என் மலர்
கடலூர்
- கடலூர் முதுநகரில் காணாமல் போன 3 சிறுமிகள் மீட்கப்பட்டனர்.
- சந்தேகப்படுபடியான வாகனங்கள் ஏதேனும் சென்றதா? என்பதனையும் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
கடலூர்:
கடலூர் முதுநகரில் வீட்டிற்கு வெளியில் விளையாடிக் கொண்டிருந்த மூன்று சிறுமிகள் திடீரென்று மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் கடலூர் முதுநகர் பகுதியை சேர்ந்த 7-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்பு சேர்ந்த 3 சிறுமிகள் அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்தனர். நேற்று மாலை அவரது வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த மாணவிகள் திடீரென்று காணவில்லை. அப்போது அவர்களது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதனால் பதட்டம் அடைந்த பெற்றோர்கள் கடலூர் முதுநகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதனை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால் பாரிசங்கர், போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அங்கிருந்து பொதுமக்கள் மற்றும் பஸ் நிலையத்தில் இருந்த பொதுமக்கள் உள்ளிட்ட பலரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் 3 சிறுமைகளை உடனடியாக கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசாருக்கு அதிரடியாக உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால் பாரிசங்கர் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் மற்றும் போலீசார் பொதுமக்கள், சிறுமிகளின் உறவினர்கள் மற்றும் உடன்படித்த மாணவிகளிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா உள்ளிட்டவர்களை தீவிர ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 3 சிறுமிகள் காணாமல் போன சமயத்தில் எந்தெந்த பஸ்கள், சந்தேகப்படுபடியான வாகனங்கள் ஏதேனும் சென்றதா? என்பதனையும் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
அப்போது மாணவிகள் காணாமல் சென்ற நேரத்தில் அரசு பேருந்து ஒன்று சென்றது. அதில் இருந்த நடத்துனரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது துப்பு கிடைத்தது. இதில் கடலூர் முதுநகரிலிருந்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பகுதிக்கு மூன்று சிறுமிகள் பஸ்ஸில் ஏறி வந்தனர். பின்னர் அதே பகுதியில் 3 சிறுமிகள் மீண்டும் இறங்கினர். இதனைத் தொடர்ந்து சிறிது நேரம் சென்ற பிறகு மீண்டும் அதே பஸ்ஸில் ஏறினர். குறிஞ்சிப்பாடி அடுத்த கொத்தவாச்சேரி என்ற பகுதிக்கு சென்று இறங்கி உள்ளனர் என்று தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று கொத்தவாச்சேரி கிராமத்திற்கு சென்று அந்த பகுதியில் விசாரணை நடத்தினர். அப்போது அங்கு இருந்த வீட்டில் மூன்று மாணவியர்கள் புதிதாக வந்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து போலீசார் உடனடியாக வீட்டுக்குள் சென்று பார்த்தபோது 3 சிறுமிகள் இருந்தது தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து மூன்று சிறுமிகளை போலீசார் மீட்டு விசாரணை நடத்தினர். இதில் கடலூர் முதுநகர் பகுதிக்கு அதே ஊரை சேர்ந்த சிறுவன் ஒருவர் அவ்வபோது அவரது பாட்டி வீட்டிற்கு வந்து செல்வார். மேலும் 3 சிறுமிகளுடன் இந்த சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தபோது எங்கள் பகுதிக்கு செல்லக்கூடிய அரசு பஸ் பெண்களுக்கு இலவசம் என கூறியுள்ளார். மேலும் அவரது ஊர் கொத்தவாச்சேரி என தெரிவித்த காரணத்தினால் இந்த சிறுமிகள் பஸ்ஸில் அந்த பகுதிக்கு செல்ல வேண்டும் என்ற ஆசையின் காரணமாக திடீரென்று சென்று உள்ளனர். மேலும் பஸ்சில் இருந்த நடத்துனர் எங்கு செல்ல வேண்டும் என கேட்டபோது கொத்தவாச்சேரி என்று கூறியதால் அங்கு நடத்துனர் இறக்கி விட்டது தெரிய வந்துள்ளது. மேலும் 3 சிறுமிகளின் ஒரு சிறுமி தனது தாயார் செல்ஃபோனுக்கு அங்கிருந்த நபர்களிடமிருந்து செல்போன் மூலம் தொடர்பு கொண்டபோது ஸ்விட்ச் ஆஃப் வந்துள்ளதால் அந்த பகுதியில் வசித்து வந்த சிறுவன் பெயரை கேட்டு வீட்டுக்கு சென்று பாதுகாப்பாக இருந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து போலீசார் 3 சிறுமிகளை மீட்டு அவர்களது பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர். மேலும் பெற்றோர்களிடம் சொல்லாமல் எங்கும் செல்லக்கூடாது. பாதுகாப்பாக வீட்டில் இருக்க வேண்டும் என போலீசார் அறிவுரை வழங்கி வீட்டில் விட்டனர். இதனை தொடர்ந்து சிறுமிகள் காணாமல் சென்ற 8 மணி நேரத்தில் கண்டு பிடித்த துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால் பாரிசங்கர், போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டு அதிவிரைவு படை போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் பாராட்டு தெரிவித்தார். இந்த சம்பவத்தால் பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது
- காட்டுமன்னார்கோவில் பகுதியில் 12 செ.மீ. மழையில் காட்டாற்று வெள்ளத்தில் தளவாடபொருட்கள் அடித்து செல்லப்பட்டன.
- இந்த தொடர் மழையால் வீராணம் ஏரி நிரம்பியது.
தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்த நிலையில் கடலூர் மற்றும் கடலூரை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த தொடர் மழையால் வீராணம் ஏரி நிரம்பியது. மேலும் காட்டுமன்னா ர்கோவில், ஸ்ரீமுஷ்ணம் அதைசுற்றியுள்ள பகுதிகளில்கனமழை பெய்து வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் 12 சென்டிமீட்டர் மழை பெய்தது. இதனால் அங்குள்ள ஆற்று ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஸ்ரீமுஷ்ணம் புலியூர் அருகே ஆற்றின் குறுக்கே புதிய பாலம் கட்டப்பட்டு வருகிறது. நேற்று பெய்த மழையினால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் பாலத்தின் வேலை நின்றது. இந்த பாலம் ஸ்ரீமுஷ்ணத்திலிருந்து விருத்தாச்சலத்தை இணைக்கும் பாலமாக உள்ளது.
மேலும் இந்த பாலம் வேலைக்காக அங்கு வைக்கப்பட்டிருந்த பல்வேறு பொருள்கள் ஆற்றில் அடித்து செல்லப்பட்டது. ரெட்டியார்பேட்டை, வெள்ளிக் கரணை, நாச்சியார் பாளையம் உள்ளிட்ட 10 கிராம மக்கள் இந்த பாலத்தை சுமார் 8 கிலோமீட்டர் தூரம் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பள்ளி கல்லூரி மற்றும் அலுவலக வேலைக்கு செல்பவர்கள் உரிய நேரத்தில் செல்ல முடியாமல் பாதிப்படைந்தனர். இதனால் மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது
- வடலூரில் கர்ப்பிணிப் பெண் திடீரென ஏற்பட்ட வயிற்றுவலியால் உயிர் இழந்தார்.
- அவரது வயிற்றில் இருந்த சிசுவும் பரிதாபமாக இறந்ததாக டாக்டர்கள் கூறினர்.
கடலூர்:
வடலூர் அருகே அரங்கமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சனி (வயது 29) இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஜோதி என்பவருக்கும் கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் தற்போது ரஞ்சனி 8 மாத கர்ப்பிணி ஆக இருந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ரஞ்சனிக்கு வயிற்றுவலி ஏற்பட்டது. இந்த வயிற்று வலியால் அலறி துடித்தார். இதை வீட்டின் அருகில் உள்ளவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து அவரை மீட்டு வடலூரில் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர் இந்நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி ரஞ்சினியும் அவரது வயிற்றில் இருந்த சிசுவும் பரிதாபமாக இறந்ததாக டாக்டர்கள் கூறினர். இது குறித்து வடலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சொந்த ஊரான பெரிய நெசலூர் கிராமத்தில் மாணவியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
- இன்று காலை தேசிய மற்றும் குழந்தைகள் நல ஆணைய அதிகாரிகள் சரண்யா ஜெயக்குமார், முரளி ஆகியோர் தலைமையில் பெரியநெசலூர் கிராமத்துக்கு சென்றனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள பெரிய நெசலூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். அவரது மகள் ஸ்ரீமதி (வயது 17). இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்திமெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இவர் கடந்த 13-ந் தேதி மர்மமான முறையில் இறந்தார். இந்த இறப்பு காரணமாக கடந்த 17-ந் தேதி கலவரம் வெடித்தது.
இதனைத்தொடர்ந்து போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு அதிரடி நடவடிக்கையால் கலவரம் கட்டுப்படுத்தப்பட்டது. எனினும் கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டிருந்த மாணவியின் உடலை பெற்றோர் வாங்க மறுத்தனர். 2 முறை பிரேத பரிசோதனை செய்தும் தங்களது மகளின் சாவுக்கு நியாயம் கிடைக்கவேண்டும் என்று பெற்றோர் தொடர்ந்து போராடினர்.
இதனைத்தொடர்ந்து கோர்ட்டு உத்தரவுபடி மாணவியின் உடலை பெற்றோர் வாங்கினர். அதன்பின்னர் சொந்த ஊரான பெரிய நெசலூர் கிராமத்தில் மாணவியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. என்றாலும் மாணவியின் பெற்றோருக்கு சமூக அமைப்பினர், அரசியல் கட்சியினர் தொடர்ந்து ஆறுதல் கூறி வருகிறார்கள். இது தவிர அரசு சார்பில் நியமிக்கப்பட்ட குழுவினரும் நேரடியாக மாணவியின் வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அதன்படி இன்று காலை தேசிய மற்றும் குழந்தைகள் நல ஆணைய அதிகாரிகள் சரண்யா ஜெயக்குமார், முரளி ஆகியோர் தலைமையில் பெரியநெசலூர் கிராமத்துக்கு சென்றனர். அங்கு மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் நேரடி விசாரணை நடத்தினர். அப்போது மாணவியின் நடவடிக்கைகள், படிப்பு விபரம் குறித்து அவர்கள் தகவல் சேகரித்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
- கடந்த வாரம் மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியது.
- கொள்ளிடத்தில் வெள்ளப்பெருக்கு காரணமாக வீராணம் ஏரிக்கு தண்ணீர் அதிக அளவில் திறந்து விடப்பட்டது.
காட்டுமன்னார்கோவில்:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் நீர்மட்டம் 47.50 அடியாகும். இந்த ஏரி மூலம் 44,856 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. அதோடு சென்னை மாநகரின் குடிநீருக்கு முக்கிய ஆதராமாக உள்ளது.
இந்த ஏரிக்கு பருவ காலங்களில் பெய்யும் மழை மேட்டூர் அணை மூலம் தண்ணீர் வரத்து இருக்கும். இந்த ஆண்டு மேட்டூர் அணை முன்கூட்டியே திறக்கப்பட்டது. அதன்படி வீராணம் ஏரிக்கு மேட்டூர் அணை தண்ணீர் கடந்த மாதம் வந்து சேர்ந்தது. இதனால் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்தது.
கடந்த வாரம் மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியது. இதனால் அணையில் இருந்து 1.10 லட்சம் கனஅடி உபரி நீர் வெளியேற்றப்பட்டது. வீராணம் ஏரிக்கு கொள்ளிடத்தில் இருந்து கீழணைக்கு தண்ணீர் திறந்து விடப்படும். அங்கிருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு தண்ணீர் வரத்து இருக்கும்.
தற்போது கொள்ளிடத்தில் வெள்ளப்பெருக்கு காரணமாக வீராணம் ஏரிக்கு தண்ணீர் அதிக அளவில் திறந்து விடப்பட்டது. இதனால் ஏரியின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 47.50 அடியை எட்டியது. சென்னை மாநகர் குடிநீருக்காக 63 கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது. வீராணம் ஏரி நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், வீராணம் ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளது. ஏரியில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது குறித்து விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தப்படும். அதன் பின்னர் பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிட ஏற்பாடு நடைபெறும் என்றனர்.
- நிச்சயிக்கப்பட்ட பெண் சாவிற்கு காரணமான வாலிபருக்கு தண்டனை பெற்று தர கோரி விவசாயி மனு அளித்தார்.
- ரம்யா கிருஷ்ணனை ஸ்ரீதர் என்பவர் கடத்தி சென்று பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளார்.
கடலூர்:
கடலூர் அருகே குறிஞ்சிப்பாடி பெத்தநாயக்கன்குப்பம் சேர்ந்தவர் மதியழகன். இவர் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தார். மனுவில் கூறியிருப்பதாவது:-
எனது மகள் ரம்யா கிருஷ்ணன். பிஎஸ்சி பட்டதாரி. கடந்த ஜூன் மாதம் 10 ந்தேதி தேதி திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு இருந்தது. கடந்த மே மாதம் 25-ந் தேதி தேதி திருமணத்திற்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்காக குறிஞ்சிப்பாடி சென்று வருவதாக கூறி சென்றார். அப்போது எனது மகள் ரம்யா கிருஷ்ணனை ஸ்ரீதர் என்பவர் கடத்தி சென்று பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளார். இதற்கு என் மகள் மறுத்ததால் சுத்தியலால் தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த எனது மகள் கதறி துடித்தார். அப்போது அங்கிருந்தவர்கள் எனது மகள் ரம்யா கிருஷ்ணனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர் . இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று எனது மகள் ரம்யா கிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்தார். நான் விவசாயக் கூலி செய்து வருகிறேன். ஆகையால் மகளை இழந்து வாடும் எங்களுக்கு நிவாரணமாக எங்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை மற்றும் இழப்பீடு தொகை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தி குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறி உள்ளார்.
- கடலூர் அருகே தனியார் பஸ் டிரைவரை வழிமறித்து தாக்கிய 6 பேர் மீது வழக்கு செய்யப்பட்டுள்ளது.
- டிரைவர் மணிவண்ணனை தாக்கி கொலை மிரட்டல் கொடுத்ததாக கூறப்படுகிறது.
கடலூர்:
புதுச்சேரியில் இருந்து பாகூருக்கு தனியார் பஸ் ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. அப்போது கடலூர் அடுத்த ரெட்டிச்சாவடி பெரிய காட்டுப்பாளையம் பகுதியில் சாலையில் நிறுத்தி பயணிகளை இறக்கி கொண்டு இருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ஆறு பேர் கொண்ட கும்பல் திடீரென்று நடுரோட்டில் பஸ்சை நிறுத்தி வீண் தகராறு செய்து அதில் இருந்த டிரைவர் மணிவண்ணனை தாக்கி கொலை மிரட்டல் கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து ரெட்டிச்சாவடி போலீசார் பெரிய காட்டு பாளையம் சேர்ந்தவர்கள் பசுபதி, ராகுல் தமிழரசன் உட்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பண்ருட்டி பகுதியை சேர்ந்த மகன்- மருமகள் கொலை மிரட்டல் விடுப்பதாக பெற்றோர் புகார் மனு அளித்தனர்.
- கட்டையை எடுத்து வந்து கொன்றுவிடுவோம் என மிரட்டினர்.
கடலூர்:
பண்ருட்டி தோப்புகொல்லை பகுதியை சேர்ந்தவர் ராமர் (வயது 75). அவரது மனைவி ரோஜாவர்ணம் . இவர்கள் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
எங்களுக்கு 3 மகன்கள், ஒரு மகள் உள்ளனர் . அனைவருக்கும் திருமணம் நடந்து தனித்தனி குடும்பம் நடத்தி வருகின்றனர். எனது 3 மகன்களுக்கும் பாகப்பிரிவினை செய்து கொடுத்துவிட்டேன். அவர்கள் தனித்தனியாக வீடு கட்டி அவர்கள் பாகத்தில் குடியிருந்து வருகின்றார்கள். இவர்கள் 3 பேரும் செல்வதற்கு பொதுப்பாதை அமைத்து கொடுத்துள்ளேன். இதில் தனசேகரன் என்பவர் பொதுப்பாதையில் மற்றவர்கள் செல்லும் வழியில் கார் மற்றும் இருசக்கரவாகனங்களை நிறுத்தி வைக்கின்றார். இது சம்பந்தமாக நாங்கள் கேட்ட போது என்னையும் எனது மனைவியையும் மூத்த மகன் சந்திரசேகரன், அவரது மனைவி தமிழ்ச்செல்வி இருவரும் சேர்ந்து கடந்த 23- ந்தேதி தேதி 2 பேரும் இரும்பு பைப்பு மற்றும் கட்டையை எடுத்து வந்து கொன்றுவிடுவோம் என மிரட்டினர். ஆகையால் இது சம்பந்தமாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டு இருக்கிறது.
- கடலூர் அருகே ஷேர் ஆட்டோ கண்ணாடி உடைத்ததால் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
- மருத்துவமனையில் இருந்த ஜானகிராமனிடம் வீண் தகராறு செய்து தாக்கினார்கள்.
கடலூர்:
கடலூர் அருகே தோட்டப்பட்டு பகுதியில் தனியார் மருத்துவமனையில் கோண்டூர் சேர்ந்த ஜானகிராமன் இரவு காவலராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் 3 பேர் கொண்ட கும்பல் திடீரென்று மருத்துவமனையில் இருந்த ஜானகிராமனிடம் வீண் தகராறு செய்து தாக்கினார்கள். பின்னர் அங்கு இருந்த ஷேர் ஆட்டோ கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தி தப்பி ஓடினர். இது குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் ஜெயக்குமார், உதயா, அஜித் ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திட்டக்குடியில் தெருவில் விளையாடிய குழந்தைகளை நாய் கடித்து குதறியது.
- குழந்தையை காப்பாற்ற வந்த குழந்தையின் தாய் கீதாவையும் கடித்துக குதறியது.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி நகராட்சிக்கு உட்பட்ட பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் (30) இவர் மனைவி கீதா (27) மகன் சர்வேஷ் (4) பக்கத்து வீட்டு சிறுமி தீபா (15) ஆகியோர் வீட்டுக்கு முன்பு விளையாடி கொண்டு இருந்தனர். குழந்தைகளை தெருவில் சுற்றித் திரியும் தெரு நாய் திடீரென குழந்தை சர்வேஷ் முகம், கை பகுதியில் கடித்து கொதறியது. இவரை காப்பாற்ற வந்த குழந்தையின் தாய் கீதாவையும் கடித்துக குதறியது. சத்தம் கேட்டு வேடிக்கை பார்க்க வந்த பக்கத்து வீட்டு சிறுமி தீபாவையும் வெறிநாய் தொடர்ந்து கடித்து குதறியது. இதில் பலத்த காயம் அடைந்த 3 பேரும் திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை சேர்க்கப்பட்டனர்.
இதுபோல் தொடர்ந்து வெறி நாய்கள் கடிப்பதால் பெரியார் நகர் பகுதி மக்கள் தெருக்களில் அச்சத்துடன் நடமாட வேண்டி சூழ்நிலையில் உள்ளனர். நகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் தெருக்களில் சுற்றி திரியும் நாய்களைப் பிடிக்க வேண்டும் .அப்படிப் பிடித்தால் மட்டுமே குழந்தைகள் பொதுமக்கள் என அணைவரும் நடமாட முடியும் என கூறினர் . பெரியார் நகரில் தெருநாய் குழந்தைகளை கடித்து குதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- மேல்மலையனூர் அருகே ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் அகற்றப்பட்டதால் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
- உடனடியாக அகற்றவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே செவலபுரை கிராமத்தில் அரசுக்கு சொந்தமான குளத்துக்கு அருகில் இருந்த இடங்களில் 83 வீடுகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாகவும், இதை உடனடியாக அகற்றவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இதை விசாரித்த உயர்நீதிமன்றம் உடனடியாக ஆக்கிரப்புகளை அகற்ற உத்தரவிட்டது. அதன்படி கடந்த மே மாதம் 5-ந் தேதி வருவாய் மற்றும் ஊரக உள்ளாட்சி ஆகிய துறை அதிகாரிகள் முன்னிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்தனர். அப்போது 10 வீடுகள் இடிக்கப்பட்ட நிலையில் தங்கள் குழந்தைகளுக்கு தேர்வு நெருங்கி வருவதால் அதுவரையில் தங்களுக்கு கால அவகாசம் வழங்கும்படி கேட்டுக் கொண்டனர். அதன்படி காலஅவகாசம் வழங்கப்பட்டது.
இந்த கால அவகாசம் மு டிவடைந்துவிட்டதால் தாசில்தார் கோவர்த்தனன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுப்பிரமணியன், சிலம்புச் செல்வன் ஆகியோர் பொதுமக்களிடம் ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தினர். ஆனால் அவர்கள் மறுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வட்ட செயலாளர் முருகன் தலைமையில் 10 மணிக்கு சாலைமறியல் செய்தனர். இதுகுறித்து தகவலறிந்த திண்டிவனம் சப்-கலெக்டர் அமீத் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் உயர்நீதிமன்ற தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும்.எனவே ஆக்கிரமிப்புகளை நீங்களாகவே அகற்றிக்கொள்ளுங்கள். உங்கள் நிலை குறித்து மேலிடத்தில் தெரிவிக்கிறேன் என்று கூறியவுடன் மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.பின்பு வீடுகளிருந்த பொருட்களை அதன் உரிமையாளர்கள் எடுத்தவுடன் பொக்லைன் எந்திரம் மூலம் வீடுகள் கடைகள் என 77ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றப்பட்டன. அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க 100-க்கும் மேற்பட்ட போலீசார், 20-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- கடலூரில் ரவுடி கொலை கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
- இந்த சம்பவத்தில் கண்ணன்ரத்த வெள்ளத்தில் பிணமா னார். ரேவன், மூர்த்தி ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
கடலூர்:
கடலூர் திருப்பாதிரி புலியூர் போலீஸ் சரகம் கம்மியம்பேட்டை பிடாரி–யம்–மன்கோவில் தெருவை சேர்ந்தவர் கருப்பு என்கிற கண்ணன் (வயது 26). பிரபல ரவுடி. இவர் நேற்று மாலை கம்மியம்பேட்டை பி.ஆர்.எஸ். வெங்கடேசன் நகரில் தனது நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது மர்ம கும்பல் மோட்டார் சை்ககிளில் அங்கு வந்தது. கண் இமைக்கும் நேரத்தில் கண்ணனை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டியது. இதனை தடுக்க வந்த கண்ணனின் நண்பர்கள் வன்னியர்பாளையம் மேட்டுத் தெருவை சேர்ந்த ரேவன் (25), கம்மியம் பேட்டையை சேர்ந்த மூர்த்தி (22). ஜீவானந்தம் (22) ஆகியோருக்கும் வெட்டு விழுந்தது. அதன் பின்பு அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. இந்த சம்பவத்தில் கண்ணன்ரத்த வெள்ளத்தில் பிணமா னார். ரேவன், மூர்த்தி ஆகியோர் படு–காயம் அடைந்தனர். இந்த தகவல் அந்த பகுதியில் காட்டு தீ ேபால பரவியது. இதனால் ஏராளமானோர் திரண்டனர்.
தகவல் அறிந்த கடலூர் போலீஸ் டி.எஸ்.பி. கரிக்கல் பாரிசங்கர், திருப்பாதிரி–புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா, சப்-இன்ஸ்பெக்டர் கணபதி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். இறந்த கண்ணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத–னைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி–வைத்தனர். படுகாயம் அடைந்த ரேவன், மூர்த்தி ஆகியோர் கடலூர் அரசு ஆஸ்பத்தி–ரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் கள். இது தொடர்பாக போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணையில் பழிக்கு–பழியாக இந்த கொலை நடந்திருப்பது தெரிய–வந்தது. தொடர்ந்து நடந்த விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளது. கடந்த 19.8.2020-ம் ஆண்டு திருப்பாதிரிபுலியூர் பகுதியை சேர்ந்த காம–ராஜ் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் கண்ணன் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். கண்ணன் தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இதனை காமராஜ் சகோதரர் சிவாஜி, அவரது நண்பர்கள் சந்திரசேகர், விக்னேஷ், சூர்யபிரதாப் ஆகியோர் நோட்டமிட்டுள்ளனர். நேற்று கம்மியம்பேட்டை பி.ஆர்.எஸ்.வெங்கடேசன் நகரில் கண்ணன் இருப்பதை அறிந்த சிவாஜி மற்றும் அவரது நண்பர்கள் இந்த கொலையை செய்துள்ளனர். அவர்களை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படையினர் சென்னை, காஞ்சீபுரம், புதுவை ஆகிய பகுதிக்கு தனித்தனியாக விரைந்துள்ளனர். கொலையாளிகளை பிடிக்க அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.






