search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூரில் போலீசாரை கண்டித்து தே.மு.தி.க.வினர் சாலை மறியல்
    X

    கடலூரில் தே.மு.தி.க.வினர் சாலை மறியல் செய்த காட்சி. 

    கடலூரில் போலீசாரை கண்டித்து தே.மு.தி.க.வினர் சாலை மறியல்

    • கடலூரில் போலீசாரை கண்டித்து தே.மு.தி.க.வினர் சாலை மறியல் ஈடுப்பட்டனர்.
    • ஆர்ப்பாட்டத்தில் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பினார்கள்.

    கடலூர், ஜூலை.27-

    தே.மு.தி.க. சார்பில் மின்கட்டணம் உயர்வு, உணவுப் பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி வரி உயர்வை கண்டித்து கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர்கள் சிவக்கொழுந்து, விஜயஉமாநாத் ஆகியோர் தலைமை தாங்கினார். மாவட்ட அவைத்தலைவர் ராஜாராம், பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் சரவணன், ஒன்றிய செயலாளர்கள் அய்யனார், கலாநிதி ஆகியோர் வரவேற்றனர். ஆர்ப்பாட்டத்தின் போது அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் தே.மு.தி.க. கட்சியினரை பார்த்து போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் ஓரமாக நிற்குமாறு தெரிவித்தனர். இதனால் போலீசாருக்கும், தே.மு.தி.க.வினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    அப்போது அந்த கட்சியினர் போலீசாரை கண்டித்து திடீர் சாலை மறியல் செய்தனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனே போலீசார் அவர்களை சமரசப்படுத்தினர். அதன்பின்னர் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் மாநில மாணவர் அணி துணை செயலாளர் கிருஸ்து ராஜன், மீனவரணி துணை செயலாளர் நிஜாமுதீன் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரை ஆற்றினார்கள். இதனை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பினார்கள். இதில் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×