில் அடிபட்டு சுய நினைவில்லாமல் கிடந்தார். உடனே அக்கம் பக்கம் உள்ளவர்கள் அவரை பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே விமல்ராஜ் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    முத்தாண்டிக்குப்பம் போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் இங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • விருத்தாசலத்தில் நடந்து சென்ற வங்கி பெண் ஊழியரிடம் தாலி செயினை மர்ம நபர் அறுத்து கொண்டு தப்பி ஓடி சென்றார்.
    • அதிர்ச்சி அடைந்த ஜோதி அவரை துரத்தி பிடிக்க முயன்றார்.

    கடலூர்:

    விருத்தாசலம் கல்லூரி நகரை சேர்ந்தவர் முத்துக்குமார், இவரது மனைவி ஜோதி(40). இவர் ஜங்ஷன் ரோட்டில் உள்ள தனியார் வங்கியில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.

    இவர் பணி முடிந்து நடந்து வீடு திரும்புகையில், கல்லூரி நகரில் உள்ள விளையாட்டு அரங்கம் அருகே வந்து கொண்டிருந்தபோது அங்கு வந்த மர்ம நபர் ஜோதியின் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தாலி செயினை அறுத்து கொண்டு தப்பி ஓடி சென்றார்.

    அதிர்ச்சி அடைந்த ஜோதி அவரை துரத்தி பிடிக்க முயன்றார். ஆனால் அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடி மாயமாக மறைந்தார். இது குறித்து ஜோதி அளித்த புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    • வீராணம் ஏரிக்கு 20,208 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
    • சென்னை மாநகர் குடிநீருக்காக 68 கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது.

    காட்டுமன்னார்கோவில்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் நீர்மட்டம் 47.50 அடியாகும். இந்த ஏரி மூலம 44,856 ஏக்கர் நிலம் பாசனவசதி பெறுகிறது. அதோடு சென்னை மாநகரின் குடிநீருக்கு முக்கிய ஆதாரமாக உள்ளது.

    இந்த ஏரிக்கு பருவகாலங்களில் பெய்யும் மழை மேட்டூர் அணை மூலம் தண்ணீர் வரத்து இருக்கும். இந்த ஆண்டு மேட்டூர் அணை முன்கூட்டியே திறக்கப்பட்டது. அதன்படி வீராணம் ஏரிக்கு மேட்டூர் அணை தண்ணீர் கடந்த மாதம் வந்து சேர்ந்தது. இதனால் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்தது.

    கடந்த வாரம் மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியது. இதனால் அணையில் இருந்து 1.10 லட்சம் கனஅடி உபரி நீர் வெளியேற்றப்பட்டது. இந்த தண்ணீர் காவிரி, கொள்ளிடம் ஆறு வழியாக கடலில் பாய்ந்தது.

    வீராணம் ஏரிக்கு கொள்ளிடத்தில் இருந்து கீழணைக்கு தண்ணீர் திறந்துவிடப்படும். அங்கிருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு தண்ணீர் வரத்து இருக்கும்.

    தற்போது கொள்ளிடத்தில் வெள்ளப்பெருக்கு காரணமாக வீராணம் ஏரிக்கு தண்ணீர் அதிக அளவில் திறந்துவிடப்பட்டது. இதனால் ஏரியின் நீர்மட்டம் இன்று காலை 8 மணி நிலவரப்படி 45.45 அடியாக உயர்ந்தது.

    வீராணம் ஏரிக்கு 20,208 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. சென்னை மாநகர் குடிநீருக்காக 68 கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது.

    இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், வீராணம் ஏரிக்கு நாளுக்குநாள் தண்ணீர் வரத்து அதிகம் உள்ளது. இதேபோன்று தொடர்ந்து நீர்வரத்து இருந்தால் இன்னும் ஓரிருநாளில் வீராணம் ஏரி நிரம்பிவிடும். அதன் பின்னர் பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

    • வீட்டின் மேற்கூரை இடிந்து சிவசங்கரி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.
    • உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ஆழ்ந்த இரங்கல்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது:

    கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டம், தீர்த்தனகிரி மதுரா T. கள்ளயங்குப்பம் கிராமம், பொட்ட கரைமேடு காலனியைச் சேர்ந்த ஜெயசங்கர் என்பவரின் மனைவி திருமதி.சிவசங்கரி (வயது 33) நேற்று முன்தினம் (23.07.22) பிற்பகல் வீட்டில் உறங்கிக் கொண்டிந்தபோது, எதிர்பாராதவிதமாக வீட்டின் கான்கிரீட் மேற்கூரையின் அடிப்பகுதி அவர் மீது இடிந்து விழுந்ததில்  சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார் என்ற வேதனையான செய்தியினைக் கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன்.

    உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூபாய் இரண்டு லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • திட்டக்குடி அருகே டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எழுத வந்தவர்கள் திடீர் மறியல் நடந்தது.
    • ராமநத்தம் போலீசார் அவர்களை கூப்பிட்டு சமாதானம் செய்து நீங்கள் கால தாமதமாக வந்து விட்டீர்கள். இனி உள்ளே அனுமதிக்க மாட்டார்கள் என ஆறுதல் கூறி அனுப்பி வைத்தனர்.

    கடலூர்:

    திட்டக்குடி அருகே கிரீன்பார்க் தனியார் பள்ளியில் டி.என். பி. எஸ்.சி. குரூப் 4 தேர்வு மையம் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு தேர்வு எழுத வந்தவர்கள் காலதாமதம் எனக் கூறி 10-க்கும் மேற்பட்டோரை அனுமதிக்கவில்லை. ஆத்திரம் அடைந்த மாண–வர்கள் திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சாலை–மறியலில் ஈடுபட்ட–னர்.

    தகவலறிந்து வந்த திட்ட–க்குடி டி.எஸ்பி. அசோகன் மற்றும் ராமநத்தம் போலீசார் அவர்களை கூப்பிட்டு சமாதானம் செய்து நீங்கள் கால தாமதமாக வந்ததுவிட்டீர்கள். இனி உள்ளே அனுமதிக்க மாட்டார்கள் என ஆறுதல் கூறி அனுப்பி வைத்தனர். மாணவர்கள் அனைவரும் கோபத்துடன் திரும்பி சென்றனர். இதில் சிலர் கண்ணீர் விட்டு அழுதபடி சென்றனர்.

    • கடலூர் மாவட்டத்தில் 3,753 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.
    • மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

    கடலூர்:

    தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் கணிசமாக உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக தமிழக அரசு மாநில முழுவதும் தடுப்பூசி முகாம் நடத்த வேண்டும் என அறிவித்திருந்தது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் 3753 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் இன்று நடந்தது. இந்த நிலையில் 3-வது பூஸ்டர் தடுப்பூசி ஏற்கனவே தனியார் மருத்துவமனையில் பணம் செலுத்தி பொதுமக்கள் போட்டு வந்தனர்.

    தற்போது 75 -வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கடந்த 15-ந் தேதி முதல் 75 நாட்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி அரசு சார்பில் இலவசமாக முகாம்களிலும் போடப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் கடலூர் வண்டிப்பாளையம் பகுதியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதனை மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா தடுப்பூசி செலுத்திக்கொண்டு அங்கிருந்த பொது மக்களிடம் தடுப்பூசி என்பது மிகவும் பாதுகாப்பானதாகும். ஆகையால் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொண்டு கொரோனா பாதிப்பிலிருந்து முழுவதுமாக பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.

    அப்போது துணை மேயர் தாமரைச்செல்வன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் டாக்டர் மீரா, மாநகராட்சி செயற்பொறியாளர் புண்ணியமூர்த்தி, நகர் நல அலுவலர் டாக்டர் அரவிந்த் ஜோதி, மாவட்ட தி.மு.க. மாணவரணி துணை அமைப்பாளர் பாலாஜி உள்ளனர்.

    • திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் ஆண்டாள் உற்சவம் தொடங்கியது.
    • கடலூர் அருகே திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில் 108 வைணவ தலங்களில் முதன்மை பெற்றதாகும்.

    கடலூர்:

    கடலூர் அருகே திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில் 108 வைணவ தலங்களில் முதன்மை பெற்றதாகும். இக்கோவிலில் வருடம் தோறும் ஆடி மாதத்தில் ஆடிப்பூர பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் ஆடி மாதம் தொடங்கி முதல் வெள்ளிக்கிழமை ஆண்டாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் முத்தங்கி சேவையில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதனை தொடர்ந்து நேற்று ஆடிப்பூர பெருவிழா 10 நாட்கள் உற்சவம் தொடங்கப்பட்டது. இதனை யொட்டி ஆண்டாளுக்கு காலையில் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர் நேற்று சனிக்கிழமை என்பதால் பெருமாளுக்கும் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்று மாலையில் பெருமாள் மற்றும் ஆண்டாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளியினர். பின்னர் முக்கிய மாடவீதியில் சாமி மீது உள்ள நடைபெற்றது. இதில் ஏராளமான பயபக்தியுடன் கலந்து கொண்டு சாமி கும்பிட்டனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. ‌

    இதனைத் தொடர்ந்து தினந்தோறும் ஆண்டாளுக்கு காலையில் சிறப்பு திருமஞ்சனமும், மாலையில் சிறப்பு அலங்காரத்தில் ஆண்டாள் எழுந்தருளி வீதிஉலாவும் நடைபெற உள்ளது. இதற்கிடையில் ஆடி அமாவாசை அன்று தேவநாதசுவாமி பெருமாளுக்கு பூ வங்கி சேவையும், வரலட்சுமி நோன்பு அன்று செங்கமலத் தாயாருக்கு பூ வங்கி சேவையும் நடைபெற உள்ளது. இந்த நிலையில் ஆடிப்பூர பெருவிழாவின் சிகர விழாவான வருகிற 1 ந்தேதி ஆடிப்பூரம் அன்று காலையில் பெருமாள், ஆண்டாள் மற்றும் தேசிகருக்கு விசேஷ சிறப்பு திருமஞ்சனம் நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து மாலையில் பெருமாள் மற்றும் ஆண்டாள் சிறப்பு அலங்காரத்தில் சிறிய அளவிலான தேரில் எழுந்தருளி தேர் வீதிஉலா நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    ×