என் மலர்
நீங்கள் தேடியது "Threat to the student"
- கடலூரில் காதலிக்க கூறி மாணவிக்கு மிரட்டல் விடுத்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
- செல்போன் மூலம் தன்னை காதலிக்கும்படி அடிக்கடி தொல்லை கொடுத்துள்ளார்.
கடலூர்:
கடலூர் பகுதியை சேர்ந்த 18 வயது மாணவி ெசன்னை பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். இவருக்கு, பழையாறு பகுதியை சேர்ந்த ரிச்சர்ட் பிரபு என்பவர், செல்போன் மூலம் தன்னை காதலிக்கும்படி அடிக்கடி தொல்லை கொடுத்துள்ளார். மேலும், மாணவியின் சகோதரி, தாய், தந்தை ஆகியோரையும் அடிக்கடி மிரட்டியுள்ளார். இதுகுறித்து மாணவியின் தந்தை கடலூர் புதுநகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், ரிச்சர்ட் பிரபு உள்பட 4 பேர் மீது போலீசார்வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






