என் மலர்tooltip icon

    கடலூர்

    • கடலூரில் காதலிக்க கூறி மாணவிக்கு மிரட்டல் விடுத்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • செல்போன் மூலம் தன்னை காதலிக்கும்படி அடிக்கடி தொல்லை கொடுத்துள்ளார்.

    கடலூர்:

    கடலூர் பகுதியை சேர்ந்த 18 வயது மாணவி ெசன்னை பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். இவருக்கு, பழையாறு பகுதியை சேர்ந்த ரிச்சர்ட் பிரபு என்பவர், செல்போன் மூலம் தன்னை காதலிக்கும்படி அடிக்கடி தொல்லை கொடுத்துள்ளார். மேலும், மாணவியின் சகோதரி, தாய், தந்தை ஆகியோரையும் அடிக்கடி மிரட்டியுள்ளார். இதுகுறித்து மாணவியின் தந்தை கடலூர் புதுநகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், ரிச்சர்ட் பிரபு உள்பட 4 பேர் மீது போலீசார்வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இன்று ஆடி அமாவாசை கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் கடற்கரை, ஆறுகளில் தர்ப்பணம் கொடுத்தனர்.
    • தர்ப்பணம் கொடுத்தால் இறந்த பெற்றோர்கள் மற்றும் இறைவன் அருளாசியால் எண்ணற்ற நன்மைகள் ஏற்படும் என்பது ஐதீகம். தர்ப்பணம்

    கடலூர்:

    இறந்த மூதாதையர் களுக்கு தர்ப்பணம் செய்வ–தற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் செய்வது அவசியம். தை, ஆடி மற்றும் மகாளாய –அமாவாசையன்று நமது முன்னோர் ஒட்டுமொத்த–மாக பூமிக்கு வருவதாக ஐதீகம். இந்த நாளன்று இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் மிகவும் நல்லதாகும்‌. தர்ப்ப–ணத்தின் போது எள், தண்ணீர், பிண்டம், அரிசி, வாழைக்காய், சாப்பாடு ஆகியவற்றை பயன்படுத்துவர். இவற்றை பிதுர் தேவதைகள் முன்னோர்களுக்குக் கொண்டு சேர்த்துவிடுவர் என்கிறது சாஸ்திரம்.

    இந்நாளில் தீர்த்தக் கரைகளில் நீராடுவதும், பிதுர் வழிபாடு செய்து அவர்களை வழியனுப்பி வைப்பதும், குடும்பம் செல்வச்செழிப்புடன் வாழவும், வாழையடி வாழையாய் தழைக்கவும் உதவும். இந்த நிலையில் ஆடி அமாவாசை அன்று இறந்தவர்களுக்கு தர்ப்ப–ணம் கொடுத்தால் இறந்த பெற்றோர்கள் மற்றும் இறைவன் அருளாசியால் எண்ணற்ற நன்மைகள் ஏற்படும் என்பது ஐதீகம். இன்று ஆடி அமாவாசை–யையொட்டி கடலூர் தேவ–னாம்பட்டினம், கிள்ளை கடற்கரையிலும், தென்பெண்ணை ஆறு, மணி–முத்தாறு உள்ளிட்ட ஆறுகளிலும் மற்றும் நீர்நிலைகளில் ஏராள–மான பொதுமக்கள் முன்னோர்க–ளுக்கு தர்ப்பணம் செய்த–னர். இந்த நிலையில் கடற்கரை மற்றும் ஆறுகள் பகுதிகளில் பொதுமக்கள் திரண்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்ட–னர். 

    • இளம்பெண்ணை கர்ப்பிணியாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
    • 17 வயது மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருந்து வந்தார்.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த பெரிய காட்டு பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் மகன் பிரதீப் (22). பட்ட தாரி வாலிபர். இவர் அதே பகுதியை சேர்ந்த 12-ம் வகுப்பு படிக்கும் 17 வயது மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருந்து வந்தார். அந்த பெண் 6 மாத கர்ப்பிணியாக இருப்பதை அறிந்த பிரதீப் அவரை திருமணம் செய்ய மறுத்து விட்டார். இது குறித்து அந்த பெண் பண்ருட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் வள்ளி போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து பிரதீப்பை கைது செய்தார். அவரை பண்ருட்டி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தி, கடலூர் கிளை சிறை யில் அடைத்தார்.

    • திடீர் மழையால் பண்ருட்டி- சென்னை சாலை சேறும் சகதியுமாக மாறியது.
    • நாற்கர சாலை பணிக்காக சாலை ஓரங்களில் இருந்த வீடு, நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு சாலை போடும் பணிதொடங்கியது.

    கடலூர் 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி சென்னை சாலை திடீர் மழையால் சேரும்சகதியுமாகிபோக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலையாக மாறி உள்ளது. அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டும் என்று சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் இதுகுறித்து கடலூர் கலெக்டருக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- கடலூர் மாவட்டம் பண்ருட்டி சென்னை சாலை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தேசிய நெடுஞ்சாலை யாக தரம் உயர்த்தப்பட்டு நாற்கரசாலை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்த நாற்கர சாலை பணிக்காக சாலை ஓரங்களில் இருந்த வீடு, நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு சாலை போடும் பணிதொடங்கியது. ஆனால் 10 ஆண்டு களாகதொடங்கிய நிலையிலேயே இந்த பணி உள்ளதால் சாலையில் குண்டும் குழியும் ஏற்பட்டு உயிர் பலி வாங்கும் சாலையாக இந்த பண்ருட்டி சென்னை சாலை மாறி உள்ளது. கடந்த 2 நாட்களாக பண்ருட்டியில் மழை பெய்து வருவதால் குண்டும் குழியுமான சாலை சேரும் சகதியும் மாக மாறி உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சாலையில் உள்ள மரண குழியில் விழுந்து செல்லும் காட்சி பரிதாபமாக உள்ளது. எனவே கடலூர் கலெக்டர் உடனடி நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து பேசி இந்த போக்குவர த்துக்லாயக்கற்ற சாலையை சீரமைத்து தரவேண்டும் என அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்

    • பரங்கிப்பேட்டை அருகே வாலிபர் மின்சாரம் தாக்கி பலியானார்.
    • கட்டிங் மெஷின் மூலம் இரும்பை வெட்டிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மின்சாரம் தாக்கியது.

    கடலூர்:

    பரங்கிப்பேட்டை அருகே உள்ள கீழ்அனுவம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் வசந்தகுமார் (30). இவர் தனக்கு சொந்தமான பழைய இரும்பு கடையில் கட்டிங் மெஷின் மூலம் இரும்பை வெட்டிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மின்சாரம் தாக்கியதில் வசந்தகுமார் தூக்கி வீசப்பட்டார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச் சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வசந்தகுமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து அவரது தந்தை ராமையன் கிள்ளை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று மேலும் 32 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
    • வெளி மாவட்டங்களில் 5 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

    கடலூர்: 

    கொரோனாவின் தாக்கம் கடலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு இறுதி முதல் குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. நேற்று ஒரே நாளில் 32 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை மாவட்டத்தில் 75 ஆயிரத்து 14 ஆக உயர்ந்துள்ளது. நேற்று சிகிச்சையில் இருந்த 37 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை யில் கொரோனா பாதிப்பின் காரணமாக 221பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள னர். வெளி மாவட்ட ங்களில் 5 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்றைய பாதிப்பில் 24 பேர் கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • புவனகிரி அருகே மனைவியை மிரட்ட தூக்கிட்டு வீடியோ பதிவிட்டவர் மருத்துவமனையில் இறந்தார்.
    • ரமேஷ் என்பவரின் மகள் சுவேதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

    கடலுார்: 

    கடலுார் மாவட்டம், புவனகிரி அருகே ஆலம்பாடி பிடாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மணியரசன்,(வயது25. இவர், அதே பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவரின் மகள் சுவேதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தம்பதியினர் புவனகிரியில் வாடகை வீட்டில் வசித்தனர். அவர்களுக்கு2 வயதில் பெண் குழந்தை உள்ளது. மணியரசன் அடிக்கடி குடித்துவிட்டு வருவதை சுவேதா கண்டித்தார். கடந்த சிலநாட்களுக்கு முன்பு மணியரசன் குடித்துவிட்டு வந்ததால் சுவேதா கோபித்துக் கொண்டு தாய் வீட்டிற்கு சென்றார். குடி போதையில் இருந்த மணியரசன், தன் மனைவியை மிரட்ட துாக்குப் போட்டுக் கொண்டு, தற்கொலை செய்து கொள்வதாகவீடியோவை 'வாட்ஸ் ஆப்பில் பதிவிட்டுள்ளார். இதை பார்த்த உறவினர்கள் விரைந்து வந்து பார்த்தபோது மணியரசன் தூக்கில் தொங்கினார். அவரை மீட்டு, சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். புகாரின் பேரில் புவனகிரி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

    • கடலூரில் தொடர் மழை சேறும் சகதியுமாக தற்காலிக உழவர் சந்தை மாறியுள்ளது.
    • விவசாயிகள் தங்கள் பொருட்கள் சரியான முறையில் விற்பனை செய்ய முடியாமல் கடும் அவதி அடைந்து வந்தனர்

    கடலூர்:

    கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் உழவர் சந்தை இயங்கி வந்தது‌. இங்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பழவகைகள் காய்கறி வகைகள் போன்றவற்றை வாங்கி சென்று வந்தனர். தற்போது உழவர் சந்தை நவீனமயப்படுத்துதல் காரணமாக தற்காலிகமாக கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உழவர் சந்தை மாற்றப்பட்டது. இந்த நிலையில் கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் உழவர் சந்தை மாற்றப்பட்ட சில நாட்கள் பிறகு அவர்களுக்கு உரிய முறையில் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு பொருட்கள் விற்பனை செய்யும் வகையில் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர். கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருவதால் சாலைகளில் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக காட்சியளித்து வருகின்றது. இந்த நிலையில் தற்காலிகமாக மாற்ற பட்டு உள்ள உழவர் சந்தை முழுவதும் சேறும் சகதிகமாக மாறியது. இதன் காரணமாக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பொருட்கள் வைத்து விற்பனை செய்ய முடியாத அவல நிலைக்கு தள்ளப்பட்டு இருந்தனர்‌.

    மேலும் தினந்தோறும் உழவர் சந்தைக்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் நேரில் வந்து தங்களுக்கு தேவையான காய்கறிகள் பழ வகைகள் வாழைத்தார்கள் போன்றவற்றை வாங்கி செல்வது வழக்கம். ஆனால் தொடர் மழை காரணமாக சேறும் சகதிகமாக காட்சியளித்த தற்காலிக உழவர் சந்தையில் பொதுமக்கள் குறைந்த அளவில் வந்து பொருட்கள் வாங்கி சென்றதையும், அதில் சரியான முறையில் பொருட்கள் வாங்க முடியாத அவல நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். இதன் காரணமாக வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் தங்கள் பொருட்கள் சரியான முறையில் விற்பனை செய்ய முடியாமல் கடும் அவதி அடைந்து வந்தனர். மேலும் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த பொருட்களும் சரியான முறையில் பராமரிக்க முடியாமல் காய்கறிகள், பழ வகைகள் சரியாக விற்பனை செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். இதன் காரணமாக விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து உள்ளனர். ஆகையால் வேளாண்மை துறை அதிகாரிகள் இது சம்பந்தமாக உரிய முறையில் தற்காலிக உழவர் சந்தையில் வியாபாரிகள் விவசாயிகள் உரிய முறையில் பொருட்கள் விற்பனை செய்வதற்கு ஏதுவாக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் மேற்கொண்டு அவர்களின் அடிப்படை வாழ்வாதாரத்தை பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

    • கடலூரில் போலீசாரை கண்டித்து தே.மு.தி.க.வினர் சாலை மறியல் ஈடுப்பட்டனர்.
    • ஆர்ப்பாட்டத்தில் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பினார்கள்.

    கடலூர், ஜூலை.27-

    தே.மு.தி.க. சார்பில் மின்கட்டணம் உயர்வு, உணவுப் பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி வரி உயர்வை கண்டித்து கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர்கள் சிவக்கொழுந்து, விஜயஉமாநாத் ஆகியோர் தலைமை தாங்கினார். மாவட்ட அவைத்தலைவர் ராஜாராம், பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் சரவணன், ஒன்றிய செயலாளர்கள் அய்யனார், கலாநிதி ஆகியோர் வரவேற்றனர். ஆர்ப்பாட்டத்தின் போது அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் தே.மு.தி.க. கட்சியினரை பார்த்து போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் ஓரமாக நிற்குமாறு தெரிவித்தனர். இதனால் போலீசாருக்கும், தே.மு.தி.க.வினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    அப்போது அந்த கட்சியினர் போலீசாரை கண்டித்து திடீர் சாலை மறியல் செய்தனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனே போலீசார் அவர்களை சமரசப்படுத்தினர். அதன்பின்னர் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் மாநில மாணவர் அணி துணை செயலாளர் கிருஸ்து ராஜன், மீனவரணி துணை செயலாளர் நிஜாமுதீன் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரை ஆற்றினார்கள். இதனை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பினார்கள். இதில் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • பண்ருட்டி அருகே படித்த இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் வருகிற 30-ந் தேதி நடக்கவிருக்கிறது.
    • 200-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொள்ள இருக்கின்றன.

    கடலூர்: 

    கடலூர் மாவட்ட கலெக்டர் பால சுப்ரமணியம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- 

    கடலூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் பண்ருட்டிஅருகே கொள்ளு க்கார ன்குட்டையில் உள்ள வள்ளலார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 30 ந்தேதி காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெறவுள்ளது. முகாமில் 200-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு இருபதாயி ரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். எனவே இம்முகாமில் கடலூர் மாவட்டத்தைச் சார்ந்த 8-ம் வகுப்பு, பத்தாம் வகுப்பு பன்னிரெண்டாம் வகுப்பு, கலை மற்றும் அறிவியல், நர்சிங், வணிகப் பட்டதாரிகள், ஐ.டி.ஐ, டிப்ளமோ மற்றும் பொறியியல் பட்டப்படிப்பு படித்துள்ள இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

    இவ்வேலைவாய்ப்பு முகாமின் வாயிலாக தனியார்துறையில் வேலைவாய்ப்பு பெறும் பயனாளிகளின் வேலைவாய்ப்பு பதிவு விவரங்கள் ரத்து செய்யப்பட மாட்டாது. இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள இளைஞர்கள் மற்றும் வேலைநாடுநர்கள் தமிழ்நாடு தனியார்துறை வேலைவாய்ப்பு இணையதளமான www.tnprivatejobs.tn.gov.in-ல் பதிவு செய்து கலந்து கொள்ளலாம். தங்களின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கல்வி சான்றிதழ்கள், ஆதார் அட்டை மற்றும் சுய விவர குறிப்புடன் முகாமில் நேரடியாக கலந்து கொள்ளலாம். முகாம் தொடர்பான கூடுதல் விவரங்களை அறிய கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது தொலைபேசி (04142-290039),9499055908 வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம். தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தால் நடத்தப்படும் பல்வேறு இலவச திறன் பயிற்சிகளுக்கான பதிவும் இம்முகாமில் நடைபெறவுள்ளது. எனவே கடலூர் மாவட்டத்தில் உள்ள வேலை தேடும் இளைஞர்கள் (ஆண்கள் மற்றும் பெண்கள்) மற்றும் வேலையளிக்கும் தனியார்துறை நிறுவனங்கள் 30 ந்தேதி  (சனிக்கிழமை) நடைபெறும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் அரசின் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி முகக்கவசம் அணிந்து தனி மனித இடைவெளியுடன் பங்குப்பெற்று இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு கூறப்பட்டு இருந்தது.

    • கடலூர் அருகே மின்நுகர்வோர் கூட்டத்தில் விவசாயி குடும்பத்துடன் தற்கொலை செய்வதாக மிரட்டினார்.
    • விண்ணப்பித்து பல வருடங்கள் ஆகியும் மேற்படி நபருக்கு மின் இணைப்பு வழங்க ப்படவில்லை.


    கடலூர் அருகே நெல்லிக்குப்பம் மின்துறை அலுவலகத்தில் மின் நுகர்வோர்களின் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மின்சாரத்துறை அதிகாரி சதாசிவம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் செயற்பொறியாளர் லீனா, உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கடலூர் அருகே குமளங்குளத்தை சேர்ந்த விவசாயி மாயவன் பேசுகையில் , 2014 ம் ஆண்டு விவசாயிகள் 50 ஆயிரம் கட்டினால் அவர்களது நிலத்திற்கு மின் இணைப்பு வழங்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பின் கீழ் விண்ணப்பித்திருந்தார். ஆனால் விண்ணப்பித்து பல வருடங்கள் ஆகியும் மேற்படி நபருக்கு மின் இணைப்பு வழங்க ப்படவில்லை. இந்நிலையில் கூடுதலாக பணம் கட்ட வேண்டும் என கூறியதால் கடந்த ஏப்ரல் மாதம் கூடுதலாக மின்வாரியத்திற்கு பணம் செலுத்தப்பட்டது. ஆனால் இதுவரை மேற்படி விவசாய நிலத்திற்கு மின் இணைப்பு தரப்படவில்லை என புகார் தெரிவித்தார். 

    இதுகுறித்து மின்சா ரத்துறை அதிகாரிகள் சரியான முறையில் பதில் சொல்லாமல் அலட்சியமாக இருந்ததாக கூறப்படுகிறது இதனால் மனமுடைந்த விவசாயி மாயவன் கூட்டத்திலிருந்து வெளியில் வந்து தெரிவிக்கையில் , அடுத்த கூட்டத்திற்கு முன்னதாக மின்சார அலுவலர்கள் என்னுடைய விவசாய நிலத்திற்கு மின் இணைப்பு வழங்க வேண்டும் . இல்லையெனில் நான் என் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்வேன் என தெரிவித்தார் . இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பாக காணப்பட்டது,

    • திட்டக்குடி பகுதியில் மழை அரசு பள்ளியில் தண்ணீர் தேங்கியதால் மாணவர்கள் அவதியடைகின்றனர்.
    • காலை பள்ளிக்கு வந்த மாணவர்கள் வளாகத்தில் கடந்து செல்ல முடியாமல் தண்ணீரில் நடந்து சென்றனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் திட்டக்குடியை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 2தினங்களாக மாலை நேரத்திலும் இரவு நேரத்திலும் சுமாரான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் ராமநத்தம், திட்டக்குடி, வாகையூர் ,இடைச்செருவாய், கீழ்ச்செருவாய் ,ஆவி னங்குடி, பெண்ணாடம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு 12 மணி முதல் சுமார் இரண்டு மணி நேரம் பலத்த காற்று இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் திட்டக்குடி பஸ் நிலையம் மற்றும் சாலைகளில் மழைநீர் வெளியேற முடியாமல் தேங்கி நின்றது. மேலும் ஆவினங்குடி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அதிக அளவில் மழை நீர் தேங்கி நின்றதால் இன்று காலை பள்ளிக்கு வந்த மாணவர்கள் வளாகத்தில் கடந்து செல்ல முடியாமல் தண்ணீரில் நடந்து சென்றனர். எனவே பள்ளி நிர்வாகம் இனி மழைக்காலம் என்பதால் மழைநீர் வெளியேற வழிவகை செய்ய வேண்டும் என மாணவர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

    ×