search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Share auto break-in"

    • கடலூர் அருகே ஷேர் ஆட்டோ கண்ணாடி உடைத்ததால் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
    • மருத்துவமனையில் இருந்த ஜானகிராமனிடம் வீண் தகராறு செய்து தாக்கினார்கள்.

    கடலூர்:

    கடலூர் அருகே தோட்டப்பட்டு பகுதியில் தனியார் மருத்துவமனையில் கோண்டூர் சேர்ந்த ஜானகிராமன் இரவு காவலராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் 3 பேர் கொண்ட கும்பல் திடீரென்று மருத்துவமனையில் இருந்த ஜானகிராமனிடம் வீண் தகராறு செய்து தாக்கினார்கள். பின்னர் அங்கு இருந்த ஷேர் ஆட்டோ கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தி தப்பி ஓடினர். இது குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் ஜெயக்குமார், உதயா, அஜித் ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    ×